கண்மணி அன்போட?


த்தர பிரதேச மாநிலத்தில் இந்துத்துவ – போலீசு கூட்டணி ராஜ்ஜியம் நடத்திக்கொண்டிருக்கும் முதலமைச்சர் ஆதித்யநாத், மூன்று பத்திரிகையாளர்களை அவதூறு வழக்கில் கைது செய்திருக்கிறார்.
‘முதலமைச்சர்’ ஆதித்யநாத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறிய பெண் ஒருவரின் பேட்டியை ஒளிபரப்பியதற்காகவும் அதுகுறித்து சமூக ஊடகத்தில் எழுதியதற்காகவும் மூன்று பத்திரிகையாளர்களை உ.பி. போலீசு கைது செய்துள்ளது.
பிரசாந்த் கனோஜியா



’தி வயர்’ இந்தி இணையதளத்தில் பணியாற்றிய பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியா, தனது முகநூலில் ஆதித்யநாத்துடன் ஓராண்டுக்கும் மேலாக தொடர்பில் இருந்ததாகக் கூறிய பெண் ஒருவரின் வீடியோவை பகிர்ந்திருந்தார்.
‘எவ்வளவுதான் ரகசியமாக வைத்திருந்தாலும் காதலை மறைக்க முடியாது யோகிஜி’ என்ற வரிகளுடன் வீடியோவை பகிர்ந்திருந்தார் பிரசாந்த்.

இந்த வீடியோ சமூக ஊடகங்களில் அதிகமாக பகிர்ந்துகொள்ளப்பட்டது.
இந்த நிலையில் பத்திரிகையாளர் பிரசாந்த் கனோஜியாவை அவருடைய டெல்லி இல்லத்தில் கைது செய்தது உ.பி. போலீசு.
அவரை எங்கே வைத்திருக்கிறார்கள் என்கிற தகவலையும் அவர்கள் வெளியிடவில்லை.

பிரசாந்தின் கைது பத்திரிகையாளர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில் தி வயர் இணையதளத்தின் ஆசிரியர் சித்தார்த் வரதராஜன், “பிரசாந்த் கைது செய்யப்பட்டிருக்கிறார். உ.பி. போலீசு அவரை கைது செய்துள்ளது.
 இது சட்டத்தை மீறிய செயலாகும்; கருத்துரிமைக்கும் எதிரானதாகும்.
அவர் தி வயர் இந்தி பதிப்பில் பணியாற்றியவர்.
இப்போது சுயாதீன பத்திரிகையாளராய் இருக்கிறார்.
 இந்தக் கைது ஆதித்யநாத்தின் காட்டாட்சியை தோலுரித்து காட்டுகிறது” என தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் கண்டனத்தை தெரிவித்திருந்தார்.

இந்தக் கைது சம்பவம் அரங்கேறிய அடுத்த நாள் (சனிக்கிழமை) ஆதித்யநாத்துக்கும் தனக்கும் தொடர்பு இருப்பதாகக்கூறிய பெண்ணின் கருத்து குறித்து ஊடக விவாதம் நடத்திய ‘நேஷன் லைவ்’ என்ற உள்ளூர் தொலைக்காட்சியைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இஷிதா சிங்                    அனுஜ் சுக்லாவும்.


 ‘நேஷன் லைவ்’ தொலைக்காட்சியின் தலைவர் இஷிதா சிங்கும், அதனுடைய ஆசிரியர் அனுஜ் சுக்லாவும் உ.பி.போலீசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இருவரின் கைது குறித்தும் தகவல் வெளியிட்டுள்ள நொய்டா போலீசு, “இவர்கள் நடத்திய விவாதத்தால் தொண்டர்கள் கொதித்து போயிள்ளனர்.
ஏதேனும் அசம்பாவிதம் நடக்கும் என்கிற நிலையில் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றும் பொருட்டு அவர்களைக் கைது செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளது.

மேலும், போலீசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் இந்தத் தொலைக்காட்சி உரிமம் பெறாமல் நடத்தப்பட்டதால் அதற்குரிய பிரிவுகளின் கீழும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
 ‘நமோ டிவி’என்ற 24 மணி நேர மோடி புகழ் பாடும் தொலைக்காட்சியை தேர்தலுக்காக எந்த வித உரிமமும், விதியும் இன்றி நடத்திய முன்னுதாரணம் இருக்கும்போது, ஆதித்யநாத்தின் காட்டாட்சிக்கு எதிராக செய்தி வெளியிட்டதாலேயே இந்த விதிமீறல் வழக்கு போடப்பட்டுள்ளது என்பதை சொல்லாமலேயே புரிந்து கொள்ள முடிகிறது.

மூன்று பத்திரிகையாளர்கள் அடுத்தடுத்து கைது செய்யப்பட்டிருப்பதை எடிட்டர்ஸ் கில்டு உள்ளிட்ட ஊடக அமைப்புகள் கண்டித்துள்ளன. சட்டத்தை தவறாக பயன்படுத்தி பத்திரிகையாளர்களை கைது செய்திருப்பதாக கண்டித்துள்ளது எடிட்டர்ஸ் கில்டு.
 “இது பத்திரிகை சுதந்திரத்தில் தலையிடுவதாகும்; கருத்து சுதந்திரத்தை நசுக்குவதாகும்” எனவும் “இது வேண்டுமென்றே மூவருக்கு எதிராக போடப்பட்ட வழக்கு” எனவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.

உடனடியாக பிணை பெற முடியாத வகையில் மூவரும் வார இறுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கண்மணி அன்போட?
இது போலீசு அவர்களை மேலும் ஒடுக்கும் விதமாக செயல்பட்டதைக் காட்டுகிறது.

 அவர்களுக்கு நீதி மறுக்கப்பட்டுள்ளதை காட்டுகிறது” என ஊடக பெண்களுக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும், இந்த அறிக்கையில் மாற்றுக்கருத்தை உ.பி. அரசால் சகித்துக்கொள்ள முடியாததைத்தான் இந்த கைது நடவடிக்கைகள் காட்டுகின்றன எனவும் கண்டித்துள்ளது.

“இந்தியாவில் பத்திரிகையாளர்கள் உள்நோக்கத்துடன் கைது செய்யப்படுவதும், சட்டவிரோதமாக கைது செய்யப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் அதிகரித்து வருகிறது” எனவும் அந்த அமைப்பு கவலை தெரிவித்துள்ளது.

உ.பி.-யில் மூன்று பத்திரிகையாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதைக் கண்டித்தும் அவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் மேலும் பல பத்திரிகையாளர் அமைப்புகள் இணைந்து கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.

முசுலீம்களையும் ஒடுக்கப்பட்ட மக்களையும் தேடித்தேடி வேட்டையாடிய என்கவுண்டர் புகழ் ஆதித்யநாத், இப்போது பத்திரிகை சுதந்திரத்தை என்கவுண்டர் செய்யக் கிளம்பியிருக்கிறார்.
இனிவரும் காலங்களில் கொஞ்சநஞ்ச எதிர்ப்புணர்வும் ஊடகங்களிலிருந்து காணாமல் போகும் என எதிர்பார்க்கலாம்.
----------------------------------------------------------------------------------------------------------------------
 பாஜகவிற்கு எதிராக கூச்சல்..2
திருச்சி செல்வதற்காக, தமிழிசை தனது மகன், மகளுடன் சென்னை விமான நிலையத்திற்கு சென்றார்.
அங்கு வழக்கம் போல் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துக் கொண்டிருந்தார்.
அப்போது தமிழிசையின் மகன் சுகந்தன், பாஜகவிற்கு எதிராக கூச்சலிட்டார்.
தமிழ் நாட்டில் பாஜக வளரவே முடியாது.தாமரை மலரவே மலராது.என்று கத்தினார்.
இது அங்கிருந்தவர்களை,செய்தியாளர்களை பாஜகவினரை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து
" தமிழிசை  உத்தரபிரதேச துணை முதல்வர் தினேஷ் சர்மா அவர்கள் தமிழக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்திற்கு வருவதாக திடீரென்று நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டதால், நான் திருச்சி வரவில்லை.
நீங்கள் சென்று வாருங்கள் என்று என் கணவரிடம் சொல்லிவிட்டு அவர்களை அனுப்ப முயன்ற போது கட்சி நிகழ்ச்சியை முன்னிறுத்தி குடும்ப நிகழ்ச்சிக்கு வர மறுத்ததால் என் மகன் சற்று கோபமடைந்து கட்சிதான் முக்கியமா? என்ற நிலையில் என் மீது கோபப்பட்டார்.

இந்த குடும்ப சூழலை சிலர் அரசியலாக்கும் கீழ்த்தரமான நிகழ்வு கண்டனத்திற்குரியது.

சாதாரணமாக நடந்த ஓர் குடும்ப நிகழ்வை பலரும் பல ஊடகங்களும் பெருந்தன்மையோடு எடுத்துக்கொண்டபோது சில ஊடகங்கள் இதை அரசியல் ரீதியாக முன்னிறுத்துவது, மனதை ரணப்படுத்தினாலும் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்கள் சந்திக்கும் சவால்களில் இதுவும் ஒன்று என்றே எடுத்துக்கொள்கிறேன் ." என சமாளித்தார்.

பொது இடத்தில் தாயார் தலைவராக உள்ள கட்சிக்கு எதிராக கூச்சலிடுவது குடும்ப சூழலா?
ஸ்டாலின் வீட்டு குடும்ப நிகழ்வையெல்லாம் அரசியலாக்கி மேடையில் முழங்குபவருக்கு தன வீட்டு எதிர்ப்பு அரசியலே குடுமப நிகழ்வாக தெரிகிறதோ.
மற்றவர்கள் அதை சுட்டிக்காட்டினால் கீழ்த்தரமா?
விமானத்தளம் போனற மக்கள் அதிகமாக வந்த செல்லும் இடத்தில் பாஜகவுக்கு எதிராக,தாயாருக்கு எதிராக கூச்சலிடுவது என்றால் சுகந்தன் எந்த அளவு பாஜக எதிர் மனநிலையில் இருக்கிறார் என்பது உலகிற்கே தெரிகிறது.
வீட்டில் சண்டை போட்டால் அது குடுமப் நிகழ்வுதான்.ஆனால் கலைஞரின் குடுமப நிகழ்வுகளை வைத்தே சில தினமலர்,தினமணி  போன்ற வலதுசாரி ஊடகங்கள் பிழைப்பை நடத்திவருகிறதே.
அதெல்லாம் இருக்கட்டும் இதற்கு முன்னரும் தூத்துக்குடி விமான நிலையத்தில் பாஜகவுக்கு எதிராக குரல் எழுப்பிய சோபியா உடன் சன்டை போட்டு அவரை கைது செய்யவைத்து கடவுசீட்டை முடக்கிய அந்த வீரம் அல்லது கட்சி பாசம் இப்போது எங்கே?
சோபியா மீது நடவடிக்கை எடுத்து போல உங்க மகன் மீது நடவடிக்கை உண்டா தமிழிசை அவர்களே?
-----------------------------------------------------------------------------------------------------------------------
"அரசியலில் நீங்கள் தலையிடாவிட்டாலும்,அது உங்கள் வாழ்க்கையில் தலையிடும் "
                                                                                                                     - லெனின்
-----------------------------------------------------------------------------------------------------------------------
 இனி அரிசி எதற்கு?
சோளம்தான் இருக்கு !
பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக் காலத்தின் போது ஆங்கிலேய சாகுபடியாளர்கள் இந்திய விவசாயிகளை கட்டாயப்படுத்தியும், கடனுக்கு அடிமையாக்கியும் ஐரோப்பிய சந்தையின் தேவைக்கேற்ப அவுரி சாகுபடி செய்ய வற்புறுத்தினார்கள்.
இன்று அரியானாவில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தி விட்டு சோளத்தைப் பயிரிடச் சொல்கிறது அம்மாநில பா.ஜ.க அரசு.
அரியானாவின் மொத்த விவசாய விளைநிலமான 35 லட்சம் ஹெக்டரில் 13.5 லட்சம் ஹெக்டரில் நெல் பயிரிடப்படுகிறது.
அரியானா விவசாயிகள் கரீப் பருவத்திற்காக நெல் விதைப்பிற்கு தயாராகி வருகிறார்கள். அரியானா அரசு,  ஏழு மாவட்டங்களில் விவசாயிகளை நெல் பயிரிடுவதை நிறுத்தச் சொல்லி அறிவித்திருக்கிறது. இதற்கு அம்மாநில அரசு கூறும் காரணம் நிலத்தடி நீர் குறைந்து வருகிறதாம்.
நெல் சாகுபடியில் அதிக நீர் செலவாகிறதாம். சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிரிடுவதனால் அதிக அளவு நீர் மற்றும் மின்சாரத்தை சேமிக்கலாம் என்றும் இது மண்வளப் பாதுகாப்புக்கு அவசியமானது என்றும் கூறி வரும் கரிஃப் பருவத்தில்  சோளத்தையும், பருப்பு வகைகளையும் பயிர்செய்ய, ஒரு சோதனைத் திட்டத்தை அறிவித்திருத்திருக்கிறார் அரியானா முதலமைச்சர் மனோகர் லால் கட்டார்.

மேலும் இந்தத் திட்டத்தின் கீழ் பயிரிடும் விவசாயிகளுக்கு ஹெக்டருக்கு ரூ 4,500 மதிப்பிலான சோள – பருப்பு விதைகள் இலவசம், ஹெக்டருக்கு ரூ 766 பயிர்க் காப்பீட்டு திட்டம், விளைச்சலை அரசே குறைந்தப் பட்ச ஆதரவு விலையில் கொள்முதல் செய்யும்  என்றும் கூறியிருக்கிறது.

விவசாயிகளுக்கு  உள்ளீடு விலைகள் நெல் சாகுபடிக்கு அதிகமாக இருந்தாலும், ஏக்கருக்கு ரூ 50,000 முதல் 55, 000 வரை வருவாய் கிடைக்கும்.
ஆனால் சோளத்தில் அதிகபட்சமாக ஏக்கருக்கு ரூ 25,000 முதல் ரூ 30,000 தான் கிடைக்கும் என்று முன்னாள் வேளாண்மை விரிவாக்க அதிகாரி ரஜ்ஜித் சிங் கூறுகிறார்.

தானேசர் பகுதியைச் சேர்ந்த விவசாயி பார்தப் சிங், அரசே கொள்முதல் செய்யும் என்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை. இது ஒரு வாய்மொழிகவே இருக்கிறது என்கிறார்.
--------------------------------------------------------------------------------------------------------------------
 கிரேசி மோகன்.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக திகழ்ந்த நடிகர் கிரேசி மோகன் .
1952 இல் பிறந்தவர்.
 கதை வசன கர்த்தாவாகவும், நாடக ஆசிரியராகவும் திகழ்ந்தவர்.
1972 ம் ஆண்டு தனது பொறியியல் கல்லூரி ஆண்டு விழாவுக்காக நாடகம் எழுதியதன் மூலம் நாடகத்துறைக்குள் நுழைந்தார்.கிரேஸி என்ற தலைப்பில் பல மேடை நகைச்சுவை நாடகங்களை இயக்கியுள்ளார்.
அடிப்படையில் ரசாயன பொறியாளர். இவரது  நகைச்சுவை வசனங்கள் மூலம் கவரப்பட்ட கமல் ஹாசன் தனது சொந்தப் படமான அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்துக்கு இவரை வசனம் எழுதவைத்தார்.கமல்ஹாசன் மூலமாகவே திரைக்கு வந்துள்ளார்.

இதைத் தொடர்ந்து மைக்கேல் மதன காமராஜ், பஞ்ச தந்திரம், வசூல் ராஜா எம்பிபிஎஸ் ஆகிய திரைப்படங்களுக்கு கதை வசன கர்த்தாவாக பணியாற்றியுள்ளார்.
இந்த படங்கள் எல்லாமே கமல் ஹாசன் நடித்த படங்கள்.

நகைச்சுவை வசனம்  இவரது சிறப்பம்சம்.
இவர், அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜ், ஆஹா, காதலா காதலா, பஞ்ச தந்திரம், வசூல்ராஜா எம்பிபிஎஸ், நான் ஈ, அருணாச்சலம், தெனாலி, சதீலீலாவதி ஆகிய படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

கிரேசி மோகன்  மாரடைப்பு ஏற்பட்ட நிலையில் காலமானார்.
அவருக்கு வயது 66.
இன்று உடலடக்கம் நடக்கிறது.

கமல்ஹாசன் தனது நண்பர் கிரேசி மோகன் இரங்கல் தெரிவித்து வெளியிட்ட கடிதம்.
 

 வாட்ஸ் அப்'ல் ஆந்தைகுமார் பகிர்ந்த இடுகை இது...
//என் கேபினில் இருந்த மூன்றாவது விக்கெட் #கிரேசிமோகன்
நான் விகடன் எடிட்டோரியலில் இருந்த போது எனக்கு ஒதுக்கப்பட்ட கேபினில் இரா.வேலுச்சாமி மற்றும் பாலா என்னும் சினிமா ரிப்போர்ட்டர் ஆகியோர் இருந்தனர்..
 நாங்கள் மூவருமே ஸ்மோக்கிங் ஹேபிட் உள்ளவர்கள் என்பதால் முதல் நாளே ரொம்ப நெருக்கமாகி விட்டோம்.
வேலுச்சாமியை விட பாலா ரொம்ப நகைச்சுவை ஏற்படுத்துபவர். இவர்தான் அந்த காலத்தில் நடிகர், நடிகைகளை எல்லாம் வீதிக்கு அழைத்து வந்து ஸ்பெஷல் ரிப்போர்ட் அளித்தவர்.

அவரவர் பணியை செய்தபடி அளப்பறை செய்து கொண்டிருந்த எங்கள் கேபினில் திடீரென்று மிகப் பெரிய டேபிள் மற்றும் பிரமாண்டமான சேர் எல்லாம் வந்தன.
அதைப் பார்க்கும் போதே தெரிந்தது - வர்ப் போகிறவர் கொஞ்சம் மேலிட செல்வாக்கு மிகுந்தவர் என்று புரிந்தது.
ஆனால் வரப் போவது யார் என்பதை சொல்ல மறுத்து விட்ட நிலையில் வந்தவமர்தவர்தான் -கிரேஸி மோகன்.

எங்கள் மூவரின் ஸ்மோக்கிங்-கைக் கண்டு கொள்ளாமல் வெத்தலை சீவல் போட்டப் படி பேசினார்.. பேசினார்.. பேசிக் கொண்டே இருந்தார்.
 போரடிக்கும் போது எழுதிக் குவிப்பார்..
 ஒரு முழு ஷீட்டில் அறுபது முதல் எழுபது வார்த்தைகள்தான் இருக்கும். அவர் எழுதியதில் உள்ள சிரிப்புகளை மிக சரியாக கண்டறிந்து ஜூ.வி & விகடனில் பிரசுரித்து வந்தார் எம் எடி பாலு, அதில் ஒன்று கேபிடி சிரிப்பு ராஜ சோழன். (அந்த தொடரில் சிரிப்பு எங்கே ஒளிந்திருக்கிறது என்று கண்டு பிடிக்கும் போட்டி நடத்தி அதற்கு கிரேஸியையே பொறுப்பேற்க வைத்திருக்கிறோம் என்பது தனிக் கதை). நேத்திக்கு கேட்ட அதே கேள்வியை இன்னிக்கு கேட்டாலும் நேத்திக்கு சொன்ன அதே பதிலை அட்சரம் பிசகாமல் சொல்வார்.
 அப்படி சொல்வதில் மிளிரும் ஒத்தை காமெடிக்காக ஒரே கேள்வியை ஒரே நாளில் பல தடவை அவரிடம் கேட்டிருக்கிறோம். அதனாலெல்லாம் சலிப்போ டவுட்டோ இல்லாமல் அதே பதிலை சொல்வார் கிரேஸி.
சுமார் இரண்டு ஆண்டுகள் அவர் எழுதிய ஒரிஜினல்களின் பண்டல்களை வைக்க தனி கேபின் தேவைப்பட்டது.

 இடையிடையே தன் என்ஜினியரிங் டிகிரியின் போது படித்த அனுபவங்களைச் சொல்லும் போது நிஜமாகவே சிரிப்பு வரும். உண்மையில் இவர் வரைவதில்தான் ஆர்வம் கொண்டிருந்தார்.
காலச் சூழல் அவரை எழுத்தாளனாக்கி விட்டது என்பார்.
தனக்கு கிரேஸி என்ற அடைமொழி வந்தது குறித்து ‘கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்’ நாடகத்தை ரங்காசாரி மோகன் என்ற என்னுடைய பெயரில்தான் எழுதினேன்.

அதே சமயம் நான் ஒருமுறை ‘கரிகாலா கரிகாலா’ என்ற சிறுகதையை ஆனந்த விகடனுக்கு அனுப்பினேன்.
 அது அச்சிடப்பட்டு வெளி வந்தபோது கதையை எழுதியது ‘கிரேஸி மோகன்’ என்று அறிமுகமில்லாத பெயராக இருந்தது. அது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. 
உடனே, ஆனந்த விகடனின் ஆசிரியர் இலாகாவில் இருந்த வி.ஸ்ரீனிவாசன் அவர்களிடம், ‘எதற்காக என் பெயரை இப்படி போட்டுள்ளீர்கள்?’ என்று கேட்டேன்.
 அதற்கு அவர், "இப்போதிலிருந்து உன்னுடைய பெயர் ‘கிரேஸி மோகன்’ என்பதுதான்" என்று கூறினார். என்னுடைய இயற்பெயரை என் தாத்தா வைத்தார்.
 என் திரைப்பெயரை ஆனந்த விகடன் வைத்தது’என்று சொன்னார்.

அது போல் உங்கள் படைப்பில் பெண் கதாபாத்திரத்தின் பெயர் ஜானகி என்று இருப்பது ஏன்?
 என்று கேட்ட போது ‘ஜானகி என்பது என்னுடைய முன்னாள் காதலி அல்லது என்னுடைய மனைவி என்று எல்லோரும் நினைத்திருப்பார்கள்.
 ஆனால், ஜானகி என்பது எனக்கு நாடகம் கற்றுத்தந்த பள்ளி ஆசிரியையின் பெயர். என்னுடைய ஆறாவது வயதில் அவர்தான் எனக்கு நாடகத்தின் நுணுக்கங்களைக் கற்றுத்தந்தார்.
 பள்ளியில் நடந்த நாடகத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் வேடத்தில் நான் நடிக்க வாய்ப்பு கொடுத்தார். நாடகத்தின் மீது எனக்கு ஓர் ஈர்ப்பு ஏற்பட அவரும் ஒரு முக்கிய காரணம்.
அதனால்தான் அவருக்குக் கொடுக்கும் குருதட்சணையாக, அவருடைய பெயரை என்னுடைய நாடகத்தில் உபயோகிக்கிறேன்’ என்றார்.

ஹூம்ம்.. அப்படியபட்ட கேபினில் இருந்த பாலா மற்றும் இரா.வேலுசாமியைத் தொடர்ந்து தற்போது கிரேஸி என்னும் விக்கெட் வீழ்ந்து விட்ட நிலையில் அவருடனான ரன்-னிங் நினைவுகள் தொடர்கிறது//
 ---------------------------------------------------------------------------------------------------------------------
 கிரிஷ் கர்னாட்! 

திரைத்துறையில் நடிகர், இயக்குனர், எழுத்தாளர் என பலதுறைகளில் முத்திரை பதித்த கிரிஷ் கர்னாட் இன்று காலை பெங்களூரு மருத்துவமனையில் காலமானார்.
அவருக்கு வயது 81.

வயது முதிர்வு காரணமாக அவர் மரணம் அடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மாதேரான் கிராமத்தில் பிறந்த கிரிஷ், கர்நாடகாவின் சிர்சி தர்வாட் ஆகிய இடங்களில் வளர்ந்தவர். அங்குதான் அவருக்கு நாடகங்களில் நடிக்கும் ஆர்வம் ஏற்பட்டது.

கிராமத்து நாடகங்களில் நடித்த கிரிஷ், பின்னர் கர்நாடக கலைக் கல்லூரியில் பட்டம் பெற்றார்.

தொடர்ந்து தத்துவம், அரசியல் அறிவியல், பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் பட்டம் பெற்றார்.
முதலில் அவரது பணி ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில்தான் இருந்தது.

பின்னர், முழு நேர எழுத்தாளராக மாறினார்.
அவரது முதல் புத்தகம் யயாதி 1961-ல் வெளியானது. 1964-ல் துக்ளக்கையும், 1971-ல் ஹயாவதானவையும் எழுதினார்.

கன்னனடத்தில் பிரபலான நூல்களை ஆங்கிலத்திற்கும், பிற மொழிகளுக்கும் கர்னாட் மொழி மாற்றம் செய்திருக்கிறார்.
அவை பின்னாளில் புகழ்பெற்ற இயக்குனர்களால் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

நடிகர் என்ற முறையில் கிரிஷுக்கு நீண்ட நெடிய அனுபவம் உண்டு.

1970-ல் கன்னட மொழிப்படமான சம்ஸ்காராவில் கிரிஷ் நடித்தார்.
அவருக்கு இந்தியிலும் அதன்பின்னர் மிகப்பெரிய வாய்ப்புகள் குவிந்தன.

நிஷாந்த், மந்தன், டோர், சுவாமி உள்ளிட்டவை அவர் நடித்த மிகவும் பிரபலமான இந்தி படங்கள். இயக்குனர் என்ற முறையில் 1971ல் வம்ஷ விருக்ஷா, 1984-ல் உத்சவ் உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.
சின்னத்திரை ரசிகர்கள் கிரிஷ் கர்னாடை மால்குடி டேஸில் இருந்து அறிவார்கள்.
 இந்திரா தனுஷ் என்பதும் அவரது பிரபல சின்னத்திரை தொடராகும்.

தமித்திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.கமல்ஹாசனின் குணா ,முமபை எக்ஸ்பிரஸ் உட்பட நான்கு படங்களிலும் ,காதலன் உட்பட பலப்படங்களில் நடித்துள்ளர்,

சமீபத்தில் பிரபலம் அடைந்த சல்மான் கானின் டைகர் ஜிந்தா ஹே (2017)-ல் அவர் நடித்திருந்தார்.
அரசியல், சமூக பணிகளிலும் கிரிஷ் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

 அடிப்படைவாதத்தை எதிர்த்த கிரிஷ் கர்னாட் அவற்றை தனது திரைப்படங்களிலும் பயன்படுத்தியுள்ளார். சங்கீத நாடக அகாடமியின் தலைவர், லண்டன் நேரு சென்டரின் இயக்குனர் உள்ளிட்ட பல பதவிகளை அவர் வகித்திருக்கிறார்.


பத்ம ஸ்ரீ, பத்ம பூஷன், சங்கீத நாடக அகாடமி விருது, ஞான பீட விருது உள்ளிட்டவை அவருக்கு வழங்கப்பட்டிருக்கின்றன.
 வம்ஷ விருக்ஷாவை இயக்கியதற்காகவும், பூமிகா படத்திற்கு திரைக்கதை அமைத்ததற்காகவும் கிரிஷ் கர்னாடுக்கு தேசிய விருதுகள் கிடைத்தன.
----------------------------------------------------------------------------------------------------------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?