தண்ணியிலே கண்டம்

கடுமையான குடிநீர் பற்றாக் குறையின் பிடியில் தமிழகம் சிக்கி யுள்ள நிலையில், சென்னைக்கு 20லட்சம் லிட்டர் குடிநீர் வழங்க முன்வந்த கேரள அரசின் உதவி யை தமிழக அரசு நிராகரித்தது என்கிற அதிர்ச்சித் தகவல் தெரிய வந்துள்ளது.
 இது தமிழக மக்களி டையே கொதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டின் பிடியில் மக்கள் சிக்கியுள்ளனர்.
குடிநீருக்கு போதிய மழைப்பொழிவு கடந்த ஆண்டு களில் இருந்த போதிலும், தமிழகம் முழுவதும் ஏரிகள், குளங்கள், வரத்துக்கால்வாய்கள் உள்ளிட்ட நீர்நிலைகளை முறையாக தூர் வாராமல் கோடிக்கணக்கான ரூபாய் ஒதுக்கீடு பணத்தை ஆளுங் கட்சியினர் சுருட்டிக் கொண்டதால் மாநிலத்தின் அனைத்துப் பகுதி யிலும் நீர்நிலைகள், மழை பெய்தா லும் நீரை தேக்கி வைத்துக்கொள்ள முடியாத அளவிற்கு மோசமான நிலையில் உள்ளன.

திமுக தனது மாவட்ட செயலாளர்கள் மூலம் முக்கிய கலங்களைத்தூர் வார திட்டமிட்டு செயல்படுத்திய திட்டங்களையும் அதிமுக அரசு தடை செய்தது.பல இடங்களில் தூர்வாரிய கரைகளில் உள்ள மணலை மீண்டும் அதிமுகவினர் குளத்தில் பரப்பி மேடாக்கிய செயல்களும் நடந்துள்ளது.
காரணம் அங்குளங்கள்அனைத்தும்  தூர் வாரியதாக பொதுப்பணித்துறை மூலம் பல நூறு கோடிகள் போலி பட்டியல்கள் மூலம் சுருட்டப்பட்டதனால்தான்.அப்போது பொதுப்பணித்துறையை கையில் வைத்திருந்தவர்,வைத்திருப்பவர் முதல்வர் பழனிசசாமி தான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக குறைந்துள் ளது.
 இது இந்த ஆண்டு மிகப் பெரிய அளவிற்கு குடிநீர் தட்டுப் பாட்டுக்கு காரணமாக அமைந்துள் ளது. இதை எதிர்கொள்ள எந்த  உடனடித் திட்டமோ, தொலை நோக்குத் திட்டமோ இல்லாத தமிழக  அதிமுக அரசு, குடிநீர் தட்டுப்பாடு என்று எதிர்க்கட்சிகள் கூறுவது வெறும் வதந்தி என்று சிறுமைப் படுத்துவதிலேயே குறியாக இருக் கிறது.
இந்நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் காலிக்  குடங்களோடு மக்கள் போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இத்தகைய குடிநீர் தட்டுப்பாடு பின்னணியில்தான் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சென்னை மாநகருக்கு, திரு வனந்தபுரத்திலிருந்து செல்லும் ரயில் மூலம் நன்கு சுத்திகரிக்கப்பட்ட 20லட்சம் லிட்டர் குடி நீர் வழங்க கேரள அரசு ஏற்பாடு செய்ய தயாராக இருப்பதாக தெரி வித்த தகவலும் அதை அதிமுக அரசு நிராகரித்த தகவலும் வெளி யாகியுள்ளது.

இத்தகவலை கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்,  வியாழனன்று மாலை தனது டுவிட் டர் பதிவு மூலம் வெளிப்படுத்தி யிருக்கிறார். அப்பதிவில், “கடுமை யான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு ள்ள தமிழகத்திற்கு ரயில்மூலம் குடிநீர் வழங்க கேரள அரசு தயா ராக உள்ளது. தமிழக முதல்வ ரின் அலுவலகத்தைத் தொடர்பு கொண்டு இந்த விவரத்தை தெரி வித்த போது, தற்போது அந்த அளவு குடிநீர் தட்டுப்பாடு இல்லை. தேவை யில்லைநாங்களே சமாளித்துக்கொள்வோம் என்று பதிலளிக்கப்பட்டது.


திருவனந்தபுரத்திலிருந்து சென்னைக்கு சுத்திகரிக்கப்பட்ட 20லட்சம் லிட்டர் குடிநீர் ரயில்மூலம் வழங்க திட்ட மிடப்பட்டிருந்தது.
சென்னையில் முக்கிய நீராதாரங்கள் வறண்டும் விவசாயத்துறையில் பெரும் பாதிப் பும் ஏற்பட்டுள்ள சூழலில் கேரள  அரசு இந்த உதவிக்கு முன்வந்தது”  என்று பினராயி விஜயன் குறிப் பிட்டுள்ளார்.

இந்த டுவிட்டர் பதிவு வெளியானதால்தான் , கேரள அரசின் குடிநீர் உதவி யை நிராகரித்த தமிழக அரசின் கேவலமான செயல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.வறட்டு கவுரம் என்று சிலர் இதை எண்ணினாலும் பின்னணியில் பாஜகவுக்கு எதிரான இடதுசாரிகள் உதவியை பெற்றால் தங்கள் முதலாளிகள் அமித்ஷா ,மோடி ஆகியோர் கோபத்துக்கு ஆளாக்கவேண்டியது வருமோ என்ற பயம்தான் முக்கிய காரணம்.
 இந்து கேவலமான அதிமுக அரசின் நடவடிக்கை குடிநீருக்காக இரவும் பகலும் அலையும் தமிழக மக்க ளிடையே கொதிப்பை ஏற்படுத்தி யுள்ளது.

இதனிடையே தமிழகத்திற்கு குடிநீர் வழங்கிட முன்வந்த கேரள முதலமைச்சர் பினராயி விஜ யனுக்கு எதிர்க்கட்சித் தலைவரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு கண்டிப்பாக தமிழக மக்களுக்கு தங்கள் உதவி தேவை என்றும் ,தக்க காலத்தில் உதவ முன்வந்தமைக்கு நன்றியும்  தெரி வித்துள்ளார்.

தமிழக மக்களின் கோபத்தை உணர்ந்த அதிமுக அரசு தற்போது முதலவர் தலைமையில் கூட்டம் கூட்டி அதன் முடிவுப்படி கேரளா அரசு வழங்கும் தண்ணீர் தொடர்பாக முடிவெடுக்கப்போவதாக அறிவித்துள்ளது.

செம்பரம்பாக்கம் வெள்ள  நீரை திறந்து விட ஜெயலலிதா காலம்கடந்து முடிவெடுத்ததால்தான் சென்னை நீரில் ததத்தளித்தது.அதிமுக ஆட்சி என்றாலே தமிழ்நாட்டுக்கு தண்ணியிலே கண்டம்தான்.

தங்ககள் கட்சி ,அமைச்சர் பதவி கேட்கும் பிரச்னைகளில் அடுத்த நொடியே டெல்லி சென்று சந்திக்கவேண்டியவர்களை சந்தித்து நாற்காலிகளை காத்துக்கொள்ள தெரிந்தவர்களுக்கு மக்கள் தேவைகளில் மட்டும் நீரோ மன்னன் ஆகி விடுவதேனோ.

மக்கள் எவ்வளவுதான் திட்டினாலும் தேர்தலில் தங்களை காப்பாற்றுவது டெல்லி ஆணை,தேர்தல் ஆணையம்,கொட்டி வைத்துள்ள ஊழல் பணம் தான் என்பதில் மிகத்தெளிவாக இருக்கிறார்கள்.அதனாலதான் தொடர்ந்து மக்கள் விரோத போக்கையே டெல்லி ஆணைப்படி கடைபிடிக்கிறார்கள்.
அடிமை  வம்ச ஆட்சி இப்படித்தான் இருக்குமோ..
                                                 உலக யோகா தினம்.                 
                         நாற்காலியாசனம்.                                   
தமிழிசை -செங்கோட்டையன் தலைமை ஆணைப்படி யோகா செய்தபோது
 ----------------------------------------------------------------------------------------------------------------------------------
 மோடிக்கு எதிராக சாட்சி?
 பிடி ஆயுள் தண்டனை.!
 30 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்கில், குஜராத்தின் முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரி ஒருவருக்கு, ஜாம் நகர் நீதிமன்றம் ஆயுள் தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.

குஜராத் மாநிலத்தில், ஐ.பி.எஸ் அதிகாரியாக பணியாற்றியவர் சஞ்சீவ் பட்.
கடந்த 2002-ஆம் ஆண்டு மோடி முதல்வராகஇருந்தபோது, குஜராத்தில் சிறுபான்மை இஸ்லாமியர்களுக்கு எதிராக பெரும் வன்முறை அரங்கேற்றப்பட்டது.
ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள், எரித்தும், வெட்டியும் கொல்லப்பட்டனர்.
அப்போதும், சஞ்சீவ் பட் முக்கிய அதிகாரியாக பணியாற்றிக் கொண்டு இருந்தார்.

அந்த வகையில், குஜராத் வன்முறைகள் குறித்து, சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதி கமிஷன் ஆகிய அமைப்புக் கள், ஐபிஎஸ் அதிகாரி சஞ்சீவ் பட்டிடமும் விசாரணை நடத்தியது.

 அப்போது, யாருக் கும் அஞ்சாமல் நடந்த உண்மைகளை ஒளிவுமறைவின்றி சஞ்சீவ் பட் கூறினார்.

குஜராத்தில் நடக்கும் வன்முறைகளை, கண்டுகொள்ளாமல் இருக்குமாறு அப்போதைய முதலமைச்சரான நரேந்திர மோடி, காவல்துறை அதிகாரிகளின் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறினார் என்று சஞ்சீவ் பட் பரபரப்பை ஏற்படுத்தினார்.
 வன்முறையை வேடிக்கை மட்டுமே பார்க்கும் வகையில், காவல்துறையினரின் கைகளை மோடி கட்டிப்போட்டு விட்டார் என்றுகுற்றம் சாட்டினார்.
 சிறப்புப் புலனாய்வுக்குழு, நானாவதிகமிஷனில் மட்டுமன்றி, உச்ச நீதிமன்றத்திலும் இதே குற்றச்சாட்டை அவர் முன்வைத்தார்.

இந்த பின்னணியில், 2015-ஆம் ஆண்டு,சஞ்சீவ் பட்டின் ஐ.பி.எஸ். பதவி பறிக்கப்பட்டது.
அத்துடன், கடந்த 2018-ஆம் ஆண்டு சஞ்சீவ் பட், குஜராத் போலீசாரால் திடீரென கைது செய்யப்பட்டார்.

அதாவது, சஞ்சீவ் பட், ஜாம் நகர் கூடுதல் கண்காணிப்பாளராக  பணியாற்றிய காலத்தில்,கைதி ஒருவர் காவல்நிலையத்தில் இறந்துபோனார்.
அது தொடர்பான வழக்கு நீண்டகாலமாக நிலுவையில் இருந்து வந்தது; இந்த வழக்கை 30 ஆண்டுகளுக்குப் பின்,மீண்டும் தூசுதட்டி சஞ்சீவ் பட்டை, குஜராத் பாஜக அரசு, கடந்த ஆண்டு கைது செய்தது.

இந்த வழக்கில்தான், சஞ்சீவ் பட்-டிற்கு ஜாம் நகர் நீதிமன்றத்தால், தற்போது ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவருடன் சேர்த்து பிரவீன் சிங் ஜாஹேலே என்ற அதிகாரிக்கும் ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
காவல் நிலையத்தில் கைதி இறந்ததற்கு கண்காணிப்பாளராக பணியாற்றியவருக்கு தண்டனை,அதுவும் ஆயுள்தண்டனை என்பது பழிவாங்கல் நடவடிக்கை என்று நீதி,காவல்துறைகளில் பரபரப்பாகப் பேசப்படுகிறது.
---------------------------------------------------------------------------------------------------------------------------------
கள்ளக்குறிச்சியில் ஒரு பொள்ளாச்சி ?
தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமைகள் போல கள்ளக்குறிச்சி நகரத்திலும் காவல்துறை துணையோடு பாலியல் வன்கொடுமை சம்பவம் நடைபெற்றுள்ளது.

கல்லூரி மாணவிகளையும் பெண்களையும் மிரட்டி பாலியல் வன்கொடுமைகள் நடந் துள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.
 கள்ளக்குறிச்சியிலிருந்து கச்சிரா பாளையம் செல்லும் வழியில்  உள்ள குள்ள  கருப்பன் கோயில், அதன் அருகிலுள்ள இடத்தில் இப்படிப்பட்ட பாலியல் வன் கொடுமைகள் நடைபெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

பள்ளி மாணவிகளை யும் சில பெண்களையும் ஆசைவார்த்தை கள் கூறி தொடர்ந்து ஏமாற்றி பாலியல் வன்கொடுமைகளையும் செய்து அதனை உடன் இருப்பவர் மூலம் வீடியோவாக எடுத்து தொடர்ந்து அதனை பயன்படுத்தி அவர்களை மிரட்டி தொடர் பாலியல் துன்புறுத்தல்க ளும் மற்றும் வேறுபல நபர்க ளுக்கும் அனுப்பி பாலியல் வன் கொடுமைகள் செய்துள்ளதாக தெரியவருகிறது.

கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  ராஜா(45) என்பவரும் அவரு டைய கூட்டாளியான வேலுமணி யும்(24) இக்கொடிய சம்பவங்க ளில் ஈடுபட்டு வந்துள்ளனர். நீண்ட நாட்க ளாக நடைபெற்று வரும் சம்பவங்களின் பின்னணியில் புரோக்கராக அப்பகுதி யைச் சேர்ந்த ஒரு பெண்மணியும் இதில்  ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இப்பின்னணியில் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி இவர்களுடைய கொடுமைகளை தாங்க முடியாமல் தாய், தந்தையரிடம் கூறியதன் மூலம் அவர்கள் கள்ளக்குறிச்சி காவல்நிலையத்திற்கு வந்து ஜூன் 17ஆம்  தேதி திங்களன்று புகார் தெரிவித்துள்ளனர்.
அதன் பின்னணியில் காவல்துறையினர் செவ்வாயன்று மேற்படி ராஜா வையும், வேலுமணியையும் கைது செய்து சிறையில் அடைத்தனர். ஆனால்  காவல்துறையின் துணையோடு தான் நீண்டகாலமாக இப்பாத கச்செயல் இப்பகுதியில் நடை பெற்றுள்ளதாக கூறுகின்றனர் அப்பகுதி மக்கள்.

உள்ளூர் காவலர்கள் ராஜா விடம் பணம் பெற்றுக்கொண்டு இதன் மீது போதிய கவனம் செலுத்தாமல் அலட்சி யப்படுத்தி வந்துள்ளனர்.
 காவல்துறை யின் துணை இருப்பதால்தான் குற்ற வாளிகளில் ஒரு தரப்பினர்  கைது செய்யப் பட்டு மூன்று நாட் களாகியும் இச்சம்பவங்களைப் பற்றி பத்திரிகை யாளர்களிடமும் மற்றவர்களிட மும் தகவல் தெரிவிக்காமல் காவல்துறை யினர் ரகசியம் காத்து வருகின்றனர்.
 மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு தகவல் அளிக்கும் தனிப்பிரிவு காவலர்க ளும் இது தொடர்பாக விசாரித்ததாக ஏதும்  தெரியவில்லை.
 அப்படியா?
யார் அந்த  ராஜா?
என்று கேட்கின்றனர்.

 உள்ளூர்  அரசியல் புள்ளிகள் மற்றும் காவல்துறை யினர் உள்ளிட்டோரின் துணையோடு பல மாணவிகளும், பெண்களும் பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வருகிறது.
எனவே இச்சம்பவத்தைப் பற்றி உரிய முறையில் நேர்மையான விசாரணையை உயர்மட்ட காவல்துறையினர் விசாரித்தால் பல்வேறு அதிர்ச்சியூட்டும் உண்மைகள் வெளிவரும்.

 உயர் அலுவலர்கள் தலையிட்டு பாலியல் வன்கொடுமை சம்ப வங்களில் நடைபெற்றுள்ள உண்மைகள் முழுவதையும் வெளிக்கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கூறு கின்றனர்.
 மேலும் இச்சம்பவங்களில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்து சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டும் என கூறுகின்றனர்.
------------------------------------------------------------------------------------------------------------------------------------

 உருவாகும்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?