எதற்கு தனியே ஆலோசனை
பாஜகவினர் ஆலோசனைக்கூட்டம் போட்டுகின்றனராம்.காரணம் தமிழ்நாட்டில் தேர்தலில் தோற்றதற்கு காரணம் தேடுகிறார்கள்.
ஒரு அதிகப்படிப்பறிவில்லாத கிராமவாசியைக் கேட்டாலே சொல்லிவிடுவாரே.
"பாஜக,மோடி,அமித்ஷா ஆகியோர் எதைச்செய்தாலும் அதனால் தமிழ் நாட்டுக்கு கண்டிப்பாக கெடுதல் உண்டாகுமா என்று பார்த்து செய்வதை நிறுத்தினாலே போதும்" என்று.
ஸ்டெர்லைட் ஆதரவில் இருந்து,சாகர்மாலா,8 வழிக்சாலை ,ஹைட்ரோ கார்பன் ,தமிழக வேலைகளில் தமிழ்நாட்டு இளைஞர்கள் புறக்கணிப்பு.மத்திய அரச பணிகளில் வடமாநிலத்தவர்களுக்கு மட்டுமே தமிழ்நாட்டில் வேலை.தமிழ்நாட்டிலிருந்து வரவும் நடிகைகளை சந்திக்க நேரம் ஒதுக்கும் மோடியால் விவசாயிகளுக்கு மனு வாங்க கூட நேரம் தர முடியாமை என பல இருக்கிறது.
இன்றைய முக்கிய செய்தி.
தென்னக ரெயில்வேயில் கட்டுப்பட்டு அறையில் இருப்பவர்கள் இந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் மட்டுமே பேச வேண்டும்.தாய் மொழி,மாநில மொழி தமிழில் பேசக்கூடாது என்ற ஆணை சுற்றறிக்கையாக விடப்பட்டுள்ளது.இந்தி பேசும் மேலதிகாரிகளால்.
சமீபத்தில் ஒரே தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் எதிர், எதிரே வந்து மோதும் சூழல் உருவானது. அதற்கு கரணம் புதிதாக வேலைக்கு வந்த இந்திக்காரரால்தான்.ஆண்மககிலமும் தெரியவில்லை,தமிழும் தெரியாததால் அவர் பேசியதை மற்றவர்களால் புரிய முடியவில்லை.
ஆனால் உரிய நேரத்தில் கேட் மூடுபவரால் இந்த சம்பவம் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
இதுதொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் இந்தி மொழிப் பிரச்னையால் தகவல்கள் தவறாக புரிந்து கொள்ளப்பட்டதும் தெரியவந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் ரயில்வே நிலைய அதிகாரிகள் மற்றும் கட்டுப்பாட்டு அறை இடையே நடக்கும் தகவல் பரிமாற்றம் தமிழில் இருப்பதை தவிர்க்க தெற்கு ரயில்வே உத்தரவிட்டது.
மொழிப் பிரச்னையால் யாருக்கேனும் தகவல் புரியாமல் போவதை தவிர்க்க 'இந்தி அல்லது ஆங்கிலத்தில்' தகவல்களை பரிமாறிக் கொள்ள தெற்கு ரயில்வே ஆணை பிறப்பித்தது.
இது எவ்வளவு பெரிய முட்டாள்தனமான,இந்தி வெறிபிடித்த ஆணை.தமிழ் நாட்டில் தமிழில் பேசினால் யாருக்கு தகவல் புரியாமல் போகும்.இதுவரை தமிழ்நாட்டில் ரெயில்கள் தமிழில் பேசியதால் மோதியுள்ளது,கவிழ்ந்துள்ளது?
இந்தியில் பேசியதால்தான் மோதுகிற அளவு வந்தது ரெயில்கள்.அப்படியென்றால் எந்த மொழி இங்கு தேவை?
தமிழ்நாட்டில் தமிழில் பேசக்கூடாதாம் இந்தியில் பேச வேண்டுமாம்.
காரணம் அவர்கள் தற்போது ரெயில்வேயில் திணித்துவருகிற வட மாநிலத்தவர்களுக்கு தமிழ் மட்டுமல்ல ஆங்கிலமும் தெரியாததால் இந்த ஆணையாம்.
தெற்கு ரயில்வேயின் இந்த ஆணை தமிழகத்தில் பெருங் கோபத்தைக் கிளப்பியது.
இதுவும் இந்தி திணிப்பே என திமுக கடுமையாக விமர்சித்து.அத்துடன் தென்னக ரெயில்வே தலையகத்தின் முன் திமுகவினர் கட்டம் வெயிலிலும் குவிந்தனர் மக்களவை உறுப்பினர் தயாநிதி மாறன்,ஆர்.எஸ்.பாரதிபோன்றோர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.ரெயில்வே ஊழியர்களும் பெருமளவில் கலந்து கொண்டனர்.
ஆர்ப்பாட்டத்தைக்கண்ட தென்னக ரெயில்வே அதிகாரி உடனே டெல்லியில் பேசி அந்த சுற்றறிக்கையை திரும்பப் பெறுவதாக தயாநிதி மாறன்,ஆர்.எஸ்.பாரதி முன்னிலையில் அறிவித்ததுடன் தொலைபேசியில் திமுக தலைவர் ஸ்டாலினிடமும் தெரிவித்தார்.
தவறுதலாக வந்த அறிவிப்பு எனவும், பழைய நடைமுறையே தொடரும் என்றும் பொதுமேலாளர் செய்தியாளர்களிடம் அறிவித்துள்ளார்.
முன்னதாக, புதிய கல்விக் கொள்கையை வரையறுப்பதற்காக கஸ்தூரி ரங்கன் தலைமையிலான கல்விக்குழுவை மத்திய அரசு நியமித்திருந்தது. இந்த குழுவானது, புதிய கல்விக் கொள்கைக்கான வரைவு திட்டத்தில், நாடு முழுவதும் மும்மொழிக் கொள்கையை அமல்படுத்தி, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்தது.
இதைத்தொடர்ந்து, இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை கட்டாயப் பாடமாக்குமாறு பரிந்துரைத்துரைக்கப்பட்டுள்ளதாக கடும் சர்ச்சை எழுந்துள்ளது. இந்த மும்மொழிக் கொள்கைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், திருத்தப்பட்ட புதிய கல்விக் கொள்கை வரைவுத் திட்டத்தை மத்திய அரசு இணையதளத்தில் வெளியிட்டது. அதில் இந்தி மொழி பேசாத மாநிலங்களில் இந்தி கட்டாயமாக பயிற்றுவிக்கப்படும் என்ற பரிந்துரை நீக்கப்பட்டது.
இப்படி இடையிடையே தமிழ்நாட்டிலுள்ளோருக்கு கடுப்பைக்கிளப்பி விட்டு தாமரையை மலரவிடாமல் பார்த்துக்கொள்வது பாஜக மேலிடம்தான்.
இதற்கு எதற்கு தனியே ஆலோசனைக்கூட்டம்.?
----------------------------------------------------------------------------------------------------------------------