அபாயப் பட்டியலில் இந்தியா

DayZero அபாயப் பட்டியலில் இந்தியா..! 

DayZero என்றால் என்ன?
DAYZERO இப்படியான ஒரு வார்த்தையை நீங்கள் அறிந்துள்ளீர்களா?
நாம் அறிந்து கொள்ளக் கூடிய தருணம் வந்து விட்டது.

நம் வீட்டில் ஒரு நாள் தண்ணீர் இல்லையென்றால் நாம் படும் அவஸ்தையை சொல்ல வார்த்தை இல்லை. அதே 10 நாட்களுக்குத் தண்ணீர் இல்லையென்றால் நம் உயிருக்கு உத்தரவாதம் இல்லை. ஒருவேளை அனைத்து நீர் ஆதாரங்களும் வற்றிப் போய் விட்ட வாழ்வாதாரம் என்றால் அது தான் Dayzero. Dayzero என்பது தண்ணீர்ப் பஞ்சத்தின் உச்சக்கட்ட நிலை.


இதைச் சந்தித்த முதல் நாடு தென்ஆப்பிரிக்காவில் உள்ள (capetown) என்ற நகரம் தான். நாட்டின் கட்டமைப்பு எவ்வளவு பெரிதாக இருந்தாலும் குடிக்கத் தண்ணீர் இல்லையெனில் நாடு மிக மோசமான நிலையை சந்திக்கும். அதற்கு உதாரணம் தான் Capetown.

இன்றும் தண்ணீர் பஞ்சத்தால் கடல் நீரை குடிநீராக மாற்றி ஒரு நபர் ஒரு நாளைக்கு 50 லிட்டர் தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்பது அந்நாட்டின் விதிமுறைகளில் ஒன்று.

 நினைத்துப் பாருங்கள் நாம் ஒருவேளை குளிக்கும் தண்ணீரின் அளவு கூட 50 லிட்டருக்கும் அதிகம்.

சரி நாம் ஏன் இப்போது இதைப் பேச வேண்டும் என்று கேட்கீறீர்களா ? Dayzero நம்மையும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அபாய நிலையை நாம் தொட்டு விட்டோம் என்பதே உண்மை. ஆம் ஐநா அறிவித்த Dayzero பட்டியலில் இந்தியாவும் ஒன்று.

இந்தியாவில் உள்ள பெங்களூரு (Bangalore) தான் Dayzero சந்திக்கப் போகும் அடுத்த நகரம் என்று கூறியிருக்கிறார்கள்.
அதற்குக் காரணம் அங்கு வேகமாக வளர்ந்து வரும் தொழிற்சாலைகள். அந்த நகரத்தின் நீர்நிலைகள் முழுவதும் மாசுவால் நிறைந்துள்ள காரணத்தினால் நீர் நிலைகள் அனைத்தும் வற்றிப் போய் விட்டது.
இதனைத் தவிர்க்க அரசு பல வழிகளைச் செய்தாலும் இந்த நிலை இன்னும் நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் பெங்களூரு Dayzero சந்திப்பது உறுதி என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

இதில் Dayzero சென்னையையும் விட்டு வைக்கவில்லை. இப்பொழுது உள்ள நீர் ஆதாரங்களை வைத்து சமாளித்துக் கொண்டிடுக்கிறது சென்னை. சென்னை குடிநீர் வாரியம் சில கட்டுப்பாடுகளை சென்னை வாசிகளுக்கு விதித்துள்ளது.
தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும், தண்ணீரைச் சேமிக்க வேண்டும் எனப் பல நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

தண்ணீர் பற்றாக்குறை என்பது நம் நாட்டு மக்களுக்கு கோடை காலங்களில் மிகப் பெரிய சவாலாகத் தான் உள்ளது. மழைக் காலங்களில் தனிநபர் வீடுகளில் நீரை சேமிப்பதும், மரங்களை அதிக அளவில் வளர்ப்பதும், இந்நாட்டை தண்ணீர் பற்றாகுறையிலிருந்து காப்பாற்றக் கூடிய வழி என்று சொன்னால் அது மிகையல்ல.

----------------------------------------------------------------------------------------------------------------------------------
அதிமுகவும்,மத்திய அமைச்சர் கனவும்.
1998-ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சிக்கு ஆதரவை ஜெயலலிதா திரும்பப் பெற்றுஆட்சியை கவிழ்த்தார்.  வரலாறு திரும்புகிறது . 20 ஆண்டுகள் கழித்து அதே பாஜ கட்சியின் ஆட்சியில் இடம் பெறும் ஆவலில் இருந்த அதிமுக.வை இந்த முறை பாஜக உதறித் தள்ளியிருக்கிறது.

இதன் விளைவுகள் தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து புதிய தாக்கங்களை உருவாக்கக்கூடும்.
நரேந்திர மோடி அமைச்சரவையில் இடம் கிடைக்கும் என கடைசி நிமிடம் வரை நம்பியிருந்தார்கள் அதிமுக வினர்.
ஆனால் அந்தப் பேச்சையே எடுக்காமல், அதிமுக.வை கழற்றி விட்டிருக்கிறது பாரதிய ஜனதா.


பாரதிய ஜனதாக் கட்சி மத்தியில் தனிப் பெரும்பான்மை பெற்றிருக்கிறது.
2014-ம் ஆண்டு தனிப் பெரும்பான்மை கிடைத்தபோதும், அப்போதைய கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் கொடுத்தே ஆட்சி அமைத்தார் மோடி.
இப்போதும் கூட்டணிக் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம் உண்டு என்பதை பாஜக முன்கூட்டியே உறுதி செய்திருந்தது.

நரேந்திர மோடிக்கு கடந்த முறையை விட இந்த முறை கூடுதலாகவே மெஜாரிட்டி கொடுத்திருக்கிறார்கள் இந்திய வாக்காளர்கள்.
ஆனால் இந்த முறை ஒவ்வொரு கூட்டணிக் கட்சிக்கும் அமைச்சரவையில் ஒரு இடம் என்கிற நிலைப்பாடை பாஜக எடுத்தது.
 அந்த அடிப்படையில் பஸ்வான், அத்வாலே மற்றும் சிவசேனா, அகாலிதளம் உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள் இடம் பிடித்தார்கள்.
நிதிஷ்குமார் தனது கட்சிக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டதில் அதிருப்தி அடைந்து, பதவியே தேவையில்லை என கூறிவிட்டார்.

இதில் அதிமுக நிலைமைதான் பரிதாபம். அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் குறித்து அனைத்துக் கூட்டணித் தலைவர்களுடனும்  பேசிய பாஜக மேலிடம், அதிமுக தலைமையிடம் பதவி பற்றி பேசவே இல்லை.

அதிமுக.வைப் பொறுத்தவரை, கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர்கள் கே.பி.முனுசாமி, வைத்திலிங்கம் ஆகியோருக்கு அமைச்சர் பதவி பெற முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆர்வமாக இருந்ததாக கூறப்படுகிறது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது மகனும், மக்களவைத் தேர்தலில் வென்ற ஒரே அதிமுக எம்.பி.யுமான ரவீந்திரநாத் குமாருக்கு அமைச்சர் பதவி பெற காய் நகர்த்தியதாக தெரிகிறது.

அமைச்சரவை பதவியேற்கும் தினத்தன்று  காலையிலும்கூட அமைச்சர் ஜெயகுமார், ‘பாஜக அழைத்தால், அமைச்சரவையில் இடம் பெறுவது குறித்து பரிசீலிப்போம்’ என கூறினார்.
ஆனால் அப்படியொரு அழைப்பே இல்லாமல் போனதுதான் பரிதாபம்!

இது தொடர்பான முழுப் பின்னணி வருமாறு:
1. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்ததாக அதிமுக ஒருபோதும் அறிவிக்கவில்லை.
தேர்தலுக்கு முன்பு மதுரை விமான நிலையத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை அழைத்து அமித்ஷா பேசினார்.
‘தேசிய ஜனநாயகக் கூட்டணி’ என்ற பெயரில் பிரசாரக் கூட்டங்களை நடத்துங்கள் என அமித்ஷா கேட்டுக்கொண்டார்.
 அது தொடர்பான வீடியோ பதிவுகள் அப்போது வைரல் ஆகின.
ஆனாலும் அதிமுக பிரசாரக் கூட்டங்களில், தேசிய ஜனநாயகக் கூட்டணி என்கிற வாசகத்தை பயன்படுத்தவே இல்லை.
இதை தங்களுக்கான அவமதிப்பாக அப்போதே பார்த்தது பாஜக. எனினும் தேர்தல் நேரம் என்பதால் காட்டிக்கொள்ளவில்லை.
 இப்போது, ‘எங்கள் கூட்டணியில் இணையாத அதிமுக.வுக்கு எதற்கு அமைச்சரவையில் இடம் கொடுக்க வேண்டும்’ என்கிற முடிவுக்கு வந்திருக்கிறது பாஜக.

2. அதிமுக அரசை தக்க வைக்க இடைத்தேர்தல்களில் அக்கறை காட்டிய அதிமுக, மக்களவைத் தேர்தலில் கோட்டை விட்டதாக பாஜக நினைக்கிறது.
குறிப்பாக அதிமுக செல்வாக்கான கோவையிலும்கூட பாஜக வெற்றி பெறாததை, திட்டமிட்டு அதிமுக கவிழ்த்ததாக கருதுகிறது பாஜக.

3. தேர்தலுக்கு முன்பு அமித்ஷா சென்னைக்கு வந்து அதிமுக தலைவர்களுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்த திட்டமிட்டிருந்தார்.
ஆனால் அமித்ஷா வருவதாக இருந்த தினத்திற்கு முன்தினம் அவசரமாக பாமக.வை அழைத்து ‘7 மக்களவைத் தொகுதி, ஒரு ராஜ்யசபா தொகுதி’ என கூட்டணி ஒப்பந்தம் போட்டது அதிமுக.
இதைத் தொடர்ந்து அமித்ஷா தனது சென்னை பயணத்தை ரத்து செய்தார்.
 பின்னர் பாமக.வுக்கு அதிக தொகுதிகள் கொடுத்ததை காரணம் காட்டியே பாஜக.வுக்கும், தேமுதிக.வுக்கும் தொகுதிகளை அதிகம் வழங்க மறுத்து பேரம் பேசியது அதிமுக.
இதுவும் பாஜக மேலிட கோபத்திற்கு முக்கியக் காரணம்.

4. இதே அணியில் தமிழகத்தில் இன்னொரு தேர்தலை எதிர்கொள்ள முடியாது என்கிற முடிவுக்கும் பாஜக வந்திருக்கிறது.
 சட்டமன்றத் தேர்தலுக்கு உறுதியாக வருவேன் என கூறியிருக்கும் ரஜினிகட்சிதான் தான் பாஜக.அடுத்தக் கூட்டணி.
அவருடன்  இணைய வசதியாகவே மக்கள் செல்வாக்கை இழந்த அதிமுக.வை கழற்றி விட்டிருப்பதாகவும்  சொல்லப்படுகிறது.

5. அதிமுக அமைச்சரவை சகாக்கள் மீது ஊழல் புகார்கள் இருக்கின்றன.
மத்திய அமைச்சரவையில் அவர்களை இணைப்பது ஆட்சிக்கு கெட்ட பெயரை ஏற்படுத்தும் என பாஜக நினைப்பதுவும் ஒரு காரணம்.
இதெல்லாம் போக, தேர்தலுக்கு முன்பு அதிமுக தரப்பிலிருந்து முக்கியமான தலைவர் ஒருவர், தமிழகத்தை சேர்ந்த பவர்ஃபுல் காங்கிரஸ் தலைவர் ஒருவருடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக பாஜக மேலிடத்திற்கு தகவல் சென்றதாக தெரிகிறது.
இந்தக் காரணங்கள்தான் அதிமுக.வை கழற்றிவிடக் காரணம்.
ஆனால் அதிமுக கட்சி தலைவர்களோ மோடி அமைச்சர் பதவி தர முன்வந்து அழைத்ததாகவும், வைத்தியலிங்கம்,ரவீந்திரநாத் குமாருக்கும் இடையே கட்டம் போட்டி நிலவியதால் கட்சி எதிர்காலத்தைக்கணக்கிட்டு பதவியை உதறி விட்டதாகவம் இங்கே கதைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
-------------------------------------------------------------------------------------------------------------------------------------
 மீண்டும் பயமுறுத்தும் நிபா வைரஸ்
2018ம் ஆண்டில் நிபா வரைஸ் தாக்குதலில் 17 நபர்கள் உயிரிழந்த நிலையில், தற்போது எர்ணாகுளத்தில் இருக்கும் இளைஞர் ஒருவருக்கு நிபா வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

வௌவால் மற்றும் அணில் மூலமாக பரவும் இந்த வைரஸ் தொற்றினால் மூன்று நாட்களுக்கும் மேலாக தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் இருக்கும். விரைவாக இந்த நோய் பரவக்கூடும் என்பதால் அண்டை மாநில எல்லைகளில் சோதனை கூடங்கள் வைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளன மாநில அரசுகள்.

தமிழக – கேரள எல்லையில் அமைந்திருக்கும் தேனி, திருநெல்வேலி, கோவை, நீலகிரி, கன்னியாகுமரி, மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
 சுகாதார ஆய்வாளர்கள் தினமும் டெய்லி அவுட்ப்ரேக் ரிப்போர்ட்டினை அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு இந்த நோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் நோய் தொற்றில் இருந்து பாதுகாப்பதற்கான வழிமுறைகளை எடுத்துரைக்க நடவடிக்கைகள் துரித கதியில் எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நமக்கு கிடைக்கும் அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளை நன்றாக கழுவி சுத்தம் செய்த பின்பு உண்ண வேண்டும் என்று அறிவுறுத்தி வருவதாகவும், மருத்துவக்குழு போதுமான விழிப்புணர்களை ஏற்படுத்தி வருவதாகவும் அவர் கூறினார்.

 தமிழகம் மட்டுமல்லாமல் கர்நாடக எல்லையிலும்  சாம்ராஜ்நகர், மைசூர், குடகு, தக்‌ஷினா கன்னடா, உத்தர கன்னடா, உடுப்பி,ஷிவமொக்கா, மற்றும் சிக்கமகளூரு ஆகிய மாவட்டங்களிலும் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

நிபா வைரஸ் பரவுதல் :
இந்த வைரஸானது வெளவால், அணில் மூலம் பரவுகிறது.
அணில் எச்சை செய்த பழங்களை உண்ணக்கூடாது.
 மேலும், மாம்பழம், கொய்யாப்பழம், பலாப்பழம் போன்றவற்றை தண்ணீரில் கழுவாமல் உண்ணக்கூடாது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
 இரவு நேரத்தில் வெளவால்களில் கழிவு மூலம் நிபா வைரஸ் வேகமாக பரவுவதாக கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

அறிகுறிகள்:
தொடர்ந்து 3 நாட்கள் காய்ச்சல், தலைவலி, இருமல், மூளைக்காய்ச்சல், கண் எரிச்சல், தொண்டை வலி.
ஆகிய அறிகுறிகள் ஏற்பட்டு பின்பு அது மூளைக்காய்ச்சலாக மாறி உயிரைப் பறிக்கும்.
எனவே மேலே குறிப்பிடப்பட்டுள்ள அறிகுறிகளில் எது நேர்ந்தாலும் பாதிக்கப்பட்ட நோயாளி மருத்துவமனை சென்று பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

அலட்சியமாக இருந்தால் மரணமடையவும் அதிக வாய்ப்புள்ளது.

2018 ஆண்டு கேரளா மக்களை உலுக்கி எடுத்த நிபா வைரஸ் மீண்டும் இந்த வருடம் தனது கோர முகத்தை காட்ட தொடங்கியுள்ளது.
கடந்த ஆண்டு கேரளாவில் மட்டும் நிபா வைரஸ் தாக்குதலால் 17 பேர் உயிரிழந்தனர்.
பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுக்கும் நிபா பரவியது மேலும் அச்சத்தைக் கூட்டியது.
மக்களின் பதற்றம் மற்றும் பீதியை குறைக்க மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் துரித நடவடிக்கைகளால் நிபா வைரஸை விரட்டி அடித்தது.

இந்நிலையில் நேற்று முன் தினம் எர்ணாகுளம் மாவட்டத்தில் நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறிகளுடன் 23 வயது இளைஞர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த இளைஞரின் ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.
எர்ணாகுளம் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அந்த இளைஞருக்கு நிபா வைரஸ் இருப்பது தற்போது உறுதியாகியுள்ளது.

அந்த இளைஞர் பயிற்சி வகுப்புக்காக அருகில் உள்ள மாவாட்டத்திற்கு சென்றதாகவும் அங்கு அவருக்கு காய்ச்சல் வந்ததாகவும் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
ஏற்கனவே இதுபோன்ற அறிகுறிகளுடன் பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஆனால் அவர்களுக்கு வைரஸ் பாதிப்பு எதுவும் இல்லையென ஆய்வில் தெரியவந்ததுள்ளது.

மீண்டும் நிபா வைரஸ் தாக்குதலால் கேரள மக்கள் பீதி அடைந்துள்ளனர். இந்நிலையில் நிபா வைரஸ் அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் உடனடியாக மருத்துவமனைக்கு வருமாறு மருத்துவர்கள் மற்றும் சுகாத்துறை எச்சரித்துள்ளது
40 பேர்களிடம் நிபா பரிசோதனை

.நிபா வைரஸ் வேகமாக பரவும் தன்மைக் கொண்டதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேரள அரசு எச்சரித்துள்ளது.
 
கேரளாவின் அடுத்த மாநிலமாக தமிழகம் இருப்பதால் கேரள – தமிழக எல்லைகளின் மூலம் இந்த நோய் தமிழகத்தை பாதிக்கும் வாய்ப்புகளும் உள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை தமிழகத்தில் யாருக்கும் நிபா வைரஸ் தாக்கவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாகக் கேரள – தமிழக எல்லைகளில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு எல்லைப் பகுதியில் இருக்கும் மக்களுக்குப் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.

 மூளைக்காய்ச்சல் இருப்பவர்களின் ரத்த மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வருகிறோம்.கோவை யில் மருத்துவமனையில் நிபா வுக்காக சிறப்பு சிகிசசை இடம் ரிவாக்கப்பட்டுள்ளது.

கேரளாவில் அதிகமாகப் பரவி வரும் காய்ச்சலால் தென் இந்தியாவில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. தமிழகத்தில் இதுவரை எந்த நோயாளிகளும் இந்த நோய்க்காக அனுமதிக்கப்படவில்லை.
கேரளாவில் இருந்து தமிழகம் வந்த 40 பேர்களிடம் நிபா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
-----------------------------------------------------------------------------------------------------------------------------------
 
பொற்கோவில் அட்டாக் - ஆப்ரேஷன் புளூ ஸ்டார்
---------------------------------------------------------------------------------------
1981_ம் ஆண்டில், சீக்கிய தீவிரவாதிகள் "தனி நாடு" வேண்டும் என்று கோரி, பிந்தரன்வாலே தலைமையில் வன்முறையில் ஈடுபட்டனர்.

இந்த பிந்தரன் வாலே 1980 தேர்தலில், பஞ்சாப் மாநிலத்தில் 3 தொகுதிகளில் காங்கிரசை ஆதரித்துப் பிரசாரம் செய்தான்.
இந்திரா காந்தியுடன் ஒரே மேடையில் பேசினான். இதன் பிறகு தீவிரவாதிகளின் தலைவன் ஆகிவிட்ட
பிந்தரன்வாலேயின் புகழ் உலகம் முழுக்க பரவியது. சீக்கியர்களின் "ஹீரோ" ஆனான். அவன் போக்கும் மாறியது.

சீக்கியர்களுக்கு தனி சுதந்திர நாடு ("காலிஸ்தான்") வேண்டும் என்று குரல் எழுப்பி. தீவிரவாதிகளைத் திரட்டி வன்முறையில் ஈடுபட்டான்.
பிந்தரன்வாலேயின் போக்கைக் கண்டித்து எழுதி வந்த லாலா ஜெகத் நாராயணன் என்ற பஞ்சாப் பத்திரிகை ஆசிரியர், 1981 செப்டம்பர் 9_ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்த கொலையின் பின்னணியில் இருந்தவன் பிந்தரன்வாலே என்று தெரிந்து, அவனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து பிந்தரன்வாலேக்கு ஆதரவாக சீக்கியர்கள் பெரும் கலவரத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அவன் விடுதலை செய்யப்பட்டான்.
அவனுக்கு சீக்கியர்கள் பெரும் வரவேற்பு அளித்தனர். இதன்பின் பிந்தரன்வாலேயின் அட்டூழியம் அதிகமாகியது.அவ்ன் ஆதரவாள்ர்களால் இந்துக்கள் படுகொலை செய்யப்பட்டனர்.
பசுக்களின் தலைகளை வெட்டி இந்து கோவில்களுக்குள் தீவிரவாதிகள் வீசினர்.

பத்திரிகையாளர் லாலா ஜெகத்நாராயணனின் மகனையும் தீவிரவாதிகள் கொலை செய்தனர்.
தனி சீக்கிய நாடு வேண்டும் என்பதற்காக, ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளைக் கொண்ட படையை திரட்டினான், பிந்தரன்வாலே.
அவர்களிடம் நவீன ஆயுதங்கள் இருந்தன. அமிர்தசரஸ் நகரில் உள்ள சீக்கியர்களின் பொற்கோவில், புனித இடமாகப் போற்றப்படுவதாகும்.
அதை பிந்தரன்வாலே கைப்பற்றிக்கொண்டான்.
உள்ளே ஆயுதங்கள் குவிக்கப்பட்டன.
சீக்கியர் பொற்கோவில், தீவிரவாதிகளின் "கோட்டை"யாக மாறியது.
பொதுமக்களை கொன்று குவித்துவிட்டு, அங்கு ஓடி ஒளிந்து கொள்வதை வழக்கமாகக் கொண்டார்கள் தீவிரவாதிகள்
இந்த கால்க் க்ட்டத்தில் அரசியலில் குதித்த ராஜீவ் காந்திக்கு இந்த சீக்கிய தீவிரவாதிகளின் வன்முறை பெரும் கவலை அளித்தது.
அவர்களை எப்படி ஒடுக்கலாம் என்று அருண் நேருவுடன் ஆலோசனை நடத்தினார்.
"பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்பினால்தான், "தீவிரவாதிகளை ஒடுக்க முடியும்" என்ற முடிவுக்கு அவர்கள் வந்தார்கள்.
அதற்கான திட்டத்தை ரகசியமாகத் தயாரித்தார்கள். இப்படி ஒரு திட்டம் தயாராவது உள்துறை மந்திரி பி.சி. சேத்திக்கும் தெரியாது; அப்போது ஜனாதிபதியாக இருந்த ஜெயில்சிங்குக்குக்கூடத் தெரியாது என்றால் பார்த்து கொள்ளலாம்
பிரதமர். இந்திரா காந்திக்கு இதுபற்றித் தெரியும் என்றாலும், "பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்ப வேண்டிய அவசியம் ஏற்படாது. சீக்கியர் பிரச்சினைக்கு வேறு வழிகளில் சமரசத்தீர்வு காண முடியும்" என்று கருதினார்.
பொற்கோவில், சீக்கியர்களின் புனித இடம். அங்கு ராணுவத்தை அனுப்புவதால், விபரீத விளைவுகள் ஏற்படும் என்பதை அவர் உணர்ந்திருந்தார்.
இதற்கிடையே தீவிரவாதிகளுடன் சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும் சேர்ந்து கொண்டான்.
"பஞ்சாப் மாநிலத்தில் விளையும் தானியங்களை ஜுன் 3_ந்தேதிக்குப்பிறகு, வெளி மாநிலங்களுக்கு அனுப்பமாட்டோம்" என்று அறிவித்தார்கள்.
இதன் மூலம் நிலைமை கட்டுக்கடங்காமல் போய்க்கொண்டிருப்பதை உண்ர்ந்த பிரதம்ர் பொற்கோவிலுக்கு ராணுவத்தை அனுப்ப இந்திரா காந்தி முடிவு செய்தார்.
பொற்கோவிலுக்குள் "ஹர்மந்திர் சாகிப்" என்ற இடம் மிக முக்கியமானது. அங்குதான், சீக்கியர்களின் புனித புத்தகம் (கிரந்தம்) 200 ஆண்டுகளுக்கு மேலாக படிக்கப்பட்டு வருகிறது.
அந்த இடத்துக்கு சேதம் ஏற்படக்கூடாது என்றும், மொத்தத்தில் பொற்கோவிலுக்கு அதிக சேதம் இல்லாதபடி தீவிரவாதிகளை ஒடுக்க வேண்டும் என்றும் ராணுவத்தினருக்கு உத்தரவிடப்பட்டது.
பொற்கோவிலுக்கு ராணுவம் அனுப்பப்படுவது, டெல்லியில் ஒரு சிலரைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது.
ஆனால், பிந்தரன்வாலேயின் "ஒற்றர்படை" மிகத்திறமையாகச் செயல்பட்டு, இந்த ராணுவதாக்குதல் திட்டத்தை கண்டுபிடித்து விட்டது. "பொற்கோவிலுக்கு ராணுவம் வரப்போகிறதாம். வரட்டும், வரட்டும்! அவர்களை தூள் தூளாக்குகிறேன்" என்று கொக்கரித்தான் பிந்தரன்வாலே.
1984 ஜுன் 5_ந்தேதி மாலை 4 மணி. பொற்கோவிலை ராணுவம் சுற்றி வளைத்துக்கொண்டது. இ
இந்த ராணுவ டிவிஷனுக்கு தலைமை தாங்கியவர் மேஜர் ஜெனரல் குல்திப்சிங் பரார். இவர் ஒரு சீக்கியர். உள்ளே இருக்கும் தீவிரவாதிகள் அனைவரும் வெளியே வந்து சரண் அடையும்படி, ஒலிபெருக்கி மூலம் ராணுவம் எச்சரிக்கை விடுத்தது.
பொற்கோவிலில் வழிபடுவதற்காக வந்தவர்கள் பொதுமக்கள், சுற்றுலாப்பயணிகள் 126 பேர் மட்டும் வெளியே வந்தனர்.
தீவிரவாதிகள் எவரும் வரவில்லை.
சீக்கியர் கட்சி தலைவர் லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் (தீவிரவாதி அல்லாதவர்கள்) பொற்கோவிலுக்குள் பதுங்கியிருந்தனர்.
அவர்களை வெளியேற்ற ராணுவத்தின் கமாண்டோ படையினர், அன்றிரவு கோவிலுக்குள் நுழைந்தனர். அவர்களை நோக்கித் தீவிரவாதிகள் சுட்டதில், ஏறத்தாழ 40 கமாண்டோக்கள் கொல்லப்பட்டனர்.
எனினும், லோங்கோவாலும், அவருடைய ஆதரவாளர்களும் பத்திரமாக வெளியே கொண்டு வரப்பட்டனர்.
ஜுன் 6_ந்தேதி காலை "ஆப்ரேஷன் புளூ ஸ்டார்" என்று வர்ணிக்கப்படும் "பொற்கோவில் போர்" தொடங்கியது.
கோவிலுக்குள் நுழைந்த ராணுவத்தினரை நோக்கி, தீவிரவாதிகள் துப்பாக்கியாலும், பீரங்கியாலும் சுட்டனர். ஏவு கணைகளையும் வீசினர்.
முதல் கட்டத்திலேயே நூற்றுக்கு மேற்பட்ட ராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.
பெரிய சுவர்போல அடுக்கி வைக்கப்பட்ட மணல் மூட்டைகளுக்குப் பின்னால் ஒளிந்து கொண்டு, தொடர்ந்து இயந்திரத்துப்பாக்கிகளால் தீவிரவாதிகள் சுட்டனர்.
இதனால் டாங்கிகளுடனும், கவச வண்டிகளுடனும் ராணுவத்தினர் பொற்கோவிலுக்குள் நுழைந்து தாக்கினர்.
இருதரப்புக்கும் இடையே பயங்கரப்போர் நடந்தது. டாங்கிப் படையினரின் சரமாரி தாக்குதலால், தீவிரவாதிகள் செத்து விழுந்தனர்.
சில மணி நேரம் நடந்த இந்த போரில், தீவிரவாதிகள் அனைவரும் கொல்லப்பட்டனர்.
உள்ளே சென்ற ராணுவத்தினர், பிந்தரன்வாலேயை தேடினர்.
அவன் மற்ற தீவிரவாதிகளுடன் பிணமாக கிடந்தது கண்டு பிடிக்கப்பட்டது.
இந்தப் போரில் 493 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.
ஆயினும் மொத்தத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் இறந்திருக்கலாம் என்று அதிகாரபூர்வமற்ற தகவல்கள் கூறின.
பொற்கோவிலின் பல இடங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
முக்கிய இடமான ஹர்மந்திர் சாகிப், அதற்கு அடுத்த முக்கிய இடமான அகல் தகத் ஆகிய இடங்களும் சேதம் அடைந்தன.
அங்கு 300 இடங்களில் குண்டுகள் துளைத்து சென்ற அடையாளம் தெரிந்தது.
சீக்கிய குருமார்கள் கையினால் எழுதி வைத்திருந்த புனித நூல்கள் எரிந்துபோயின.
பொற்கோவிலைப் பார்வையிட்டு, அமைதி திரும்ப ஆவன செய்யுமாறு ஜனாதிபதி ஜெயில் சிங்கை இந்திரா காந்தி கேட்டுக்கொண்டார்.
அதன் பேரில் 9_ந்தேதியன்று, பொற்கோவிலுக்கு ஜனாதிபதி சென்று பார்வையிட்டார்.
அப்போது எங்கிருந்தோ சீறிப்பாய்ந்து வந்த ஒரு துப்பாக்கிக்குண்டு, ஜனாதிபதியை உரசிக் கொண்டு சென்று, அருகில் நின்று கொண்டிருந்த பாதுகாவலரின் தோளில் பாய்ந்தது.
பொற்கோவில் வளாகம் மிகப்பெரியது. பல கோபுரங்களைக் கொண்டது.
ராணுவத்தினரின் தாக்குதலுக்குத் தப்பி, ஏதோ ஒரு கோபுரத்தில் ஒளிந்திருந்த தீவிரவாதி, ஜனாதிபதியை நோக்கி சுட்டிருக்க வேண்டும் என்று கருதப்பட்டது.
பொற்கோவில் சேதம் அடைந்த நிகழ்ச்சிக்கு வருந்துவதாகவும், பொற்கோவிலை மத்திய அரசு விரைவில் புதுப்பிக்கும் என்றும் ஜனாதிபதி ஜெயில்சிங் தெரிவித்து விட்டு திரும்பினார்!.
பொற்கோவில் போருக்குப்பிறகு, தன் உயிருக்கு எந்த நேரத்திலும் ஆபத்து ஏற்படலாம் என்று இந்திரா காந்தி எண்ணினார்.
இதுபற்றி ராஜீவ் காந்தியிடமும், சோனியாவிடமும் தெரிவித்தார். ராஜீவ் காந்தியின் மகன் ராகுல், மகள் பிரியங்கா ஆகியோர் ஒரு ஹாஸ்டலில் தங்கி படித்து வந்தனர். அவர்களை இனி ஹாஸ்டலுக்கு அனுப்பவேண்டாம் என்று கூறி, வீட்டிலிருந்தே பள்ளிக்கூடத்துக்கு போய் வரச்சொன்னார்.
வீட்டிலும், ஒரு குறிப்பிட்ட எல்லைக்கு வெளியே போகவேண்டாம் என்று கூறினார்.
இந்திரா காந்தியின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்று ராணுவ மந்திரி விரும்பினார்.
"உங்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பொறுப்பை, போலீசாரிடம் இருந்து ராணுவத்துக்கு மாற்ற வேண்டும்" என்று அவர் இந்திராவிடம் யோசனை தெரிவித்தார். அதற்கு இந்திரா சம்மதிக்கவில்லை.
"நான் பிரதமராக இருப்பது ஒரு ஜனநாயக அரசுக்கு. ராணுவ அரசாங்கத்துக்கு அல்ல" என்று கூறிவிட்டார்.
ஆனால் இந்த சம்பவத்தால்தான்  இந்திரா உயிர் இழ்ந்தார்.
---------------------------------------------------------------------------------------------------------------------------------_

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?