வரவேற்க வேண்டிய ‘ஆண்டி வைரஸ்’
இணையத்தில் தகவல் தொகுப்பின் உள் ளடக்கத்திற்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயம் செய் தால் ரூ. 50 ஆயிரம் முதல் ரூ.50 லட்சம் வரை அபராதம்விதிக்கப்படும்.
மீறி செயல்பட்டால் கடுமையான நடவடிக்கை பாயும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய் ) ஓர் உத்தரவை பிறப்பித்திருக்கிறது.
இது வரவேற்கத்தக்கது.இந்திய மக்களின் இணைய பயன்பாட்டை கபளீகரம் செய்ய பேஸ்புக், ரிலையன்ஸ், ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் இலவசம் என்ற பெயரில் சில திட்டங்களை அறிவித்து வைரஸாக ஊடுருவ விட்டது.
இந்த வைரஸ்களை அழிக்கும் ஆண்டி வைர சாக டிராயின் உத்தரவு இணைய உலகில் வரவேற்பைபெற்றிருக்கிறது. இதேபோன்று இணைய பயன் பாட்டில் இருக்கும் மக்களை இணைய கார்ப்பரேட் களிடம் இருந்து முழுமையாக பாதுகாக்க பல்வேறு மக்கள் நலன் காக்கும் ஆண்டி வைரஸ்களை இந்திய அரசு உருவாக்கிட வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்திருக்கிறது.
அதாவது இணையத்தில் பார்க்கும் தகவல் தொகுப்பின் உள்ளடக்கத்திற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும் என்ற முறையை ஏற்க முடியாது.
அனைத்து இணைய தளங்களும் சமமாகவே பார்க்கப்பட வேண்டும். இணையத்தை பயன்படுத்து வோர் எந்த தகவல்களைப் பார்க்க வேண்டும். எப்படிப் பட்ட உள்ளடக்கத்தைப் பார்க்க வேண்டும் என்பதை முடிவு செய்து கொள்ளலாம். இது அவர்களின் உரிமைஆகும்.
அதனை பறிக்கும் விதமாக இந்த உள்ளடக் கத்தைப் பார்க்க இவ்வளவு கட்டணம், இந்த தகவல் தொகுப்பை பார்வையிட இவ்வளவு கட்டணம் என நிர்ணயிப்பதை ஏற்க இயலாது. இது இணைய பயன்பாட்டாளர்களிடையே மிகப்பெரிய ஏற்றத்தாழ்வை உருவாக்கும் என டிராய் கூறி யிருக்கிறது.குறிப்பாக பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து ரிலையன்ஸ் நிறுவனம் ’பிரிபேசிக்ஸ்’ என்ற திட் டத்தை அமலாக்கியது.
அதன் மூலம் அந்த திட் டத்தில் இணைபவர்கள் பேஸ்புக் நிறுவனமும், ரிலை யன்ஸ் நிறுவனமும் அளிக்கும் தகவல்களையும், உள்ளடக்கத்தையும் மட்டுமே பார்க்க, பயன்படுத்தமுடியும். இதன் மூலம் அந்நிறுவனம் விரும்பும்கருத்துருவாக்கத்தை மட்டும் சமூகத்தில் கட்டிய மைக்க முடியும். இதைத்தான் லாவகமாக பேஸ்புக் நிறுவனம் இலவசம் என்று விளம்பரப்படுத்தியது.
இலவசம் என்றால் இணைய இணைப்பையே இலவச மாக அளிக்கலாமே என்ற இணைய சமவாய்ப்புகோரும் குழுவினரின் கேள்விக்கு பதிலளிக்க வில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. டிராயின் உத்தரவு அப்படியே அமலாகி விடும் என எதிர்பார்க்க முடியாது.
காரணம் பிரதமர் மோடிக்கு ‘அனைத்துமாக’ கார்ப்பரேட்கள் இருக்கின்றன.
அதில் ரிலையன்ஸ் நிறுவனம் முன்வரிசையில் இருக் கிறது.
கடந்த தேர்தலில் மோடியை முன் நிறுத்தி யதில் பேஸ்புக் நிறுவனத்திற்கு மிகப்பெரிய பங்குஇருக்கிறது. டிராய் கூறியிருப்பது போல் தற் போதைய உத்தரவு இணைய சமநிலையை பேணு வதில் இது ஒரு கூறுதான், இன்னும் நிறைய அம்சங் கள் இருக்கின்றன.
அதுவும் மோடியின் கையில்இருக்கிறது. ஆக கார்ப்பரேட்களுக்கு கைமாறுஅவசர சட்ட வடிவில் வந்தாலும் ஆச்சரியப் படுவதற்கில்லை.
ஆக இணைய சமநிலை கோரும்தொடர் போராட்டமே டிராயின் உத்தரவை உயிர் வாழ வைக்கும். அத்தகைய போராட்டத்தை தொடரவேண்டியுள்ளது.
இணைய உரிமையை அப்போது தான் பாதுகாக்க முடியும்.
நன்றி:தீக்கதிர்.
இன்று ,பிப்ரவரி-11.
- 1809 - ரொபேர்ட் ஃபுல்ட்டன் நீராவிப்படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1814 - நோர்வேயின் விடுதலை அறிவிக்கப்பட்டது.
- 1960 - சீன எல்லையில் நடந்த தாக்குதல் ஒன்றில் 12 இந்திய இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
- 1968 - இஸ்ரேல்-ஜோர்தான் எல்லைச் சண்டை ஆரம்பித்தது.
- 1990 - தென்னாபிரிக்காவில் நெல்சன் மண்டேலா 27 ஆண்டுகள் சிறைவாசத்தின் பின்னர் விடுதலையானார்.
- 1997 - டிஸ்கவரி விண்கலம், ஹபிள் விண்வெளித் தொலைக்காட்டியை சரிசெய்வற்காக விண்ணில் ஏவப்பட்டது
- பிறப்புகள்
- 1847 - தாமஸ் ஆல்வா எடிசன், அமெரிக்கக் கண்டுபிடிப்பாளர், தொழிலதிபர் (இ. 1931)
- 1917 - சிட்னி ஷெல்டன், அமெரிக்க எழுத்தாளர் (இ. 2007)
- இறப்புகள்
- 1946 - மா. சிங்காரவேலர், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தை (பி. 1860)
- சிறப்பு நாள்கள்
- ஜப்பான் - நிறுவன நாள்
- கமரூன் - இளைஞர் நாள்
- ஐக்கிய அமெரிக்கா - கண்டுபிடிப்பாளர் நாள்
- பொஸ்னியா - விடுதலை நாள்
- வத்திக்கான் நகரம் - விடுதலை நாள் (1922)
1946 பிப்ரவரி 11: சிங்காரவேலர் நினைவு நாள்
1860-ம் ஆண்டு பிப்ரவரி 18-ல் பிறந்தவர் சிங்கார வேலர்.
ஓரளவுக்கு வசதியான பின்புலம். பள்ளிக் கல்வியை முடித்த பின், சென்னை கிறித்தவக் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்தார். அதன்பின் சென்னை சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றார்.
பின்னர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணிபுரிந்தார். ஆங்கிலம், இந்தி உள்ளிட்ட பல மொழி களைக் கற்றுத் தேர்ந்தார். தவிர, வாதிடுவதில் சிறந்து விளங்கிய சிங்காரவேலர், தனது உழைப்பின் மூலம் குறுகிய காலத்திலேயே பெரும் செல்வ வளம் ஈட்டினார். 1889-ல் திருமணம் நடந்தது.
வசதியான வாழ்க்கை கைக்கு வந்தாலும், வறிய வர்கள் மீதான அக்கறை அவருக்குள் அதிகரித்தது. தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்த அயோத்தி தாசர், 1890-ல் சாக்கிய புத்த சமூகத்தை நிறுவினார். அவரது கொள்கைளால் ஈர்க்கப்பட்ட சிங்காரவேலர், புத்த மதத்தின் மீதும் பெரும் ஈடுபாடு கொண்டார். பின்னர், மகாபோதி சங்கத்தை நிறுவினார்.
தனது வீட்டிலேயே அச்சங்கத்தின் அலுவலகத்தையும் நடத்தினார். ஆழ்ந்த வாசிப்பு கொண்ட அவர், தனது வீட்டில் 20,000-க்கும் மேற்பட்ட நூல்களை வைத்திருந்தார்.
சுதந்திரப் போராட்டத்தில் முனைப்புடன் ஈடுபட்ட அவர், நேரு உள்ளிட்ட தேசத் தலைவர்களிடம் நட்புகொண்டிருந்தார். சென்னை வந்த தலைவர்கள், அவரது இல்லத்தில் தங்குவதை வழக்கமாகக் கொண் டிருந்தனர். 1919-ல் நடந்த ஜாலியன் வாலாபாக் படு கொலையைக் கண்டித்து, ஒத்துழையாமை இயக்கத்தை காந்தி தொடங்கியபோது, அதில் பங்கெடுத்தார்.
1921-ல் பிரிட்டிஷ் அரசையும் நீதிமன்றங்களையும் கண்டிக்கும் வகையில், பொதுமேடையில் வழக்கறிஞர் கவுனைத் தீ வைத்து எரித்தார். அன்று முதல், வழக்கறிஞர் தொழிலையும் கைவிட்டார்.
தொழிலாளர்களின் உரிமைகளுக்காகக் குரல் கொடுத்தார்.
1918-ல் இந்தியாவில் முதல் தொழிற் சங்கத்தை உருவாக்கியவரும் சிங்காரவேலர்தான்.
1923 மே1-ல் முதன்முறையாக தொழிலாளர் தினத்தைக் கொண்டாடினார்.
இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக் கத்தைத் தொடங்கிய முன்னோடிகளில் இவரும் ஒருவர்.
பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திலும் பங்கேற்றார்.
கம்யூனிஸ்ட் இயக்கமும் சுயமரியாதை இயக்கமும் இணைந்து செயல்பட வேண்டும் என்று பெரியாரிடம் வலியுறுத்தியவர் சிங்காரவேலர்.
1928-ல் ரயில்வே நிர்வாகத்தின் அடக்குமுறைகளைக் கண்டித்து, ரயில்வே தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தில் அவர்களுக்குத் துணை நின்றார். அந்தப் போராட்டத்தில் பங்கேற்றதன் காரணமாகக் கைதுசெய்யப்பட்ட சிங்காரவேலருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர், அந்தத் தண்டனை குறைக்கப்பட்டு ஆகஸ்ட் 1930-ல் விடுதலை செய்யப்பட்டார்.
பன்முகத் தன்மை கொண்ட தலைவராகத் தன் வாழ்நாள் முழுதும் செயலாற்றிய சிங்காரவேலர், 1946-ல் தனது 85-வது வயதில் மரணமடைந்தார்.
===============================================================================================
பப்பாளியின் மருத்துவப் பண்புகள்.....!* நல்ல மலமிளக்கி. மலச்சிக்கல் வயிற்றுக் கடுப்பு, செரிமானமின்மை, அமிலத்தொல்லை போன்ற பிரச்சனைகளுக்குஅருமருந்து.
* பித்தத்தைப் போக்கும்......!
* உடலுக்குத் தென்பூட்டும்......!
* இதயத்திற்கு நல்லது......!
* மனநோய்களைக் குணமாக்குவதில் உதவும்......!
* கல்லீரலுக்கும் ஏற்றது......!
* கணைய வீக்கத்தைக் கட்டுப்படுத்தும்......!
* சிறுநீர்க் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* கல்லீரல் கோளாறுகளைத் தீர்க்கும்.....!
* முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு உதவும்......!
*இரத்தச்சோகைக்குநிவாரணமளிக
* மண்ணீரல் வீக்க சிகிச்சையில் பப்பாளி பயன்படுகிறது......!
* பழுக்காத பச்சைப் பப்பாளித் துண்டுகள் அல்லது சாறை அருந்தினால், குடலிலுள்ள வட்டப்புழுக்கள்வெளியேறும்.
* பப்பாளியிலுள்ள ‘பப்பாயின்’ என்சைம்களில் ‘ஆர்ஜினைன்’ என்பது ஆண்களுக்கான உயிர் உற்பத்தித் திறனை மேம்படுத்தவும்,‘கார்பின்’ இருதயத்திற்கும், ஃபைப்ரின் இரத்தம் உறைதலுக்கும் உதவுகின்றது......!
* பப்பாளியிலுள்ள விதவிதமான என்சைம்களின் சேர்க்கை, புற்றுநோயைக் குணப்படுத்த வல்லது......!
* இளமைப் பொலிவைக் கூட்டி வயோதிகத்தைக் கட்டுப்படுத்துவதாக பப்பாளிகளை சிறப்பித்துக் கூறுவர்......!
* உடலிலுள்ள நச்சு முழுக்க பப்பாளியால் சுத்திகரிக்கப்படுகிறது....
* இயற்கை மருத்துவச் சிகிச்சையின் கீழ் ‘பட்டினிச் சிகிச்சை’ மேற்கொள்கையில் பப்பாளிச் சாறும், வெள்ளரிச் சாறும் மாற்றி மாற்றிக் குடித்தால் உடல் கழிவுகள் நீக்கத்தில் பெரும்பயன் விளையும்......!
* ‘ஆண்டிபயாடிக்’ மருந்துகளில் சிகிச்சை பெற்றபின் ஒருவர், பப்பாளி நிறையச் சாப்பிட வேண்டும். ஏனெனில் குடல் தசைகளில் அழிக்கப்பட்டிருக்கும் நல்ல பாக்டீரியாக்களைமீண்டும் உற்பத்தி செய்வதற்கு பப்பாளி உதவும்......!
* நன்றாகப் பழுத்த பப்பாளிப் பழத்தின் விதைகள், குடல் புழுக்களை வெளியேற்ற உதவும். கூடவே தாகம் போக்குவதில் நல்ல பயன் தரும்.
* பப்பாளி இலைகளின் பொடி யானைக்கால் வியாதிக்கும், நரம்பு வலிகளுக்கும் மருந்தாக விளங்குகிறது......!
வருடம் முழுவதும் கிடைக்கக்கூடிய பழம் இது. இதிலும் வைட்ட மின் ஏ உயிர் சத்து நிறைய இருக்கிறது. பல் சம்மந்தமான குறை பாட்டிற்கும், சிறு நீர்ப்பையில் உண்டாகும் கல்லை கரைக்கவும் பப்பாளி சாப்பிட்டால் போதும். மேலும்- நரம்புகள் பலப் படவும், ஆண்மை தன்மை பலப்படவும், ரத்த விருத்தி உண்டாகவும், ஞாபக சக்தியை உண்டு பண்ணவும் பப்பாளி சாப்பிடுங்கள்......!
மாதவிடாய் சரியான அளவில் இன்றி கஷ்டப்பட்டு கொண்டி ருக்கும் பெண்மணிகள் தினமும் பப்பாளிப்பழம் உண்டு வந்தால் மாதவிடாய் குறைபாடு சீராகும்......!
அடிக்கடி பப்பாளி பழத்தினை உண்டு வருபவர்கள் எவ்வகை நோய்க்கும் ஆளாக நேரிடாது. எந்த வகையான தொற்று நோய் பரவினாலும், அது இவர்களை தாக்காது. பப்பாளி பழத்தில் இயற்கையாகவே விஷக்கிருமிகளை கொல்லும் ஒரு வகை சத்து இருப்பதால் பப்பாளி பழத்தை சாப்பிடுபவர்களின் ரத்தத்தில் நோய் கிருமிகள் தங்கி நோயை உண்டு பண்ண வாய்ப்பில்லை....
பப்பாளியைப்பற்றி நாம் சுரனில் அதிக அளவு படித்து வருகிறோம்.அடிக்கடி பப்பாளி மகிமை வெளியாகிறது.காரணம் அதன் மருத்துவ குணங்கள்தான்.மலிவாக ,எங்கும்,எப்போதும் கிடைக்க கூடிய அருமையான மருத்துவக் குணங்கள் நிறைந்தது பப்பாளி.அதனால்தான் அதை நாம் மலிவானது என்ற நினைவில் அதை யாரும் புறந்தள்ளி விடக் கூடாது என்றுதான் அடிக்கடி பப்பாளி செய்திகள் வருகின்றன.மொத்தத்தில் யாம் பெற்ற பயன் இவ்வுலகும் பெறட்டும் என்பதுதான்.===============================================================================================================
தமிழகத்தின் முதலமைச்சர்கள் பட்டியல்
எண் | பெயர் | தொடக்கம் | முடிவு |
1. | ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் | 23-03-1947 | 06-04-1949 |
2. | பூ. ச. குமாரசுவாமி ராஜா | 06-04-1949 | 26-01-1950 |
3. | பி. எஸ். குமாரசுவாமிராஜா | 26-01-1950 | 09-04-1952 |
4. | சி. இராஜகோபாலாச்சாரி | 10-04-1952 | 13-04-1954 |
5. | கே. காமராஜ் | 13-04-1954 | 31-03-1957 |
6. | கே. காமராஜ் | 13-04-1957 | 01-03-1962 |
7. | கே. காமராஜ் | 15-03-1962 | 02-10-1963 |
8. | எம். பக்தவத்சலம் | 02-10-1963 | 06-03-1967 |
9. | சி. என். அண்ணாத்துரை | 06-03-1967 | 08-1968 |
10. | சி. என். அண்ணாத்துரை | 08-1968 | 03-02-1969 |
11. | இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) | 03-02-1969 | 10-02-1969 |
12. | மு. கருணாநிதி | 10-02-1969 | 04-01-1971 |
13. | மு. கருணாநிதி | 15-03-1971 | 31-01-1976 |
14. | எம். ஜி. இராமச்சந்திரன் | 30-06-1977 | 17-02-1980 |
15. | எம். ஜி. இராமச்சந்திரன் | 09-06-1980 | 15-11-1984 |
16. | எம். ஜி. இராமச்சந்திரன் | 10-02-1985 | 24-12-1987 |
18. | இரா. நெடுஞ்செழியன் (தற்காலிக முதல்வர்) | 24-12-1987 | 07-01-1988 |
19. | எம். ஜி. இராமச்சந்திரன் | 07-01-1988 | 30-01-1988 |
20. | மு. கருணாநிதி | 27-01-1989 | 30-01-1991 |
21. | ஜெ. ஜெயலலிதா | 24-06-1991 | 12-05-1996 |
22. | மு. கருணாநிதி | 13-05-1996 | 13-05-2001 |
23. | ஜெ. ஜெயலலிதா | 14-05-2001 | 21-09-2001 |
24. | ஓ. பன்னீர்செல்வம் | 21-09-2001 | 01-03-2002 |
25. | ஜெ. ஜெயலலிதா | 02-03-2002 | 12-05-2006 |
26. | மு. கருணாநிதி | 13-05-2006 | 15-05-2011 |
27. | ஜெ. ஜெயலலிதா | 16-01-2011 | 27-09-2014 |
28. | ஓ. பன்னீர்செல்வம் | 28-09-2014 | 23-05-2015 |
29. | ஜெ. ஜெயலலிதா | 23-05-2015 |