அந்த அறுபது நிமிடங்கள்!
கோக்க கோலாவை குடித்த 60 நிமிடங்களில் நமது உடலில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன? என்பதை அறிந்து கொள்வோம்.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.
ஏகப்பட்ட ஆபத்தான மாற்றங்கள் நமக்கு தெரியாமலேயே நிகழ்வதாக பல காலமாக கூறப்பட்டு வந்தாலும், ‘கோக்’ மீது அதன் அபிமானிகள் கொண்டுள்ள மோகமானது, இந்த எச்சரிக்கைகளை எல்லாம் புறம்தள்ளி வைக்க தூண்டுகிறது.
கோக்க கோலா மட்டுமன்றி சர்க்கரையுடன், கேபைன் எனப்படும் மூலப்பொருளும் கலந்த பானங்களை நாம் பருகும்போது..,
முதல் பத்து நிமிடம்:
நமது இரத்த மண்டலத்தில் பத்து தேக்கரண்டி அளவிலான சர்க்கரை ஒரே நேரத்தில் பாய்கிறது. (இது ஒருநாள் முழுவதும் ஒரு மனிதர் உட்கொள்ளக் கூடிய அதிகபட்ச சர்க்கரையின் அளவாகும்) இதன்விளைவாக, உங்களுக்கு வாந்தி வரக்கூடும். ஆனால், கோக்க கோலாவில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ இந்த குமட்டல் அறிகுறியை அடக்கி விடுகிறது.
இருபதாவது நிமிடம்:
இருபதாவது நிமிடம்:
உங்கள் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு தாறுமாறாக கூடுகிறது. இதன் விளைவாக, இன்சுலின் சுரப்பி அமோக உற்பத்தியை தொடங்கி விடுகிறது. இதையடுத்து, கிடைக்கக்கூடிய சர்க்கரையை எல்லாம் நமது கல்லீரல் கொழுப்பாக மாற்றி, உடலுக்குள் தேக்கி வைத்து கொள்கிறது.
நாற்பதாவது நிமிடம்:
நாற்பதாவது நிமிடம்:
பைன் எனப்படும் வேதியல் கரைசலை நமது உடல் முழுமையாக உள்வாங்கிக் கொள்கிறது. கண் விழிகள் விரிவடைகின்றன. இதை ஈடுசெய்ய அதிகமான சர்க்கரையை நமது கல்லீரல் இரத்தத்துக்கு அனுப்புகிறது. இந்த நிலையில் சோர்வை உணர்ந்துக் கொள்ளக் கூடிய மூளையின் உணர்வுப் பகுதி தற்காலிகமாக தடைக்குள்ளாகின்றது.
நாற்பத்தைந்தாவது நிமிடம்:
நமக்கு ஊக்கத்தையும், பேரின்பத்தையும் ஏற்படுத்தவல்ல மூளையின் மண்டலம் சுறுசுறுப்படைகிறது. இது ‘ஹெராயின்’ உபயோகிப்பவர்களுக்கு கிடைக்கும் ஊக்கம் மற்றும் சுறுசுறுப்புக்கு இணையானதாக கருதப்படுகிறது.
அறுபதாவது நிமிடம்:
இதில் உள்ள ‘பாஸ்பரிக் ஆஸிட்’ கால்சியம், மேக்னீசியம் மற்றும் துத்தநாக சத்துகள் நமது சிறுகுடலை ஆக்கிரமித்துக் கொள்கின்றன.
இதன் விளைவாக இரத்த ஓட்டம் கூடுகிறது.
சிறுநீர் கழித்தே தீர வேண்டிய கட்டாய உணர்வு ஏற்படுவதுடன், சிறுநீர் வழியாக உடலில் உள்ள கால்சியம் சத்தும் வெளியேறி விடுகிறது.
கட்டாயமாக சிறுநீர் கழிப்பதன் வாயிலாக நமது எலும்புகள் சக்திபெற ஏற்கனவே தேக்கி வைக்கப்பட்ட கால்சியம், மேக்னீசியம், துத்தநாகம், மற்றும் சோர்வுத்தன்மையை நீக்கும் ‘எலக்ட்ரோலைட்’ திரவம், நீர் ஆகிய சத்துகள் சிறுநீர் வழியாக வெளியேறி விடுகின்றன.
இவை யாவும் வெளியேறிய பின்னர், மீண்டும் சர்க்கரைக்காக உங்கள் இரத்தம் ஏங்கத் தொடங்கும்.
எரிச்சல், களைப்பு ஆகியவை தோன்றி மீண்டும் இதைப்போன்ற குளிர் பானங்களை நாட வேண்டிய உந்துதலுக்கு ஆளாக்கப்படுகிறோம் என சமீபத்திய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.
இவை டாஸ்மாக் இணைய குத்துக்கள்.
சீமான்,தமிழருவி மணியன், அன்புமணி,நெடுமாறன்,கம்யூனிஸ்ட்கள்,செ.கு.தமிழரசன்,சரத்துகுமார் போன்ற அடிமை கட்சிகள் மற்றும் நடுநிலைவாதிகளின் ஏமாற்று வேலை.....
நிருபர் :- திமுக மதுவிலக்கு கொண்டு........................?
( கேள்வியை முடிக்கும் முன்பே)
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- தமிழ்நாட்டுக்கு மதுவை கொண்டுவந்ததே கலைஞர்தான், மதுவிலக்கை பற்றி அவர் பேசலாமா...?
நிருபர் :- 1971ல் திமுக கொண்டுவந்தாலும் 1974ல் அவர்களே மதுவிலக்கை அமுல்படுத்தி மதுவை ஒழித்துவிட்டார்களே.... பிறகு வந்த எம்ஜிஆரின் அதிமுகதானே தமிழகத்தில் மதுவிலக்கை தளர்த்தி மதுவை விற்பனை செய்தது...?
அடிமைகள் :- ம்ம்ம.....ஆங்...முதலில் கொண்டுவந்து கலைஞர் செய்ததுதான் பெரிய தவறு....
நிருபர் :- கலைஞர்தான் இப்போது மதுவிலக்கை கொண்டுவருவேன் என்கிறாரே...?
அடிமைகள் :- போன திமுக ஆட்சியில் ஏன் கலைஞர் கொண்டுவரவில்லை... ?
நிருபர் :- போன ஆட்சியில் குழந்தைகளை குடிக்க வைக்கும் அளவுக்கு போதை கலாச்சாரம் தலைவிரித்து ஆடவில்லையே...., ஆனாலும்,அரசியல் கட்சிகளின் வேண்டுகோளையேற்று 1500 மேற்ப்பட்ட டாஸ்மாக் கடைகளை மூடியும் கடை திறந்திருக்கும் நேரத்தை ஒரு மணிநேரம் குறைத்தும் உத்தரவிட்டாரே...?
அடிமைகள் :- ஆங்... திமுகவினரின் மது ஆலைகளை மூடிவிட்டு மதுவிலக்கை பற்றி பேசட்டும்...
நிருபர் :- மதுவிலக்கு அமுலக்கு வந்துவிட்டால்.. ஆலைகளையும் தானாக மூடிவிடுவார்கள் என்கிறார்களே...
அடிமைகள் :- அதாங்க...முதலில் திமுக ஆலைகளை மூடச்சொல்லுங்க...
நிருபர் :- சரி...அதிமுக மதுவிலக்கை அமுல்படுத்த மறுக்கிறதே.......... ?
( கேள்வியை முடிக்கும் முன்பே)
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- அதிமுகவும் தன்பங்கிற்கு மிடாஸ் போன்ற மது ஆலைகளை நடத்துதே,அதை நீங்க மூடச்சொல்லலாமே..?
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- அதில்லைங்க....இப்ப காந்தியவாதி சசிபெருமாள் மதுவிலக்குகாக உயிர்த்தியாகம் செய்துள்ளார்....
( கேள்வியை முடிக்கும் முன்பே)
( கேள்வியை முடிக்கும் முன்பே)
அடிமைகள் :- பார்த்தீங்களா...இதுக்குதான் சொல்றோம் ...முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிரூபர்:- சசிபெருமாளின் 9 வயது பெண் குழந்தை உட்பட போராடிய பலரை அதிமுக அரசு கைது செய்து வைத்தள்ளதே...?
அடிமைகள் :- இவ்ளோ பிரச்சனைக்கும் முதலில் மதுவை கலைஞர் கொண்டு வந்ததால்தான்..அதனால முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- வைகோ மற்றும் போராட்டம் நடத்திய மாணவர்கள் மீதும் போலிஸ் தடியடி நடத்தியுள்ளதே....??
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை மூடச்சொல்லுங்க....
நிருபர் :- மதுவிலக்குக்காக போராடிய 5 மாணவிகள் உட்பட 15 மாவர்களை கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளதே அதிமுக அரசு...?
அடிமைகள் :- முதலில் திமுகவின் ஆலைகளை....
( பதிலை முடிக்கும் முன்பே)
( பதிலை முடிக்கும் முன்பே)
நிருபர் :- அடேய்ய்ய்ய்ய்... முதல்ல நீங்க மூடுங்கடா..... நீங்க வாய முடினாதான்டா தமிழ்நாடு உருப்படும்.....
உஸ்ஸ்ஸ்ஸ்...மது குடிக்காமலே மயக்கம் வர வச்சிட்டானுங்களே...மதுவிலக்கு மட்டுமல்ல, அடிமை கட்சிகள் விலக்கும் தமிழ்நாட்டு வேண்டும்டா சாமி...
உஸ்ஸ்ஸ்ஸ்...மது குடிக்காமலே மயக்கம் வர வச்சிட்டானுங்களே...மதுவிலக்கு மட்டுமல்ல, அடிமை கட்சிகள் விலக்கும் தமிழ்நாட்டு வேண்டும்டா சாமி...
அதிமுக [காவல்]துறை ஒட்டிய சுவரொட்டி.