உரிமைகளை பறிக்க முயற்சி

தெலங்கானா மாநிலம், நாகர்கர்னூல் மாவட்டத்தில் உள்ள தோமலாபெண்டா பகுதியில் இயங்கி வரும் சுரங்கப்பாதை, ஸ்ரீசைலம் இடது கரை கால்வாயில் (எஸ்எல்பிசி) சுரங்கப்பாதை ஆகும். இந்த சுரங்கப்பாதையில் நேற்று (பிப்.22) சனிக்கிழமை வழக்கம் போல் பணிகள் நடைபெற்ற வந்த நிலையில், திடீரென சுரங்கப்பாதை சரிந்து விழுந்து விபத்துக்குள்ளானது.


இந்த விபத்தில், 40 ஊழியர்கள் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர். இந்த சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் என்.டி.ஆர்.எஃப் மற்றும் எஸ்.டி.ஆர்.எஃப், செகந்திராபாத் காலாட்படை பிரிவின் கீழ் இயங்கும் இந்திய ராணுவத்தின் பொறியாளர் ரெஜிமென்ட், இராணுவம் அதன் பொறியாளர் பணிக்குழு (ETF), இராணுவ மருத்துவப் பரிவு ஆகியோர் தெலங்கானா தலைமைச் செயலாளர் தலைமையில் சுரங்கப்பாதைக்குள் சிக்கிய ஊழியர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். விபத்து நடந்த சில மணி நேரங்களில், 32 பேர் மீட்கப்பட்ட நிலையில், 8 பேர் சுரங்கப்பாதைக்குள் சிக்கியுள்ளனர்.

மீட்புப் பணிகள் குறித்து என்டிஆர்எஃப் துணை கமாண்டன்ட் சுகேந்து தத்தா கூறுகையில், "விபத்துக்குள்ளான சுரங்கப்பாதைக்குள் 8 பேர் சிக்கி இருப்பதாக தெரிகிறது. இந்த சுரங்கப்பாதை சரிவானது, சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 14 கிலோமீட்டருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று இரவு 10 மணி நிலவரப்படி சுரங்கப்பாதையின் வாயிலில் இருந்து 13.5 கிமீ தூரத்திற்கு மீட்பு பணிகளை செய்துள்ளோம். 32 பேரை மீட்டுள்ளோம். இரண்டாம் நாளான இன்றும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளோம்.

 என்ஜின்கள், பம்பிங் செட்கள், கவசக் குழாய்கள் மற்றும் கன்வேயர் பெல்ட்களைப் பயன்படுத்தி மீட்புப் பணிகளை செய்து வருகிறோம். இதில், இறுதியாக சுமார் 2 கிமீ தூரம் கன்வேயர் பெல்ட் மற்றும் நடைப்பயணம் மூலம் கடந்து வீரர்கள் உள்ளே சென்றுள்ளனர். கடைசி 200 மீட்டர் முழுவதும் படுமையாக சேதம் அடைந்துள்ளது. மேலும், அப்பகுதி முழுவதும் உடைந்த மணல்களாக இருப்பதால் மீட்புப் பணியில் சிரமம் ஏற்பட்டுள்ளது.

மீட்பு விரர்கள் சுரங்கப்பாதையில் சிக்கிய ஊழியர்களிடம் தொடர்பு கொள்ள முயற்சி செய்தனர். ஆனால், யாரும் பதிலளிக்கவில்லை. எனவே சுரங்கப்பாதை இடிந்து விழுந்த மணல்கள், கல்களை டன்னல் போரிங் மெஷின் மூலம் அகற்றி சிக்கிய ஊழியர்கள் இருக்கின்றனரா? என தேட வேண்டும். தற்போது சுரங்கப்பாதைக்குள் தேங்கிய தண்ணீரை அகற்றும் பணியில் அதிரடிப்படையினர் ஈடுபட்டுள்ளனர். அது முடிந்ததும் இயந்திரம் மூலம் மீட்புப் பணிகளை தொடங்குவோம்” எனத் தெரிவித்தார்.


இந்த சுரங்க விபத்து தொடர்பான மீட்புப் பணிகள் குறித்து தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி நேற்று ஆய்வுக் கூட்டம் நடத்தினார். அந்த கூட்டத்தில், நீர்ப்பாசனத்துறை அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, மாநில ஆலோசகர் (நீர்ப்பாசனம்) ஆதித்யநாத் தாஸ், முதலமைச்சர் ஆலோசகர் வேம் நரேந்தர் ரெட்டி ஆகியோர் கலந்து கொண்டனர். அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி, சுரங்கப்பாதையில் தற்போதைய நிலவரத்தை முதலமைச்சரிடம் விளக்கி, விரிவான தகவல்களை வழங்கினார்.மேலும், சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள 8 தொழிலாளர்களைக் காப்பாற்ற மீட்புப் பணிகளை துரிதப்படுத்துமாறு அதிகாரிகளை முதலமைச்சர் வலியுறுத்தினார். 

2023 ஆம் ஆண்டு உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசியில் கட்டப்பட்டு வந்த சுரங்கப்பாதையில் ஏற்பட்ட விபத்தில் சுமார் 40 பேர் சிக்கிக் கொண்ட சம்பவம் நடந்தது. தற்போது, உத்தரகாண்டில் ஏற்பட்ட சுரங்க விபத்தில் சிக்கிய தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்ட நிபுணர்களின் உதவியை மாநில அரசு நாடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 பின்னர், காயமடைந்த தொழிலாளர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார். மேலும் அவர்களுக்கு சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசு முழு உதவி செய்யும் என்றும் உறுதியளித்தார்.மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF) மற்றும் தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) குழுக்கள் விரைவில் விபத்து நடந்த இடத்தை அடையும் என்று அமைச்சர் உத்தம் குமார் ரெட்டி முதலமைச்சரிடம் தெரிவித்தார். தொடர்ந்து மீட்புப் பணிகளின் போது அனைத்து துறை அதிகாரிகளும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.






அதிக வரி ஆபத்து!

வரி விதிப்பு எந்த நாட்டையும் பாதுகாக்காது, இந்தியா தனது சொந்த நலனுக்காக வரிகளைக் குறைக்க வேண்டும் என்று நிதி ஆயோக் தலைமை நிர்வாக அதிகாரி பி.வி.ஆர். சுப்பிரமணியம் கூறியுள்ளார்.

suran
வெள்ளிக்கிழமை ஒரு நிகழ்வில் பேசிய அவர் " யார் சொன்னாலும் சரி, நாட்டின் நன்மைகளைக் கருதி வரி விகிதங்களைக் குறைக்கத்தான் வேண்டும் என்று வலியுறுத்தினார்.

வளர்ந்த நாடாக மாற விரும்பினால், உலகின் எல்லா வாய்ப்புகளுக்கும் தயாராக இருப்பது இந்தியாவின் முதல் ஐந்து முன்னுரிமைகளில் ஒன்றாக இருக்க வேண்டும் எனவும் சுப்பிரமணியம் கூறினார்.


வரிகளைக் குறைக்க இந்தியா ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து உள்ளிட்ட பிற முக்கிய பொருளாதாரம் கொண்ட நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தங்களில் இணைய வேண்டும் என அவர் தெரிவித்தார்.

உலக விநியோகச் சங்கிலிகளில் இந்தியாவை ஒரு பகுதியாக மாற்றுவதற்கு ஒன்றிய அரசு

மாநில அரசுமட்டங்களில் கட்டுப்பாடுகளை நீக்குவது மிக முக்கியம் என்றும் சுப்பிரமணியம் எடுத்துரைத்தார்.


உலகில் அனைவருக்கும் இந்தியா மீது ஆர்வம் உள்ளது, இருந்தாலும் இப்போது மக்கள் மற்ற நாடுகளுக்குச் சென்று பார்க்கிறார்கள் எனவும்
சுப்பிரமணியம் கூறினார்.

UGC-யின் விதிகள் :

 மாநில  உரிமைகளை பறிக்க ஒன்றிய அரசு முயற்சி

தென் மாநிலங்களின் சிரமங்களும், யுஜிசி வரைவு விதிமுறைகளும் என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழ் வெளியிட்டுள்ள தலையங்கத்தில் ஒன்றியம் அரசு பிறப்பிக்கும் சட்டங்கள் மாநிலங்களின் முழுமையான சட்டங்களை மீறக்கூடாது எனத் தெரிவித்தார்.

 பல்கலைக்கழக ஆசிரியர்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனம் மற்றும் பதவி உயர்வுக்கான வரைவு விதிமுறைகள் குறித்து கருத்து தெரிவிப்பதற்கான யுஜிசி-யின் காலக்கெடு நெருங்கும் நிலையில் பா.ஜ.க. அல்லாத மாநில அரசுகள், தங்களின் எதிர்ப்பை தீவிரப்படுத்தி உள்ளதாக கூறியுள்ளது.

அண்மையில், திருவனந்தபுரத்தில் நடந்த மாநாட்டில், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களின் அமைச்சர்கள் கலந்து கொண்டனர், அதில், யுஜிசி-யின் புதிய விதிகள் நாட்டின் கூட்டாட்சி கட்டமைப்பை சீர்குலைக்கும், மாநில சட்டமன்றங்களின் அதிகாரங்களைக் குறைக்கும், மாநில பல்கலைக்கழகங்களின் சுயாட்சியைப் பலவீனப்படுத்தும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டதையும் இந்த தலையங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

suran

மேலும், தமிழ்நாடு, கேரளாவின் ஆளும் கட்சிகளுடன் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த சில மாநிலக் கட்சிகளும் யுஜிசி-யின் புதிய மாநில விதிகளுக்கு தங்களின் எதிர்ப்பை தனிப்பட்ட முறையில் வெளிப்படுத்தி உள்ளதாகவும், பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களைத் தேர்ந்தெடுப்பதிலும் நியமிப்பதிலும் யுஜிசி-க்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் விதிகள் கவலையளிப்பதாக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த புதிய விதிகள் பல்கலைக்கழகங்களின் வெளிப்படையான செயல்முறையை உறுதி செய்யும் என்று யுஜிசி தலைவர் ஜெகதேஷ் குமாரின் வாதத்தை ஏற்கவில்லை மறுக்கும் மாநில அரசுகள், இது ஒன்றிய அரசின் அதிகார குவிப்பு என குற்றம்சாட்டுவதாகவும், இதனால் பல மாநில பல்கலைக்கழகங்கள், குறிப்பாக தமிழ்நாட்டில் உள்ள பல்கலைகழகங்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் தி இந்து தலையங்கம் விமர்சித்துள்ளது.

யுஜிசி-யின் புதிய விதிகள் கல்வித் தரத்தை நீர்த்துப்போகச் செய்யும், வணிகமயமாக்கல் மற்றும் அரசியல்மயமாக்கலை அதிகரிக்கும், ஏழை மற்றும் பின்தங்கிய மாணவர்களுக்கு உயர்கல்விக்கான வாய்ப்பை குறைக்கும் குற்றச்சாட்டுகளுடன், உயர்கல்விக்கான பெரும்பாலான செலவுகளை மாநில அரசுகள் ஏற்கும் நிலையில், பல்கலைக்கழக நிர்வாகத்தில் அவர்களுக்கு உள்ள அதிகாரத்தை ஏன் பறிக்க வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளதையும் தி இந்து தலையங்கம் சுட்டிக்காட்டி உள்ளது.

மேலும், உயர்கல்வி விவகாரம் மட்டுமின்றி, ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை இந்த புதிய விதிகள் உருவாக்கி உள்ளதாகவும் கூறினார். அரசின் ஒன்றிய நிர்வாகத்தின் கீழ் உள்ள துறைகளை உருவாக்கும் விதிகள் மாநில சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட முழுமையான சட்ட விதிகளை மீறுகின்றன முடியுமா? என்றும் கேள்வி எழுப்பி உள்ளது. 

இந்த புதிய விதிகளுக்கு எதிராக நீதிமன்றங்களை நாட பல அரசுகள் திட்டமிட்டுள்ளன என்றும், மாநில அரசுகளின் குரல்களை யுஜிசி புறக்கணிக்க என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள தி இந்து தலையங்கம், புதிய விதிமுறைகளை அறிவிப்பதற்கு முன்பு அதன் வரைவு அறிக்கை உள்ள கூட்டாட்சிக்கு எதிரான பிரிவுகளை நீக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?