12 கோடி மனநோயாளிகள்!
ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு நீரை எடுத்துக் கொண்டே போனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் 5 முதல் 10 அடி குறைந்து கொண்டேதான் போகும்.
தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர்.
வருட சராசரி மழையளவு 750 மி.மி முதல் 800 மி.மீ வரை.
ஆனால் குறைந்த அளவான 750 மி.மீ (75செ.மீ) எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26.44 மில்லியன் கன அடி. மொத்த பரப்பான 1,30,058 சதுர கிலோ மீட்டருக்கு 441.33 டிஎம்சி தண்ணீர் மழை நீராக பெறுகிறோம். (10 டிஎம்சி தண்ணீர் என்பது 1000 மி.க.அடி).
இதில் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது.
ஆகவே மழையினால் நமக்கு கிடைக்கும் நீர் 3441.33x1/2 = 1720.66 டிஎம்சி.
ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எல்லா உபயோகத்திற்கும் சேர்ந்து தேவைப்படுவது 100 லிட்டர் (3 க.அடி). ஒரு ஆண்டுக்கு தேவைப்படுவது 365x3= 1095 க.அடி (சுமார் 1000 க.அடி).
ஒரு ஆளுக்கு 1000 க.அடி என்றால் 1000 பேருக்கு 10,00,000 க.அடி (1.மி.க.அடி).
10 லட்சம் பேருக்கு 1000 மி.க.அடி (1டிஎம்சி).ஒரு கோடி பேருக்கு 10 டிஎம்சி.தமிழ்நாட்டின் ஜனத் தொகையான சுமார் 8 கோடி பேருக்கு 80 டிஎம்சி அல்லது அதிகபட்சமாக 100 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் தேவை.
இந்த நீர் தேவையை பொதுவாக ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மூலமும் நாம் பூர்த்தி செய்கிறோம்.
அவற்றில் ஆவியானது போக 1720.66 டிஎம்சி தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் நிலத்தடி நீராகவும் சென்றடைந்து மீண்டும் அதை பயன்படுத்துகிறோம்.
விவசாயத்தில் முக்கியமாக கரும்பு விவசாயம் செய்ய 365 நாளும் தண்ணிர் தேவை. ஜனவரி முதல் ஜூன் வரை கோடை காலங்களிலும் அதிக தண்ணீர் தேவைப்படு கிறது.
அந்த நாட்களில் நிலத்தடி நீர் தான் உறிஞ்சி எடுக்கப்படு கிறது. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 8000 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி 2.65 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. (2015-16ன்படி). இந்த பரப்ப ளவில் 15.6 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 437 டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த தண்ணீர் 365 நாட்க ளுக்கும் தேவை.
மழைக்காலங்களில் மற்றும் நீர்ப்பாசன மும் இருந்தாலும் சுமார் 50 சதவீதம் நிலத்தடி நீர் எடுத்தால்தான் முழுமையாக மகசூல் எடுக்க முடியும்.
நம்மை அறியாமலே சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கரும்பு விவசா யத்திற்காக மட்டும் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். விவசாயிக்கு தண்ணீர் (கனிமம்தான்) இலவசம். மின்சாரமும் இலவசம்.
அதனால் வருடம் முழுவதும் பரா மரிப்பு செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 2 முதல் 2.5 டன் (2000 கிலோ) முதல் 2500 கிலோவரை சர்க்கரை உற்பத்தி செய்ய முடிகிறது.
ஆனாலும் கரும்பு விவசாயிக்கு லாபம் ஒன்றுமில்லை. அதனால் நிலத்தடி நீர், மின்சாரம் போன்றவைதான் வீணாக்கப்படுகிறது. அதேபோல் வாழை விவசாயத்திற்கும் 365 நாட்கள் தண்ணீர் தேவை. அதற்கும் ஜனவரி முதல் ஜூன் வரை நிலத்தடி நீர்தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
காற்றினால் மரம் சாய்ந்துவிட்டால் அரசாங்கத்திடம் நிவாரணம் கேட்கின்றனர். ஜனவரி முதல் ஜூன் வரை சுமார் 2,00,000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
அதற்கு நிலத்தடி நீர்தான் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக மாற்று விவசாயமான சோளம், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடலாம். தோட்டப் பயிர்களும், பலன் தரும் பயிர்களும் குறிப்பாக பனை மரங்க ளும் நடலாம். இதற்கெல்லாம் விவசாயிகளிடம் விழிப் புணர்வு இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை.
நிலத்தடி நீர் எடுக்கப்படும் அளவு
1. கரும்பு விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி
2. வாழை விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி
3. சீமைக் கருவேல் மரங்களால் உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் 200.00 டிஎம்சி அதிகப்படியாக உறிஞ்சப்படும் நீர் மொத்தம் 637.00 டிஎம்சி.

இதற்கு உடனடி தீர்வு கரும்பு, வாழை விவசாயத்தை படிப்படியாக குறைத்து இன்னும் 2, 3 ஆண்டுகளில் விவசாயி களே முன்வந்து அதற்கு மாற்றாக நெல் (3 மாதம்தான்) மற்றும் பயறு வகைகள் பயிரிட வேண்டும். நாம் 1000 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கி நிலத்தடி நீரை பெருக்கினாலும் இந்த விவசாயத்தினால் எடுக்கப்படும் நிலத்தடி நீரைப்பார்த்தால் என் 75 வயதிலும் வருத்தம்தான் ஏற்படுகிறது.
குடிநீர் தேவையே மொத்தம் 100 டிஎம்சி தான்.
அதுவும் நம் உபயோகத்திற்காக எடுப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
அதிக பட்சமாக உறிஞ்சப்படும் 637.00 டிஎம்சி நீரை மட்டும் காப்பாற்றினாலே நம் தமிழகத்திற்கு என்றுமே பஞ்சம் வராது.
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, குடிநீருக்கு தண்ணீர் இல்லை என்பதெல்லாம் நாமே செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட விழிப்புணர்வு இல்லா விளம்பரம்.
உதாரணமாக சென்னை ஜனத்தொகை 70,00,000 பேருக்கு 7 டிஎம்சி அல்லது 10 டிஎம்சி தண்ணீர் தேவை. அங்குள்ள ஏரிகளின் கொள்ளளவு 10 டிஎம்சிக்கும் மேல் உள்ளது.
மேலும் வீடுகளிலும் போர்கள் உள்ளன.
சுமார் 80,000 போர்களில் உள்ள தண்ணீர் எல்லா தேவை களையும் பூர்த்தி செய்து விடும்.
நமக்கு கிடைக்க வேண்டிய மழை நீர் கிடைக்கத்தான் செய்கிறது.ஆனால் அதை சேமிப்பதிலும்,நீர் மேலாண்மையிலும் அரசு தனது பணியை உருப்படியாக இதுவரை செய்யாததிலும்தான் நமது நிலத்தடி நீர் மட்டம் குறைந்த கொண்டே போகிறது.
ஏரியை காப்பாற்ற வேண்டிய அரசு காசை வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாலும்,தானே ஏரியை நிரப்பி காவல் நிலையம்,அரசு கட்டிடங்கள் கட்டுவதுமாக இருந்தால் எப்படி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.?
-----------------------------------------------------------------------------------------------
அமைதி மிகுந்த இந்தியா?
உலகின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, மிகமோசமான முறையில் 141-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது.
சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் நாட்டின் இராணுவ செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ‘2019-ஆம் ஆண்டின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை’ அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், இந்தியா கடந்த முறையை விட, 2019-ஆம் ஆண்டில் 5 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.
உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கு 141-ஆவது இடமே கிடைத்துள்ளது.
கடந்தமுறை 136-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய நாடுகளை எடுத்துக் கொண்டால், பர்மா 15-வது இடத்திலும்,
இலங்கை 72-வது இடத்திலும்,
நேபாளம் 76 இடத்திலும்,
வங்கதேசம் 101-வது இடத்திலும் இருக்கின்றன.
ஆனால், இந்த சின்னஞ்சிறிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் 153-ஆவது இடத்தில் உள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
2008-ஆம் ஆண்டு முதலே ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில்தான் இருந்து வருகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளும் உலக அமைதி குறியீட்டின் (ழுஞஐ) பட்டியலில் முன்னணியில் இடம்பிடித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாடு, பட்டியலில் கடைசி (163-ஆவது) இடத்தில் வந்துள்ளது.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உழைப்பால் உயர்ந்தவர் வேற யாருமே தமிழ்நாட்டில் இல்லையா?
தமிழ்நாடு பாட புத்தகத்தில் இருந்து ரஜினியின் வரலாற்று பாடத்தை உடனே நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (ஜர்னலிஸ்ட் யூனியன் ) கோவைக்கிளை தெரிவித்துள்ளது.
மேலும் அவர் நடிப்பில் சிவாஜியை போல
மேதையும் கிடையாது.
ஒவ்வொரு படத்திற்கு அவர் வாங்கும் ஊதியத்தை வெளியே சொல்வதுமில்லை,தன்னை இந்த அளவு உயர்த்திய தமிழகத்திற்கு ரஜினி எந்த நன்மையையும் செய்யவில்லை.வெள்ளம்,இயறக்கை சீற்றங்கள்,பேரிடர்களில் கூட அவர் ரசிகர்கள் தமிழர்கள் கைக்காசை செலவிட்ட அளவிற்கு கூட அவர் நிதி கொடுத்ததில்லை.சொல்லப்போனால் அவரை விட குறைவாக சமபளம் பெரும் கமல்ஹாசன்,விஜய் சூர்யா,கார்த்தி சித்தார்த் போன்றவர்கள் கொடுத்தது விட குறைவாகவே கொடுத்துள்ளார்கள். ரஜினியும்,அஜித்தும்.
அவரைப்பற்றி சொல்ல இன்னும் நிறைய குறைகள் இருக்கிறது.
மேலும் அவர் தன்னை கர்நாடகாவைசேர்ந்தவராகவே எண்ணி தனது சொத்துக்களை எல்லாம் பெங்களூர்,மைசூர் என கர்நாடகாவிலேயே முதலீடாக்கி வருகிறார்.
அவரது திருமண மண்டபம்,பள்ளி கள் தான் அதிக கட்டணம் வசூலிக்கின்றன.
மேலும் பல்லை,கடைகளுக்கு கோடிகளில் வாடகையை பாக்கியாக வைத்துள்ளார்.பள்ளி ஊழியர்கள் ஆசிரியர்களுக்கு குறைந்த அளவு ஊதியம் கொடுப்பதுடன் அதையும் பல மாதங்கள் கொடாமல் வைத்து போராட்டங்கள் வேறு நடந்துள்ளது.
அதனால் தமிழக மாணவர்கள் ரஜினியின் இந்த தவறான பாடத்தை படிக்கும் நிலை ஏற்படும்.உழைப்பாளி உயர்ந்த வேறு தமிழர்களே இங்கு இல்லையா?என்ன காரணத்திற்காக ரஜினிப்பாடத்தை திணித்தார்கள்.அதற்கு காரணமான மெண்டல் யார்?நடிகர்கள் என்றால் கமல்ஹாசன்,பாரதிராஜா,இளையராஜா,விஜயகாந்த் என்று திரையுலகிலும்,வசந்தகுமார்,போனற தொழிலதிபர்களும் பலர் உள்ளார்
எனவே ரஜினி குறித்த பாடத்தை உடனடியாக நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடும் நிலை உருவாகும் என்பதை தெரிவித்து கொள்கிறோம்
இவ்வாறு தீர்மானங்கள் நிறைவேற்றபட்டன.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
உலகில் டிக் டாக் செயலியினை ஒரு பில்லியன் அதாவது, 100 கோடிப்பேர்
பதிவிறக்கம் செய்து பயன்படுத்துகின்றனர்.
இந்த எண்ணிக்கை இந்தியாவில் 30 கோடிப் பேராக இருக்கலாம் என்று ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் டிக் டாக் நிர்வாகம், இந்தியாவில் மட்டும் 12 கோடி பேர் வீடியோக்களை பதிவிட்டுவிட்டு லைக்குகளுக்காக பரிதாபமாக காத்திருப்பதாக தெரிவித்துள்ளது.இது மனநோய் என்று டிக்டாக் நிறுவனமே கூறியுள்ளது.இதை பொழுபோக்கு நிகழ்சிக்காக உபயோகிக்கவே உருவாக்கினோம்.ஆனால் இந்தியாவில் பலர் பொழுதே இதில்தான் உள்ளது .
டிக் டாக்கில் வீடியோக்களை அனுமதிப்பதற்கென்றே இந்நிறுவனம், 500 பணியாளர்களை கொண்டு 24 மணி நேரமும் இயங்கும் அலுவலகங்களை கொண்டுள்ளது.
கடந்த ஓராண்டில் மட்டும் டிக்டாக்கில் 60 லட்சம், ஆபாச மற்றும் வன்முறை தொடர்பான வீடியோக்களை அழித்திருப்பதாக அதிர்ச்சிகரமான தகவலையும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைட் டான்ஸ் நிறுவனம், டிக்டாக், ஹலோ மற்றும் விவோ என்னும் 3 செயலிகளை நிர்வகித்து வருகிறது. இதில், ஓராண்டிற்குள் மட்டும் டிக்டாக்கில் 24 கோடி வீடியோக்களும், ஹலோவில் 4 கோடி வீடியோக்கள், விவோவில் 3 கோடி வீடியோக்களும் வந்துள்ளதாம். ஏற்கனவே, டிக் டாக் செயலியினை தடை செய்யவேண்டும் என்று வழக்கு போட்டு, பின்னர் நிபந்தனைகளுடன் செயல்பட நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
எனவே, டிக் டாக் நிறுவனம், இனிமேல் 13 வயதுக்குட்பட்டோரை தடை செய்தல், குறிப்பிட்ட நிமிடங்கள் மட்டுமே பயனர்களை அனுமதித்தல், சாதிவெறி, மதவெறி, ஆபாச வன்முறைகளை தூண்டும் ஏச்சுபேச்சுகளை தடைசெய்தல், தனித்தனி கடவுச்சொற்களை உருவாக்குதல் போன்ற 13 விதிகளை அறிமுகம் செய்ய இருப்பதாகவும் கூறியிருக்கிறது.
----------------------------------------------------------------------------------------------------------------------------------
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் 29 வகையான பொருட்களுக்கு நாளை முதல் சுங்க வரியை அதிகரிப்பது என இந்தியா முடிவெடுத்துள்ளதாக தெரிகிறது.
இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் அலுமினிய பொருட்களுக்கான வரியை கடந்த ஆண்டு 25 சதவீதம் அதிகரித்தது அமெரிக்கா. இதனால் இந்தியாவின் உருக்கு வர்த்தகம் பாதிப்புக்குள்ளானது.
இதற்கு பதிலடியாக அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் பாதாம் வால்நட் உள்ளிட்ட 29 வகையான பொருட்கள் மீது கூடுதல் வரி விதிப்பு நாளை முதல் அமலுக்கு வரும் என தெரிகிறது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
தமிழ்நாட்டின் மொத்த பரப்பு 1,30,058 சதுர கிலோ மீட்டர்.
வருட சராசரி மழையளவு 750 மி.மி முதல் 800 மி.மீ வரை.
ஆனால் குறைந்த அளவான 750 மி.மீ (75செ.மீ) எடுத்துக் கொண்டால் ஆண்டுக்கு ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 26.44 மில்லியன் கன அடி. மொத்த பரப்பான 1,30,058 சதுர கிலோ மீட்டருக்கு 441.33 டிஎம்சி தண்ணீர் மழை நீராக பெறுகிறோம். (10 டிஎம்சி தண்ணீர் என்பது 1000 மி.க.அடி).
இதில் 50 சதவீதம் தண்ணீர் ஆவியாகி விடுகிறது.
ஆகவே மழையினால் நமக்கு கிடைக்கும் நீர் 3441.33x1/2 = 1720.66 டிஎம்சி.
ஒரு மனிதனுக்கு சராசரியாக ஒரு நாளைக்கு எல்லா உபயோகத்திற்கும் சேர்ந்து தேவைப்படுவது 100 லிட்டர் (3 க.அடி). ஒரு ஆண்டுக்கு தேவைப்படுவது 365x3= 1095 க.அடி (சுமார் 1000 க.அடி).
ஒரு ஆளுக்கு 1000 க.அடி என்றால் 1000 பேருக்கு 10,00,000 க.அடி (1.மி.க.அடி).
10 லட்சம் பேருக்கு 1000 மி.க.அடி (1டிஎம்சி).ஒரு கோடி பேருக்கு 10 டிஎம்சி.தமிழ்நாட்டின் ஜனத் தொகையான சுமார் 8 கோடி பேருக்கு 80 டிஎம்சி அல்லது அதிகபட்சமாக 100 டிஎம்சி தண்ணீர் மட்டும் தான் தேவை.
இந்த நீர் தேவையை பொதுவாக ஆறுகள், குளங்கள் மற்றும் நீர் ஆதாரங்கள் மூலமும் நாம் பூர்த்தி செய்கிறோம்.
அவற்றில் ஆவியானது போக 1720.66 டிஎம்சி தண்ணீர் மூலம் விவசாயம் மற்றும் நிலத்தடி நீராகவும் சென்றடைந்து மீண்டும் அதை பயன்படுத்துகிறோம்.
விவசாயத்தில் முக்கியமாக கரும்பு விவசாயம் செய்ய 365 நாளும் தண்ணிர் தேவை. ஜனவரி முதல் ஜூன் வரை கோடை காலங்களிலும் அதிக தண்ணீர் தேவைப்படு கிறது.
அந்த நாட்களில் நிலத்தடி நீர் தான் உறிஞ்சி எடுக்கப்படு கிறது. ஒரு கிலோ சர்க்கரை உற்பத்தி செய்ய சுமார் 8000 லிட்டர் தண்ணீர் தேவை. தமிழ்நாட்டில் கரும்பு உற்பத்தி 2.65 லட்சம் ஹெக்டேரில் பயிரிடப்பட்டது. (2015-16ன்படி). இந்த பரப்ப ளவில் 15.6 லட்சம் டன் சர்க்கரை உற்பத்தி செய்ய 437 டிஎம்சி தண்ணீர் தேவை. இந்த தண்ணீர் 365 நாட்க ளுக்கும் தேவை.
மழைக்காலங்களில் மற்றும் நீர்ப்பாசன மும் இருந்தாலும் சுமார் 50 சதவீதம் நிலத்தடி நீர் எடுத்தால்தான் முழுமையாக மகசூல் எடுக்க முடியும்.
நம்மை அறியாமலே சுமார் 200 டிஎம்சி தண்ணீர் கரும்பு விவசா யத்திற்காக மட்டும் நிலத்தடி நீரை எடுத்து பயன்படுத்திக் கொண்டு வருகிறோம். விவசாயிக்கு தண்ணீர் (கனிமம்தான்) இலவசம். மின்சாரமும் இலவசம்.
அதனால் வருடம் முழுவதும் பரா மரிப்பு செய்து ஒரு ஏக்கருக்கு சுமார் 2 முதல் 2.5 டன் (2000 கிலோ) முதல் 2500 கிலோவரை சர்க்கரை உற்பத்தி செய்ய முடிகிறது.
ஆனாலும் கரும்பு விவசாயிக்கு லாபம் ஒன்றுமில்லை. அதனால் நிலத்தடி நீர், மின்சாரம் போன்றவைதான் வீணாக்கப்படுகிறது. அதேபோல் வாழை விவசாயத்திற்கும் 365 நாட்கள் தண்ணீர் தேவை. அதற்கும் ஜனவரி முதல் ஜூன் வரை நிலத்தடி நீர்தான் உறிஞ்சி எடுக்கப்படுகிறது.
காற்றினால் மரம் சாய்ந்துவிட்டால் அரசாங்கத்திடம் நிவாரணம் கேட்கின்றனர். ஜனவரி முதல் ஜூன் வரை சுமார் 2,00,000 ஏக்கரில் நெல் விவசாயம் நடைபெறுகிறது.
அதற்கு நிலத்தடி நீர்தான் தேவைப்படுகிறது. அதற்கு பதிலாக மாற்று விவசாயமான சோளம், மக்காச்சோளம், காய்கறிகள் பயிரிடலாம். தோட்டப் பயிர்களும், பலன் தரும் பயிர்களும் குறிப்பாக பனை மரங்க ளும் நடலாம். இதற்கெல்லாம் விவசாயிகளிடம் விழிப் புணர்வு இருந்தாலும் அதை நடைமுறைப்படுத்துவதில்லை.
நிலத்தடி நீர் எடுக்கப்படும் அளவு
1. கரும்பு விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி
2. வாழை விவசாயத்திற்கு எடுக்கப்படும் நீரின் அளவு 218.5 டிஎம்சி
3. சீமைக் கருவேல் மரங்களால் உறிஞ்சப்படும் நிலத்தடி நீர் 200.00 டிஎம்சி அதிகப்படியாக உறிஞ்சப்படும் நீர் மொத்தம் 637.00 டிஎம்சி.
ஒவ்வொரு ஆண்டும் இவ்வளவு நீரை எடுத்துக் கொண்டே போனால் ஆண்டுதோறும் நிலத்தடி நீர் மட்டம் 5 முதல் 10 அடி குறைந்து கொண்டேதான் போகும்.
இதற்கு உடனடி தீர்வு கரும்பு, வாழை விவசாயத்தை படிப்படியாக குறைத்து இன்னும் 2, 3 ஆண்டுகளில் விவசாயி களே முன்வந்து அதற்கு மாற்றாக நெல் (3 மாதம்தான்) மற்றும் பயறு வகைகள் பயிரிட வேண்டும். நாம் 1000 க்கும் மேற்பட்ட தடுப்பணைகள் கட்டி நீர் தேக்கி நிலத்தடி நீரை பெருக்கினாலும் இந்த விவசாயத்தினால் எடுக்கப்படும் நிலத்தடி நீரைப்பார்த்தால் என் 75 வயதிலும் வருத்தம்தான் ஏற்படுகிறது.
குடிநீர் தேவையே மொத்தம் 100 டிஎம்சி தான்.
அதுவும் நம் உபயோகத்திற்காக எடுப்பதில் எந்த பாதிப்பும் ஏற்படப் போவதில்லை.
அதிக பட்சமாக உறிஞ்சப்படும் 637.00 டிஎம்சி நீரை மட்டும் காப்பாற்றினாலே நம் தமிழகத்திற்கு என்றுமே பஞ்சம் வராது.
விவசாயத்திற்கு தண்ணீர் இல்லை, குடிநீருக்கு தண்ணீர் இல்லை என்பதெல்லாம் நாமே செயற்கையாக ஏற்படுத்திக் கொண்ட விழிப்புணர்வு இல்லா விளம்பரம்.
உதாரணமாக சென்னை ஜனத்தொகை 70,00,000 பேருக்கு 7 டிஎம்சி அல்லது 10 டிஎம்சி தண்ணீர் தேவை. அங்குள்ள ஏரிகளின் கொள்ளளவு 10 டிஎம்சிக்கும் மேல் உள்ளது.
மேலும் வீடுகளிலும் போர்கள் உள்ளன.
சுமார் 80,000 போர்களில் உள்ள தண்ணீர் எல்லா தேவை களையும் பூர்த்தி செய்து விடும்.
நமக்கு கிடைக்க வேண்டிய மழை நீர் கிடைக்கத்தான் செய்கிறது.ஆனால் அதை சேமிப்பதிலும்,நீர் மேலாண்மையிலும் அரசு தனது பணியை உருப்படியாக இதுவரை செய்யாததிலும்தான் நமது நிலத்தடி நீர் மட்டம் குறைந்த கொண்டே போகிறது.
ஏரியை காப்பாற்ற வேண்டிய அரசு காசை வாங்கிக்கொண்டு ஆக்கிரமிப்பாளர்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பதாலும்,தானே ஏரியை நிரப்பி காவல் நிலையம்,அரசு கட்டிடங்கள் கட்டுவதுமாக இருந்தால் எப்படி நிலத்தடி நீர் மட்டம் உயரும்.?
அமைதி மிகுந்த இந்தியா?
உலகின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலில் இந்தியா, மிகமோசமான முறையில் 141-ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய நிறுவனம் ஒன்று உலக நாடுகளின் அமைதி குறித்து ஆய்வு நடத்தியது.
சமூகப் பாதுகாப்பு, உள்நாட்டுப் பிரச்சனைகள், சர்வதேச பிரச்சனைகள் மற்றும் நாட்டின் இராணுவ செயல்பாடு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், ‘2019-ஆம் ஆண்டின் அமைதி மிகுந்த நாடுகள் பட்டியலை’ அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இதில், இந்தியா கடந்த முறையை விட, 2019-ஆம் ஆண்டில் 5 இடங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளது.
உலகின் அமைதி மிகுந்த நாடுகளின் பட்டியலில் மொத்தம் 163 நாடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இந்தியாவுக்கு 141-ஆவது இடமே கிடைத்துள்ளது.
கடந்தமுறை 136-ஆவது இடத்தில் இந்தியா இருந்தது குறிப்பிடத்தக்கது.
தெற்காசிய நாடுகளை எடுத்துக் கொண்டால், பர்மா 15-வது இடத்திலும்,
இலங்கை 72-வது இடத்திலும்,
நேபாளம் 76 இடத்திலும்,
வங்கதேசம் 101-வது இடத்திலும் இருக்கின்றன.
ஆனால், இந்த சின்னஞ்சிறிய நாடுகளை விடவும் இந்தியா மோசமான இடத்தைப் பிடித்துள்ளது.
இந்தியாவுக்கு அடுத்ததாக பாகிஸ்தான் 153-ஆவது இடத்தில் உள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகள் பட்டியலில், ஐஸ்லாந்து முதலிடத்தில் உள்ளது.
2008-ஆம் ஆண்டு முதலே ஐஸ்லாந்து தொடர்ந்து முதலிடத்தில்தான் இருந்து வருகிறது.
நியூசிலாந்து, ஆஸ்திரியா, போர்ச்சுகல் மற்றும் டென்மார்க் போன்ற நாடுகளும் உலக அமைதி குறியீட்டின் (ழுஞஐ) பட்டியலில் முன்னணியில் இடம்பிடித்துள்ளன.
ஆப்கானிஸ்தான் நாடு, பட்டியலில் கடைசி (163-ஆவது) இடத்தில் வந்துள்ளது.
உழைப்பால் உயர்ந்தவர் வேற யாருமே தமிழ்நாட்டில் இல்லையா?
தமிழ்நாடு பாட புத்தகத்தில் இருந்து ரஜினியின் வரலாற்று பாடத்தை உடனே நீக்க வேண்டும் இல்லாவிட்டால் நீதி மன்றத்தில் வழக்கு போடுவோம் தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் (ஜர்னலிஸ்ட் யூனியன் ) கோவைக்கிளை தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் கோவை மாவட்ட
கிளையின் ஆலோசனை கூட்டம் கிணத்துகடவில் உள்ள அலுவலகத்தில் நடைபெற்றது.
மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் செயலாளர்
கோவை ராஜன் ஆர்.கே.பூபதி துணை தலைவர் கார்த்திக் உள்ளிட்ட நிர்வாகிகள்
கலந்துகொண்டனர்.
இந்த கூட்டத்தில் நடைபெற்ற பாராளுமன்ற
தேர்தலில் வெற்றிபெற்று இரண்டாவது முறையாக பிரதமரான மோடிக்கும் மற்றும்
தமிழகத்தில் வெற்றிபெற்ற எம்பிக்கள் எம்ஏக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
மேலும் தமிழ்நாடு 5 ஆம் வகுப்பு பள்ளி பாட புத்தகத்தில் நடிகர் ரஜினி
குறித்து உழைப்பால் உயர்ந்தவர் என்று படம் அச்சிடப்பட்டுள்ளது என்ற
அதிர்ச்சியான செய்தி வந்துள்ளது.
ரஜினி பெரிய நடிகராக இருப்பினும் தமிழ்
சமூகத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை மேலும் அவரால்தான்
தமிழ்நாட்டில் அதிக இளைஞர்கள் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு மாறினார்கள்
என்பது வரலாறு.