ஜெயலலிதாவின் வலிமை மிக்க அமைதிக் கூட்டணி.

நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதைப் பயன்படுத்தி ஆளுங் கட்சித் தரப்பில் வாக்காளர்களுக்குப் பணம் வினியோகம் செய்யப்பட்டது. 
தேர்தல் முடிவுகள் வெளியான போது அ.தி.மு.க. 37 தொகுதிகளில்  வெற்றி பெற்றது. 

சட்டமன்றக் கணக்குப்படி பார்த்தால் 234 தொகுதிகளில், 217 சட்டமன்றத் தொகுதிகளில் அ.தி.மு.க. வெற்றியடைந்தது. 

அதுபோல ஒரு டெக்னிக்கல் வெற்றியை சட்டமன்றத் தேர்தலில் பெற அ.தி.மு.க. திட்டமிட்டு காய் நகர்த்திக்கொண்டிருக்கிறது என்கிறார்கள் டெல்லியிலுள்ள 
தேர்தல் கமிஷன் அதிகாரிகள்.

தமிழகத்தைச் சேர்ந்த இரண்டு ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை டெல்லிக்கு ஜெ. அனுப்பி வைத்திருக்கிறார். 

ஒருவர் சுதீப்ஜெயின். 

தமிழ் நாடு எரிசக்தி வளர்ச்சித்துறை அதிகாரியாக இருந்து ஆர்.கே.நகர் தொகுதியில் ஜெ. போட்டியிடும் நேரத்தில் அவசர அவசரமாக இந்திய தேர்தல் கமிஷனின் டைரக்டர் ஜெனரலாக பொறுப்பேற் றார். 

ஆர்.கே.நகர் தொகுதியில் மத்திய தேர் தல் பார்வையாளராக வந்த வெளிமாநி லத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி களையெல்லாம் இவர்தான் இயக்கினார்.

ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தை விதிகளை மீறி பண வினி யோகம், ஆடம்பர கார்களில் பவனி, கோடிக்கணக்கில் செலவிடப்பட்ட பணம் என எந்த விதிமீறல்களையும் கண்டு கொள்ளாமல் சுற்றி வந்தார்கள் மத்திய தேர்தல் பார்வையாளர்கள். 

அதைப் பயன்படுத்தி ஜெ. ஒரு மிகப்பெரிய கள்ள ஓட்டு அராஜகத்தை நிகழ்த்தி பெரும் வெற்றிபெற்றார். இதற்கெல்லாம் சுதீப் ஜெயினின் மறைமுக உதவிகளும் இருந்தன என்கிறார்கள் அதிகாரிகள்.மத்திய தேர்தல் கமிஷன் அதிகாரிகள்தான் விதிமீறல்களை செய்கிறார்கள் என மீடியாக்களிடம் சொல்லிவிட்டு அமைதியாக அந்த விதிமீறல்களை அனுமதித்து வந்தவர், அப்போது தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரியாக இருந்த சந்தீப் சக்சேனா. 

அப்படிப்பட்டவரைத்தான் ஆர்.கே.நகர் தேர்தல் முடிந்ததும் இந்திய தேர்தல் கமிஷனின் இணைச் செயலாளர் பதவிக்கு அனுப்பி வைத்தது தமிழக அரசு.

மத்திய அரசுப் பணிக்குப் போக விரும்பும் ஐ.ஏ.எஸ். அதி காரிகளை மாநில அரசுதான் ஒப்புதல் கடிதம் கொடுத்து அனுப்பி வைக்கும். பலருக்கும் இது அவ்வளவு எளிதாக நடக்காது.  

பிரசாத் என்கிற ஐ.ஏ.எஸ். அதிகாரியை மத்திய அரசுப் பணிக்கு அனுப்ப தமிழக அரசு ஒன்றரை வருடம் இழுத்தடித்தது. 
மத்திய அரசுப் பணிக்குப் போக விரும்பிய பலர் இன்னமும் காத்திருக்கிறார்கள்.ஆனால் சுதீப் ஜெயினும் சந்தீப் சக்சேனாவும் தேர்தல் ஆணையப் பணிக்குச் செல்ல ஜெ. அரசின் ஒப்புதல் உடனடியாகக் கிடைத்தது.அதற்கு முன்பாக, சந்தீப் சக்சேனா செய்த பெரிய வேலை தமிழகம் முழுவதும் ஐம்பது லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்களை தலைமைச் செயலாளர் ஞானதேசிகன், துணையுடன் -அ.தி.மு.க. தொண்டர்களின் உதவியுடன் சேர்த்ததுதான். 
ஜெ.வின் ஆலோசக ரான ஷீலா பாலகிருஷ்ணனின் மேற்பார்வையுடன் நடந்த ""இந்த போலி வாக்காளர் சேர்ப்பைத்தான் இந்த தேர்தல் களத்தில் அ.தி. மு.க.வின் மிகப்பெரிய பலம் என நம்பிக்கொண்டி ருக்கிறார் ஜெ'' என்கிறார்கள் கார்டனுக்கு நெருக்கமானவர்கள்.""போலி வாக்காளர்கள் விவகாரத்தை தி.மு.க. கையிலெடுத்து போராட்டம், நீதிமன்ற வழக்கு என போய்க்கொண்டிருப்பது ஜெ.வின் நம்பிக்கையைத் தகர்த்துவிடாதா'' என தேர்தல் கமிஷன் அதிகாரிகளைக் கேட்டோம்.""தமிழகத்தில் போலி வாக்காளர்களாகச் சேர்க்கப் பட்டவர்களை நீக்க பிப்ரவரி 15-ஆம் தேதியிலிருந்து 24-ஆம் தேதிவரை சிறப்பு நடவடிக்கைகளை எடுக்கப்போவதாக தலைமைத் தேர்தல் கமிஷனர் நஜீம்ஜைதி அறிவித்திருக்கிறார். 

அதேசமயம் ஃபார்ம்-6 என்கிற விண்ணப்பத்தை பயன்படுத்தி, விடுபட்டுப் போனவர்களையும் தவறுதலாக நீக்கப் பட்டவர்களையும் வேட்புமனுத் தாக்கலுக்கு பத்துநாட்கள் முன்புவரை சேர்ப்பதற்கும் நேரம் கொடுத் துள்ளார். 
இந்த வாய்ப்பை அ.தி.மு.க. பயன்படுத்திக் கொள்ளும். ஃபார்ம்-6ஐ பயன்படுத்தி ஏராளமான போலி வாக்காளர்களைச் சேர்க்க அ.தி.மு.க. தயாராகி வருகிறது. 

அ.தி.மு.க.வின் இந்த நடவடிக்கையை தற்பொழுது தமிழக தேர்தல் கமிஷனராக இருக்கும் ராஜேஷ் லக்கானி யால் தடுக்கக்கூடிய சூழல் இல்லை'' என்கிறார்கள்.கார்டன் தரப்பிலோ, ""லக்கானி இந்த வேலையை செய்வதற்காகத் தான் ஷீலா பாலகிருஷ்ணன் அவரைத் தேர்ந் தெடுத்து நியமிக்கச் செய்துள்ளார்'' என்கிறார்கள்.இன்றைய நிலையில்... தேர்தல் கமிஷன்தான் அ.தி. மு.க.வின் நம்பிக்கையான கூட்டணி. அதில் சுதீப் ஜெயின், சந்தீப் சக்சேனா, ராஜேஷ் லக்கானி போன்ற அதிகாரிகள் படையே இயங்கிக் கொண்டிருப்பதால் அ.தி.மு.க.  தலைமை தெம்பும் நம்பிக்கையுமாக இருக்கிறது என்கிறார்கள் அனைத்தும் அறிந்த அதிகாரிகள்.

-தாமோதரன் பிரகாஷ்
படங்கள் : ஸ்டாலின்
நன்றி:நக்கீரன்.
=============================================================================================
இந்த  சுதீப் ஜெயின் முதலில் சார் ஆட்சியராக பதவியேற்றது தூத்துக்குடியில்தான்.
 அன்று முதலே இவர் அரசு ஊழியர்களை அடிமைகள் போல் நடத்துவதாக போராட்டங்கள் ஆரம்பித்து விட்டன.
அலுவலக ஊழியர்கள் அனைவருக்கும் நீல நிறத்தில் ஒரே மாதிரி உடைகளை அணிந்துதான் [சீருடை] அலுவலகம் வந்து பணி புரிய வேண்டும்  என்ற கட்டுப்பாட்டை கொண்டு வந்தார்.அந்த அளவு பண்ணையார் மனப்பான்மை.
அதுவரை எந்த சார் ஆட்சியர்களும் ஆய்வு செய்யாத மதுக்கடை பார்களை மட்டும் ஆய்வு செய்து மாதா,மாதம் வருமானம் வர வழி செய்து கொண்டார்.
இவரிடம் பணிபுரிந்த டபீதார்கள்,ஓட்டுனர்கள் மாமூல் பணமழையில் நனைந்தார்கள்.சிலர் சொந்த மாக வீடு கட்டிக்கொண்டார்கள்.
ஆனால் இவரை விமர்சித்த ஊழியர் சங்கத்தினர் பணிப்பதிவேடுகளை வாங்கி காணாமல் போய்விடச்செய்தார்.பெரும் போராட்டம் நடந்து பணிப்பதிவேடுகள் திரும்ப பெறப்பட்டன.
இவர் பணிக்காலம் முழுக்க தூத்துக்குடி மாவட்ட அரசு ஊழியர்களுக்கு கடும் மனு உளைச்சல் காலமாகவும், மணல் கொள்ளையர்கள்,டாஸ்மாக் பார் நடத்துபவர்கள்,கள்ள டிக்கெட் திரையரங்கு உரிமையாளர்களுக்கு பொற்காலமாகவும் அமைந்தது.
=============================================================================================





இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?