வெள்ளி, 19 பிப்ரவரி, 2016

எபோலா அடுத்து ஜிகா.எபோலா வைரஸ் ஓய்ந்தது. இப்போது அடுத்த தாக்குதல். 
இந்த வைரஸ்  ஜிகா. 
அமெரிக்கா தொடங்கி நண்டு, சிண்டு நாடுகள் வரை அனைத்து தேசங்களையும் சூறையாட இந்த வைரஸ் புறப்பட்டிருப்பதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கிறது. இந்நிலையில் உலகம் முழுக்க எழுந்துள்ள கேள்வி ஒன்றே ஒன்றுதான்.

நேரடி மருந்து, மாத்திரை, சிகிச்சை இல்லை. 
 இந்த நொடி வரை எந்த மாத்திரையும் கண்டுபிடிக்கவில்லை.
அந்தளவுக்கு அச்சம் தேவையில்லை. இன்று விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ந்திருக்கிறது. எனவே பயப்படத் தேவையில்லை. தவிர இந்தியாவுக்குள் இன்னமும் ஜிகா வைரஸ் ஊடுருவவில்லை. அதற்காக அலட்சியமாக இருக்க 
வேண்டியதும் இல்லை. சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். கொள்ள வேண்டும். 

1947-ம் ஆண்டு உகாண்டா நாட்டில்தான் முதன் முதலில் இந்த வைரஸ் பரவியது. ஆப்பிரிக்க நாடுகளில் டெங்கு காய்ச்சலைப் பரப்பும் கொசுவுக்குப் பெயர் ‘ஏடிஸ் எஜிப்டி.’ இந்த கொசு மூலமாகத்தான் ஜிகா வைரஸும் பரவி வருகிறது. இந்தியாவில் ‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு அதிகம் காணப்படுகிறது என்பதால், ஜிகா வைரஸ் இங்கு வேகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என்கிறார்கள். 
ஆனால் பன்றிக்காய்ச்சல் ஹினி 1 போன்றே வெயில் காலம்,வெப்பம் இந்த ஜிகாவுக்கும் ஒத்துக்கொள்ளாததால் தற்போது இந்தியாவில்  ஜிகா தாக்கம் குறைவாக இருக்கும்.

ஆனால் அது அப்படியே இருக்கும் என்று விட்டு விடவும் இயலாது.

ஜிகா வைரஸ் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு, ஆரம்ப நாட்களில் காய்ச்சல் குறைவாகத்தான் இருக்கும். தோல் கடுமையாகப் பாதிக்கப்படும். இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை இந்தக் காய்ச்சல் இருக்கும். இந்த வைரஸைத் தடுப்பதற்கு தடுப்பூசி இல்லை.ஜிகா வைரஸ் ஒருவருக்குப் பரவினால் காய்ச்சல் மட்டுமின்றி மூட்டு இணைப்புகளிலும் வலி ஏற்படும். கடுமையான தலைவலி வருவதற்கும் வாய்ப்பு உண்டு என்கிறது ‘உலக சுகாதார நிறுவனம்.’
பிளேவி வைரஸ் என்ற வைரஸ் குடும்பத்தைச் சேர்ந்தது ஜிகா வைரஸ். 
‘ஏடிஸ் எஜிப்டி’ கொசு, காலை மற்றும் மாலை வேளைகளில்தான் அதிகம் வெளியே வரும். எனவே, காலை ஒன்பது மணி வரையும், மதியம் மூன்று மணிக்குப் பிறகும் ஜன்னல்களை மூடிவிடுவது நல்லது. வீட்டைச் சுற்றி நீர்த் தேங்காமல், கொசு அண்டாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
 பிளாஸ்டிக் ஓடுகள். டயர்கள், பிளாஸ்டிக் கவர்களில் வைக்கப்பட்டுள்ள செடித் தொட்டிகள் என எந்த இடத்திலும் கொசுக்களை அண்டவிடக் கூடாது.

இரவு தூங்கும்போது கை, கால்கள் போன்றவற்றை முழுவதுமாக மறைக்கும் ஆடைகளை அணியுங்கள். குழந்தைகளை, முதியவர்களை இந்த வைரஸ் எளிதில் தாக்கும். எனவே அவர்களிடத்தில் சிறப்புக் கவனம் செலுத்துவது நல்லது. கொசு வலை போட்டுக் கொண்டு படுப்பது சாலச் சிறந்தது.

சமீபத்தில் மழைக்காலத்தில் காய்ச்சல் வந்து மீண்டவர்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைவாக இருப்பவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.மூன்று நாட்களுக்கும் மேல் காய்ச்சல் நீடித்தால், அருகில் உள்ள மருத்துவமனைக்கு உடனடியாகச் செல்வது நல்லது.

நிலவேம்பு கஷாயம்:
டெங்கு காய்ச்சலுக்குச் சாப்பிடும் நிலவேம்புக் கஷாயமே இதற்கும் மருந்து. 
ஏனெனில் அதை பருகினால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 
 வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் வீட்டில் உள்ள அனைவரும் நில வேம்புக் கஷாயம் குடிக்கவும்.  காய்கறிகள், பழங்கள் போன்றவற்றை நன்றாகச் சுத்தம் செய்து சாப்பிட்டு வந்தால், நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும். 
வெளி இடங்களில் தண்ணீர் அருந்தாமல், பாதுகாப்பான முறையில் வீட்டில் கொதிக்க வைத்து, ஆறவைத்த நீரையே அருந்துங்கள்.

சமையல் அறையில் கொசுக்கள் வசிப்பதை அனுமதிக்காதீர்கள். தினமும் சமையலறையை சுத்தம்செய்யுங்கள். டீ, காபிக்குப் பதிலாக, பழச்சாறு அருந்துங்கள். 

ஜிகா வைரஸ் மட்டும் அல்ல வேறு எந்தக் காய்ச்சலும் வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். ஏனெனில், சாதாரண காய்ச்சல் வந்தாலும் நோய் எதிர்ப்புச் சக்தி இயல்பாகவே குறையும். அந்த சமயங்களில் ஜிகா வைரஸ் எளிதில் பரவும் வாய்ப்பு இருப்பதை மறந்துவிடாதீர்கள். 

இந்தியாவில் விரைவில் வெயில் காலம் தொடங்கவிருப்பதால், ஜிகா வைரஸ் வீரியமாக பரவும் வாய்ப்புகள் குறைவுதான். ஆனால், முன்பே சொன்னபடி -வந்த பின்னர் அவதிப்படுவதைவிட வரும் முன் காக்கும் எளிய வழிகளைப் பின்பற்றுவது நல்லது.


உலகின் 34 நாடுகளில் ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவற் றில் பெரும்பாலானவை அமெரிக்கா, கரீபியன் பகுதிகளை சேர்ந்த நாடுகள். பிரேசிலில் மட்டும் ஜிகா வைரஸால் 4,700 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இந்த வைரஸ் தீவிரம் அடைவதற்கு முன்னர் ஆண்டுக்கு 163 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 
இப்போது ஜிகா வைரஸால் பாதிக்கப் பட்டோரின் எண்ணிக்கை அதிகரித் துள்ளது கவலை அளிக்கிறது.

இந்த வைரஸ் பாதிப்பைத் தடுக்க செயல் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, வைரஸ் பாதிப்பு உள்ள நாடுகளுடன் இணைந்து மருத்துவ பரிசோதனை, மேலும் பரவாமல் தடுப்பது, சிகிச்சை உட்பட அனைத்து விட நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. 
இந்த ஜிகா வைரஸ் பாதிப்பைத் தடுக்க அவசர கால நிதி உருவாக்கப்பட்டுள்ளது.
=============================================================================================
இன்று,
பிப்ரவரி-19.

  • துருக்மேனிஸ்தான் கொடி நாள்

  • தமிழறிஞர் உ.வே.சாமிநாதையர் பிறந்த தினம்(1855)
  • கலிப்பொலி போர் துவங்கியது(1915)
  • கிராமபோனிற்கான காப்புரிமத்தை தாமஸ் எடிசன் பெற்றார்(1878)
  • ஐக்கிய ராஜ்யத்திடம் இருந்து சைப்பிரஸ் விடுதலை பெற்றது(1959)

=============================================================================================
251 க்கு ஆப்பு ?
மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் ப்ரீடம்251 என்ற ஸ்மார்ட் போன் ரூ.251 விலையில் ரிங்கிங் பெல் நிறுவனம் அறிமுகம் செய்தது. 
இந்த  மொபைலை freedom251.com இணையதளத்தில் நேற்று காலை 6 மணி முதல் புக்கிங் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. 
நொடிக்கு 6 லட்சம் பேர்கள் என்று இந்த மலிவு மொபைல் தளத்துக்கு ஆர்டர் கொடுக்க மக்கள் இந்த இணையதளத்தை பார்த்ததால் முடங்கி விட்டது. 
இப்பிரச்னை 24 மணி  நேரத்தில் சரிசெய்யப்படும். அதன்பிறகு புக்கிங் செய்யலாம்’’ என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இப்படி மலிவு விலையில் மொபைல் கொடுத்தால் தாங்கள் அடிக்கும் கொள்ளை விலை லாபத்தை இழக்க வேண்டியதிருக்கும் என்பதால் ரிலையன்ஸ் உட்பட்ட பிற மொபைல் தயாரிப்பு  நிறுவனங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 
 இந்த  சங்கம் மத்திய அரசுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், ‘‘ஸ்மார்ட் போன் ரூ.251க்கு விற்கப்படுவது இந்திய மொபைல் சந்தைக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடியது. 

சலுகை, மானியங்களுடன் விற்பனை செய்வதாக இருந்தால் கூட இந்த அளவுக்கு குறைவாக விற்பனை செய்யப்பட கூடாது. 
 சந்தைப்படுத்துதல், சில்லரை வர்த்தகரின் லாபம் என அனைத்தையும் சேர்த்து குறைந்த பட்சம் ரூ.4,100க்காவது விற்கப்பட வேண்டும்.  
ஆன்லைன் விற்பனையை வைத்து கணக்கிட்டால் கூட ரூ.3,500 - ரூ.3,800க்கு குறைத்து விற்பனை செய்ய அனுமதிக்க கூடாது. 
இப்படி விற்றால் தாங்களும் விலை குறைப்பு செய்ய வேண்டிய கட்டாயம் உண்டாகிறது.இதனால் தங்கள் லாபத்தில் குறைவு எற்படும்.இது குறித்து  ஆராய்ந்து முடிவு எடுக்க வேண்டும்’’ என அக்கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.வளர்ந்துவரும் தேச விரோதம்?