அறுபது நாட்களில் கோடீஸ்வரர் ஆவது எப்படி?
சுலபமான வழி.
தேவையான பொருட்கள்:
1.லெட்டர் பேட்.
2.போஸ்டர் அடிக்க செலவு.
3.பத்து வேலையில்லா பட்டதாரிகள்.
4.ஐந்து ஆறு ஆட்டோக்கள்.
5.ஒரு வேன்.
6.முறுக்கு மீசை.
7.மூலதனமாக சில ஆயிரங்கள்.
செய்முறை:
நீங்கள் சார்ந்திருக்கும் சமூகம் எது?
பொத்தாம் பொதுவாக சொல்லக் கூடாது. உப பிரிவுகளில் எந்தப் பிரிவு?
அதில் எத்தனை மக்கள் இருக்கிறார்கள்?
ஒரேயொரு மாவட்டம் அல்லது ஒரேயொரு நகராட்சிக்குள் அடங்கிவிடும் அளவுக்கு எண்ணிக்கை இருந்தாலும் பரவாயில்லை.டேட்டாவை கலெக்ட் செய்து விட்டீர்களா?
ஆயிரத்துக்குள் அல்லது சில ஆயிரங்கள் மட்டுமே எண்ணிக்கை வருகிறதா?
பரவாயில்லை.
பக்கத்து மாவட்டங்களில் எந்தெந்த சமூக மக்கள் உங்களுக்கு நட்பாக இருக்கிறார்கள் என கணக்கு எடுங்கள்.
இவர்கள் எங்கள் பங்காளிகள்தான் என சமயம் பார்த்து அறிவிக்கலாம்.
குறைந்தபட்சம் 25 ஆயிரம் வரை மக்கள் தொகை வந்ததும் வரலாற்றை கண்ணில் விளக்கெண்ணெய் ஊற்றி படியுங்கள். உங்கள் மாவட்டத்தை சங்க காலம் முதல் எந்தெந்த மன்னர் ஆண்டிருக்கிறார் என பட்டியலிடுங்கள்.
எந்த அரசரின் பெயர் தவிர்த்து வேறு விவரங்கள் எதுவும் கிடைக்கவில்லையோ, அந்த மன்னர்தான் உங்கள் சாதியை சேர்ந்தவர்.ஒருவேளை அனைத்து மன்னர்களுக்கும் தலைமுறை கடந்த கல்வெட்டு, செப்பேடு ஆதாரங்கள் இருந்தால்... ஒன்றும் பிரச்னையில்லை. கமுக்கமாக அரசர்கள் குறித்து ஆராய்வதை தவிர்த்து விடுங்கள்.
பதிலாக உங்கள் மண்ணில் ஆண்ட மன்னர்களுக்கு தளபதிகளாக இருந்தவர்கள் யார் யார் என்று தேடுங்கள்.
பெரும்பாலும் பெயர்கள் மட்டுமே கிடைக்கும்.
இது போதாதா? குறிப்பிட்ட அந்த தளபதி எங்கள் சமூகத்தை சேர்ந்தவர்.
இந்த இந்த போர் வெற்றிக்கு அவர்தான் காரணம்.
அவரது தலைமையில் எங்கள் மக்கள் உயிரைக் கொடுத்து போர் புரிந்தார்கள்... என ஒரு கதையை உருவாக்குங்கள்.முக்கியமான விஷயம், அந்தக் கதையில் ‘நம் பரம்பரையின் சரித்திரம் எப்பேர்பட்ட வீர காவியம்...’ என இளைய தலைமுறையினர் வியக்கும் அளவுக்கு காதலும், வீரமும் இரண்டற கலந்திருக்க வேண்டும்.
இந்த ப்ளு பிரிண்ட் தயாரானதும் பிரபலமான ஓவியர் ஒருவரை சந்தியுங்கள். ‘உருவாக்கிய’ வரலாற்றை அவரிடம் சொல்லி வீரம் கொப்பளிக்கும் வகையில் படம் வரையச் சொல்லுங்கள்.
இந்த ஓவியம்தான் உங்கள் லெட்டர் பேடில் ஸ்பெஷலாக இடம் பெற வேண்டும். எப்போது போஸ்டர் அடித்தாலும் இந்த ஓவியமே பளிச்சென்று இடம்பெற வேண்டும்.
இதன் பிறகு உங்கள் பெயரை, மன்னர் சாயலில் மாற்றிக் கொள்ளுங்கள்.பக்காவாக இவை எல்லாம் தயாரானதும் பெரிய நடிகர்களின் படங்கள் என்னென்ன வெளியாகப் போகிறது என கணக்கிடுங்கள். அந்தப் படத்தை தயாரிப்பது யார் யார் என தகவலை திரட்டுங்கள்.
இவர்களில் வேறொரு சமூகத்தின் முக்கியப் புள்ளிகளாக அல்லது ஆளுங்கட்சி பிரமுகர்களாக இருப்பவர்களை கண்ணை மூடிக் கொண்டு விலகுங்கள். இது டேன்ஜர் அலர்ட்.
தப்பித் தவறி எதிர்கட்சியினராக இருந்தால்?
அல்வா.
ஆனால், நிதானமாக சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர் எதிர்கட்சியில் எந்த பொறுப்பில் இருக்கிறார்... இவரது செல்வாக்கு என்ன என்று ஒன்றுக்கு இருமுறை ஆராயுங்கள். குறிப்பாக ஆளுங்கட்சிக்கும் இவருக்குமான உறவு பகையில் நட்பா அல்லது முழு பகையா என்று பாருங்கள்.
எது எப்படி இருந்தாலும் ஆளுங்கட்சி மற்றும் எதிர்கட்சி பிரமுகர்களை விட்டுவிடுங்கள். எடுத்த எடுப்பில் நெருப்பில் கை வைப்பது புத்திசாலித்தனமல்ல.
இப்படி ஒவ்வொன்றாக கழித்துக் கட்டியபின் நிச்சயம் ஏமாந்த சோணாங்கி தயாரிப்பாளர் யாராவது சிக்குவார்.
எந்த பின்னணியும் இந்த அப்பாவிக்கு இருக்காது. போதாதா?
டார்கெட் இவர்தான்.
மடமடவென களத்தில் இறங்குங்கள்.
சம்பந்தப்பட்டவர் தயாரிக்கும் படத்தை நீங்கள் முழுமையாக பார்க்க வேண்டும் என்று அவசியமில்லை. அந்தப் படத்தில் உங்கள் சமூகத்தை இழிவாக சித்தரித்திருக்கிறார்கள் என பிரஸ் மீட் வைத்து அறிவியுங்கள். உங்கள் சமூக மக்களை திரட்டி சாலை மறியல் செய்யுங்கள். உங்கள் பகுதியில் இருக்கும் பழைய திரையரங்கு ஒன்றின் மீது கல்லெறியுங்கள். போதும்.
இதுபோதும். மக்கள் பார்வை உங்கள் மீது படியும். பத்திரிகைகளில் பேட்டி கேட்பார்கள். குரலை உயர்த்தி பிசிறில்லாமல் பேசுங்கள்.
தொலைக்காட்சி விவாதங்களுக்கு அழைப்பார்கள்.
கேள்வி கேட்பதற்கு முன்பே ‘இது சரியா... சொல்லுங்கள் இது சரியா... ஜனநாயகத்துக்கு எதிரானது... காலம் காலமாக எங்கள் சமூகம் அடிமைப்பட்டே இருக்க வேண்டுமா... குரல் வளையை நெறிக்கும் செயல் இது...’ என சம்பந்தம் இல்லாவிட்டாலும் படபடவென பேசி விடுங்கள்.
குறிப்பாக எதிர் தரப்பில் பேச வருபவர்களை நோக்கி கண்கள் சிவக்க, ஆள்காட்டி விரலை நீட்டி முழக்கமிடுங்கள்.
இந்த முதல் டெஸ்டில் நீங்கள் பாஸ் ஆனதும் அனைத்துக் கட்சியினரும் உங்களை தேடி வருவார்கள். எப்படியும் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தையில் இரண்டாம் கட்ட / மூன்றாம் கட்ட தலைவர்கள்தான் பங்கேற்பார்கள்.
தங்கள் பக்கம் வரும்படி ஆசை வார்த்தைகளை கொட்டுவார்கள்.
இந்த இடத்தில்தான் நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆளுங்கட்சிக்கா அல்லது எதிர்க்கட்சிக்கா... உங்கள் ஆதரவு யாருக்கு என்பதை தீர்மானிக்கும் கட்டம் இது.
எனவே உங்கள் பின்னால் மக்கள் கடலே இருப்பது போல் உதார்விட்டு பேசுங்கள்.
எத்தனை தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் சக்தியாக நீங்கள் இருக்கிறீர்கள் என்பதை புள்ளிவிபரங்களாக அடுக்குங்கள்.
நீங்கள் சொல்லும் டேட்டா மிகையாக இருக்கலாம். ஆனால், பொய்யாக இருக்கக் கூடாது. அப்படி மட்டும் இருந்துவிட்டால் அவ்வளவுதான்.
கைமா செய்துவிடுவார்கள். சரியா?
பேச்சுவார்த்தையை முடிந்தவரை இழுத்தடியுங்கள். ஒருபோதும் கோபமாக பேசாதீர்கள்.
வார்த்தைகளை கொட்டாதீர்கள்.
அதே நேரம் உங்களுக்கு எவ்வளவு தொகை வேண்டும் என்பதை நாசுக்காக குறிப்பிடவும் மறக்காதீர்கள்.
இறுதியாக உங்கள் கண் முன்னால் இரண்டு ஆப்ஷன்கள் வந்து நிற்கும்.ஒன்று, ஆளுங்கட்சியுடன் இணைவது அல்லது ஆளுங்கட்சிக்கு ஸ்லீப்பர் செல் ஆக மாறுவது.
தொகைக்கு தகுந்தபடி இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுங்கள்.
அதன் பிறகு கொடுத்த பணத்துக்கு மேல் கூவுங்கள். எதிர்கட்சியினரை எந்த அளவுக்கு இழிவாக பேச முடியுமோ அந்த அளவுக்கு பேசுங்கள்.
சம்பந்தமே இல்லாவிட்டாலும் எதிர்கட்சியினரின் குடும்பத்தையே நாறடியுங்கள்.ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக காத்திருக்கிறது. யெஸ்.
நீங்கள் இப்போது கோடீஸ்வரர்!
நன்றி:தினகரன்,
============================================================================================
இன்று,
பிப்ரவரி-13.

- சர்வதேச வானொலி தினம்
- இந்திய சுதந்திர போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு பிறந்த தினம்(1879)
- ஸ்பெயின், போர்ச்சுக்கலை தனிநாடாக அங்கீகரித்தது(1668)
- பிரான்ஸ் தனது முதலாவது அணுகுண்டை சோதித்தது(1960)