1700 -கோடிகள்
தலைப்பை பார்த்ததும் வழக்கம் போல் இதுவும் இந்தியத் திரு நாட்டின் ஊழல் வரிசையில் -குடியரசுத்தினத்துக்காக சிறப்பாக வெளியிடப்படும் பத்தோடு பதினொன்று முறைகேடு என்று நினைத்து விட வேண்டாம்.
நம் பூமி அங்கம் வகிக்கும் பால்வெளியில் மட்டும் பூமியின் அளவுடைய
1700 கோடி கிரகங்கள் இருக்கலாம் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக
விண்ணியலாளர்கள் கூறுகின்றனர்.
நமது சூரியனைப் போன்ற அளவு கொண்ட சில நட்சத்திரங்களை நாசாவில் உள்ள கெப்ளர் விண்வெளி தொலைநோக்கி மூலம் ஆராய்ந்ததில் இது தெரியவந்துள்ளது..
அப்படிப பட்ட நட்சத்திரங்களில் ஆறில் ஒன்றில் பூமியின் அளவுகொண்ட கிரகங்கள் பல இருப்பதற்கான அறிகுறிகள் தெரியவந்துள்ளது.
பூமிஅளவில் ஏராளமான கிரகங்கள்
இருந்தாலும், இவற்றில் பெரும்பான்மையானவை உயிர்கள் வாழ முடியாத அளவுக்கு
அதிக வெப்பம் கொண்டவையாக இருக்கும் என்று ஆய்வாளர்கள் எண்ணுகின்றனர்.
ஒரு கிரகத்தில் உயிர்கள் வாழ்வதானால் அதற்கு திரவ வடிவிலான நீர் தேவை.அது இக்கிரகங்க்களில் இருக்க வாய்ப்பில்லை என்கின்றனர்.
ஆனாலும் 1700 கோடிக் கணக்கில் பூமி போன்ற கிரகங்கள் இருக்கின்றதால் , பூமியைப் போல உயிர்கள் வாழ்வதற்கு ஏற்ற வசதிளைக் கொண்ட கிரகம் எங்காவது ஒரு மூலையில் இருக்கலாம் என்பதே இப்போதைய நம்பிக்கை.
திட வடிவில் உள்ள நீர் போன்றவற்றை உட் கொண்டு வாழும் உயிரினம் இல்லாமலா போய்விடும்?
__________________________________________________________________________________
பூமி சூடு
----------
கால நிலை மாற்ற வேகம் வரும் நான்கு
ஆண்டுகளுக்கு தற்காலிகமாக குறையும் என்று பிரிட்டனின் வானிலை ஆய்வு மையம்
தெரிவித்துள்ளது.
பூமி யின் வெப்பநிலை தொடர்ந்து உயர்ந்து வரும் என்று ஆய்வுகள் கூறினாலும்
வெப்பநிலை உயர்வு கணிக்கப்பட்ட அளவை விட இருபது சதவீதம் குறைவாகத்தான்
இருக்கிறது.
இயற்கை காரணங்கள் காரணமாக பூமி வெப்பமடைவது
குறைந்திருக்கிறது. சூரியனில்
ஏற்பட்டிருக்கும் சில மாற்றங்களும் -கடல் நீர் சுழற்சியும்
இந்த வெப்பமாகும் அளவு குறைந்ததற்கு முக்கிய காரணங்களாகக் கருதப்படுகின்றன.
இயற்கை மாற்றங்களால் சற்றே தணிந்துள்ள பூமி
வெப்பமடையும் வேகம், எதிர்காலத்தில் வெப்ப வாயுக்கள் வெளியீட்டால் மீண்டும் அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.
__________________________________________________________________________________