மறக்கக் கூடாத கப்பற்படை எழுச்சி...,



சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யத்தை கொண்ட ஏகாதிபத்தியம் என வர்ணிக்கப்பட்ட பிரிட்டிஷ் சாம்ராஜ்யமே பயந்து நடுங்கிய புரட்சியாக 1946 பிப்ர வரி-18 அன்று தல்வார் கப்பலில் துவங்கிய மாலுமிகளின் எழுச்சிமிக்க கிளர்ச்சி அமைந்தது.
1942களில்“பிரிட்டிஷ் சாம் ராஜ்யத்தின் மணி மகுடத்தை அலங் கரிக்கும் வைரக்கற்களே இந்தியா. சாம் ராஜ்யத்தின் எந்த பகுதியையும் நாம் இழக் கலாம். 
ஆனால் இந்தியாவை இழந்தால் சாம்ராஜ்யமே அழிந்து விடும்’’ என்று பிரதமர் வின்சென்ட் சர்ச்சில் அலறிக் கொண்டிருந்தார். “ நான் பிரதமராக இருப்பது பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் கலைப்பிற்கு தலைமை தாங்குவதற்கு அல்ல” என்று 1942ல் ஆணவத்தோடு சர்ச்சில் குறிப்பிட்டார்.
1945ல் இரண்டாம் உலக யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் காலனியாதிக்க நாடு களின் விடுதலைக்கான போராட்டங்கள் எழுச்சியோடு, வீரியமிக்க முன்னேற்றத் தை நோக்கி நடைபெற்றது. 
தோழர்.ஸ்டாலின் தலைமையில் சோவியத் மக்களும், செஞ்சேனையும் பாசிஸ்ட் ஹிட் லரைத் தோற்கடித்தது, பெரும் பகுதி யான நாடுகள் விடுதலை அடைய உதவி செய்தது. 
அதே காலத்தில் தான் இந்தி யாவிலும் பிரிட்டிஷ் இராணுவத்திற்குள் கொந்தளிப்பு உருவாகி கொண்டிருந்தது. 1946 பிப்ரவரி மாதம் 18ஆம் தேதி “தல்வார்” என்னும் பயிற்சி கப்பலில் புரட்சிதீ மூண்டது. 
சில மணி நேரத்தில் ராயல் இந் திய கப்பற்படை முழுவதிலும் காட்டுத் தீ போல் பரவியது. இதன் பின்னணியில் பிரிட்டிஷ் பிரதமர்அட்லியின் சுருதி இறங்கிக்கொண்டிருந் தது. “ பிரிட்டிஷ் பிரதமர்அட்லி, பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசும் போது 1920-திலோ, 1930- திலோ,1940-திலோ இருந்த தட்ப வெப்ப நிலை இப்போது இந்தியாவில் இல்லை.
இன்று முற்றிலும் மாறுப்பட்ட நிலை உள் ளது. எனவே மாறுபட்ட அணுகுமுறை தேவை” என்று கூறி இறங்கி வந்து அதி கார மாற்றம் பற்றிப் பேச ஒரு குழுவை அனுப்பினார். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை மிரட்டி பணிய வைத்த தில் கப்பற்படை எழுச்சிக்கு முக்கிய பங்குஉள்ளது.கிழக்கிந்திய கம்பெனிக்கெதிரான போ ராட்டத்தின் உச்சமாக நடந்த முதலாம் சுதந்திரப்போராட்டத்திற்கு பிறகு 1858ல்இந்தியாவில் பிரிட்டிஷ் மகாராணியின் நேரடி ஆட்சி ஏற்பட்ட நாள் முதல் அதற் கெதிராக ஏராளமான போராட்டங்கள் நடந் துள்ளன.
 பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறை சென்றனர்.
தடியடி, துப்பாக்கி சூடு,உயிர் பலி என தியாகம் செய்தனர். அப் போது எல்லாம் ஆட்சி மாற்றத்தை பற்றி சிந்திக்காத வெள்ளை அரசு கப்பற்படை எழுச்சியை கண்டு பயந்தது. 
ஏனெனில் அதே தருணத்தில் பிரிட் டிஷ் அரசின் முக்கிய கேந்திர மாக விளங்கிய இரயில்வேயில் தொழி லாளர்கள் வேலைநிறுத்தப்போராட்டம், சுரங்கத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தம், வங்கத்தின் விவசாயிகளின் புகழ் பெற்ற போராட்டமான “தெபாகா போராட்டம்” விளைச்சலில் முக்கால் பங்குவிவசாயிகளுக்கு வேண்டும் என்றகோரிக்கைக்கான இயக்கம், தெலுங் கானாவில் துவங்கிய போராட்டம், மராட்டி யத்தில் நடைபெற்ற “வார்லி ஆதிவாசி கள்” எழுச்சிமிக்க போராட்டம், திருவாங் கூர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய ஆதரவு மன்ன னையும் திவானையும் எதிர்த்த புன்னப் புரா வயலார் மக்களின் ஆயுத மேந்திய எழுச்சி என எழுச்சிகரமான இயக்கங் கள் இக்காலத்தில் தான் நடைபெற்றது.
இந்த பின்னணியில்தான் கப்பற்படை வீரர்களின் புரட்சி நடைபெற்றது. புரட்சிசெய்த கப்பற்படையினரைச் சுட தரைப்ப டையினர் மறுத்தனர். விமானப்படையினர் மறுத்தனர். 
மராட்டிய காவல்படை, கூர்க்கா படைகளும் மறுத்தன. இப்படி வெள்ளை அரசுக்கு ஆதரவாக இருக்கும் என நம்பிய இராணுவத்தின் பல பிரிவுகள் கப்பற்படைக்கு ஆதரவாக மாறியது வெள் ளை அரசாங்கத்தின் சுருதியை குறைத் தது. 
இதனால் வெள்ளையர்களை கொண் டே சுட வேண்டிய நிலை ஏற்பட்டது. தல்வார், பஞ்சாப் துறைமுகத்தில் இருந்த “எச்.எம்.ஐ.எஸ். பஞ்சாப்” என்னும் போர்கப்பல், கொழும்பு துறைமுகத்தில் இருந்த “எச்.எம்.ஐ.எஸ் பரோடா” , பம்பாய்துறைமுகத்தில் இருந்த “ பிராள், ஒளத் குறு யோன், நீலம், தனுஷ், ஜமுனா, தீர், அஸ் ஸாம், சிந்து, மராத்தா, மதராஸ், நர்மதா, ஹீரா, கைபர், கிளைவ், லாரன்ஸ் போன்ற கப்பல்களில் எல்லாம் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு மூவர்ண கொடியும், கம் யூனிஸ்ட், முஸ்லிம் லீக் கொடிகளும் ஏற்றப்பட்டன. 
பம்பாய் கப்பற்படை துறைமுகத்திற்கு சமமான பங்களிப்பை இந்த எழுச்சியில் ஏற்படுத்திய கராச்சி துறைமுகத்தின் அருகில் இருந்த மனோரா தீவில் இருந்த எச்.எம்.ஐ.எஸ் பஹதார், சமக், இமாலயாஆகிய கப்பற்படை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன. 
எச்.எம்.ஐ.எஸ் ஹிந்துஸ்தான், எச்.எம்.ஐ.எஸ் திருவாங் கூர் உள்ளிட்டு 80க்கும் மேற்பட்ட கப்பற்படை கப்பல்களில் ஏறத்தாழ 20 ஆயிரம் மாலுமிகள் வரலாற்று சிறப்புமிக்க வேலைநிறுத்தத்தை துவக்கினார்கள்.
36 பேர் கொண்ட போராட்டக்குழுவிற்கு எம். எஸ்.கான் தலைவராக தேர்வு செய்யப் பட்டார். கப்பற்படை புரட்சி வீரர்கள் முத லில் அமைதியான முறையில் தாணா ரயில் நிலையத்தினை நோக்கி ஆர்ப்பாட்ட பேரணியை நடத்தி கோரிக்கைகளை வலியுறுத்தினார்கள்.
மாலுமிகள் 8 அம்ச கோரிக்கைகள் வருமாறு:ஐ.என்.ஏ வீரர்கள் உட்பட அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும்.மாலுமிகளிடம் நாகரிகமற்ற முறையில் பேசி அவமானப்படுத்திய “தல் வாரின்” கமாண்டிங் அதிகாரி கிங் மீதுநடவடிக்கை எடுக்க வேண்டும்.
சமாதான காலத்தில் (யுத்தமல்லாத காலத்தில்) வேலை நீக்கம் செய்யப்படக் கூடிய மாலுமி களுக்கு புனர் வாழ்வளிக்கவும் வேலை வாய்ப்பளிக்கவும், தேவையான நடவ டிக்கைகளை விரைவில் மேற் கொள்ளவேண்டும்.ராயல் நேவியின் மாலுமி களுக்கு வெள்ளையர்களுக்கு அளிக்கப் படும் சம்பள விகிதமும் பஞ்சப்படியும் இதர சலுகைகளும் ராயல் இந்தியன் நேவி யின் இந்திய மாலுமிகளுக்கும் அளிக்கப் பட வேண்டும்.
அனைத்து உணவகங் களுக்கும் இந்திய மாலுமிகள் செல்ல அனுமதிக்க வேண்டும். நல்ல உணவு அளிக்க வேண்டும். வேலை நீக்கம் செய்துஅனுப்புகிற போது துணிகளையும், பெட்டி களையும் திருப்பி ஒப்படைக்கும் படி கட் டாயப்படுத்தக் கூடாது. இந்தோனே ஷியாவிலுள்ள இந்தியப் படைகளை வாபஸ் பெற வேண்டும்.
மேற்கண்ட மாலுமிகளின் உடனடிக் கோரிக்கைகளும், பொருளாதாரக் கோரிக்கைகளும், தேசத்தின் அரசியல் கோரிக்கைகளும் அடங்கிய இந்த பட்டியல் அனைத்து பகுதி மாலுமிகளையும் கவர்ந் தன. ஒன்றுபடுத்தின. 
இக் கோரிக் கைகளுக்காக நடைபெற்ற இயக்கத்திற்கு ஆதரவு கேட்டு மாலுமிகளின் போராட்டக்குழு காங்கிரஸ், முஸ்லிம் லீக்,கம்யூனிஸ்ட் கட்சிகளை ஆதரவு தரும்படி கேட்டுக் கொண்டது. இதே நேரத்தில் பல இடங்களில் மாலுமி களின் தன்னெழுச்சியான போராட்டத்தை அடக்க வெள்ளைப்படை நேரடி நடவடிக் கையில் இறங்கியது. 
அதில் கராச்சி துறை முகத்தில் இருந்த இந்துஸ்தான் கப்பலில் மாலுமிகளின் வேலைநிறுத்தத்தை முறி யடிக்க நேரடி ஆயுதத்தாக்குதலை துவக் கியது. மாலுமிகளின் பதில் தாக்குதலும் அசராது நடைபெற்றது. வீரம் செறிந்த போராட்டகளத்தின் போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்கள்கப்பற்படை மாலுமிகளின் எழுச்சி மிக்கபோராட்டத்திற்கு எதிராக அறிக்கை விட்ட தோடு, உடனடியாக வெள்ளையர்களிடம் சரணடைய வேண்டும் என்றனர்.
இதைதொடர்ந்து முகமது அலி ஜின்னாவும் மாலுமிகள் சரணடைய வேண்டும் என் றார். கம்யூனிஸ்ட் கட்சி மட்டும் தான் மாலுமிகளின் போராட்டத்திற்கு தொ டர்ந்து ஆதரவை தர தொழிலாளி வர்க்கத்தை கேட்டுக்கொண்டது. 
வர லாற்று சிறப்பு மிக்க பம்பாய் தொழிற் சாலைகளில் 3 லட்சத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்து சாலைகளில் பேரணி நடத்தினர். மாண வர்கள் கல்வி நிறுவனங்களை புறக்கணித் தனர். மக்கள் கப்பற்படை வீரர்களுக்கு தேவையான உணவுகளை படகுகளில், வண்டிகளில், வேன்களில் கொண்டு சென்று கொடுத்தனர். தல்வாரும், கத்திய வாரும், இந்துஸ்தான், எச்.எம்.ஐ.எஸ் பஞ் சாப் கப்பல்களில் நடைபெற்ற போராட்டம் இளைஞர்களை எழுச்சிக் கொள்ள செய்தது. விமானப்படை வீரர்கள் தான் முதன் முதலில் மாலுமிகளுக்கு ஆதரவாக களத்தில் இறங்கினர். 
மக்களும், ஆயுதப் படையினரும் இணைந்த புரட்சி இந்தியாவில் ஏற்படும் என்றால்,இந்தியாவை அடிமைப்படுத்தி மக்களைசுரண்டிக் கொழுத்தவர்களை எவ்வித சலுகையும் அளிக்காமல் மக்கள் விரட்டிஅடிப்பார்கள் என்று பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்துக்கும், இந்திய தேசிய தலை மைக்கும் அச்சத்தையும் பயத்தையும் ஏற்படுத்தியது. 
இதனால் இந்திய தேசியதலைமை இந்த எழுச்சிக்கு ஆதர வளிக்கவில்லை.வல்லபாய்பட்டேல் பின்வருமாறு அறிக்கை வெளியிட்டார். “கப்பற் படை வீரர்கள் ஆயுதக் கலகம் செய் திருக்கக்கூடாது என்றும் கப்பற்படையில் கட்டுப்பாடு இருக்க வேண்டுமென்னும் தளபதியின் கூற்றை ஆதரிப்பதாகவும் கூறினார்”. பிரிட்டிஷ் படையினர் புரிந்த படு கொலையை கண்டித்து பிப்-22 அன்றுஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் நடத்துமாறு போராட்டக்குழு தேசிய இயக் கங்களை, மக்களை கேட்டுக் கொண்ட போது காங்கிரசின் தலைவர் மௌலானா அபுல்கலாம்ஆசாத் பின்வரும் அறிக்கை வெளியிட்டார். “வேலைநிறுத்தங்களும், ஹர்த்தால்களும் இன்றைய தற்காலிக மான அதிகாரத்தை மீறி நடப்பது அவசிய மற்றது. 
இடைக்காலப் பொறுப்பாளர் களாக பணியாற்றும் அயல் நாட்டு ஆட்சி யாளர்களுடன் பிணக்கு கொள்வதற்கு உடனடியாக காரணம் எதுவும் எழவில்லை”.
கப்பற்படை மாலுமிகளின் போராட் டக்குழு கம்யூனிஸ்ட்கள், உழைப்பாளி மக்களின் ஆதரவு இருந்தும், காங்கிரஸ், முஸ்லிம் லீக் தலைவர்களின் வார்த்தை களை நம்பி “நாங்கள் மக்களிடம் சரண டைகிறோம், நாங்கள் தோற்றுவிட்டதாக கருதவில்லை, ஒரு நாளும் தோற்கப் போவதுமில்லை. 
பிரிட்டிஷ் இராணு வம் எங்களை எங்கே கொண்டு போகிறதுஎன்பது எங்களுக்குத் தெரியாது. 
உங் களுக்கு நன்மை உண்டாகட்டும்” என்ற அறிவிப்போடு சரணடைந்தது. 
இதன் பிறகு வெள்ளை அரசின் பழி வாங்கும் படலம் தொடங்கி போராட் டக்குழு வீரர்கள் கைது செய்யப்பட்டனர். சுமார் 1500 பேர் ராயல் இந்திய கப்பற் படையிலிருந்து வேலைநீக்கம் செய்யப் பட்டனர். போராட்டத்தை கைவிட்டால் பழிவாங்கல் இல்லாமல் பார்த்துக் கொள் கிறோம் என்று சொன்ன இந்திய தேசியகாங்கிரசின் வாக்குறுதிகள் காற்றில் பறக்கவிடப்பட்டன. 
இதனால் கப்பல் களில் ஏற்றப்பட்ட கொடிகளில் காங்கிரஸ், லீக் கொடிகள் மட்டுமே இறக்கப்பட்டன. செங்கொடி மட்டும் உயரப்பறந்தது. 
இந்த தேசத்தினை வெள்ளையனிடம் இருந்து மீட்டெடுக்க நடைபெற்ற போராட்டங்களின் உச்சகட்டமாக மாண வர்கள், இளைஞர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், இராணுவ வீரர்கள், மாலு மிகள் அனைவரின் இரத்தமும், வியர்வை யும், உயிரும் ஒரு சேர பம்பாய் வீதிகளில் போராடியது, குருதி கொட்டிற்று..
 மக்க ளின், இராணுவ வீரர்களின் இரத்தம் ஒரு சேர வீதியில் ஒடியது. அப்படிப்பட்ட வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த போராட் டத்தை கண்டு வெள்ளை அரசு மட்டு மல்ல அன்று ஆட்சியை பங்குபோட துடித்துக்கொண்டிருந்த காங்கிரசும், முஸ்லிம் லீக்கும் தான். 
இன்று வரை அந்த கப்பற்படை எழுச்சியில் பங்கேற்ற வீரர்களின் நிலை என்ன, அவர்களது குடும்பத்தின் நிலைஎன்ன, அவர்களுக்கான வேலை உத்தர வாதம் வழங்கப்பட்டதா? 
என்று கேட்டால்எதையும் சுதந்திர இந்தியாவின் ஆட்சியா ளர்கள் செய்யவில்லை. 
அந்த எழுச்சிகர மான மாலுமிகளின் தியாகத்தை மறைக் கும் ஏற்பாட்டை காங்கிரஸ் செய்தது. ரஷ்ய புரட்சியின் முக்கிய பங்களிப்பை செலுத் திய போட்டம்கின், அரோரா கப்பல்கள் இன்றும் நினைவு பொக்கிஷமாக வர லாற்றை இளம் தலைமுறைகளுக்கு கற் றுக் கொடுத்து வருகிறது. பாதுகாக்கப் பட்டு வருகிறது. ஆனால் இந்திய அரசு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச் சிக்கு ஒரு நினைவுச் சின்னம் கூட எழுப்ப வில்லை.
இப்படிப்பட்ட எழுச்சிகளின் பின்னணி யில் ஆட்சிப் பீடம் ஏறிய காங்கிரஸ் அரசுமட்டுமல்ல, இன்றைய பிஜேபி அரசும் தேசபக்தி என்று பேசிக் கொண்டே உண்மை வரலாற்றை பாடத் திட் டங்களில் இருந்து மறைக்கும் ஏற்பாட் டையே செய்துவருகிறது. 

முதலாளித்துவநிலப்பிரபுத் துவ ஆதரவு ஆட்சியாளர் களை எதிர் த்து கப்பற் படை எழுச்சி நடைபெற்ற பிப்ரவரி 18 நமக்கு உத்வேக மளிக்கட்டும். 
மாற் றத்தை விரும்பும் இளை ஞர்கள் இந்த வரலாற்றை மக்களுக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய தருணமிது. 
“மறந்து கொண்டே இருப்பதுமனித இயல்புஅதை நினைவு படுத்திக் கொண்டே இருப்பது நமது கடமை
                                                                                                                                  செ.முத்துக்கண்ணன்.
”                                                                                       
=========================================================================================
இன்று,
பிப்ரவரி-18.
911 - முதலாவது அதிகாரப்பூர்வமான விமான அஞ்சல் சேவை இந்தியாவின் அலகாபாத்தில் ஆரம்பமானது
1959 - நேபாளத்தில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
1967 - அணுகுண்டை கண்டுபிடித்த ராபர்ட் ஓப்பன்ஹெய்மர் இறந்த தினம்


1929
ஆஸ்கார் விருது முதன் முதலாக அறிவிக்கப்பட்ட தினம்!!
ஆஸ்கார் விருதுகள் என்று பொதுவாக அழைக்கப்படும் அகாடமி விருதுகள் அமெரிக்காவின் திரைத்துறைக்கான மிக முக்கிய விருதுகளில் ஒன்றாகும்.
உலக அளவில் தொலைகாட்சி வாயிலாக காணப்படும் விருது வழங்கும் விழாக்களில் முதன்மையான விருது வழங்கும் விழாவாக இது கருதப்படுகிறது. 1929ம் ஆண்டு மே மாதம் 16ம் தேதி தான் முதல் அகாடமி விருது வழங்கும் விழா நடந்தது.
ஹாலிவுட் ரூஸ்வெல்ட் ஹோட்டலில் வெறும் 270 மக்களின் முன்னிலையில் இவ்விழா நடைபெற்றது. அன்று வெறும் 15 அகாடமி விருதுகள் மட்டுமே வழங்கப்பட்டன. 1930ம் வருடமே இவ்விருதுக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது.
இவ்விருதிற்கான வெற்றியாளர்கள் நிகழ்ச்சி நடைபெறுவதற்கு 3 மாதங்களுக்கு முன்னரே அறிவிக்கப்பட்டனர். இவ்விருதின் தகவல்கள், பத்திரிக்கைகளிலும் சூடான செய்தியானது.
இன்று உலக அளவில் இவ்விருதுகளுக்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலக சினிமாவின் முதன்மையான விருதாக இது கருதப்படுகிறது.
இதுதான் ஜெயலலிதா  ஆட்சி!............
தமிழைவிட மகாமகமே மக்களுக்கு முக்கியம்?
கும்பகோணம் மகாமகத்திற்கு தமிழக அரசு செய்த செலவு – 135½ கோடி
ஆனால், தமிழ் வளர்ச்சிக்கு தமிழக அரசு ஒதுக்கியது – 32 கோடி
திராவிட இயக்கம் என்றப் போர்வையில் ஆரிய ஆட்சி!
 தமிழர்களே! 
சிந்தியுங்கள் சரியான முடிவு எடுங்கள்! 

இந்த ஆட்சியை அகற்ற எது சரியான வழியோ அதைத்தவறாது பின்பற்றுங்கள்
ஒரு நாள் மூட கூத்துக்கு மகாமகத்துக்கு செலவிட்ட 135½ கோடி ரூபாய்க்கு மிகப்பெரிய அணைக்கட்டலாம் அல்லது பல பாலங்கள் கட்டலாம்.
அல்லது தொழிற்சாலைக் கட்டலாம் .வேலை வாய்ப்பை உண்டாக்கலாம்.
இன்றைய முக்கிய தேவையான மின் உற்பத்தி நிலையம் அமைக்கலாம்.
 ஆனால் மக்கள் வரிப்பணம் மடைமை வளர்க்க பயன்படுத்தப்படுகிறது. 
மக்களே சிந்தியுங்கள்!
நன்றி
மஞ்சை வசந்தன்
==========================================================================================


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?