பாஜகவில் தமிழர்களே இல்லையா?
ஜெய்சங்கர் தமிழகப் பிரதிநிதி இல்லை.
அமெரிக்க பிரதிநிதிதான்.
இதனைத் தொடர்ந்து, நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக்கமும் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களும் மேலும் விரைவாக அதிகரித்திடும். 2014-19ஆம் ஆண்டுகளில், மோடி அரசாங்கமானது அமெரிக்காவுடன் போர்த்தந்திர ரீதியாகவும் (strategically) ராணுவரீதியாகவும் (militarily), சரணாகதி அடையக் கூடிய விதத்தில், தன்னுடைய வான்வழி மற்றும் நீர்வழிப் போக்கு வரத்துகளில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்க ளில் கையெழுத்திட்டதன்மூலம் கணிசமான நடவடிக்கைக ளை எடுத்திருந்தது.
மேலும் அமெரிக்கா கட்டளையிட்டதற்கி ணங்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக் கா ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான ராணுவக் கூட்ட ணியிலும் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.
இத்தகைய நடவடிக்கைகள், நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையை, ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் முற்றிலு மாக அமெரிக்காவின் பூகோள அரசியல் (geo-political) நலன்களுடன் ஒத்துப்போகக் கூடியவிதத்தில் மாற்றி அமைத்திருக்கிறது.
அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, இந்தியா தனக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை இதுநாள் வரையிலும் வாங்கிவந்த நாடுகளை, குறிப்பாக ரஷ்யாவை, உதறித்தள்ளிவிட்டு, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார நலன்களுக்குச் சேவகம் செய்யும் விதத்திலேயே எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்தது.
2018 ஜனவரியில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், “அமெரிக்கா முதல்” (“America First”) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (prote ctionist policies) அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா விற்கு அதிக அளவில் கட்டளைகளைப் பிறப்பித்தது.
சீனப் பொருள்களுக்கு 250 பில்லியன் டாலர்கள் வரி விதித்திருப்பதன் மூலம் அதற்கு எதிராக வர்த்தகப் போர் தொடங்கி இருக்கிறார் டிரம்ப்.
இவ்வரியை 325 பில்லியன் டாலர்களாக மேலும் உயர்த்தப் போவதாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கப் பொருள்களை சீனச் சந்தை யில் புழக்கத்திற்கு விடுவதற்கு மேலும் வாய்ப்புகளை அதி கப்படுத்திட வேண்டும் என்றும், அமெரிக்காவின் தொழில் நுட்பம் மற்றும் அறிவுச்சொத்து உரிமைகளுக்குப் பாதுகாப்பு கள் அளித்திட வேண்டும் என்றும் டிரம்ப் கோரியிருக்கிறார்.
டிரம்ப் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தி யாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மறுதலிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா, தன்னுடைய வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
இதற்காக அவர், இந்தியாவிலி ருந்து அமெரிக்கா இறக்குமதி செய்திடும் அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கான வரிகளை முதல்கட்ட மாக உயர்த்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவிற்கு பல்வேறு இனங்களை எவ்வித வரியு மின்றி ஏற்றுமதி செய்திட வேண்டும் என்றும் அமெரிக்கா கட்ட ளையிட்டிருக்கிறது. இவ்வாறு சுமார் 1900 வகையிலான பொருள்கள் எவ்வித வரிவிதிப்புமின்றி இந்தியாவிலிருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
இதற்கான அறிவிப்பு அமெரிக்காவில் மார்ச் மாதத்தின் தொடக்கத்தில்
செய்யப்பட்டது என்பதும் இது 60 நாட்க ளுக்குப் பின்னர் அமலுக்கு வரும்
என்பதும் குறிப்பிடத் தக்கது.
எனினும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மோடி அர சாங்கம் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு எதிராக எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுத்திடவும் இல்லை.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிரானமுறையில் சீனா, அமெ ரிக்காவின் அடாவடித்தன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றி இருக்கிறது.
சீனாவிற்குள் நுழையும் அமெரிக்காவின் பொருள்களுக்கு வரி விதித்திருப்பதன் மூலம் சீனா பதிலடி கொடுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்காவின் போர்த்தந்திரம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாக மாறியதன் விளைவாகவே மோடி அரசாங்கத்தால் அமெ ரிக்காவின் அடாவடித்தனங்களைத் துணிவுடன் எதிர்த்து நிற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.
“மாபெரும் தேசியவாதி” என சித்தரிக்கப்படுகின்ற நரேந்திர மோடி, அமெரிக்கா பிறப்பிக்கும் கட்டளைகள் ஒவ் வொன்றையும் எதிர்ப்பேதும் கூறாது, கைகட்டி வாய் பொத்தி, ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவிற்கு அமெரிக்கா கட்டளை யிட்டது.
அதனை எவ்வித முணுமுணுப்புமின்றி இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் பொருளாதாரரீதியாக இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஏனெனில் சர்வதேச சந்தையின் விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியா, ஈரானி டமிருந்து மிகக் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இப்போது அமெ ரிக்கா, வெனிசுலாவிற்கு எதிராக தான் நடத்தும் பொருளா தார யுத்தத்தின் அடிப்படையில், இந்தியாவை, வெனிசுலா விடமிருந்தும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இக்கட்டளைக்கும் செவிசாய்த்திட மோடி அரசாங்கம் துரிதகதியில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டி ருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து டிரயம்ப் எஸ்-400 ஏவு கணை முறையை வாங்குவதன் காரணமாக, இந்தியா விற்கு, பொருளாதாரத் தடை எதையும் அமெரிக்கா விதித்திடக் கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆயினும் இதற்கு அமெரிக்கா இணங்கிட வில்லை.
இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்போம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு நிர்ப் பந்திப்பதற்கு, மிக முக்கிய காரணம், அமெரிக்காவிடமி ருந்து மிகப்பெரிய அளவில் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவை வாங்க வைத்திட வேண்டும் என்பதேயாகும்.
(இந்தியா ரபேல் போர் விமானங்கள் 36 மட்டுமே வாங்கியதைத் தொடர்ந்து) இந்தியாவை தன்னுடைய எஃப்-21 போர் விமானங்களை வாங்க வைத்திடுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகிறது.
இதன் மூலமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந் தத்தை இந்தியாவை மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
இவற்றை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்க அர சாங்கத்தின் அமைச்சர் மைக் பொம்பியோ ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தியா வருகிறார்.
மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரானபிறகு அவர் விஜயம் செய்யும் முதல் பயணமாகும் இது. அமெரிக்காவின் வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கு வழிசெய்யும் விதத்தில் இந்தியா மீது தேவையான நிர்ப்பந்தங்களை அவர் மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்குவதற்கு ஈடு செய்யும் விதத்தில் மிக அதிக அளவில் அமெரிக்காவிட மிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும், இந்தி யாவில் 5ஜி அலைக்கற்றை வரிசைகளை அறிமுகப் படுத்துவதற்காக இந்தியா சீனாவின் பகாசுரக் கம்பெனியான ஹுவாவேய் (Huawei)-யிடமிருந்து கருவிகள் வாங்குவ தைத் தடுத்திடவும் அவர் முயற்சிகளை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி-2 அரசாங்கம் தற்போது புதியதொரு அயல்துறை விவகாரங்கள் அமைச்சரைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜெய்சங்கர் என்கிற இவர் முன்னாள் அயல்துறை செயலாளர்தான்.
அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த் தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான கட்டளைகள் அனைத்திற்கும் மோடி அரசாங்கம் இதுவரை யிலும் முழுமையாகக் கைகட்டி வாய்பொத்தி சரணாகதி அடைந்திருக்கும் அணுகுமுறையானது, இந்தியா அமெ ரிக்காவின் போர்த்தந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாகத் தொடரும் என்பதையே காட்டு கிறது.
இவ்வாறு இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில், அடகு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி.
தமிழில்: ச.வீரமணி
---------------------------------------------------------------------------------------------------------------------
அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் மாணவி நேகா யாதவ்.
அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மாணவர் தொடர்பான விஷயங்களில் போராட்டங்களை நடத்தி வருபவர் ஆவார்.
அந்த அடிப்படையில், உத்தரப்பிர தேச மாநில பாஜக அரசு, மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவதாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போராட்டம் நடத்தினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காண்பித்தார்.
அமித்ஷா, மோடி, ஆதித்யநாத் மற்றும் பாஜக-வுக்கு எதிராக முழக்கங்களையும் அப்போது நேகா எழுப்பினார்.
இதற்காக வழக்கு பதிவுசெய்த போலீசார், நேகாவை கைது செய்தனர். பல்கலைக்கழக நிர்வாகமும் நேகா மீது குறிவைத்தது.
நேகாவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வியாண்டு முடிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தர விட்டது.
தேர்வுகளுக்கு படிக்க வேண்டியுள்ள நிலையில், தங்களை வெளியேறச் சொல்வது சரியல்ல என்று மாணவ- மாணவியர் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை.
இவ்விஷயத்திலும் நேகா யாதவ், மாணவ - மாணவியரைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழக நிர்வாகமானது, நேகா யாதவை, தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
விடுதி யிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. பல்கலைக்கழக தலைவரும், மாணவர் நல அதிகாரியும் அடுக்கடுக்காக அளித்த புகார்களின் பேரில் நேகா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறியுள்ளது.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுக் களை நேகா யாதவ் மறுத்துள்ளார்.
“பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீன மாக நடந்துகொண்டதால், என்னை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல.
மாண வர் நலனுக்காகப் போராடி வருவதாலேயே, என் மீது இட்டுக்கட்டி பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தியுள்ளனர்.
இன்னும் குறிப்பாகச் சொன்னால், அமித் ஷாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய பின்தான் என்னைக் குறிவைத்து பழிவாங்குகிறார்கள்” என்று நேகா யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, அதனடிப்படையிலேயே பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளேன்.
ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள சிலர் எனது முன்னேற்றத்தைத் தடுக்க முயலுகின்றனர். நான் இங்குள்ள முறை கேடுகளை எதிர்ப்பதே அதற்குக் கார ணம்” என்றும் நேகா குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்காலத்தில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நேகா உறுதி அளித்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தயார்” என்று பல்கலைக்கழகம் கூறியுள்ள நிலையில்,எந்த தவறும் செய்யாத நான் உறுதி யளிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நேகா, இவ்விஷயத்தை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.
-----------------------------------------------------------------------------------------------------------------------
கிரிஷ் கர்நாட்.
தமிழர்களாகத்தெரியவில்லையா.?
பிரதமராக நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்கூட இல்லை.
கடந்த 60 ஆண்டுகளாக தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் இல்லாமல்
அமைச்சரவை அமைந்ததே கிடையாது.
மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புகளுடன்கூடிய இணை அமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் உள்ளனர்.
இதில் ஒருவர்கூட தமிழ்நாட்டில் வென்று சென்றவர்கள் இல்லை.
ஏற்கனவே தமிழ்நாட்டை பாஜக அரசு பிரித்து பார்க்கிறது, தனிமைபடுத்துகிறது என தமிழக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதன் விளைவுதான் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்தது.
அப்போதே பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டை பாஜக அரசு எப்போதும் பிரித்து பார்த்ததில்லை.
இங்கு அவ்வாறு பரப்பப்படுகிறது. என்றெல்லாம் கூறினார்.
இங்கு அந்த நிலைதான் இருக்கிறது, அதை சமாளிக்கதான் இவ்வாறு கூறுகிறார் என்று கூறினர்.
ஆனால் தற்போது அதை மீண்டும் உறுதிபடுத்தும்படி நிகழ்ந்துள்ளது.
தற்கு பாஜக மட்டும் காரணமில்லை. அதிமுகவிற்குள் நடந்த உட்கட்சி பூசல்களும்தான் காரணம். துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார்.
இது அக்கட்சியின் உட்கட்சி பூசலானது.
இதில் அதிருப்தியான பாஜக யாருக்கும் பதவியில்லை எனக்கூறியது.
நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் தமிழர்கள்தானே என்றார் பாஜகவினர் வினவு கிறார்கள்.
காவிரி நீரைத் தமிழகத்திற்க்கு கொடுக்க கூடாது என்று கர்நாடக மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து மனு கொடுத்த,தற்போது அமைச்சராகப் பதவியேற்றுகையில் தாய்மொழி கன்னடத்திலேயே பதவியேற்றவர் நிர்மலா.மார்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் எப்படி தமிழக பிரதிநிதி.
அடுத்தவர் ஜெய்சங்கர் இவர் தமிழ்நாட்டு பக்கமே வந்ததில்லை.பிறந்தது வளர்ந்தது.வாழ்வது எல்லாம் டெல்லி.ஆந்திர பிராமணர்.தமிழ் பேசவோ,எழுதவோ,புரிந்து கொள்ளவோ முடியாது.ஆங்கிலம்,இந்தி சிறிது தெலுங்கு தெரிந்தவர் எப்படி தமிழகப்பிரதிநிதி.மாநிலங்கவைக்கு குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பொன் ராதாகிருஷ்ணன்,தமிழிசை,எச்.ராஜா,சிபி.ராதாகிருஷ்ணன் நாராயணன் என பாஜக வில் இருப்பவர்கள் யாருக்காவது பதவி கொடுத்திருக்கலாமே? பாஜகவில் தமிழர்களே இல்லையா?
இவர்கள் பாஜகவில் இருப்பதால் தமிழர்களாகத்தெரியவில்லையா.?
தேர்தலிலேயே நிற்காமல் இரணடாம் முறை நிர்மலா அமைச்சராகிறார்.
அதேபோல் மாநிலங்களைவைக்கு தமிழக பாஜகவினரை தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே.
மேலும் தமிழக பாஜக தமிழ்நாட்டில் பாஜகவில் இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கவில்லையென்றால் யாருக்கும் கொடுக்கக்கூடாது என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆகமொத்தத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பே இல்லாத ஒரு மக்களவை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு தனிமை படுத்தப்படாது என பாஜக கூறியுள்ளது.
ஆனால் 8 வழி,ஹைட்ரோ கார்பன்,என்று பாஜக அரசு விரைவு படுத்தும் திட்டங்கள் எல்லாம் பாஜக தமிழ்நாட்டை அழிக்கப்பார்ப்பதை உறுதியாக செய்கிறது என்பத்தைத்தான் காட்டுகிறது.
அமெரிக்க பிரதிநிதிதான்.
அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த்தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.மோடி-2 அரசாங்கத்தின் செயல்பாடுகள், அமெரிக்க அரசாங்கத்தின் இளைய பங்காளியாக இருப்பதில் மேலும் மோசமான முறையில் சரணாகதி அடையக்கூடிய விதத்தி லேயே அமைந்திருக்கப் போகிறது என்பதை அதன் நிகழ்ச்சிப் போக்குகள் தெளிவாகக் காட்டுகின்றன.
அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
இதனைத் தொடர்ந்து, நவீன தாராளமயப் பொருளாதார சீர்திருத்தங்கள் அமலாக்கமும் அதனால் மக்களின் வாழ்வாதாரங்கள் மீதான தாக்குதல்களும் மேலும் விரைவாக அதிகரித்திடும். 2014-19ஆம் ஆண்டுகளில், மோடி அரசாங்கமானது அமெரிக்காவுடன் போர்த்தந்திர ரீதியாகவும் (strategically) ராணுவரீதியாகவும் (militarily), சரணாகதி அடையக் கூடிய விதத்தில், தன்னுடைய வான்வழி மற்றும் நீர்வழிப் போக்கு வரத்துகளில் அமெரிக்காவுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்க ளில் கையெழுத்திட்டதன்மூலம் கணிசமான நடவடிக்கைக ளை எடுத்திருந்தது.
மேலும் அமெரிக்கா கட்டளையிட்டதற்கி ணங்க, ஜப்பான், ஆஸ்திரேலியா, இந்தியா மற்றும் அமெரிக் கா ஆகிய நான்கு நாடுகளுக்கிடையிலான ராணுவக் கூட்ட ணியிலும் இந்தியா தன்னை இணைத்துக் கொண்டது.
இத்தகைய நடவடிக்கைகள், நம் நாட்டின் அயல்துறைக் கொள்கையை, ஆசியப் பசிபிக் பிராந்தியத்தில் முற்றிலு மாக அமெரிக்காவின் பூகோள அரசியல் (geo-political) நலன்களுடன் ஒத்துப்போகக் கூடியவிதத்தில் மாற்றி அமைத்திருக்கிறது.
அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு, இந்தியா தனக்குத் தேவையான ராணுவத் தளவாடங்களை இதுநாள் வரையிலும் வாங்கிவந்த நாடுகளை, குறிப்பாக ரஷ்யாவை, உதறித்தள்ளிவிட்டு, அமெரிக்காவிடமிருந்து வாங்குவதற்கு நடவடிக்கைகள் எடுத்திருக்கிறது.
உள்நாட்டு விவகாரங்களைப் பொறுத்தவரை, மோடி அரசாங்கம் அமெரிக்காவின் பன்னாட்டு நிறுவனங்கள் மற்றும் அமெரிக்கப் பொருளாதார நலன்களுக்குச் சேவகம் செய்யும் விதத்திலேயே எண்ணற்ற நடவடிக்கைகளை எடுத்தது.
2018 ஜனவரியில் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர், “அமெரிக்கா முதல்” (“America First”) மற்றும் அமெரிக்கப் பாதுகாப்புவாதக் கொள்கைகள் (prote ctionist policies) அடிப்படையில் அமெரிக்கா, இந்தியா விற்கு அதிக அளவில் கட்டளைகளைப் பிறப்பித்தது.
சீனப் பொருள்களுக்கு 250 பில்லியன் டாலர்கள் வரி விதித்திருப்பதன் மூலம் அதற்கு எதிராக வர்த்தகப் போர் தொடங்கி இருக்கிறார் டிரம்ப்.
இவ்வரியை 325 பில்லியன் டாலர்களாக மேலும் உயர்த்தப் போவதாகவும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.
அமெரிக்கப் பொருள்களை சீனச் சந்தை யில் புழக்கத்திற்கு விடுவதற்கு மேலும் வாய்ப்புகளை அதி கப்படுத்திட வேண்டும் என்றும், அமெரிக்காவின் தொழில் நுட்பம் மற்றும் அறிவுச்சொத்து உரிமைகளுக்குப் பாதுகாப்பு கள் அளித்திட வேண்டும் என்றும் டிரம்ப் கோரியிருக்கிறார்.
டிரம்ப் இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை. இந்தி யாவுடனான வர்த்தகப் பற்றாக்குறை மறுதலிக்கப்பட வேண்டும் என்றும் இந்தியா, தன்னுடைய வரிகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும் என்றும், அமெரிக்கப் பொருள்களை அதிக அளவில் இறக்குமதி செய்திட வேண்டும் என்றும் கோரியிருக்கிறார்.
இதற்காக அவர், இந்தியாவிலி ருந்து அமெரிக்கா இறக்குமதி செய்திடும் அலுமினியம் மற்றும் உருக்கு ஆகியவற்றுக்கான வரிகளை முதல்கட்ட மாக உயர்த்தி இருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து, இந்தியா, அமெரிக்காவிற்கு பல்வேறு இனங்களை எவ்வித வரியு மின்றி ஏற்றுமதி செய்திட வேண்டும் என்றும் அமெரிக்கா கட்ட ளையிட்டிருக்கிறது. இவ்வாறு சுமார் 1900 வகையிலான பொருள்கள் எவ்வித வரிவிதிப்புமின்றி இந்தியாவிலிருந்து, அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.
எனினும் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மோடி அர சாங்கம் இதுவரை வாயே திறக்கவில்லை என்பது மட்டுமல்ல, இதற்கு எதிராக எவ்வித எதிர் நடவடிக்கையும் எடுத்திடவும் இல்லை.
ஆனால் இதற்கு முற்றிலும் எதிரானமுறையில் சீனா, அமெ ரிக்காவின் அடாவடித்தன நடவடிக்கைகளுக்கு எதிராக எதிர்வினையாற்றி இருக்கிறது.
சீனாவிற்குள் நுழையும் அமெரிக்காவின் பொருள்களுக்கு வரி விதித்திருப்பதன் மூலம் சீனா பதிலடி கொடுத்திருக்கிறது.
இந்தியா, அமெரிக்காவின் போர்த்தந்திரம் மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாக மாறியதன் விளைவாகவே மோடி அரசாங்கத்தால் அமெ ரிக்காவின் அடாவடித்தனங்களைத் துணிவுடன் எதிர்த்து நிற்க முடியாத பரிதாப நிலை ஏற்பட்டிருக்கிறது.
“மாபெரும் தேசியவாதி” என சித்தரிக்கப்படுகின்ற நரேந்திர மோடி, அமெரிக்கா பிறப்பிக்கும் கட்டளைகள் ஒவ் வொன்றையும் எதிர்ப்பேதும் கூறாது, கைகட்டி வாய் பொத்தி, ஏற்றுக் கொண்டிருக்கிறார்.
ஈரானிடமிருந்து எண்ணெய் வாங்கக்கூடாது என்று இந்தியாவிற்கு அமெரிக்கா கட்டளை யிட்டது.
அதனை எவ்வித முணுமுணுப்புமின்றி இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது.
இதனால் பொருளாதாரரீதியாக இந்தியா கடுமையாகப் பாதிக்கப்படும்.
ஏனெனில் சர்வதேச சந்தையின் விலையுடன் ஒப்பிடுகையில் இந்தியா, ஈரானி டமிருந்து மிகக் குறைந்த விலையில் எண்ணெய் வாங்கிக் கொண்டிருந்தது.
இதனைத்தொடர்ந்து இப்போது அமெ ரிக்கா, வெனிசுலாவிற்கு எதிராக தான் நடத்தும் பொருளா தார யுத்தத்தின் அடிப்படையில், இந்தியாவை, வெனிசுலா விடமிருந்தும் எண்ணெய் வாங்கக்கூடாது என்று கட்டளை பிறப்பித்திருக்கிறது.
இக்கட்டளைக்கும் செவிசாய்த்திட மோடி அரசாங்கம் துரிதகதியில் நடவடிக்கைகள் எடுத்துக்கொண்டி ருக்கிறது. இந்தியா, ரஷ்யாவிடமிருந்து டிரயம்ப் எஸ்-400 ஏவு கணை முறையை வாங்குவதன் காரணமாக, இந்தியா விற்கு, பொருளாதாரத் தடை எதையும் அமெரிக்கா விதித்திடக் கூடாது என்று இந்தியா, அமெரிக்காவிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டிருக்கிறது.
ஆயினும் இதற்கு அமெரிக்கா இணங்கிட வில்லை.
இந்தியாவிற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்போம் என மிரட்டிக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு நிர்ப் பந்திப்பதற்கு, மிக முக்கிய காரணம், அமெரிக்காவிடமி ருந்து மிகப்பெரிய அளவில் ராணுவத் தளவாடங்கள் இந்தியாவை வாங்க வைத்திட வேண்டும் என்பதேயாகும்.
(இந்தியா ரபேல் போர் விமானங்கள் 36 மட்டுமே வாங்கியதைத் தொடர்ந்து) இந்தியாவை தன்னுடைய எஃப்-21 போர் விமானங்களை வாங்க வைத்திடுவதற்காக அமெரிக்கா தொடர்ந்து நிர்ப்பந்தம் செய்து வருகிறது.
இதன் மூலமாக பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந் தத்தை இந்தியாவை மேற்கொள்ளச் செய்திட வேண்டும் என்று அமெரிக்கா விரும்புகிறது.
இவற்றை நிறைவேற்றுவதற்காக, அமெரிக்க அர சாங்கத்தின் அமைச்சர் மைக் பொம்பியோ ஜூன் மாதம் மூன்றாவது வாரத்தில் இந்தியா வருகிறார்.
மோடி மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமரானபிறகு அவர் விஜயம் செய்யும் முதல் பயணமாகும் இது. அமெரிக்காவின் வர்த்தக நலன்களை நிறைவேற்றுவதற்கு வழிசெய்யும் விதத்தில் இந்தியா மீது தேவையான நிர்ப்பந்தங்களை அவர் மேற் கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இந்தியா ரஷ்யாவிடமிருந்து ஏவுகணைகள் வாங்குவதற்கு ஈடு செய்யும் விதத்தில் மிக அதிக அளவில் அமெரிக்காவிட மிருந்து ராணுவத் தளவாடங்களை வாங்குவதற்கும், இந்தி யாவில் 5ஜி அலைக்கற்றை வரிசைகளை அறிமுகப் படுத்துவதற்காக இந்தியா சீனாவின் பகாசுரக் கம்பெனியான ஹுவாவேய் (Huawei)-யிடமிருந்து கருவிகள் வாங்குவ தைத் தடுத்திடவும் அவர் முயற்சிகளை மேற்கொள்வார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
மோடி-2 அரசாங்கம் தற்போது புதியதொரு அயல்துறை விவகாரங்கள் அமைச்சரைப் பெற்றிருக்கிறது. எஸ்.ஜெய்சங்கர் என்கிற இவர் முன்னாள் அயல்துறை செயலாளர்தான்.
அரசுத்துறை செயலாளர் ஒருவர் அமைச்சராக உயர்த் தப்பட்டிருப்பது இதுவே முதன் முறையாகும். ஜெய்சங்கர் அமெரிக்க ஆதரவு பேர்வழி என்பது அனைவரும் அறிந்த ஒன்றேயாகும்.
அயல்துறை விவகாரங்கள் அமைச்சகத்தில் அவர் அயல்துறை செயலாளராகப் பணியாற்றிய சமயத்தில், அமெரிக்காவுடன் போர்த்தந்திர உறவுகளை நெருக்கமாக்கிக் கொள்வதற்கு எந்த அளவிற்கு அவர் நடவடிக்கைகள் மேற்கொண்டார் என்பது எல்லோரும் அறிந்த ஒன்று.
டிரம்ப் நிர்வாகத்தின் அடாவடித்தனமான கட்டளைகள் அனைத்திற்கும் மோடி அரசாங்கம் இதுவரை யிலும் முழுமையாகக் கைகட்டி வாய்பொத்தி சரணாகதி அடைந்திருக்கும் அணுகுமுறையானது, இந்தியா அமெ ரிக்காவின் போர்த்தந்திர மற்றும் ராணுவ நடவடிக்கைகளில் அதன் இளைய பங்காளியாகத் தொடரும் என்பதையே காட்டு கிறது.
இவ்வாறு இந்தியாவின் நலன்கள் அமெரிக்க ஏகாதி பத்தியத்தின் நலன்களுக்கு சேவகம் செய்யக்கூடிய விதத்தில், அடகு வைக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.
பீப்பிள்ஸ் டெமாக்ரசி.
தமிழில்: ச.வீரமணி

பழிவாங்கப்பட்ட மாணவி!
அமித் ஷாவுக்கு கறுப்புக் கொடி காட்டிய, மாணவி நேகா யாதவை, இடைநீக்கம் செய்து, அலகாபாத் பல்கலைக்கழக நிர்வாகம் பழிவாங்கியிருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.அலகாபாத் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவர் மாணவி நேகா யாதவ்.
அரசியல் ஆர்வம் கொண்ட இவர், மாணவர் தொடர்பான விஷயங்களில் போராட்டங்களை நடத்தி வருபவர் ஆவார்.
அந்த அடிப்படையில், உத்தரப்பிர தேச மாநில பாஜக அரசு, மாணவர்கள் மீது வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்டு வருவதாகக் கூறி, கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை மாதம் போராட்டம் நடத்தினார். அப்போது, பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவின் கான்வாய் வாகனத்தை மறித்து கறுப்புக் கொடி காண்பித்தார்.
அமித்ஷா, மோடி, ஆதித்யநாத் மற்றும் பாஜக-வுக்கு எதிராக முழக்கங்களையும் அப்போது நேகா எழுப்பினார்.
இதற்காக வழக்கு பதிவுசெய்த போலீசார், நேகாவை கைது செய்தனர். பல்கலைக்கழக நிர்வாகமும் நேகா மீது குறிவைத்தது.
நேகாவுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், கல்வியாண்டு முடிந்ததும் உடனடியாக பல்கலைக்கழக விடுதியிலிருந்து வெளியேறுமாறு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தர விட்டது.
தேர்வுகளுக்கு படிக்க வேண்டியுள்ள நிலையில், தங்களை வெளியேறச் சொல்வது சரியல்ல என்று மாணவ- மாணவியர் எவ்வளவோ கூறியும் கேட்கவில்லை.
இவ்விஷயத்திலும் நேகா யாதவ், மாணவ - மாணவியரைத் திரட்டி போராட்டத்தில் இறங்கியுள்ளார்.
இந்நிலையிலேயே, பல்கலைக்கழக நிர்வாகமானது, நேகா யாதவை, தற்போது பல்கலைக்கழகத்திலிருந்து இடைநீக்கம் செய்துள்ளது.
விடுதி யிலிருந்தும் வெளியேற்றியுள்ளது. பல்கலைக்கழக தலைவரும், மாணவர் நல அதிகாரியும் அடுக்கடுக்காக அளித்த புகார்களின் பேரில் நேகா மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் காரணம் கூறியுள்ளது.
ஆனால், தன்மீதான குற்றச்சாட்டுக் களை நேகா யாதவ் மறுத்துள்ளார்.
“பல்கலைக்கழகத்தில் ஒழுங்கீன மாக நடந்துகொண்டதால், என்னை இடைநீக்கம் செய்துள்ளதாக கூறுகிறார்கள். உண்மை அதுவல்ல.
மாண வர் நலனுக்காகப் போராடி வருவதாலேயே, என் மீது இட்டுக்கட்டி பல குற்றச்சாட்டுக்கள் சுமத்தியுள்ளனர்.
இன்னும் குறிப்பாகச் சொன்னால், அமித் ஷாவுக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டிய பின்தான் என்னைக் குறிவைத்து பழிவாங்குகிறார்கள்” என்று நேகா யாதவ் தெரிவித்துள்ளார்.
மேலும், “நான் நுழைவுத் தேர்வில் முதல் மதிப்பெண் பெற்று, அதனடிப்படையிலேயே பல்கலைக் கழகத்தில் சேர்ந்துள்ளேன்.
ஆனால், பல்கலைக்கழக நிர்வாகத்திலுள்ள சிலர் எனது முன்னேற்றத்தைத் தடுக்க முயலுகின்றனர். நான் இங்குள்ள முறை கேடுகளை எதிர்ப்பதே அதற்குக் கார ணம்” என்றும் நேகா குறிப்பிட்டுள்ளார்.
“எதிர்காலத்தில் ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட மாட்டேன் என்று நேகா உறுதி அளித்தால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்ய தயார்” என்று பல்கலைக்கழகம் கூறியுள்ள நிலையில்,எந்த தவறும் செய்யாத நான் உறுதி யளிக்க வேண்டிய அவசியமில்லை என்று குறிப்பிட்டிருக்கும் நேகா, இவ்விஷயத்தை நீதிமன்றம் மூலம் எதிர்கொள்ளப் போவதாகவும் அறிவித்துள்ளார்.

கிரிஷ் கர்நாட்.
பிறந்தது மராத்திய மண்.
வாழ்ந்தது கர்நாடக மாநிலம்.
கலை இலக்கிய ஈடுபாட்டால் புகழ்பெற்றது இந்தியா முழுவதும். மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிற உள்ளங்கள் உலகம் முழுவதும்.
அவர் நாடக ஆக்குநர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் கிரிஷ் கர்நாட்.
81 வயதில் உடலின் பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பால் திங்களன்று (ஜூன் 10) காலையில் மரணமடைந்தார் அவர்.
ஆனால் பன்முகச் செயல்பாடுகள், அக்கறைகள், வெளிப்பாடுகள் மூலம் அவருக்குக் கிடைத்த அடையாளங்கள் மரணமில்லாதவை.
1938ல் அவர் பிறந்தது மகாராஷ்டிரா மாநிலத்தின் மாத்தேரென். பின்னர் வளர்ந்தது கர்நாடக மாநிலத்தின் சிர்சி, தர்வாத் பகுதிகள். இந்தக் கிராமங்களில் வளர்ந்த சிறுவயது நாட்களில் பாரம்பரியக் கூத்துகளையும், ஊர்விட்டு ஊர் செல்லும் நாடகக் குழுக்களின் தயாரிப்பு களையும் பார்த்து, மக்கள் முன் நேரடியாக நடித்துக் கதைகளைக் கூறுகிற நாடகங்கள் மீதும், நாடகக் கலைஞர்கள் மீதும் அவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது. அந்த காதல் பின்னர் அவரையே நாடக படைப்பாளியாக பரிண மிக்கச் செய்தது.
“கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் கன்னடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதோடு, சிறந்த நாடகங்களையும் நாவல்களையும் அந்த மொழியில் வழங்கி னார். அந்த நாடகங்கள் கர்நாடகத்தோடு நின்று விடாமல் இந்தியாவின் பல மொழிகளிலும் மறுபிறப்புப் பெற்றன.
நவீன நாடகத்தின் புதிய எல்லைகளை அவருடைய படைப்புகள் உரு வாக்கின. ‘யயாதி’ என்ற அவருடைய முதல் நாடகமே (1961) ஒரு புதிய நாடக அலையை ஏற்படுத்தியது” என்று கூறுகிறார் தமிழின் முற்போக்கு நாடக அரங்கில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவரான பிரளயன்.
தொன்மங் களையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தும் ‘துக்ளக்’ என்ற நாடகத்தை 1964ல் தந்தார் கர்நாட்.
அதைத்தான் பின்னர் தமிழில் ‘முகமது பின் துக்ளக்’ என்று கொச்சையான வடிவில் கொடுத்தார் சோ.
1971ல் அவர் படைத்த ‘ஹயவதனா’ இருத்தலியல் தொடர்பான கேள்விகளை முன்வைத்த மிக முக்கியமான நாடகம் என்று சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரு மான பிரளயன்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு, பன்முகப் பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பு இவற்றைக் கேள்விக்கு உள்ளாக்குகிற ‘ஜலகண்டர்’ என்ற நாடகத்தை கர்நாட் உருவாக்கியதை நினைவுகூர்கிறார் பிரளயன்.
இந்தியச் சமுதாயத்தில் ஊறிப் போன சாதிய மேலாதிக்கம், எதிர்க்கேள்வி களை எழுப்பிய பசவண்ணா கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் அது.
இவ்வாறு நாடகங்களில் அழுத்தமான சாதனைகளை நிகழ்த்திய அவர், திரைப் படத்திலும் கால் பதித்தார். நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புதிய மாற்றங் களுக்கு அவருடைய திரைக்கதைகள் இட்டுச் சென்றன. நவ யதார்த்த சினிமா என்ற புதிய திரைக்கலைப் போக்கு இந்தியாவில் தழைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கன்னடத்தின் மிக முக்கிய முற்போக்குப் படைப்பாளியான யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சமஸ்காரா’ நாடகத்திற்கு மிகச் சிறப்பான திரைக்கதை வடிவம் கொடுத்தார் கர்நாட்.
அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தி ரத்தில் நடிக்கவும் செய்தார். ஷியாம் பெனகல் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளோடு இணைந்து செயல்பட்டவர் அவர்.
பின்னர் இந்தித் திரையுலகிற்குச் சென்று ‘உத்ஸவ்’ என்ற திரை ரசிகர்களால் என்றென்றும் போற்றப்படுகிற படத்தை இயக்கினார்.
வங்காளம், தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ என்ற படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லன் ஆளுநராக நடித்தது பலருக்கும் நினைவிருக்கும். அப்படிப்பட்ட வணிகம் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர் தயங்கியதில்லை.
அதன் மூலம் கிடைக்கிற வருவாயிலிருந்து மாற்று சினிமாக்களுக்கும் நாடக ஆக்கங்களுக்கும் இலக்கிய முயற்சிகளுக்கும் செலவிட முடிகிறதே என்று கருதினார் அவர்.
“கர்நாடக நாட்டுப்புற வகையைச் சேர்ந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு, பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற் கான படிம வடிவிலான நாடகங்களைப் படைத்தவர் கிரிஷ் கர்நாட். மரபு சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து, இன்றைய நவீன மாற்றங்களுக்கான கண்ணோட்டங்களுக்கு ஏற்ற நாடகங்களாக உருவாக்கிக் கொடுத்த வர்,” என்று அவரது நாடகப் பங்களிப்பு பற்றியே முதலில் குறிப்பிடுகிறார் சாகித்ய அகாடமி விருதாளரான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில் நடித்தது மட்டுமல்ல, அந்த மொழிகளில் இலக்கியவாதிகள், கலைஞர்களோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் கர்நாட்.
அவர்களின் மூலமாக அந்த மொழி களில் கலை, இலக்கியங்கள் பற்றிய அறிவையும் ஈடுபாட்டோடு வளர்த்துக்கொண் டார்.
இதைக் குறிப்பிட்ட எஸ்ரா, தனக்கும் அவ ருக்கும் இருந்த நட்புறவைப் பெருமிதத் தோடு குறிப்பிட்டார்.
“ஒரு முறை மாற்று நாடகங்கள் பற்றி பேச்சு வந்தது. தமிழகத்தில் அத்தகைய நாடகங்கள் பெருமளவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பார்வையாளர்கள் முன் நிகழ்த்தப்படுபவை யாகவே இருக்கின்றன என்று கூறியபோது, ஒரு கனத்த மனதோடு அதைக் கேட்டுக் கொண்டார் கர்நாட்.
ஏனென்றால், கர்நாட கத்தில் மட்டுமல்லாமல் மும்பை போன்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவருடைய நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
தமிழகத்தில் நாடக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற தன் மனமார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தி னார்,” என்று எஸ்ரா தெரிவித்தார்.
கிரிஷ் கர்நாட் பற்றி நினைவுகூரும் எல்லோருமே, அவர் மதவெறிக்கு எதிராக வும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் வெளிப் படையாகக் களமிறங்கினார் என்ற தக வலைத் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.
“நாடகம், சினிமா, எழுத்துபண்பாடு சார்ந்த பிரச்சனைகள் கர்நாடகத்தில் எழுந்தபோ பதெல்லாம் கர்நாட் தயக்கமே இல்லாமல் தன் குரலை ஒலித்துவந்திருக்கிறார். கல்புர்கி கொலை செய்யப்பட்டபோது தெருவில் இறங்கி நீதி கேட்டு கவுரி லங்கேஷ் போராடியபோது, அவேசத்தோடு அதில் பங்கேற்றார்.
பின்னர் கவுரி லங்கேஷ் குரல் துப்பாக்கியால் ஒடுக்கப்பட்டபோது, எந்த அளவுக்குக் கலங்கி நின்றாரோ, அதே அளவுக்குக் கண்டன இயக்கத்திற்கும் அணி திரட்டினார் கிரிஷ் கர்நாட்,” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் எஸ்ரா.
மால்குடி டேய்ஸ் உள்ளிட்ட சில தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்த கர்நாட், நாடகங்களின் வழியாக இலக்கிய உலகில் பயணித்து அதற்கான அங்கீகாரங்களையும் பெற்றார்.
இலக்கியத்திற்கான ஞானபீட விருது, நாடகத்திற்கான சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்து, அவருடைய வாசகர்களையும் பார்வையாளர்களையும் பெருமைகொள்ளச் செய்தன.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி நிறுவன இயக்குநர், சங்கீத நாடக அகாடமி தலைவர், லண்டனில் உள்ள நேரு மைய இயக்குநர் போன்ற பொறுப்புகளிலும் திறம்படச் செயலாற்றியவர் கர்நாட்.
2017ல் சல்மான் கான் இயக்கிய ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற திரைப்படம்தான் அவர் கடைசியாக நடித்தது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் முதல் பாகமாக 2012ல் வந்த படத்திலும் கர்நாட் நடித்திருந்தார்.
இவ்வாறு இலக்கியம், நாடகம், திரைப்படம், அரசியல், சமுதாயம் என இயங்கிக்கொண்டே இருந்தவரை ஓய்வெடுக்க வைத்தது வயது சார்ந்த உடல்நலச் சிக்கல்கள்தான்.
அவரது மறை வையொட்டி கர்நாடக மாநில அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்க ளன்று விடுமுறை அறிவித்தது.
ஆயினும் அரசுமுறைப்படி இறுதி நிகழ்ச்சிகள் வேண்டாம் என்ற அவரது விருப்பத்தைக் குடும்பத்தினர் வலியுறுத்தியதால் அவரது குடும்பத்தினரும் கலை இலக்கிய நண்பர் களும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
மாற்றங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொள்கிற கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் சமூகச் செயல்பாட்டா ளர்களுக்கும் தனது படைப்புகளின் வாயிலாக மட்டுமல்லாமல், தனது வெற்றிகளின் மூலமாகவும் நம்பிக்கை அளித்துக்கொண்டே இருப்பார் கிரிஷ் கர்நாட்.
- அ. குமரேசன்
---------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
பாஜகவில் தமிழர்களே இல்லையா?வாழ்ந்தது கர்நாடக மாநிலம்.
கலை இலக்கிய ஈடுபாட்டால் புகழ்பெற்றது இந்தியா முழுவதும். மறைவுச் செய்தி அறிந்து வருந்துகிற உள்ளங்கள் உலகம் முழுவதும்.
அவர் நாடக ஆக்குநர், திரைப்பட நடிகர், எழுத்தாளர் கிரிஷ் கர்நாட்.
81 வயதில் உடலின் பல்வேறு உறுப்பு கள் செயலிழப்பால் திங்களன்று (ஜூன் 10) காலையில் மரணமடைந்தார் அவர்.
ஆனால் பன்முகச் செயல்பாடுகள், அக்கறைகள், வெளிப்பாடுகள் மூலம் அவருக்குக் கிடைத்த அடையாளங்கள் மரணமில்லாதவை.
1938ல் அவர் பிறந்தது மகாராஷ்டிரா மாநிலத்தின் மாத்தேரென். பின்னர் வளர்ந்தது கர்நாடக மாநிலத்தின் சிர்சி, தர்வாத் பகுதிகள். இந்தக் கிராமங்களில் வளர்ந்த சிறுவயது நாட்களில் பாரம்பரியக் கூத்துகளையும், ஊர்விட்டு ஊர் செல்லும் நாடகக் குழுக்களின் தயாரிப்பு களையும் பார்த்து, மக்கள் முன் நேரடியாக நடித்துக் கதைகளைக் கூறுகிற நாடகங்கள் மீதும், நாடகக் கலைஞர்கள் மீதும் அவருக்கு ஒரு காதல் ஏற்பட்டது. அந்த காதல் பின்னர் அவரையே நாடக படைப்பாளியாக பரிண மிக்கச் செய்தது.
“கொங்கணியைத் தாய்மொழியாகக் கொண்ட அவர் கன்னடத்தில் ஆழ்ந்த புலமை பெற்றதோடு, சிறந்த நாடகங்களையும் நாவல்களையும் அந்த மொழியில் வழங்கி னார். அந்த நாடகங்கள் கர்நாடகத்தோடு நின்று விடாமல் இந்தியாவின் பல மொழிகளிலும் மறுபிறப்புப் பெற்றன.
நவீன நாடகத்தின் புதிய எல்லைகளை அவருடைய படைப்புகள் உரு வாக்கின. ‘யயாதி’ என்ற அவருடைய முதல் நாடகமே (1961) ஒரு புதிய நாடக அலையை ஏற்படுத்தியது” என்று கூறுகிறார் தமிழின் முற்போக்கு நாடக அரங்கில் முன்னணிப் பாத்திரம் வகிப்பவரான பிரளயன்.
தொன்மங் களையும் வரலாற்றுப் பதிவுகளையும் மறுவாசிப்புக்கு உட்படுத்தும் ‘துக்ளக்’ என்ற நாடகத்தை 1964ல் தந்தார் கர்நாட்.
அதைத்தான் பின்னர் தமிழில் ‘முகமது பின் துக்ளக்’ என்று கொச்சையான வடிவில் கொடுத்தார் சோ.
1971ல் அவர் படைத்த ‘ஹயவதனா’ இருத்தலியல் தொடர்பான கேள்விகளை முன்வைத்த மிக முக்கியமான நாடகம் என்று சுட்டிக்காட்டுகிறார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் - கலைஞர்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரு மான பிரளயன்.
பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, ஒற்றைக் கலாச்சாரத் திணிப்பு, பன்முகப் பண்பாட்டுக்கு எதிரான வெறுப்பு இவற்றைக் கேள்விக்கு உள்ளாக்குகிற ‘ஜலகண்டர்’ என்ற நாடகத்தை கர்நாட் உருவாக்கியதை நினைவுகூர்கிறார் பிரளயன்.
இந்தியச் சமுதாயத்தில் ஊறிப் போன சாதிய மேலாதிக்கம், எதிர்க்கேள்வி களை எழுப்பிய பசவண்ணா கதையை அடிப்படையாகக் கொண்ட நாடகம் அது.
இவ்வாறு நாடகங்களில் அழுத்தமான சாதனைகளை நிகழ்த்திய அவர், திரைப் படத்திலும் கால் பதித்தார். நாடகத்தைப் போலவே சினிமாவிலும் புதிய மாற்றங் களுக்கு அவருடைய திரைக்கதைகள் இட்டுச் சென்றன. நவ யதார்த்த சினிமா என்ற புதிய திரைக்கலைப் போக்கு இந்தியாவில் தழைத்ததில் முக்கியப் பங்கு வகித்தவர்.
கன்னடத்தின் மிக முக்கிய முற்போக்குப் படைப்பாளியான யு.ஆர். அனந்தமூர்த்தி எழுதிய ‘சமஸ்காரா’ நாடகத்திற்கு மிகச் சிறப்பான திரைக்கதை வடிவம் கொடுத்தார் கர்நாட்.
அந்தப் படத்தில் முக்கியக் கதாபாத்தி ரத்தில் நடிக்கவும் செய்தார். ஷியாம் பெனகல் உள்ளிட்ட முக்கிய ஆளுமைகளோடு இணைந்து செயல்பட்டவர் அவர்.
பின்னர் இந்தித் திரையுலகிற்குச் சென்று ‘உத்ஸவ்’ என்ற திரை ரசிகர்களால் என்றென்றும் போற்றப்படுகிற படத்தை இயக்கினார்.
வங்காளம், தமிழ் உள்ளிட்ட பல மொழித் திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.
தமிழில் ஷங்கர் இயக்கிய ‘காதலன்’ என்ற படத்தில் கதாநாயகியின் தந்தையாக வில்லன் ஆளுநராக நடித்தது பலருக்கும் நினைவிருக்கும். அப்படிப்பட்ட வணிகம் சார்ந்த திரைப்படங்களில் நடிப்பதற்கு அவர் தயங்கியதில்லை.
அதன் மூலம் கிடைக்கிற வருவாயிலிருந்து மாற்று சினிமாக்களுக்கும் நாடக ஆக்கங்களுக்கும் இலக்கிய முயற்சிகளுக்கும் செலவிட முடிகிறதே என்று கருதினார் அவர்.
“கர்நாடக நாட்டுப்புற வகையைச் சேர்ந்த கதைகளை அடிப்படையாகக் கொண்டு, பழைய உலகத்திலிருந்து புதிய உலகத்திற் கான படிம வடிவிலான நாடகங்களைப் படைத்தவர் கிரிஷ் கர்நாட். மரபு சார்ந்த கதைகளைத் தேர்வு செய்து, இன்றைய நவீன மாற்றங்களுக்கான கண்ணோட்டங்களுக்கு ஏற்ற நாடகங்களாக உருவாக்கிக் கொடுத்த வர்,” என்று அவரது நாடகப் பங்களிப்பு பற்றியே முதலில் குறிப்பிடுகிறார் சாகித்ய அகாடமி விருதாளரான எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
தமிழ் உள்ளிட்ட வெவ்வேறு மொழிகளில் நடித்தது மட்டுமல்ல, அந்த மொழிகளில் இலக்கியவாதிகள், கலைஞர்களோடு நல்ல தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டார் கர்நாட்.
அவர்களின் மூலமாக அந்த மொழி களில் கலை, இலக்கியங்கள் பற்றிய அறிவையும் ஈடுபாட்டோடு வளர்த்துக்கொண் டார்.
இதைக் குறிப்பிட்ட எஸ்ரா, தனக்கும் அவ ருக்கும் இருந்த நட்புறவைப் பெருமிதத் தோடு குறிப்பிட்டார்.
“ஒரு முறை மாற்று நாடகங்கள் பற்றி பேச்சு வந்தது. தமிழகத்தில் அத்தகைய நாடகங்கள் பெருமளவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறிய அளவிலான பார்வையாளர்கள் முன் நிகழ்த்தப்படுபவை யாகவே இருக்கின்றன என்று கூறியபோது, ஒரு கனத்த மனதோடு அதைக் கேட்டுக் கொண்டார் கர்நாட்.
ஏனென்றால், கர்நாட கத்தில் மட்டுமல்லாமல் மும்பை போன்ற நகரங்களிலும் ஆயிரக்கணக்கான மக்கள் முன் அவருடைய நாடகங்கள் நடிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
தமிழகத்தில் நாடக மறுமலர்ச்சி ஏற்பட வேண்டும் என்ற தன் மனமார்ந்த விருப்பத்தை வெளிப்படுத்தி னார்,” என்று எஸ்ரா தெரிவித்தார்.
கிரிஷ் கர்நாட் பற்றி நினைவுகூரும் எல்லோருமே, அவர் மதவெறிக்கு எதிராக வும், கருத்துரிமைக்கு ஆதரவாகவும் வெளிப் படையாகக் களமிறங்கினார் என்ற தக வலைத் தவறாமல் குறிப்பிடுகிறார்கள்.
“நாடகம், சினிமா, எழுத்துபண்பாடு சார்ந்த பிரச்சனைகள் கர்நாடகத்தில் எழுந்தபோ பதெல்லாம் கர்நாட் தயக்கமே இல்லாமல் தன் குரலை ஒலித்துவந்திருக்கிறார். கல்புர்கி கொலை செய்யப்பட்டபோது தெருவில் இறங்கி நீதி கேட்டு கவுரி லங்கேஷ் போராடியபோது, அவேசத்தோடு அதில் பங்கேற்றார்.
பின்னர் கவுரி லங்கேஷ் குரல் துப்பாக்கியால் ஒடுக்கப்பட்டபோது, எந்த அளவுக்குக் கலங்கி நின்றாரோ, அதே அளவுக்குக் கண்டன இயக்கத்திற்கும் அணி திரட்டினார் கிரிஷ் கர்நாட்,” என்று நெகிழ்ச்சியோடு குறிப்பிட்டார் எஸ்ரா.
மால்குடி டேய்ஸ் உள்ளிட்ட சில தொலைக் காட்சித் தொடர்களிலும் நடித்த கர்நாட், நாடகங்களின் வழியாக இலக்கிய உலகில் பயணித்து அதற்கான அங்கீகாரங்களையும் பெற்றார்.
இலக்கியத்திற்கான ஞானபீட விருது, நாடகத்திற்கான சங்கீத நாடக அகாடமி விருது, பத்மஸ்ரீ, பத்மபூஷன் உள்ளிட்ட பல விருதுகள் அவரைத் தேடி வந்து, அவருடைய வாசகர்களையும் பார்வையாளர்களையும் பெருமைகொள்ளச் செய்தன.
இந்திய திரைப்படம் மற்றும் தொலைக் காட்சி நிறுவன இயக்குநர், சங்கீத நாடக அகாடமி தலைவர், லண்டனில் உள்ள நேரு மைய இயக்குநர் போன்ற பொறுப்புகளிலும் திறம்படச் செயலாற்றியவர் கர்நாட்.
2017ல் சல்மான் கான் இயக்கிய ‘டைகர் ஜிந்தா ஹை’ என்ற திரைப்படம்தான் அவர் கடைசியாக நடித்தது. மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்ற அந்தப் படத்தின் முதல் பாகமாக 2012ல் வந்த படத்திலும் கர்நாட் நடித்திருந்தார்.
இவ்வாறு இலக்கியம், நாடகம், திரைப்படம், அரசியல், சமுதாயம் என இயங்கிக்கொண்டே இருந்தவரை ஓய்வெடுக்க வைத்தது வயது சார்ந்த உடல்நலச் சிக்கல்கள்தான்.
அவரது மறை வையொட்டி கர்நாடக மாநில அரசு ஒரு நாள் துக்கம் அனுசரிக்கும் வகையில் திங்க ளன்று விடுமுறை அறிவித்தது.
ஆயினும் அரசுமுறைப்படி இறுதி நிகழ்ச்சிகள் வேண்டாம் என்ற அவரது விருப்பத்தைக் குடும்பத்தினர் வலியுறுத்தியதால் அவரது குடும்பத்தினரும் கலை இலக்கிய நண்பர் களும் முற்போக்குச் சிந்தனையாளர்களும் இறுதி அஞ்சலி செலுத்துகின்றனர்.
மாற்றங்களுக்காகத் தங்களை ஒப்படைத்துக்கொள்கிற கலை இலக்கியப் படைப்பாளிகளுக்கும் சமூகச் செயல்பாட்டா ளர்களுக்கும் தனது படைப்புகளின் வாயிலாக மட்டுமல்லாமல், தனது வெற்றிகளின் மூலமாகவும் நம்பிக்கை அளித்துக்கொண்டே இருப்பார் கிரிஷ் கர்நாட்.
- அ. குமரேசன்

தமிழர்களாகத்தெரியவில்லையா.?
பிரதமராக நரேந்திரமோடி இரண்டாவது முறையாக பதவியேற்றுக்கொண்டார்.
அமைச்சரவையில் இடம்பெறுபவர்களின் பெயர்களும் அறிவிக்கப்பட்டன.
இதில் தமிழ்நாட்டை சேர்ந்த ஒருவர்கூட இல்லை.

மொத்தம் 25 கேபினட் அமைச்சர்கள், 24 இணை அமைச்சர்கள், 9 தனிப்பொறுப்புகளுடன்கூடிய இணை அமைச்சர்கள் என மொத்தம் 58 அமைச்சர்கள் உள்ளனர்.
இதில் ஒருவர்கூட தமிழ்நாட்டில் வென்று சென்றவர்கள் இல்லை.
ஏற்கனவே தமிழ்நாட்டை பாஜக அரசு பிரித்து பார்க்கிறது, தனிமைபடுத்துகிறது என தமிழக மக்கள் நினைக்கத் தொடங்கிவிட்டனர்.
இதன் விளைவுதான் நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலித்தது.
அப்போதே பாஜகவின் தமிழக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ்நாட்டை பாஜக அரசு எப்போதும் பிரித்து பார்த்ததில்லை.
இங்கு அவ்வாறு பரப்பப்படுகிறது. என்றெல்லாம் கூறினார்.
இங்கு அந்த நிலைதான் இருக்கிறது, அதை சமாளிக்கதான் இவ்வாறு கூறுகிறார் என்று கூறினர்.
ஆனால் தற்போது அதை மீண்டும் உறுதிபடுத்தும்படி நிகழ்ந்துள்ளது.
தற்கு பாஜக மட்டும் காரணமில்லை. அதிமுகவிற்குள் நடந்த உட்கட்சி பூசல்களும்தான் காரணம். துணைமுதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அவரது மகனும், தேனி மக்களவை தொகுதி உறுப்பினருமான ரவீந்திரநாத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார்.
முதல்வர் எடப்பாடி பழனிசாமி வைத்திலிங்கத்திற்கு அமைச்சர் பதவி கேட்டார்.
இது அக்கட்சியின் உட்கட்சி பூசலானது.
இதில் அதிருப்தியான பாஜக யாருக்கும் பதவியில்லை எனக்கூறியது.
நிர்மலா சீதாராமன்,ஜெய்சங்கர் தமிழர்கள்தானே என்றார் பாஜகவினர் வினவு கிறார்கள்.
காவிரி நீரைத் தமிழகத்திற்க்கு கொடுக்க கூடாது என்று கர்நாடக மக்களவை உறுப்பினர்களுடன் சேர்ந்து மனு கொடுத்த,தற்போது அமைச்சராகப் பதவியேற்றுகையில் தாய்மொழி கன்னடத்திலேயே பதவியேற்றவர் நிர்மலா.மார்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்.
இவர் எப்படி தமிழக பிரதிநிதி.
அடுத்தவர் ஜெய்சங்கர் இவர் தமிழ்நாட்டு பக்கமே வந்ததில்லை.பிறந்தது வளர்ந்தது.வாழ்வது எல்லாம் டெல்லி.ஆந்திர பிராமணர்.தமிழ் பேசவோ,எழுதவோ,புரிந்து கொள்ளவோ முடியாது.ஆங்கிலம்,இந்தி சிறிது தெலுங்கு தெரிந்தவர் எப்படி தமிழகப்பிரதிநிதி.மாநிலங்கவைக்கு குஜராத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுகிறார்.
பொன் ராதாகிருஷ்ணன்,தமிழிசை,எச்.ராஜா,சிபி.ராதாகிருஷ்ணன் நாராயணன் என பாஜக வில் இருப்பவர்கள் யாருக்காவது பதவி கொடுத்திருக்கலாமே? பாஜகவில் தமிழர்களே இல்லையா?
இவர்கள் பாஜகவில் இருப்பதால் தமிழர்களாகத்தெரியவில்லையா.?
தேர்தலிலேயே நிற்காமல் இரணடாம் முறை நிர்மலா அமைச்சராகிறார்.
அதேபோல் மாநிலங்களைவைக்கு தமிழக பாஜகவினரை தேர்ந்தெடுக்க வேண்டியதுதானே.
மேலும் தமிழக பாஜக தமிழ்நாட்டில் பாஜகவில் இருப்பவர்களுக்கு பதவி கொடுக்கவில்லையென்றால் யாருக்கும் கொடுக்கக்கூடாது என கோரிக்கை விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
ஆகமொத்தத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பே இல்லாத ஒரு மக்களவை உருவாகியுள்ளது.
தமிழ்நாடு தனிமை படுத்தப்படாது என பாஜக கூறியுள்ளது.
ஆனால் 8 வழி,ஹைட்ரோ கார்பன்,என்று பாஜக அரசு விரைவு படுத்தும் திட்டங்கள் எல்லாம் பாஜக தமிழ்நாட்டை அழிக்கப்பார்ப்பதை உறுதியாக செய்கிறது என்பத்தைத்தான் காட்டுகிறது.

----------------------------------------------------------------------------------------------------------------------