ஏன் வெற்றி பெற முடியவில்லை”?
கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வி அடைந்த ஆளும் காங்கிரஸ் -
மதசார்பற்ற ஜனதாதளம் கூட்டணி பெரும்பாலான இடங்களில் வெற்றி பெற்றுள்ளது .
கர்நாடகாவில் நாடாளுமன்றத் தேர்தலில் ஆளும் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கடும் பின்னடைவை சந்தித்தது.
மொத்தம் உள்ள 28 தொகுதிகளில் 25 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.
காங்கிரஸும் மதசார்பற்ற ஜனதாதளமும் தலா ஓரிடத்தில் மட்டுமே வெல்ல முடிந்தது.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு மே 29 அன்று உள்ளாட்சித் தேர்தல் கர்நாடகாவில் நடைபெற்றது.
அந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன.
இத்தேர்தலில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கின்றன.
மாறாக, நாடாளுமன்றத் தேர்தலில் அள்ளிய பாஜக, பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது.
கர்நாடகாவில் உள்ள 61 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1300 வார்டுகளில் 509 வார்டுகளை காங்கிரஸ் கட்சி கைப்பற்றியுள்ளது.
கூட்டணி கட்சியான மதசார்பற்ற ஜனதாதளம் 174 வார்டுகளைக் கைப்பற்றியுள்ளது.
பாஜக 366 வார்டுகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
நகராட்சிகளில் உள்ள 248 இடங்களில் 128 இடங்களில் காங்கிரஸ் - மதசார்பற்ற ஜனதாதளம் கைப்பற்றியுள்ளது.
பாஜக 56 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது.
ஒட்டுமொத்தமாக உள்ளாட்சித்தேர்தலில் காங்கிரஸ் - மதசார்ப்பற்ற ஜனதாதள கூட்டணியே கணிசமான வெற்றியைப் பெற்றிருக்கிறது.
நாடாளுமன்றத் தேர்தலிலும் உள்ளாட்சித் தேர்தலிலும் மாறுபட்ட முடிவுகள் வந்திருப்பதுபாஜக தில்லமுள்ளு செய்தெ நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுள்ளதை காட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பத்திவு எந்திரங்கள் பாரதீய தேர்தல் ஆணையத்தால் கொண்டுவரப்பட்டவை.
ஆனால் உள்ளாட்சித்தேர்தல் நடத்தியது மாநிலத்து தேர்தல் ஆணையாக கட்டுப்பாட்டில் உள்ள வாக்கப் பதிவ எந்திரங்கள்.
கணக்குப்போட்டுப்பாருங்கள் இந்தியா முழக்க பாஜக வெற்றிப்பெற உதவியது யார் என்பது புரியும்.
“கர்நாடக மக்கள் காங்கிரஸ் பக்கம்தான் இருக்கிறார்கள்.
நாடாளுமன்றத் தேர்தலில் பெரும் வெற்றி பெற்ற பாஜகவால், ஏன் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற முடியவில்லை” என்று கர்நாடக காங்கிரஸ் கேள்வி எழுப்பியுள்ளது.
------------------------------------------------------------------------------------------------------------------------------------
இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்.
#TNAgainstHindiImposition
மத்திய அரசின் புதிய தேசிய கல்வி கொள்கைக்கான வரைவு வெளியிடப்பட்டது. இதில் இந்தி பேசாத மாநிலங்களில், இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
தற்போது உள்ள நடைமுறையில் கல்வி கொள்கையானது1986 ஆண்டு கொண்டு வரப்பட்டு 1992 ஆம் ஆண்டு திருத்தப்பட்டது.
2014 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலின் போது புதிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும் என்று பாஜக வாக்குறுதி அளித்திருந்தது.
அதன்படி கஸ்தூரி ரங்கன் தலைமையிலான 9 பேர் கொண்ட நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டது.
தேசிய கல்வி கொள்கைகான வரைவில் தேசிய கல்வி ஆணையத்தை உருவாக்குவது,
தனியார் பள்ளிகளின் கட்டண உயர்வை தடுப்பது,
ஆகியவற்றுடன் மும்மொழிக் கொள்கையையும் பரிந்துரைத்தது.
அதன்படி இந்தி பேசாத மாநிலங்களில் இந்தியை பயிற்றுவிக்க வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டிருந்தது.
இந்த பரிந்துரைக்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பலைகள் எழுந்துள்ளன.
சமூக வலைதளங்களில் இந்தி திணிப்பை கடுமையாக சாடி வருகின்றனர்.
#StopHindiImposition மற்றும்
#TNAgainstHindiImposition
என்ற ஹேஸ்டேக்குகள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகி வருகின்றன.
கிட்டத்தட்ட 1லட்சம் ட்விட்கள் இந்த ஹேஸ் டேக்கின் கீழ் வந்துள்ளன.
கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் போக்ரியால் இவை வெறும் பரிந்துரைகள் மட்டுமே கொள்கையல்ல என்று கூறியுள்ளார். “இது கொள்கையல்ல, பொதுக் கருத்துகளை மக்களிடம் கேட்டு அறிந்த பின்னரே உருவாக்கப்படும். எந்தவொரு மொழியும் திணிக்கப்படவில்லை” என்று அவர் கூறினார்.
அடிக்கடி இப்படி நூல் விட்டுப்பார்ப்பதே பாஜகவின் வேலையாகிப்போய்விட்டது.
கஸ்தூரி ரங்கன் என்ற பார்ப்பான் கல்வியைப்பற்றி பரிந்துரைக்க சொன்னால் இந்தியை திணிக்க பரிந்துரைக்கிறான் .சங்கிகளின் வேலை இது.
கல்வி தொடர்பான முக்கியமான நீட் தேர்வு ,கல்வி வியாபாரம்,கட்டணக்கொள்ளை போன்றவற்றைப்பற்றி ஆய்வு செய்து அதை பற்றி அறிக்கை தரலாம்.தீர்வை சொல்லலாம்.அதை விடுத்து எல்லோரும் இந்தி கட்டாயம் படிக்க வேண்டம் என்று சொல்வது எப்படி சரியாகும்?
இன்னும் இருக்கும் ஐந்தாண்டுகளில் சமஸ்கிருதம் கட்டாயம் என்று சொல்லமாட்டார்கள் என்பது என்ன உறுதி.
தமிழ்நாட்டில் முன்பு நீட்டுக்குப் பதில் சமஸ்கிருதம் மருத்துவம் படிக்க கட்டாயம் என்றிருந்ததை மறக்கவில்லை.
இந்திய முழுமையான கல்விக்கும் இந்திக்கும் என்ன தொடர்பு இருக்கிறது.?
முக்கிய அறிவியல் ,கல்வி தொடர்பான நூல்கள் அனைத்தும் இந்தி மொழியில் தான் எழுதபப்ட்டுள்ளதா.?
இப்போதே மத்திய அரசு அலுவலகங்களில் இந்தியை திணித்து இந்தி பேசா மாநிலங்களில் உள்ளவர்களுக்கு
இடையூறு,தொல்லை தருவதையே நிறுத்த்சசொல்கிறோம்.இதில் கட்டாய இந்தி வேறா.
இப்போதும் இந்தி விரும்பிப்படிப்பவர்கள் உள்ளனர்.அவர்களைப்படிக்காதே என யாரையும் சொல்லவில்லை.
பின் எதற்கு இந்தி திணிப்பு?
இந்தியா பல்வேறு இனம்,மொழி,மதம்,கலாசசாரம் கொண்ட நாடு என்ற பெருமையை சிதறடிக்காதீர்கள்.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
வடிவேல் அகராதி.
வடிவேலுவின் வருகைக்குப்பிறகு
நம் பேசுஆங்கிலமொழி எத்தனை மாறி பழகு தமிழாயிருக்கிறது என்று பாருங்கள்.
இந்த நீண்ட பட்டியலைக்கண்டால்
வியப்பாக இருக்கிறது...
எடப்பாடிக்கு வந்த நெருக்கடி!
“மத்திய அமைச்சரவையில் யாருக்கு அமைச்சர் பதவி கேட்பது என்ற பிரச்சினையில் யாருக்குமே அமைச்சர் பதவி வாங்காமல் சென்னைக்கு வந்துவிட்டார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
ஒரு அமைச்சர் பதவியை அதிமுகவுக்கு வழங்க பாஜக முன் வந்த நிலையில், தன் மகனுக்கு அதை கிடைக்க விடாமல் எடப்பாடி டெல்லியில் கேம் ஆடிவிட்டார் என்று பன்னீர் கடும் கோபத்தில் இருக்கிறார். அந்த நெருக்கடிக்கிடையே சென்னை வந்த எடப்பாடிக்கு அடுத்த நெருக்கடி ஆரம்பமாகிவிட்டது.
எதிர்வரும் ஜூலை மாதம் தமிழகத்தில் இருந்து தேர்வாக இருக்கும் ராஜ்யசபா உறுப்பினர்களில் மூன்று பேர் அதிமுகவுக்கு கிடைக்க இருக்கும் நிலையில், அவர்களைத் தேர்வு செய்வதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல் அதிகரித்து வருகிறது.
பாமகவோடு கூட்டணி ஒப்பந்தம் போட்டபோதே ஏழு மக்களவைத் தொகுதிகள், ஒரு ராஜ்யசபா தொகுதி என்று எழுதி இரு கட்சித் தலைவர்களும் கையெழுத்து போட்டிருக்கிறார்கள்.
அதன்படி பாமக இப்போது ராஜ்யசபாவை தர்மபுரியில் தோற்ற அன்புமணிக்காக கேட்கிறது.
தேமுதிக சார்பில், ‘பாமகவுக்கு கொடுத்தால் எங்களுக்கும் ராஜ்யசபா கொடுத்தாக வேண்டும். எங்கள் கட்சிக்கு கௌரவ பிரச்சனை’ என்று முதல்வரிடம் பேசியிருக்கிறார் பிரேமலதா.
ஆனால் பாமக, தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டை தூக்கிக் கொடுப்பதற்கு அதிமுகவில் குறிப்பாக வன்னியர் பிரமுகர்கள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
பாமகவால் சட்டமன்றத் தொகுதிகள் சிலவற்றில் வாக்குகள் கிடைத்ததே தவிர, மற்றபடி அதிமுகவுக்கு பெரிய அளவு உபயோகம் இல்லை. தேமுதிகவால் அதுவும் நமக்கு இல்லை.
இந்த நிலையில் சுமார் 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை அடுத்த கட்சிகளுக்குக் கொடுத்து எம்பி ஆக்க வேண்டிய அவசியம் இல்லை என்று சி.வி. சண்முகம், கே.பி.முனுசாமி உள்ளிட்டோர் இப்போதே முதல்வரை வலியுறுத்த ஆரம்பித்துவிட்டார்கள்.
பாமகவுக்குப் போக இருக்கும் சீட்டை தாங்கள் பெறத்தான் மேற்கண்ட இருவரும் கடுமையாக முயல்கிறார்கள்.
அமைச்சர் சி.வி. சண்முகம் தனது அண்ணன் ராதாகிருஷ்ணனுக்கு மக்களவைத் தேர்தலில் போட்டியிட எடப்பாடியிடம் வாய்ப்பு கேட்டார்.
அப்போது நடந்த பேச்சுவார்த்தையில் ராஜ்யசபா எம்.பி, பதவி கொடுப்பதாக உத்தரவாதம் கொடுக்கப்பட்டதால்தான் மக்களவைத் தேர்தலில் சீட் வாங்காமல் சமாதானம் ஆகியிருக்கிறார் சி.வி. சண்முகம். இப்போது அந்த ராஜ்யசபா சீட்டை தன் அண்ணனுக்காக கேட்கிறார் சி.வி. சண்முகம் என்கிறார்கள் அமைச்சர் ஆதரவாளர்கள்.
அதிமுகவில் கிருஷ்ணகிரி தொகுதியில் வெற்றி வாய்ப்பை இழந்த துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு வழங்க வேண்டும் என்று ஓ.பன்னீரிடமும், எடப்பாடி பழனிசாமியிடமும் திட்டவட்டமாக தெரிவித்துவிட்டாராம்.
முதல்வர் வீட்டிலேயே தவமிருந்துவரும் முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தன்னை கவனிக்குமாறு முதல்வரிடம் மல்லுக்கட்டி வருகிறாராம்.
போதாக்குறைக்கு அன்வர்ராஜா, ராஜ் சத்யன், கோகுல இந்திரா, மனோஜ் பாண்டியனும் ராஜ்யசபா பதவிக்கு அடம்பிடித்து வருகிறார்கள். முதல்வரோடு நெருக்கமாக இருக்கும் தம்பிதுரையும் தனக்கு ராஜ்யசபா வேண்டும் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்.
இவர்கள் எல்லாம் தனிப்பட்ட சந்திப்பு, பேச்சு ஆகியவற்றின் மூலம் ராஜ்யசபா வாய்ப்பு கேட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மிஞ்சி முன்னாள் ராமநாதபுரம் எம்.பி.யான அன்வர் ராஜா தனக்கு ராஜ்யசபா உறுப்பினர் பதவி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து முதல்வர் எடப்பாடிக்கு கடிதம் எழுதிவிட்டார்.
மே 29 ஆம் தேதி அவர் முதல்வருக்கு அனுப்பிய கடிதத்தில், சில விஷயங்களை விரிவாகவே முன் வைத்துள்ளார் அன்வர் ராஜா.
‘நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் போட்டியிடுவதற்கு எனக்கு வாய்ப்பளிக்க நீங்கள் தீர்மானம் செய்திருந்தீர்கள். ஆனால் கடைசி நேரத்தில் அது நமது கூட்டணியான பாஜகவுக்கு ஒதுக்கப்பட்டதால் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கவில்லை.
ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, ஆகிய தென் மாவட்டங்களில் முக்குலத்தோர், முஸ்லிம்கள், தாழ்த்தப்பட்டவர்கள், யாதவர்கள், ஏனைய வகுப்பினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர்.
இவர்களில் முக்குலத்தோரில் அகமுடையார் வகுப்பைச் சேர்ந்த அன்பழகன், தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த மலைச்சாமி, தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிறைகுளத்தான், யாதவர் வகுப்பைச் சேர்ந்த கோகுல இந்திரா, ஆகியோருக்கு ராஜ்யசபா உறுப்பினராகும் வாய்ப்புகள் கடந்த காலங்களில் வழங்கப்பட்டுள்ளன.
ஆனால், இஸ்லாமியர்கள் அதிகம் வாழ்கிற ராமநாதபுரம் மாவட்டத்தில் ராஜ்யசபா உறுப்பினர் வாய்ப்பு இஸ்லாமியர்களுக்கு நம் கட்சியில் இதுவரை யாருக்கும் வழங்கப்படவில்லை.
எனவே வருகிற ஜூன் மாத இறுதியில் வருகிற ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பை எனக்கு வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்” என்று தன் கடிதத்தில் தெரிவித்திருக்கிறார் அன்வர் ராஜா.
மேலும், ’ஜெயலலிதா பாஜகவுடன் கூட்டணியில் இருந்தபோது ஃபதர் சயீதை மக்களவைத் தேர்தலில் நிறுத்தினார். ஆனால் பாஜக கூட்டணி என்பதால் முஸ்லிமுக்கே வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்தீர்கள். அதனால் ராஜ்யசபாவை நிச்சயம் எனக்கே வழங்க வேண்டும். இனியும் முஸ்லிம்களை புறக்கணித்தால் உள்ளாட்சித் தேர்தலில் நிலைமை மோசமாகிவிடும்’ என்று கூறி தனக்கு ராஜ்ய சபா வேண்டும் என பலமாய் முயற்சி செய்கிறார் அன்வர் ராஜா.
இருப்பதோ மூன்று சீட். அதில் பாமக ஒன்று கேட்கிறது.
ஒருவேளை பாஜக கூட தங்களது தமிழக புள்ளிகளுக்காக ஒரு ராஜ்யசபா கேட்கலாம்.
மிச்சம் இருப்பதோ ஒரே ஒரு சீட். தேமுதிக, அதிமுகவின் ஐந்துபேர்கள் இவர்களை சமாளிப்பதா என்று கடுமையான நெருக்கடியில் இருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------

_Oh shit_ -
*வட போச்சே*
_Is it so?_ -
*ஆஹாம்*
_Be careful_ -
*மண்ட பத்திரம்*
_Back to square one_ -
*மறுபடியும் முதல்லருந்தா?*
_I feel you, bro_ -
*வொய் ப்லெட்? சேம் ப்லெட்*
_You are useless_ -
*நீ புடுங்குனது பூராவுமே தேவயில்லாத ஆணிதான்*
_Inflated ego_ -
*இப்டி உசுப்பேத்தி உடம்ப ரனகலம் ஆக்கிடாங்கப்பா*
_They have started_ -
*ஆஹா, கிளம்பிட்டாங்கப்பா! கிளம்பிட்டாங்கப்பா!*
_Disrespectful name calling_ -
*மிஸ்டர் பிச்சுமனி. கிவ் ரெஷ்பெக்ட், டேக் ரெஷ்பெக்ட்*
_Mail me_ -
*யாரவது என்ன காண்டாக்ட் பன்னனும்னா, ww பிச்சு டாட்காம் கு மெய்ல் பன்னுங்க*
_Phew_ -
*ஹய்யோ, ஹய்யோ!*
_I am tired_ -
*ஸப்பா, இப்போவே கண்ண கட்டுதே*
_Don't forget the past_ -
*வரலாறு ரொம்ப முக்கியம் அமைச்சரே*
_Swept away by beauty_ -
*இதுக்கு பெரு தான் அழகுல மயங்கி விழுரதோ*
_No hike_ -
*பேட்டாவா? பேட்டா எங்கம்மா தராங்க*
_I received a compliment_ -
*என்ன ரொம்ப நல்லவன்னு சொல்லிட்டாங்க*
_Unexpected surprise_ -
*எதையுமே பிலான் பன்னி பன்னனும், பிலான் பன்னாம பன்னா இப்டிதான்*
_Note to self_ -
*பீ ஹர்ஃபுல்! என்ன சொன்னேன்!*
_You are the SME(subject matter expert)_ -
*தங்களுக்கு தெரியாத சட்டம் ஒன்றும் இல்லை*
_Where in Dubai?_ -
*துபாயா? பக்ரீனா? சார்ஜாவா? அபுதாபியா?*
_Amazed_ -
*நா அப்பிடியே ஷாக் ஆயிடேன்*
_Why you’re shouting?_ -
*தம்பி நாய் ஏன் கத்துது?*
_Get out_ -
*வெளிய போங்கடா அயோக்கிய ராஷ்கல்கலா*
வடிவேலுவுக்கு யாராவது வாழ்நாள்
சாதனையாளர் விருது கொடுத்திருக்கிறார்களா...?
அப்படியே இதை ஆராய்ந்த ஆராய்ச்சியாளருக்கும் விருது கொடுங்கள்.