ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2015

காலத்தே குழந்தை...,

முப்பது வயதிற்குள்ளேயே குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் என்பதற்கான காரணங்கள். இருபதுகளின் ஆரம்ப வயதில் தான் ஆண், பெண் இருவரும், 1௦௦ சதவீதம் குழந்தைப் பேறுக்கான உடல் மற்றும் மனத் தகுதிகளோடு இருக்கின்றனர். 
இந்த வயதில் ஒரு பெண்ணிற்கு, 10 லட்சத்தில் இருந்து 20 லட்சம் முட்டைகள் வரை கருவில் உருவாகிறது.
இருபதுகளின் கடைசிகளில், பெண்களுக்கு கருத்தரிப்பதற்கான உடல் வலிமை குறைய ஆரம்பித்துவிடும். 
ஆயினும் கருத்தரிக்க, 75 சதவீத வாய்ப்புகள் உள்ளன. 
ஏனெனில், ஆணின் விந்தணுவின் உற்பத்தியும் வேகமும் குறைவதில்லை. 
முப்பதுகளின் ஆரம்ப வயதில் இருந்து ஒவ்வொரு மாதவிடாய் காலத்திலும், பெண்களின் கருமுட்டைகளின் எண்ணிக்கை, ஆயிரக்கணக்கில் குறையத் துவங்கும். இதுதான் பெண்களுக்கு. 30 வயதில், குழந்தைப் பேறுக்கான வாய்ப்புகள் குறைய காரணம். 
இயல்பாகவே, 40 முதல்50 வயதிற்குள், பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாயே நின்று விடுகிறது. அப்படியே கருமுட்டை உருவாகினாலும், வலிமை குறைவாக தான் இருக்கும். 
அதேநேரம், ஆணின் விந்து உற்பத்தியும், வேகமும் குறைந்து விடும். அதனால் நாற்பதுகளில் குழந்தைப் பேறு என்பது மிகவும் சிரமம். 
45 வயதிற்கு மேல், மிக சில பெண்களுக்கு மட்டுமே, குழந்தைப் பேறு வாய்க்கிறது. அதுவும், சிலருக்கு சரியான மருத்துவ சிகிச்சைகளின் மூலமாக கருத்தரிக்க செய்கின்றனர். கருமுட்டையின் வலுவின்மையும், மாதவிடாய் முடியும் தருவாய் என்பதாலும், கருத்தரிப்பில் சிரமம் ஏற்படுகிறது. மேலும், ஆணின் விறைப்பு தன்மை மற்றும் வேகம் மிகவும் குறைந்திருக்கும். 
இதனால், குழந்தைப் பேறு அடைவது மிக மிக குறைகிறது. 
=======================================================================
புகையிலை நிறுத்த பாக்டிரியா...,
அமெரிக்காவின் ஸ்கிரிப் ஆராய்ச்சி நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவ விஞ்ஞானிகள் புகைப்பிடிக்கும் பழக்கத்தை நிறுத்த உதவும் புதிய பாக்டீரியாவை கண்டுபிடித்துள்ளனர். 
அதன் பெயர் சூடோமோனாஸ் புடிடா. இது புகையிலை விளையக் கூடிய மண்ணிலிருந்தே பெறப்படுகிறது'
இந்த பாக்டீரியா மற்ற பாக்டீரியாவிலிருந்து சற்று வித்தியாசமாக உள்ளது. இவை புகைப்பிடிப்பதால் மனிதனின் ரத்தத்தில் கலக்கும் நிகோடினையே உண்டு வாழக் கூடியவை. 

ரத்தத்தில் கலந்த நிகோடின் மூளையை சென்றடையும் முன்பே இந்த பாக்டீரியாக்கள் நிகோடினை தின்று விடும். அதனால், புகைப்பிடிககும் பழக்கத்திற்கு மூளை அடிமையாக்கப்படுவது குறையும். இந்த வகை பாக்டீரியாக்கள் ரத்த ஓட்டத்தில் இருக்கக் கூடிய நிகோடினையும் கட்டுப்படுத்துவதையும் கண்டு பிடித்தனர்.

இதை நிரூபிக்க ஒரு எலியின் ரத்த மாதிரியில், ஒரு சிகரெட்டில் இருக்கக்கூடிய நிகோடினை கலந்தனர். தொடர்ச்சியாக இந்த பாக்ட்டீரியாக்களைச் சேர்த்ததில் ரத்தத்தில் இருந்த நிகோட்டினை 10 நிமிடங்களிலேயே காலி செய்தது.

சிகரெட் பிடிப்பவர்கள் தங்கள் மனோ பலத்தால் பழக்கத்திலிருந்து மீள்வதற்கு முயற்சி செய்தாலும். இவ்வகை பாக்டீரியாக்கள் மிக உதவியாக இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர்.
இப்படி மது பழக்கத்துக்கும் ஏதாவது பாக்டிரியாக்கள் கண்டு பிடித்தால் நன்றாக இருக்கும்.
========================================================================
மூடப்படும் பொறியியல் கல்லூரிகள்.
போதிய மாணவர் சேர்க்கை இல்லாத காரணத்தால் தமிழகத்திலுள்ள 80 பொறியியல் கல்லூரிகளை விரைவில் மூட ப்படும் என தெரிய வந்துள்ளது. 
தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் 50 சதவீத பி.இ இடங்கள் காலியாக உள்ளன. வேலையின்மை, கல்விக் கடன் கிடைப்பதில் சிக்கல் ஆகிய காரணங்களால் பி.இ படிப்பின் மீதான ஆர்வம் மாணவர்களிடையே குறைந்துள்ளது. 
இதனால் 80 பொறியியல் கல்லூரிகளை மூடும் நிலை உருவாகியுள்ளது. 

கலை அறிவியல் கல்லூரிகளாக மாற்றம் செய்யவும் பல பொறியியல் கல்லூரிகள் அனுமதி கோரியுள்ளன. பி.இ மற்றும் எம்.இ படிப்புகளுக்கு மவுசு குறைந்துள்ளதால், பல மாணவர்கள் காலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர்ந்துள்ளனர். 
இந்நிலையில் உயர்கல்வியில் மறுமலர்ச்சியாக அனைவருக்கும் ஆன்லைன் கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. வரும் ஆண்டில் அனைத்து பல்கலைக்கழகங்களும் மின் ஆளுமை முறையுடன் கூடிய புதிய கல்வித் திட்டங்களை செயல்படுத்த உள்ளன.
========================================================================
இன்று,
ஆகஸ்ட்-09.


  • வெள்ளையனே வெளியேறு இயக்கம் துவங்கப்பட்டது (1942)
  • சிங்கப்பூர் விடுதலை தினம்(1965)
  • தென்னாப்பிரிக்க தேசிய பெண்கள் தினம்
  • தாமஸ் ஆல்வா எடிசன் தனது இருவழி தந்திக்கான காப்புரிமம் பெற்றார்(1892)
  • பைசா சாயும் கோபுரத்தில் கட்டிட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டன.இது 200 ஆண்டுகளுக்கு பின்னரே முடிவுற்றது(1173)

நாகசாகி70வது ஆண்டு நினைவு தினம்
இரண்டாம் உலகப் போரின்போது, அணுகுண்டு வீச்சால் ஜப்பானின் நாகசாகி நகரம் பேரழிவுக்கு ஆளானது. அதன் 70வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. 
நினைவுதின நிகழ்ச்சியில் ஜப்பான் பிரதமர், அமெரிக்க தூதரக அதிகாரி உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். இரண்டாம் உலகப் போரின்போது ஜப்பானின் முக்கிய நகரங்களான ஹிரோசிமா, நாகசாகி மீது அமெரிக்கா அணுகுண்டு வீசியது. 
1945ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ம் தேதி ஹிரோசிமாவிலும், 3 நாட்கள் கழித்து நாகசாகியிலும் குண்டுகள் வீசப்பட்டன. சுமார் 4 ஆயிரம் டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை கொண்ட சக்திவாய்ந்த குண்டு வீசப்பட்டதால் பேரழிவு ஏற்பட்டது.

ஹிரோசிமா நகரில் சுமார் 1.40 லட்சம் பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 
நாகசாகியில் 74 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். கதிர்வீச்சால் ஏராளமானோருக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டது. 
குண்டுவீச்சின்போது சிறுவர் சிறுமிகள் அழுகுரலுடன் ஓடிவந்த காட்சி உலகையே உலுக்கியது. 
ஜப்பான் மக்களுக்கு இன்று வரை மறக்க முடியாத நினைவாக உள்ளது. 
அணுகுண்டு வீசப்பட்ட நினைவுநாளை ஜப்பான் ஆண்டுதோறும் அனுசரித்து வருகிறது. 
அந்தவகையில், 70வது ஆண்டு நினைவு தினம், ஹிரோசிமா நகரில் கடந்த வியாழக்கிழமையன்று அனுசரிக்கப்பட்டது. நாகசாகியில் இன்று நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது. இதில், ஜப்பான் பிரதமர்  ஷின்சோ அபே, ஜப்பானுக்கான அமெரிக்க நாட்டு தூதர் கரோலின் கென்னடி உள்ளிட்டோர் நினைவுதின நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர். மேலும், உலகப்போர் நடந்த சமயத்தில் உயிர் தப்பியவர்களும் கலந்து கொள்கின்றனர். குண்டுவீச்சில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகள் நாகசாகி நகரின் பல்வேறு இடங்களில் நடக்கிறது. பொதுமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்துகின்றனர்.   
========================================================================
முக[னூல்]சுவை கள். 

ஏமாறச்சொன்னது ...?
அமெரிக்காவில் ஒரு இந்திய டாக்டர் ஒரு மருத்துவமனையை துவக்கினார்.
கஸ்டமர்களை கவர்ந்திழுக்க ஒரு அறிவிப்பை வெளியிட்டார்.
அதில் நோயாளிக்கு நோய் குணமானால் ரூ 300 வசூல் செய்யப்படும்.
நோய் தீரவில்லை என்றால் ரூ.1000 தரப்படும் என அறிவித்தார்.
இவரை எப்படியாவது கவிழ்க்க திட்டமிட்ட ஒரு அமெரிக்கர் இந்திய டாக்டரை அணுகினார்.
அமெரிக்கர் :
'சார்... எனது நாக்கால் சுவையை அறிய முடியவில்லை என்றார்.
உடனே டாக்டர் : 'ஏம்மா நர்ஸ்....அந்ந 22ம் நம்பர் பாட்டிலை எடுத்து, இவர் வாயில் ஊத்து' என்றார்.
நர்ஸ் அந்த பாட்டிலில் இருந்து மருந்தை அமெரிக்கரின் வாயில் ஊற்றினார்.
உடனே பதறிய அமெரிக்கர், 'அய்யய்யோ.....இது சிறுநீராச்சே' என்றார்.
டாக்டர் :
'அப்படினா உங்க நாக்கு சுவையை உணர்கிறது. மேட்டர் ஓகே.
எடுங்க ரூ.300 ஐ' என்றார்.
ஏமாந்துட்டோமோ என்ற கோபத்தில் விட்டதை பிடிக்க , 2 வாரம் கழித்து மீண்டும் டாக்டரிடம் வந்தார் அமெரிக்கர்.
அமெரிக்கர் : 'எனக்கு ஞாபக மறதி அதிகமாயிருச்சு . இதை சரி செய்யுங்க டாக்டர்'.
டாக்டர் :
நர்ஸ்.... அந்த 22 ம் நம்பர் பாட்டிலை எடுங்க.
அமெரிக்கர் (பதறிப்போய்) :
டாக்டர் அது சிறுநீர் என்றார்.
டாக்டர் :
அப்போ உங்களுக்கு ஞாபகம் அதிகமாயிருக்கிறது,ரூ.300ஐ வச்சுட்டு கிளம்புங்க என்றார்.
அமெரிக்கர்: இந்தியர்களை எப்பொழுதுமே ஏமாற்ற முடியாது என்று புலம்பிக்கொண்டேசென்றுவிட்டார்..
படித்தேன் ரசித்தேன் பகிர்தேன்....
நட்புடன் உங்கள் தோழி Divya Devi