புற்று நோயை குணப்படுத்த?

தலையாய பிரச்னை! * ஆலமரத்தின் இளம்பிஞ்சு வேர், செம்பருத்தி பூ இடித்து தூள் செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி ஊறவைத்து தலைக்கு  தேய்த்து வந்தால் முடி கருப்பாகும்.

* காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து தேங்காய் எண்ணெயில் கலந்து காய்ச்சி தலையில் தேய்க்கவும்.

 உணவுப் பழக்கத்திற்கும் சருமத்திற்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. ஆரோக்கியமான சருமத்தை பெற சில எளிய  பழக்கவழக்கங்களை பின்பற்றலாம்.. தினமும் நிறைய தண்ணீர் அருந்த வேண்டும்.
* பச்சைக்காய்கறிகள் அதிக அளவில் உண்ண வேண்டும். வெள்ளரிக்காய், கேரட், தக்காளி, வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற  காய்கறிகளை சாலட் செய்து சிறிது எலுமிச்சை சாறு கலந்து உண்பது மிகவும் நல்லது. இது போல் மோர் குடிப்பதும் சிறந்தது.

* பழங்கள் உடலுக்கு தேவையான வைட்டமின்கள், மினரல்களை தரும். மாதுளம் பழச்சாறுடன் தேன் சேர்த்து அருந்தினால்  இரத்த சோகை ஓடியே போகும். வாழை பழத்தில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ளது. இது மூளை செயல்பாட்டுக்கு சிறந்தது.  ஆரஞ்சு, அன்னாசி பழச்சாறுகளையும் அடிக்கடி அருந்தலாம்.. தியானம், ஆழ்ந்து மூச்சு விடும் பயிற்சி, உடற்பயிற்சி  போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும்.

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் வேகவைத்து ஒரு நாள் கழித்து வேகவைத்த நீரை கொண்டு தலை கழுவி வந்தால் முடி  கொட்டுவது நின்று விடும்.

* கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் பொடிகளை கலந்து இரவில் தண்ணீரில் காய்ச்சி ஊறவைத்து காலையில் எலுமிச்சை  பழச்சாறு கலந்து கலக்கி தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்வது நிற்கும்.

* வெந்தயம், குன்றிமணி பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்கு பின் தினமும் தேய்த்து வந்தால்  முடி உதிர்வது நிற்கும்.

* கீழாநெல்லி வேரை சுத்தம் செய்து சிறிய துண்டாக நறுக்கி தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி தலைக்கு தடவி வந்தால்  வழுக்கை மறையும்.


நன்றி:தினகரன்.
===================================================================
 புற்று நோயை , 
படிப்படியாக முற்றிலும் குணப்படுத்த
 ஒரு எளிய வைத்தியம் !
இந்தச் சிகிச்சையை கண்டு பிடித்தவர் பிரேசில் நாட்டில் பிறந்தவரும் சிறந்த மருத்துவரும் பாதிரியாருமாகிய Fr ரோமனோ சகோ (Fr Romano Zago) என்பவர்.
இவர் கண்டு பிடித்த இம்மருந்தை புற்று நோயால் மிகக் கடுமையாக பாதிக்கப் பட்டவர்கள் கூட உபயோகித்து குணமடைந்துள்ளனர்.
இனி இம்மருந்தை எப்படி தயாரிப்பது என்பதை பார்ப்போம்.
இதில் பயன்படுத்தப்படும் மூலிகை எங்கும் எளிதாக கிடைக்கும் சோற்றுக் கற்றாழை ஆகும் .
● சோற்றுக் கற்றாழை 400 கிராம்
● சுத்தமான தேன் 500 கிராம்
● Whisky (or) Brandy 50 மில்லி (மருந்தாக மட்டும் பயன்படுத்துக)
■ தயாரிப்பு முறை
சோற்றுக் கற்றாழையை எடுத்து பக்கவாட்டில் உள்ள முட்களை நீக்கி கொள்ள வேண்டும். தோலை நீக்கிவிடக்கூடாது.
தோலை சுத்தமான துணியினால் துடைத்துக் கொள்ளவேண்டும் அடுத்த படியாக எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறியதாக கற்றாழையை நறுக்கிக் கொள்ளவேண்டும்
நறுக்கப்பட்ட துண்டுகளை ஒரு பாத்திரத்தில் கொட்டி தேன் மற்றும் whisky (or) brandy யுடன் சேர்த்து ஒரு கரண்டியால் நன்றாக கலக்க வேண்டும்
இப்போது மருந்து தயாராகி விட்டது
■ மருந்தை உட்கொள்ளும் விதம்
இம்மருந்தை தினமும் மூன்று வேளை உணவு அருந்துவதற்கு 30 நிமிடத்திற்கு முன்பு 15 ml வீதம் உண்ணவேண்டும்.
ஒவ்வொரு முறை பயன்படுத்தும் போதும் மருந்தை நன்றாக குலுக்கிக் கொள்ளவேண்டும.
மேலே சொன்ன அளவில் செய்தால் பத்து நாட்களுக்கு இந்த மருந்து வரும். மருந்து தீர்ந்தவுடன் 10 நாள் கழித்து மீண்டும் தயாரித்து உண்ணவேண்டும.
பத்து நாட்களுக்கு மேல் மருந்தை storage செய்ய கூடாது.
இடையிடையே மருத்துவ பரிசோதனை செய்து கொண்டு நோய் நன்கு குணமாகும் வரை மருந்தை உட்கொள்ளவேண்டும்.
சிலருக்கு மிக குறுகிய காலத்திலேயே இதன் மூலம் நிவாரணம் கிடைத்துள்ளது .
இது மிகவும் எளிதான சக்தி மிகுந்த மருந்து ஆகும். மருந்தை குளிர்சாதன பெட்டியிலோ அல்லது அதிக வெப்பம் இல்லாத இடங்களிலோ காற்றுப் புகாத பாட்டிலில் வைத்திருப்பது நல்லது .
இப்படி ஒரு தகவலை பல் இடங்களில் இணையத்தில் பார்க்க முடிகிறது.
உண்மையில் இப்படி மருந்து உட் கொண்டு யாராவது தற்போது குணமாகியுள்ளனரா?புற்று நோய் பாதிப்பில் இருந்து விடு பட்டுள்ளனரா? 
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-21.

  • ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது(1821)
  • டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது(1842)
  • ஸ்டாலின்கிராட் போர் துவங்கியது(1942)
  • ஜேம்ஸ் குக், கிழக்கு ஆஸ்திரேலியாவை கைப்பற்றி, அதற்கு நியூசவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்(1770)

 Opera Max

மொபைல் சாதனங்களில் இணைய இணைப்பினைப் பயன்படுத்தும்போது டேட்டாவின் அளவினை குறைவாகப் பயன்படுத்த உதவும் அப்பிளிக்கேஷனே Opera Max ஆகும்.
இந்த அப்பிளிக்கேஷனின் பதிப்பானது சில புதிய அம்சங்களை உள்ளடக்கியதாக வெளியிடப்பட்டுள்ளது.
இதன் உதவியுடன் வீடியோ உட்பட ஏனைய நோக்கங்களுக்காக டேட்டாவினைப் பயன்படுத்தும் போது 50 சதவீதத்தினால் டேட்டா பாவனையை சுருக்கக்கூடியதாக (Compressed) காணப்படுகின்றது.
இவை தவிர YouTube, Netflix என்பனவற்றில் வீடியோக்களை பார்வையிடும் போது Buffering ஆவதற்கான நேரமும் குறைவாகவே இருக்கின்றது.
மேலும் இந்த அப்பிளிக்கேஷனினை Mobile Date Connection மற்றும் WiFi ஆகிய இரண்டிற்கும் பயன்படுத்த முடியும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?