தேசத்துரோகி
கருத்து சுதந்திரம் முக்கியமான் ஒன்று.பேச்சு சுதந்திரமும்தான்.
ஆனால் இதே பேச்சு சுதந்திரம் தீவிரவாதிகளுக்கும் ,இந்திய பிரிவினை வாத கருத்துக்களுக்கும் கொடுக்கப்பட வேண்டுமா?
இதுதான் இன்று முக்கியப் பொருளாக உள்ளது.
டெல்லி பல்கலைக்கழக மாணவ்ர்கள் உரிமைகள் பறிக்கப்பட்டதாக ராகுல் காந்தி,இடது சாரிகள் பொங்கி எழுந்தது சரியாக இருக்கலாம்.
கன்கையா குமார் பேச்சும்,இடையில் எழுப்பப்பட்ட இந்திய எதிர்ப்பு,துண்டாக்குவோம் முழக்கங்களும் திட்டமிட்டு காணொளியில் திணித்து,திரிக்கப்பட்டு உருவாக்கப்பட்டு கூட்ட நடவடிக்கைகளை திசை திருப்பியிருக்கலாம்.
அதை பாஜக ,ஆர்.எஸ்.எஸ்.தூண்டுதலில் ஜீ தொலைக்காட்சி செய்திருக்கலாம்.அதற்கு பலத்த வாய்ப்புள்ளது.
ஆனால் இந்தக் கூட்டம் அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட நாளில் திட்டமிட்டு நடத்தப்பட்டது ஏன் ?என்ற கேள்விதான் எழுகிறது.
கன்கையா குமார் எப்படி கிலானி வலையில் விழுந்தார்.இந்த நாளை தேர்ந்தெடுத்தார்.அப்சல் குரு க்கு ஆதரவாக அவரை தூக்கிலிட்டது தவறு என்று பேசப்பட்டது என்ற கேள்விகள் அதிகம்.
ஆனால் கன்கையா குமாரை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வரும் போது பாஜக சார்பாளர்கள் அவரைத்தாக்கியது அவர் நீதிமன்றத்தில் விசாரிப்பதில் இருந்து காப்பற்றும் செயல் போல் இருக்கிறது.
அங்கு அவர் எதையோ சொல்ல விடாமல் தடுக்க பயமுறுத்தும் விதமாகவே அத்தாக்குதல் நடந்துள்ளது.
இன்றைய இந்தியாவில் மாணவர்கள் ,கல்வியாளர்களுக்கு எதிரான வரைமுறைகள்,சட்டங்கள் மத்திய அரசால் கொண்டுவரப்படுகிறது.
ஏற்கனவே கல்வியை ஒரு வியாபாரப்பொருளாக்கி விட்ட அரசு அதில் அந்நிய முதலீடுகளை கொண்டுவரவும் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் போடுகிற நிலை.
அப்படி ஒப்பந்தம் வந்தால் இந்திய பாமர மக்களுக்கு கல்வி ஒரு எட்டாக்கனியாகிவிடும்
இன்று எல்.கே.ஜி க்கு லட்சக்கணக்கில் பிடுங்கும் நிலை கண் முன்னே ஆரம்பமாகி விட்டது.
அதற்கும் சேர்க்கைக்கு நாள்கணக்கில் காத்திருந்து நன்கொடை கொடுக்க வேண்டியுள்ளது.
இதுவும் மேலை நாட்டு வியாபாரிகள் கையில் மோடி அரசின் கல்வி ஒப்பந்தம் மூலம் போனால் ?
அந்த நிறுவனங்கள் நடத்தும் கல்விதான் வேலை வாய்ப்பை உருவாக்கும்,அங்கு படித்தவர்கள்தான் மேல் படிப்புக்கு நல்ல கல்வி நிறுவனங்களில் சேர முடியும்.என்ற நிலையை அரசே அவர்களுக்கு தந்து விடும்.
பின்னர் நம் சாதரணர்கள் கல்வி பயிலும் கல்வி நிலையங்கள் இன்றைய அரசுப் பள்ளிகள் நிலைக்குத்தான் சீண்டுவாரின்றி போகும்.
கல்வி,பாதுகாப்பு சுகாதாரம்,குடிநீர்,உணவுப்பொருட்கள் போன்றவைகளை தனியார்களிடம் ஒப்படைப்பது
ஒரு மக்களுக்கான அரசு என்றைக்கும் செய்யக்கூடாது.
அது நம் நாட்டையே கேள்விக்குரியதாக்கி விடும்.
இது போன்ற நிலைகளை நோக்கி இந்தியா செல்லும் போது மாணவர் சங்கங்கள் இவைகளை எதிர்த்து போராடாமல் பாராளுமன்றம் தகர்ப்பு குற்றவாளிக்கு வழங்கப்பட்ட தூக்குத்தண்டனையை எதிர்த்து அந்த நினைவு நாளில் போராட்டம் நடத்துவது மிகப் பெரும் தவறு.
இத்தகைய போராட்டங்களை பகவத் சிங் நினைவு நாட்களில் நடத்தலாமே ?
இந்த போராட்டம் தவறான நாளில் தவறான வழிக்காட்டலி நடந்ததால் இன்று அந்த மாணவர்கள் தேசத்துரோகம் பட்டத்துக்கு ஆளாகியுள்ளனர்.
ராகுல் காந்தி ,இடது சாரிகள் மாணவர்களுக்கு ஆதரவாக பேசினாலும் இந்திய சராசரி மனிதன் செய்தி தாட்களில் இச்செய்தியை படித்து விட்டு மாணவர்கள் போராட்டம் அப்சல் குறுக்கு ஆதரவான தேசத்துரோகம்தான் என்ற நிலையில் தான் சிந்திக்கிறார்கள்.
ஆட்சி செய்வோர் மிகப்பிற்போக்காளர்களாக மத வாத அடிப்படையில் ஆட்சி செய்யும் நிலையில்
மானவர்கள் மட்டுமல்ல போராடும் அனைவருமே தங்கள் போராட்டக் களங்களை ,நாட்களை சரியான முறையில் திட்டமிட்டுக்கொள்ளவேண்டும்.
இல்லையேல் அரசின் சூழ்ச்சியில் சிக்கி அவர்கள்தான் அசிங்கப்பட்டு நிறக் வேண்டும் .தேசத்துரோகி பட்டங்கள்தான் மிச்சமாகும்.
=========================================================================================
இன்று,
பிப்ரவரி-24.

- மெக்சிகோ கொடி நாள்
- கிரிகொரியன் நாட்காட்டி அதிகாரபூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டது(1582)
- நாசிக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது(1920)
- எஸ்தோனியா விடுதலையை அறிவித்தது(1918)