நோய்களை காட்டும் நகங்கள்


நகங்களில் ஏற்படும் மாற்றங்களை கொண்டு, உடலின் பல்வேறு உறுப்புகளில் ஏற்பட்டுள்ள குறைபாடுகளை அறிந்து கொள்ளலாம்.
இதனால், நகங்களை தூய்மையாக வைத்துக் கொள்வது அவசியம். உடலில் உள்ள கழிவகற்றும் உறுப்புகளால் வெளியேற்ற முடியாத கழிவுகள் நகமாக வளர்கின்றன. கெரட்டின் எனும் உடல்கழிவு தான், நகமாக வளர்கிறது.
நகத்தில், மேட்ரிக்ஸ், நெயில் ரூட் என்று இரு முக்கிய பாகங்கள் உண்டு.
இதில், மேட்ரிக்ஸ் என்பது நகத்தின் இதயப்பகுதியை போன்றது. இதுதான் நக செல்கள் வளர காரணமாக இருக்கின்றன.
மேட்ரிக்ஸ் பாதித்தால், தொடர்ந்து நகம் சேதத்துடனேயே வளரும். வெளிபுற நகங்களாக இருக்கும், நெயில் பிளேட் கழிவுபொருள் என்பதால், அது வளர ஆக்ஸிஜன் தேவையில்லை.
ஆனால், உட்புறம் இருக்கும் மேட்ரிக்ஸ், நெயில் பெட், கிடிகிள் போன்ற பாகங்களுக்கு, ஆக்ஸிஜன் அவசியம்.
இது, சுவாசிப்பதன் மூலம் பெறும் ஆக்ஸிஜனை எடுத்துக் கொள்கிறது. இதில், கிடிகிள், விரல் பகுதிக்கு அதிக ரத்த ஓட்டம் கிடைக்க உதவுகிறது.
நகத்தில், 18 சதவீத அளவில் ஈரப்பதம் இருக்கிறது. எனவே, நகங்கள் குறிப்பிட்ட அளவில் வியர்வையையும் வெளியேற்றுகின்றன. நகங்கள் நமது உடலின் நிலையை வெளிகாட்டும் மானிட்டர் போல செயல்படுகின்றன.
நகங்கள், விரலுக்கு அழகு சேர்க்க மட்டுமல்ல, கரட்டின் என்ற புரதச்சத்தை கொண்ட நகங்கள், விரல் நுனிவரை பரவியுள்ள நரம்பு மற்றும் இரத்தக் குழாய்களை பாதுகாக்கக் கூடிய ஒரு அமைப்பாகும்.

பொதுவாக, நகங்கள் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். நிறம் மாறுபடும் பட்சத்தில், நோய் அறிகுறிகளை அறியலாம். ஈரல் பாதிக்கப்பட்டிருந்தால் நகங்கள் வெண்மையாக இருக்கும்.
சிறுநீரக செயலிழப்பு ஏற்பட்டிருந்தால், நகங்களின் வளர்ச்சி குறைந்து, பாதி சிவப்பாக இருக்கும். மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படும்.
இதயநோயால் பாதிக்கப்பட்டிருந்தால், நகங்கள் அழுத்தமான இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். இதயத்தில் ஓட்டை ஏற்பட்டு, நல்ல இரத்தமும், கெட்ட இரத்தமும் கலந்திருந்தால் நகங்கள் நீல நிறத்தில் இருக்கும்.
நாள்பட்ட நுரையீரல், இதய நோய் உள்ளவர்களுக்கு, நகங்கள் வளைந்து இருக்கும். இரத்த சோகை ஏற்பட்டு, இரும்புசத்து குறைவாக இருந்தால், நகங்கள் வெளுத்து குழியாக இருக்கும்.
சர்க்கரையின் அளவு அதிகமாகவும், புரதம் மற்றும் துத்தநாக சத்து குறைவாகவும் இருந்தால், நகங்கள் வெண்திட்டுக்களாக காணப்படும்.
மங்கலான நீண்ட கோடுகள் தென்பட்டால், மூட்டுவலி உள்ளதாக காட்டும். நகங்களின் நுனிப்பகுதிகளை முழுமையாக வெட்டக்கூடாது. அப்படி வெட்டினால், நகத்தை மூடி சதை வளர்ந்து, அதிக வலியினை ஏற்படுத்தும்.
நகத்தினை பற்களால், கடிக்க கூடாது. இதனால் உடைந்து போக அதிக வாய்ப்புகள் உள்ளன.
சாப்பிட்ட பின்பு, கைகளை கழுவும் போது நகங்களையும் சுத்தம் செய்ய வேண்டும். நகங்களின் இடுக்குகளில் தங்கும் நுண்ணுயிரிகளால் வயிற்று வலி, வாந்தி, வயிற்றுபோக்கு உண்டாகும்.
பளபளப்பாக இருக்க வேண்டுமெனில், காய், கனிகள் உட்கொள்ள வேண்டும். இரவில் குளிர்ந்த நீரால், கை மற்றும் கால்நகங்களை சுத்தமாக கழுவிக் கொள்ள வேண்டும்.
ரத்தத்தின் சிவப்பணுக்கள் குறைவதால், இயல்பாக நகம் இருக்க வேண்டிய பிங்க் நிறம் போய், வெளுத்து விடுகின்றன.
                                 கவர்ச்சி சாமியாரிணி 

இரத்தத்திலுள்ள சிகப்பணுக்கள் அளவில் குறையும்போது சின்னச் சின்ன வேலையைச் செய்வதற்கும் உடல் பலமின்றிப் போகிறது.
இரும்புச்சத்து இரத்தத்திலுள்ள சிகப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்யும்.
ஈரல், கீரைவகைகள், மற்றும் இறைச்சியை உணவுடன் சேர்த்துக் கொள்ளவேண்டும். அல்லது மருத்துவரின் ஆலோசனையின்படி குறிப்பிட்ட நாட்களுக்கு இரும்புச்சத்து மாத்திரைகளோடு பி -12 மாத்திரைகளையும் எடுத்துக் கொள்வது நல்லது.
========================================================================
நோய்களை பரப்பும் பணம்.

இந்தியாவில் புழக்கத்தில் உள்ள ரூபாய் நோட்டுகள் மூலம் 78 வகையான நோய்கள் தாக்குவதாக ஆய்வின் மூலம் தகவல்கள் வெளியாகி உள்ளன. ரூபாய் நோட்டுகளை மணி பர்சில் நிரப்பி வைத்து கொள்வதை பெரும்பாலானோர் விரும்புவது வழக்கம். முற்காலத்தில் பெண்கள் இடுப்பு பகுதியில் புடவையில் சுற்றி பணத்தை பாதுகாத்து வந்தனர். இதனால், பெரும்பாலான பெண்களுக்கு இடுப்பு பகுதியில் தோல் பாதிக்கப்பட்டு வெள்ளைத் தழும்புகள் ஏற்பட்டது. 

     தற்போது பெண்கள் பெரும்பாலனோர் நேரடியாக ஜாக்கெட்டுக்குள் பணத்தை வைப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். இதனால் பெரும்பாலான பெண்களுக்கு மார்ப்பக புற்று நோய், இதய நோய் போன்ற பாதிப்புகள் வருவதாக ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
       இதே போல், சட்டை மேல் பாக்கெட்டில் ரூபாய் நோட்டுகளை வைப்பதால் பெரும் பாலான ஆண்களுக்கு தோல் நோய் தாக்குவதாகவும், ரூபாய் நோட்டுகளில் உள்ள கிருமிகளை சுவாசிப்பதால் மாரடைப்பு போன்ற பல்வேறு வகையான நோய்கள் தாக்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே, ஆண்களோ, பெண்களோ யாராக இருந்தாலும், ரூபாய் நோட்டுகளை மணிபர்ஸ் போன்றவற்றில் பாதுகாப் பது சிறந்தது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கிறார்கள்.

  ரூபாய் நோட்டுகளால் ஏற்படும் பாதிப்பு குறித்த தகவல்களை கண்டறிய பொது மக்கள் பயன்படுத்தும் ரூபாய் நோட்டுகளை சேகரிக்கப்பட்டன. இந்த நோட்டுகளை டெல்லியில் இயங்கி வ ரும்  இன்ஸ்டியூட் ஆப் ஜெய நாமிக்ஸ் அண்ட் இன்ட்டிகிரேட்டிவ் பயாலஜி ஆய்வுக் கூட விஞ்ஞானிகள் ஆய்வு மேற் கொண்டனர். அதில் ரூபாய் நோட்டுகளில் பங்கர்ஸ்கள் அதிக அளவில் இருப்பதாகவும், இதனால், எலும்பு உருக்கி நோய் எனப்படும் டி.பி. மற்றும் அல்சர் போன்ற நோய்கள் தாக்கும் என்றும், மேலும், உடைகள் மற்றும் சோப்புகள், கம்ப்யூட்டர் ஆகியவற்றின் மூலம் பல்வேறு வகையான நோய்கள் மக்களை தாக்குவதாக தெரிவிக்கப்பட்டது. 

     அதே மையம் நடத்தியுள்ள ஆய்வில், மக்கள் தினமும் பயன்படுத்தும் 10, 20 மற்றும் 100 ரூபாய் நோட்டுகள் அதிக அளவில் மக்களிடம் புழக்கத்தில் இருப்பதன் மூலம் 78 வகையான தொற்று நோய்கள் பரவுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ரூபாய் நோட்டுகள் ஒருவ ரி டம் இருந்து மற்றொருவரி டம் கைமாறுவதால், நோய்கள் பரவுவதாகவும் ஆய்வில் தெரியவருகிறது.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-16.
  • பராகுவே சிறுவர் தினம்
  • சைப்ரஸ் விடுதலை தினம்(1960)
  • இந்திய ஆன்மிகவாதி ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சர் இறந்த தினம்(1886)
  • சத்தத்துடனான முதல் வண்ண கார்டூன் உருவாக்கப்பட்டது(1930)
கவர்ச்சி சாமியாரிணி.
========================================================================
ஊழலை ஒழிப்போம். விடுதலை தின பிரதமர் மோடி உரை.
எப்படி?ஊழல் வாதிகளுக்கெல்லாம் சுஷ்மா,வசுந்தரா,ம.பி  முதல்வர் போல் அமைச்சர் பதவிகளை கொடுத்தா?


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?