யார் யாரோ ஆட்சியை அனுபவிக்கிறார்கள்.
கைலி, அழுக்கு சட்டையோடு 45 வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர் என் எதிரே
வந்தார்.
'ஏன் முன்னாடியே வரக் கூடாதா? கிளம்பும்போது வருகிறீர்களே... நீங்கள்
யார்?’
யார்?’
என்று அவரிடம் கேட்டேன்.
"அய்யா... நான் வ.உ.சிதம்பரம்பிள்ளையின் பேரன். நானும் என் தம்பியும் கட்டடங்களுக்கு பெயின்ட் அடிக்கும் வேலை செய்து வருகிறோம். சமீபத்தில் ஒரு உயரமான கட்டடத்துக்கு பெயின்ட் அடிக்கும்போது என் தம்பி தவறி விழுந்துவிட்டான். இப்போது உடம்பு சரியில்லாமல் இருக்கிறான். அவனுக்காக உதவி கேட்டு இங்கே வந்தேன். வெளியில் இருக்கும் காவலாளி என்னை உள்ளே விடாமல் துரத்தி
அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.
அடித்தார். அவரை சமாளித்துவிட்டு வர இவ்வளவு நேரம் ஆகிவிட்டது’ என்று பரிதாபமாகச் சொன்னார்.
நான் அதிர்ந்துபோனேன்.
'உனக்கு இங்கே நிற்கும் உரிமையை வாங்கிக்கொடுத்ததே என் பாட்டன்தானடா என்று முகத்தில் அடித்ததுபோல சொல்ல
வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
வேண்டியதுதானே?’ என்று சொல்லி அவரை ஆசுவாசப்படுத்தினேன்.
அதன் பிறகு அவருக்கு 50 ஆயிரம் பணம் கடன் ஏற்பாடு செய்துகொடுத்து உழவர் உணவகம் தொடங்கச் செய்தேன்.
வ.உ.சி-யின் குடும்பமே வக்கீல் குடும்பம்.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
வெள்ளைக்காரனுக்கு எதிராக சுதேசி கப்பல்விட்ட கம்பீரமான வ.உ.சி-க்கு ஆங்கிலேய அரசு இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது. உடம்பு முழுவதும் சங்கிலியால் பிணைக்கப்பட்டு அவரைச் செக்கிழுக்கச் சொல்லி உத்தரவிட்டது.
தேசத்துக்காக சொத்துக்களை இழந்து ,சுதேசி கப்பலை ஓட்டி வெளையாரால் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று செக்கிழுத்தவரின் வாழ்க்கையை ஓட்ட பேரன்கள் பெயின்ட் அடித்துக்கொண்டு இருக்கிறார்கள்.
சம்பந்தமே இல்லாத யார் யாரோ தியாகிகள் என்று ஆட்சியின் பலனை அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள்.
- சகாயம் ஐ.ஏ.எஸ்.
===============================================================================================
சுவாசமே..சுவாசமே...,!
சுவாச பிரச்னைகளைத் தீர்க்கும்
சுவாச கோச
யோகா முத்திரை
உடலுக்கு தேவையான ஆக்ஸிஜன், சுவாசித்தலின் போது கிடைக்கிறது. காற்று எவ்விதத் தடையும் இன்றி நமது நுரையீரலுக்குள் செல்வதாலேயே உடலுக்கு ஆக்ஸிஜன் கிடைக்கிறது. இதில் ஏதேனும் தடை ஏற்பட்டால், மனநிலை, தூக்கமின்மை, தாழ்வு மணப்பான்மை ஹார்மோன் கோளாறுகள் ஏற்படுகின்றன.
ஆஸ்துமா எனப்படும் இரைப்பு நோய், பொதுவாக குளிர், மழைக்காலம் அல்லது தூசி ஓவ்வாமை போன்ற காரணங்களால் ஏற்படுகிறது. நுரையீரலில் சளி அடைத்துக்கொண்டு காற்று உள்ளே புகமுடியாத நிலை ஏற்படுகிறது.
எனவே இருமல், இரைப்பு, இருமினாலும் சளி வெளிவராமை, மூச்சுத்திணறல், காற்றுக்காக ஏங்குதல், மூச்சடைப்பு ஏற்படுகிறது.
இதற்கான தீர்வை மருந்துகள் மூலம் அடைய முடிவது இல்லை. சுவாசகோச முத்திரை இதற்குத்தீர்வு அளிக்கிறது. சுவாசகோச முத்திரையானது நீரைக்குறைத்து வெப்பம் மற்றும் ஆகாயத்தை சமன்படுத்தி காற்றை அதிக அளவில் உடலுக்குள் செல்ல அனுமதிக்கிறது.
செய்வது எப்படி ?
பெருவிரலில் உள்ள அடிரேகை, நடுரேகை மற்றும் நுனியைக் கவனிக்க வேண்டும். பின்னர் சுண்டுவிரலால் கட்டை விரலின் அடிரேகையையும் மோதிர விரலால் கட்டை விரலின் இரண்டாவது ரேகையைத் தொட்டும், நடுவிரலின் நுனியால் கட்டைவிரலின் நுனியைத் தொடவேண்டும்.
ஆள்காட்டி விரலை மட்டும் முழுமையாக மேல்நோக்கி நீட்டிவைக்க வேண்டும்.
இந்த முத்திரையில் கையின் உள்ளங்கைப் பகுதி வெளிநோக்கிப் பார்க்க ஆள்காட்டி விரலை 90டிகிரி மேல்நோக்கி வைத்திருக்க வேண்டும்.
கையை கவிழ்த்துவைத்தோ, கீழ்நோக்கியோ செய்யக்கூடாது.
விரிப்பின் மீது சப்பளங்கால் இட்டோ, நாற்காலியில் அமர்ந்தோ கால்களை தரையில் ஊன்றியோ, அவசர காலத்தில் படுத்த நிலையிலோ இந்த முத்திரையைச் செய்யலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தது 5 முதல் 6 முறை செய்யலாம் அல்லது இரைப்பு, இருமல் குறையும் வரை செய்துகொண்டே இருக்கலாம்.
முறையும் 5 முதல் 40 நிமிடங்கள் வரை செய்யலாம்.
தீவிரமான இரைப்பு இருக்கும் காலங்களில் நேரம் கணக்கிடாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் செய்யலாம்.
குழந்தகள் முதல் வயோதிகர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்படும் இரைப்பிருமல் கட்டுக்குள் வரும். இரைப்பிருமல் ஏற்பட்டு தீவிர நிலையில் மூர்ச்சையால் மற்றும் உயிரிழப்பில் இருந்தும் காக்கக்கூடியது.
இதற்கு எந்த நிலையில் இருந்தாலும், எவ்வளவு நேரமானாலும் செய்யலாம்.
மழைக்காலங்களில் நெஞ்சில் சளி உருவாவது தடுக்கப்படும். மூச்சுத்திணறல், மூச்சுக்குழல் இறுக்கம், இரைப்பிருமல் ஆகியவை குறையும்.
மனஅழுத்தம் மிகுந்த வேலையில் இருப்போர்க்கும், இயல்பிலேயே சிலருக்கும் மூச்சுமேல் சுவாசமாக ஆழம் இல்லாமல் இருக்கும்.
இந்த முத்திரையைச் செய்துவர, சில வாரங்களில் அவர்களது மூச்சு ஆழ்ந்து செல்லத் தொடங்கும். மனஅழுத்தம் குறையும்.
ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து செய்து வர, 3 மாதங்களில் நோயின் தீவிரம் குறையும். மூச்சுவிடுதல் எளிமையாகும். இன்ஹேலர் பயன்படுத்துவதாக இருப்பின் அதன் அவசியமும் படிப்படியாகக் குறையும்.
இரைப்பிருமல் வரத் தொடங்கி ஆரம்ப நிலையில் இருக்கும் எல்லா குழந்தைகளும் இந்த முத்திரையை தினமும் செய்யவேண்டும்.
இன்ஹேலர் பயன்படுத்தும் நிலை வருவதற்கு முன், இந்த முத்திரையைச் செய்துவர ஆஸ்துமா வராது. ஆஸ்துமாநோய் வராமல், வருமுன் காக்க இந்த முத்திரை உதவும்.
இன்ஹேலர், மருந்துகள், மருத்துவர் இல்லாத சமயங்களில் இந்த முத்திரை முதலுதவியாக மூச்சுத்திணறல் குறையும் வரை பயன்படுத்தலாம். சளி தொந்தரவுகள், தும்மல், அலர்ஜி ஆகியவை சரியாகும்.
நன்றி :தினகரன்.
இன்று,
பிப்ரவரி-14.
ஈ.என்.ஐ.ஏ.சி., என்ற முதல் தலைமுறை கணினி அறிமுகமானது(1946)- 103வது தனிமமான லோரென்சியம் கண்டுபிடிக்கப்பட்டது(1961)
- உலக காதலர் தினம்
- ஆஸ்திரேலிய பவுண்டிற்கு பதிலாக ஆஸ்திரேலிய டாலர் அறிமுகப்படுத்தப்பட்டது(1966)
பிப்ரவரி-2015ல் நடந்தவை.
பிப்.1: தஞ்சாவூர் கலைத்தட்டுக்கு, புவி சார் குறியீட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
பிப்.4: சென்னை சட்டக்கல்லூரியை, இடமாற்றம் செய்யக்கூடாது என மாணவர்கள் போராட்டம்.
பிப்.13: பெங்களூரு - எர்ணாகுளம் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில் தமிழக கர்நாடக எல்லையில்(ஆனேக்கல்) தடம் புரண்டதில் 10 பேர் பலி. 150 பேர் காயம்.
பிப்.16: ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் வளர்மதி 96,516 ஓட்டுகள் வித்தியா சத்தில் வெற்றி.
பிப்.22: ஆப்கனில் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்ட தமிழக பாதிரியார் பிரேம் குமார் விடுதலை.
பிப்.24: மத்திய அரசின் புராதன சின்னங்களை பாதுகாக்கும் திட்டத்தில் தஞ்சை பிரகதீஸ்வரர், மாமல்லபுரம் கோயில் இடம் பெற்றது.
===========================================================================================
"நமக்கு நாமே" -
ஸ்டாலின் அரசியல் வாழ்வில் ஒரு மைல் கல்!
திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார்....
அன்று சந்தித்த அதே ஸ்டாலினைத் தான், நான் 12-2-2016ஆம் தேதி காலையில் கோபாலபுரத்தில் சந்தித்தேன்....
12-2-2016 அன்று காலையில் என்னுடைய உதவியாளர் நித்யா என்னிடம் வந்து தளபதி அண்ணன் இன்றோடு 234 தொகுதிகளிலும் தான் மேற்கொண்ட "நமக்கு நாமே" பயணத்தை முடிக்க விருக்கிறார்.
அந்தப் பயணம் முடிந்தவுடன் நேரில் உங்களைச் சந்தித்து வாழ்த்து பெற வருகிறார் என்று கூறியவுடன் அவசர அவசரமாகக் குளித்து விட்டு பொருளாளர்" வருகைக்காக "தலைவர்" நான் காத்திருந்தேன்! அப்போது என்னுடைய கவனமும் நினைவும் எதிரே இருந்த தொலைக் காட்சி பெட்டியிலே பதியவில்லை; என்னிடம் சொல்லாமலேயே 1976ஆம் ஆண்டுக்குப் போய் விட்டன.
1976ஆம் ஆண்டு நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்டு, "மிசா" சட்டத்தின்படி கழகத்தினர் வேட்டையாடப்பட்டார்கள்.
கழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமன்றி, இன்றைய திராவிடர் கழகத் தலைவரும், அன்றைய பொதுச் செயலாளருமான இளவல் கி. வீரமணி, விடுதலை சம்பந்தம், நடிகவேள் எம்.ஆர். இராதா மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், பழைய காங்கிரஸ் கட்சியினர் எனப் பலரும் கைது செய்யப்பட்டு சிறையிலே இருந்தனர். சென்னை மாவட்டத்தில் கைதான சிலரைக் குறிப்பிட வேண்டுமென்றால் முரசொலி மாறன், ஆற்காடு வீராசாமி, ஏ.வி.பி. ஆசைத்தம்பி, நீலநாராயணன், மு.க. ஸ்டாலின், சிட்டிபாபு, ஆர்.டி. சீத்தாபதி, டி.ஆர். பாலு, அ. செல்வராசன், சா. கணேசன், சோ.மா. ராமச்சந்திரன், பழக்கடை ஜெயராமன், ஆயிரம் விளக்கு உசேன், வழக்கறிஞர் ஆர். கணேசன் என்று நீண்ட பட்டியலே உண்டு.
சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலே உள்ள கழக முன்னணியினர் எல்லாம் கைது செய்யப்பட்டுச் சிறைக் கொட்டடியில் தள்ளப்பட்டனர்.
திருமணமாகி ஒரு சில மாதங்களே முடிவுற்ற நிலையில் தான் ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். ஸ்டாலினைச் சுற்றி சிறை அதிகாரிகள் சூழ்ந்து நிற்க, முழுக்கை சட்டை போட்டுக் கையை மூடிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் காண நேரிட்டது.
என்னைக் கண்டதும், தன் கண்களில் ததும்பியிருந்த கண்ணீரை வெளிவராமல் மறைத்துக் கொண்டு என் எதிரே அமர்ந்திருந்தார். "அடித்தார்களாமே; உண்மையா?" என்று கேட்டேன்.
"இல்லை" என்று தலையை மட்டும் ஆட்டினார். வாய் திறந்து வார்த்தைகளில் சொன்னால் கதறி அழுது விடக் கூடும் என்ற உணர்ச்சி நிலை!
அன்று சந்தித்த அதே ஸ்டாலினைத் தான், நான் 12-2-2016ஆம் தேதி காலையில் கோபாலபுரத்தில் சந்தித்தேன். அதுவரை என் மனதிலே நிழலாடிக் கொண்டிருந்த நினைவுகளை ஒதுக்கிவிட்டு, ஸ்டாலினை நெஞ்சார வாழ்த்தினேன்.
234 தொகுதிகள் - 2015 செப்டம்பர் 20ஆம் தேதி கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலையருகே ஸ்டாலின் தொடங்கிய "நமக்கு நாமே" விடியல் மீட்புப் பயணம், 2016 பெப்ரவரி 12ஆம் தேதி தியாகராயநகரில் நிறைவடைந்துள்ளது.
நடுவே 146 நாட்களில், இடையில் ஒரு சில நாட்கள் வேறு சில கழக நிகழ்ச்சிகளிலே கலந்து கொண்டு விட்டு, மற்ற நாட்களில் எல்லாம் தமிழகம் முழுவதும் ஒவ்வொரு சட்ட மன்றத் தொகுதியையும் உள்ளடக்கி தனது பயணத்தை தம்பி ஸ்டாலின் வெற்றிகரமாக முடித்துள்ளார்.
தமிழகத்திலே உள்ள அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதிகளையும் அழைத்து அவர்களின் கோரிக்கைகள் மற்றும் குறைகளையெல்லாம் நேரடியாகக் கேட்டிருக்கிறார்.
இடையில் பெரு வெள்ளத்தினாலும், மழையினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் சென்று அங்கேயுள்ள மக்களைச் சந்தித்து ஆறுதல் தெரிவித்ததோடு, நிவாரண உதவிகளையும் வழங்கியிருக்கிறார்.
அவருடைய இந்தப் பயணம் முழு வெற்றி பெற, மாவட்டக் கழகச் செயலாளர்கள் எல்லாம் அல்லும் பகலும் அயராமல் ஆற்றிய அரும் பணியைப் பாராட்டாமல் இருக்க முடியாது.
ஆனால் எந்த மாவட்டக் கழகச் செயலாளரும், அந்தப் பணியைச் சுமையென நினைக்காமல், சிரமமாக நினைத்துப் பாராமல் மிகுந்த மகிழ்ச்சியோடும், ஆர்வத்தோடும் அந்தப் பணியினை மேற் கொண்டார்கள் என்பதை நான் அறிவேன். இன்னும் சொல்லப் போனால், அந்தப் பயணத்தின்போது ஸ்டாலின் உடல் அளவில் அங்கெல்லாம் சென்ற போது, அவரது உணர்வுகளில் எனது நினைவுகளும், எண்ணங்களும் தான் நிறைந்திருந்தன.
- கலைஞர் கருணாநிதி.