ரெயிலில் வரும் மோடியின் ஆப்பு.

இந்திய ரயில்வேக்கான 100 நாள் திட்டத்தை மோடி அரசு அறிவித்துள்ளது.
பயணிகள் ரயில்க ளையும் சரக்கு ரயில்களையும்  தனியார் இயக்கிக் கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பதுதான் அது. தொடக்கத்தில்  நெரிசல் இல்லா வழித்தடத் திலும் சுற்றுலாத்தலங்கள் உள்ள வழித்தடத்தி லும் அனுமதி அளிக்கப்படும்.

படிப்படியாக தங்க நற்கார பாதை எனப்படும் சென்னை- மும்பை, மும்பை- தில்லி, தில்லி -ஹவுரா, ஹவுரா- சென்னை வழித்தடத்தில் இது அமல்படுத்தப்படும்.
 இந்த தங்கநாற்கர சாலையின் மொத்த தூரம் தற்போது இருக்கும் தண்டவாளத்தில் 20 விழுக்காடுதான்.

ஆனால் 55 விழுக்காடு வண்டி கள் இந்தபாதையில் ஓடுகின்றன என்றால் அந்த அளவுக்கு எப்போதும் பரபரப்பாக ரயில்கள் ஓடிக் கொண்டிருக்கும் பாதைகளாகும்.இந்த பாதை யில் தனியாரை அனுமதித்தாலும் அதுபுதிய ரயில்களாக இயக்கமுடியாது.
 தற்போது ஓடும் வண்டிகளில் ஒருபகுதியை தனியாருக்கு அளித்தால்தான் முடியும்.
 
ரயில்வேயை தனியார்மயமாக்க 2017ல்  மோடி அரசு ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைக்க முடிவு செய்தது. தனியாருக்கு சமவாய்ப்பு  அளிக்க அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவும் எடுக்கப் பட்டது.
 இதன் அர்த்தம் என்னவென்றால் ஓடுகிற வண்டிகளில் பிரதான வழித்தடங்களில் பாதிய ளவு தனியாருக்கு தாரைவார்க்கப்படும்.

 சாமானியர்கள் இனி ரயில்களில் பயணம் செய்வது என்பது கடினமான ஒன்றாக மாறப்போ கிறது.
காரணம் எரிவாயு மானியம் போல் ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பயணிகளிடம் விருப்பம் கேட்கப்போவதாக அறிவித்துள்ளது.

 மானியம் ரத்து செய்யப்பட்டால் 53 ரூபாய் டிக்கெட்100 ரூபாயாக உயரும்.
 இது எரிவாயு மானியத்தை ஒழித்துக்கட்டியது போன்றதே. இந்த திட்டமும் விவேக் தேவ்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றுதான்.

ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியாக தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட்ஜெட்டை பொது பட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தார்கள்.

மோடி அரசு மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாட்களில்  அதாவது 3.6.2019 அன்று ரயில்வேக்கு சொந்தமாக சென்னை இராய புரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்க ளை மூடிவிடவும் அதில் உள்ள எந்திரங்களை விற்று விடவும் முடிவு செய்தது.
இதன் அடுத்த கட்டமாக  ரயில்வே பள்ளிகளும் ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபாயம் உள்ளது.  ஏற்கனவே இந்த இரண்டையும் மூடும்படி விவேக் தேவ்ராய் கமிட்டி மோடி அரசுக்கு பரிந்துரை செய்திருக்கிறது.

 40 பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்றுவிட புதிய மோடி அரசின் நிதி அயோக் முடிவெடுத்தி ருப்பதோடு  இதையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

யில்வே தனியார்மயம் எனும் மோடியின் திட்டம் அமலானால் சாமானி யர்கள்  ரயில்களில் பயணம் செய்ய ஆம்னி பேருந்து கட்டணத்தை விட அதிகமாக கொடுத்தாக வேண்டும்.
மேலும் எரிவாயு மானியத்தை விட்டுக்கொடுக்க நடத்தப்பட்ட உஜ்வாலா பிரச்சாரம் போன்று ரயில் கட்டணத்தில் உள்ள 47 விழுக்காடு மானியத்தை விட்டுக்கொடுக்கும்படி பயணிகளிடம்  கருத்து கேட்கப் போவதாகவும் ரயில்வே அடுத்த அதிர்ச்சி யான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மானியம் ரத்து செய்யப்பட்டால் 53 ரூபாய்டிக்கெட் ரூ.100 ரூபாயாக உயரும். மோடியின்  முதலாவது அரசில் எரிவாயு மானியம்
ஒழித்துக்கட்டப்பட்டது.
 மோடியின்2வது இன்னிங்ஸ் ரயில்வே  மானியத்தை ஒழித்துக்கட்டப்போகிறது.
  இந்த திட்டம்விவேக் தேவ்ராய் கமிட்டியின் பரிந்துரைகளில் ஒன்றுதான். என்ன வித்தியாசம் என்றால் ரயில்வே வளர்ச்சி ஆணையம் அமைத்து  அதன் மூலம் தனியார் மயத்தை அமல்படுத்தவேண்டும் என்று அந்த கமிட்டி கூறியிருந்தது. ஆனால் தற்போது ரயில்வே வாரியம்  மூலமாகவே இதை அமல்படுத்த மோடி அரசு முடிவு செய்துள்ளது. 
விவேக் தேவ்ராய்க்கு முன்பே  மற்றொரு நாசகர பொருளதார ஆலோசகரான ராகேஷ்மோகன் ரயில்வே துறையில் பல மாற்றங்களை செய்தாகவேண்டும் என்று பரிந்துரைகளை அளித்திருந்தார்.
ரயில்வே பணிகளில் தனியாரை ஈடு படுத்துவது, சரக்குபோக்குவரத்தை தனியாருக்கு திறந்துவிடுவது ஆகும். இந்தபரிந்துரைகள் மொதுவாகத்தான் அமல் படுத்தப்பட்டன.

ஆனால் மோடி அரசு  மிக
வேகமாக தனியார் மயத்தை நோக்கிச் செல்கிறது என்கிறார் தட்சிண ரயில்வே எம்ப்ளாயீஸ் யூனியன்(சிஐடியு) செயல் தலைவர் ஆர்.இளங்கோவன். ஏற்கனவே பல ஆண்டுகளாக தனியாக
தாக்கல் செய்யப்பட்ட ரயில்வே பட் ஜெட்டை பொதுபட்ஜெட்டுடன் ஒன்றாக இணைத்தபோதே தொழிற்சங்கங்கள் எச்சரித்தன.

காரணம், ரயில்வே மிக விரைவில் தனியாரிடம் போகப் போகிறது; அப்படியிருக்கையில் பட்ஜெட் எதற்கு என்பதுதான்.
தற்போதுள்ள மோடி அரசின் முடிவின்படி, மிக விரைவில் உலகப்புகழ்பெற்ற பெரம்பூர் இணைப்பு பெட்டி தொழிற்சாலை (ஐசிஎப்), கபுர்தலா ரயில் பெட்டி தயாரிப்பு ஆலை உள்பட பல உற்பத்தி பிரிவுகளும் பொன்மலை ரயில் என்ஜின் ஆலை, சித்தரஞ்சன் லோகோ ஆலை உள்ளிட்டவையும் தனியாரிடம் ஒப்படைக்கப்படும்.
 இதில் ரயில்வே பணிமனைகளும் அடங்கும்.
 இவை அனைத்தும் தனியாரிடம் தாரை வார்ப்பதற்கு முன்பு இந்தியன் ரயில்வே ரோலிங் ஸ்டாக் கம்பெனி என்ற பெயருக்கு மாற்றப்படும். ஒவ்வொரு உற்பத்தி பிரிவிலும் தனியார்நிறுவனங்களைப் போல் சிஇஓ அதவாது தலைமை செயல் அதிகாரிஇருப்பார்.
இவர் பணி லாபத்தை நோக்கிநிறுவனங்களை நடத்துவதே. அதற்குஅவர் ஆட்குறைப்பு உட்பட என்ன வேண்டுமானாலும் செய்துகொள்ளலாம்.

இதுமட்டுமல்ல, மோடி மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏறிய மூன்றே நாட்களில், அதாவது 3.6.2019 அன்று  ரயில்வேக்கு சொந்த மாக சென்னை இராயபுரம் உள்பட நாடு முழுவதும் உள்ள 5  அச்சகங்களை மூடிவிடவும் அதில் உள்ள எந்திரங்களை விற்றுவிடவும் முடிவு செய்தது.
ரயில்வே அச்சகங்களில் பணிபுரியும் ஊழியர்களை மாற்று இடங்களில் நியமிக்கவும் அச்சக வேலைகளை தனியார்மயமாக்கவும் உத்த ரவிட்டுள்ளது.
 இதன் அடுத்தகட்டமாக  ரயில்வே பள்ளிகளும் ரயில்வே மருத்துவமனைகளும் மூடப்படும் அபா யம் உள்ளது என்று எச்சரிக்கிறார் ஆர்.இளங்கோவன்.
ரயில்வே அமைச்சக டுவிட்டர் தளத்தில் இந்திமட்டும் .
 ஏற்கனவே இந்த இரண்டையும் மூடும்படி விவேக் தேவ்ராய் கமிட்டி மோடி அரசுக்கு ஏற்கனவே பரிந்துரை செய்திருந்தது.
பள்ளிகளில் மாணவர்களை இனி சேர்க்கவேண்டாம் என்று ஒருமுறை சுற்றறிக்கையும் வெளியிடப்பட்டது. பின்னர் ரயில்வே தொழிற் சங்கங்களின் எதிர்ப்பு காரணமாக விலக்கிக்கொள்ளப்பட்டது.


ரயில்வே தனியார்மயமாகும் போது பாதி ரயில்வே ஊழியர்கள் ‘உபரி’ ஆவார்கள்.

இதை அமல்படுத்தும் திட்டம் இருப்பதால்தான் ஏற்கனவே மோடி அரசு புதிதாகவேலைக்கு ஆட்களை எடுக்காமல் 1லட்சம்ஓய்வூதியதாரர்களை ரயில்வேயின் பல்வேறு பணிகளில்  நியமித்துள்ளது.


ஊழியர்களே உபரி ஆகும் போது, ஓய்வு பெற்றவர்களும் நீக்கப்படுவார்கள்.

எனவே ரயில்வே  பயணிகள் மற்றும் ரயில்வே ஊழியர்களை பாதுகாக்கவும்  மோடி அரசின் இந்த தாக்குதலை தடுத்து நிறுத்தவும் அரசியல் கட்சிகளும் ரயில்வே தொழிற்சங்கங்களும் நாட்டு மக்களும் இனி போராடவேண்டிய கட்டா யத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர்.

-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 வரும் ஆனா வராது.?
தென்மேற்கு பருவமழை கேரளாவில் தொடங்கி உள்ளது. இதையொட்டி தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள மாவட்டங்களிலும் ஆங்காங்கே சில இடங்களில் மழை பெய்து வருகிறது. ஆனால் இதர மாவட்டங்களில் வறட்சியே நீடிக்கிறது.
இந்த பகுதிகளை சேர்ந்த மக்கள், மழையை எதிர்பார்த்து காத்து இருக்கின்றனர். இதில், சென்னை கடும் தண்ணீர் தட்டுப்பாட்டால் தவிக்கிறது. டேங்கர் லாரிகளுக்கு கூடுதல் பணம் கொடுப்பதாக கூறினாலும் தண்ணீர் கிடைப்பதில்லை. காரணம், நீர் நிலைகள் முற்றிலும் வறண்டுவிட்டது.
சென்னையில் பெருகிவிட்ட ஐடி நிறுவனங்களும் தங்கள் ஊழியர்களை வீட்டில் இருந்தபடியே பணியாற்றுமாறு அறிவுறுத்திவிட்டனர். மேலும் பல்வேறு தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. தமிழக மக்களும் தண்ணீருக்காக அலைய கூடிய சூழ்நிலை நிலவி வருவதால், மழையை நம்பியே மக்கள் இருக்கின்றனர்.
இந்த நிலையில் தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் ஆறுதல் தகவலை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் நாளையும், நாளை மறுதினமும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
 வடக்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, அடுத்த சில நாட்களில் தென் மேற்கு பருவமழை வலுப்பெறும், என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

தற்போது, இந்தியாவின் 15 சதவீத இடங்களில் மட்டுமே, பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளதாகவும், இது வழக்கத்தை விட குறைவு எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.
 கேரளா, கர்நாடகாவின் தென்பகுதி மற்றும், தமிழகத்தின் சில பகுதிகளில் மட்டுமே பெய்துவரும் மழை, மற்ற இடங்களுக்கும் பரவ, இன்னும் ஒரு வாரம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வானிலை அறிக்கைகள் இப்போது பெரிதும் பொய்த்து விடுகின்றன.கரணம் இயற்கையை அவ்வளவு எளிதாக மனிதனால் கணித்து விடவோ,கட்டுப்படுத்தவோ இயலாததுதான்.
முன்னதாக இப்படி நடக்கலாம் என்று வானிலை மையங்கள் கூறினாலும் கடைசி நேர தீர்மானம் இயற்கையினுடைத்ததுதான்.
 ------------------------------------------------------------------------------------------------------------------------------------
  திமுக அணி, அதிமுக அணி
“தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் ஜூன் 23 ஆம் தேதி நடக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று சென்னை மாவட்டப் பதிவாளர் தேர்தலை ரத்து செய்வதாக திடீரென அறிவித்திருக்கிறார்.
 சங்க உறுப்பினர்கள் அளித்த புகார், அதற்கு சங்க நிர்வாகிகள் அளித்த விளக்கம் ஆகியவற்றைக் குறிப்பிட்டிருக்கும் பதிவாளர் வாக்காளர் பட்டியல் சேர்க்கை முறைகேடு, பதவிக் காலம் முடிந்த நிர்வாகம் ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு தேர்தலை ரத்து செய்திருக்கிறார்.


நடிகர் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு நடந்துகொண்டிருக்கும்போது இன்று பதிவாளர் இந்த அறிவிப்பை வெளியிட, இதையே முகாந்திரமாக வைத்து வழக்கை இரு வாரங்களுக்கு ஒத்தி வைத்துவிட்டது நீதிமன்றம்.
ஆக மீண்டும் விஷால் தரப்பு பதிவாளர் உத்தரவை எதிர்த்து நீதிமன்றத்தில் தனியாக வழக்கு போடத் தயாராகி வருகிறது. இது தொடர்பாக விஷால் இன்று ஆளுநரையும் சந்தித்து முறையிட்டிருக்கிறார்.

நடிகர் சங்க தேர்தலை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்பதுதான் அதிமுகவின் எண்ணம். அதற்குக் காரணம் விஷாலின் திமுக ஆதரவு, அதிமுக எதிர்ப்பு நிலைப்பாடுதான் என்கிறார்கள் நடிகர் சங்க வட்டாரத்தில்.
அதிமுகவுக்கும் விஷாலுக்கும் பழைய பகை நிறைய இருக்கிறது.
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுகவின் எச்சரிக்கையையும் மீறி விஷால் வேட்பு மனு தாக்கல் செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் வேட்பு மனுவில் சில குளறுபடிகள் இருப்பதாக மனு தள்ளுபடி செய்யப்பட்டது.
 இதற்குப் பின்னால் அதிமுக இருப்பதாக அப்போதே விஷால் புகார் கூறினார்.

அடுத்த பகை, அதிமுக சார்பில் நியூஸ் ஜெ என்ற தொலைக்காட்சி ஆரம்பிக்கப்பட்டது. அப்போது ஒரு ட்விட் போட்டார் விஷால். அதில், ‘மற்றுமொரு செய்தி சேனல் தொடங்கப்பட்டுள்ளது. ஒரு செய்தி சேனல் ஆரம்பிக்க நிறைய செலவாகும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். 
ஆனால் மாதச்சம்பளம் வாங்கும் எம்எல்ஏ., எம்.பி.க்கள் எப்படி இதுபோன்ற ஒரு வியாபார அமைப்பை தொடங்க முடிகிறது? 2019-ம் ஆண்டுக்காக காத்திருக்கிறேன்’ என்று அதிமுகவை பகிரங்கமாக தாக்கியிருந்தார். இதற்கு பதிலடியாக அப்போதே அதிமுகவின் அதிகார பூர்வ பத்திரிகையான நமது அம்மாவில் கணக்கு கேட்ட விஷாலை கடுமையாக தாக்கியிருந்தார்கள்.
 ‘ஏற்கனவே நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சங்கத்தில் ஏழு கோடி ரூபாயை காணோமென்று கோடம்பாக்கமே உன்னைக் கொலைவெறியில் தேடுகிறபோது உனக்கெதுக்கு இந்த வேண்டாத வேலை?’ என்று விஷாலை தாக்கியது நமது அம்மா.
 
 
இப்படியாக விஷாலுக்கும் அதிமுகவுக்குமான முட்டல் மோதல்கள் தொடர்ந்துகொண்டிருந்த நிலையில்தான் விஷால் தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் முடக்கப்பட்டு சிறப்பு நிர்வாகக் குழு அரசின் வசம் சென்றது.
அதேபோல நடிகர் சங்கத்தில் இருந்தும் விஷாலை தூக்கி எறிய வேண்டும் என்று அதிமுகவின் சில அமைச்சர்களே கங்கணம் கட்டிக் கொண்டு இறங்கியிருக்கிறார்கள்.

காரணம் ஒன்பது ஆண்டுகளாக திமுக ஆட்சியில் இல்லாதபோதும் தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபீஸ் திமுக வசமே இருக்கிறது. அமைச்சர்கள் சிலரின் பணம் தமிழ் சினிமாவில் புழங்கிக் கொண்டிருக்கும் நிலையிலும் தமிழ் சினிமா உலகத்தில் அதிமுக புள்ளிகளுக்கு கௌரவமான நிலை இல்லை.
காரணம் திரையுலக அமைப்புகளில் விஷால் உள்ளிட்ட திமுக அபிமானிகளே கோலோச்சிக் கொண்டிருக்கிறார்கள்.
தவிர, வர இருக்கும் நடிகர் சங்கத் தேர்தலில் நாடக நடிகர்களின் ஓட்டு மிகவும் முக்கியமானது. சேலம், மதுரை, கோவை, புதுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் இருக்கும் நாடக நடிகர்களை ஒருங்கிணைத்து அவர்களுக்குத் தேவையான அத்தனை வசதிகளையும் செய்து கொடுப்பது உதயநிதி ஸ்டாலினுடைய ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தின் ஆட்கள்தான்.

ஏற்கனவே விஷால் தலைமையிலான நிர்வாகம் கொடுத்த வாக்குறுதிகள் பல நிறைவேற்றப்பட்டுள்ளன. கட்டிடப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது.
 கட்டிடமும் முடிந்துவிட்டால் அதில் இருந்து கிடைக்கும் வருவாயில் இருந்து நாடக நடிகர்களுக்கு கூடுதல் உதவி கிடைக்கும் என்று சொல்லியிருந்தார் விஷால். இதனால் ஏற்கனவே நாடக நடிகர்கள் விஷால் பக்கம் சாய்ந்திருக்கின்றனர்.
 போதாக்குறைக்கு அவர்களை ஒருங்கிணைத்து வாக்களிக்க அழைத்து வருவதில் உதயநிதி ஸ்டாலினுடைய தயாரிப்பு நிறுவனம் களமிறங்கியிருக்கிறது.
 இந்த சூழலில் விஷால் அணி வெற்றிபெறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.


’மீண்டும் விஷால் ஜெயித்துவிட்டால் திரையுலகம் ஒட்டுமொத்தமாக திமுகவின் கைக்குள் போய்விடும். மே 25 ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலினை சந்தித்து விஷால் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொல்கிறார், அவருக்காக உதயநிதி வேலை செய்கிறார்., விஷால் அணியில் போட்டியிடும் பூச்சிமுருகன் எப்போதும் அறிவாலயத்திலே இருக்கும் திமுக தலைமை நிலைய ஊழியர். . இப்படி விஷாலே திமுக வேட்பாளர் போலதான் இருக்கிறார்தான். 
அவர் ஜெயித்துவிட்டால் அமைச்சர்கள் என்னதான் ஃபைனான்ஸ் கொட்டினாலும் தமிழ் திரையுலகம் அதிமுக பக்கம் வராது. 
எனவே தேர்தல் நடந்தால் விஷால் ஜெயிப்பார். அதைத் தடுக்க வழி தேர்தலை நிறுத்தி குழப்பத்தை அதிகரிப்பதுதான்’ என்று சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளும் இப்போது அதிமுக பக்கம் இருப்பவர்களுமான சரத்குமார்,ராதாரவி போன்றோர் அரசுத் தரப்பிடம் அழுத்தம் கொடுத்திருக்கிறார்கள். 
 அதற்கு அதிமுக தலைமையிடம் இருந்து கிரீன் சிக்னல் கிடைத்ததால்தான் தேர்தல் நடக்காது என்று ஏற்கனவே எஸ்.வி. சேகர், ராதாரவி ஆகியோர் அடித்துக் கூறினார்கள். அதன்படியே ஒட்டுமொத்த அரசு இயந்திரமும் விஷால் அணிக்கு எதிராகவே படிப்படியாக செயல்பட்டு நடிகர் சங்க தேர்தல் ரத்து செய்யப்பட்டிருக்கிறது.
பாண்டவர் அணி, சங்கரதாஸ் அணி என்பதற்கு பதில் திமுக அணி, அதிமுக அணி என்றே பெயர் வைத்திருக்கலாமே?
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 
 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?