சுயரூபம்..

 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் .சத்தீஸ்கர், மிசோரமில் வாக்குப்பதிவு தொடங்கியது.

தமிழகத்தில் சனி, ஞாயிறு நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 லட்சம் பேர் விண்ணப்பம்.

மசோதாக்களை கிடப்பில் போட்டதை எதிர்த்து பஞ்சாப் அரசு வழக்கு." ஆளுநர்கள் ஆட்சியாளர்கள் அல்ல.மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்பதை உணர வேண்டும்":- உச்ச நீதிமன்ற  நீதிபதி .

விருதுநகர் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

"ரூ.10 நாணயத்தை வாங்க மறுப்பது சட்டப்படி குற்றம்.கடைகள் மீது புகாரளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்."ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை.

பிற மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் டிசம்பர் 16க்குப் பின் தமிழ்நாட்டில் இயங்க அனுமதி இல்லை. போக்குவரத்துத் துறை.

தீபாவளிக்கு மறுநாள் நவ.13-ம் தேதி திங்கள்கிழமை விடுமுறை.பதிலாக18 ம் தேதி வேலை.-தமிழ்நாடு அரசு அறிவிப்பு.


இரண்டு  நோபல் பரிசு பெற்ற

மேரி கியூரி.

மேரி க்யூரி, 1867ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வார்சாவில் ஒரு பள்ளி ஆசிரியருக்கு மகளாக பிறந்தவர். 

இவரது பெயர் மரிய ஸ்க்லோடோவ்ஸ்கி என்பதாகும். இவர் உள்ளூர் பள்ளிகளில் படித்தார். அவரது தந்தையிடம் சில அறிவியல் பயிற்சிகளைப்பெற்றார். 

இவர் மாணவர்கள் புரட்சி நிறுவனத்தில் இணைந்து பணியாற்றினார். ரஷ்ய ஆதிக்கத்தில் இருந்த போலந்து நாட்டின் பகுதியான வார்சாவில் இருந்து புறப்பட்டார். ஆஸ்திரிய ஆதிக்கத்தில் இருந்த கிராகவுக்கு சென்றார்.

1891ம் ஆண்டு பாரிஸ் சென்று அவரது கல்வியை தொடர்ந்தார். 

அங்கு இயற்பியல், கணித அறிவியல் இரண்டும் கற்றார். அங்கு பியரி க்யூரியை சந்தித்தார். அவர் இயற்பியல் பேரசிரியர். அவர்கள் திருமணம் செய்துகொண்டார்கள். 1903ம் ஆண்டு முனைவர் பட்டம பெற்றார். 

1906ம் ஆண்டு பியரி இறந்துவிட்டார். பின்னர் இவர் இயற்பியல் பேராசிரியர் ஆனார்.

 ஒரு பெண் பேராசிரியர் ஆவது இதுதான் முதல் முறை. பாரிஸ் பல்கலைக்கழகத்தின் ரேடியம் மைய கியூரி ஆய்வகத்தின் இயக்குனராகவும் நியமிக்கப்பட்டார். 1914ம் ஆண்டு இம்மையம் துவங்கப்பட்டது.

அவர் கணவருடனான அவரது ஆரம்ப கால ஆய்வுகள், பல கடினமான நிலையில் மேற்கொள்ளப்பட்டது. 

ஆய்வக வசதிகள் குறைவாக இருந்தது. வாழ்வாதாரத்துக்காக அவர்கள் ஆசிரியர் பணி செய்ய நேரிட்டது. 

ஹென்றி பெக்குயிரீல் 1896ம் ஆண்டு ரேடியோஆக்டிவிட்டியை கண்டுபிடித்த பின்னர் கியூரிகள் அதன் மீது அதிக ஆர்வம் கொண்டார்கள். பொலோனியத்தையும், ரேடியத்தையும் பிரித்தெடுப்பதை கண்டுபிடித்தார்கள். 

அவர் கண்டுபிடித்ததற்கு அவரது நாட்டின் பெயர் சூட்டப்பட்டது. 

 மேரி, அவரது வாழ்நாள் முழுவதும் வலிகளை போக்குதை வலியுறுத்தினார். முதலாம் உலகப்போரில் அவரது மகள் ஐரினின் உதவியோடு, அங்குள்ளவர்களின் பிரச்னைகளை தீர்க்கும் பணியில் ஈடுபட்டார். 

அவர் அறிவியலுக்காகவே தனது வாழ்நாளை அர்ப்பணித்தார். அவரது நகரில் ரேடியோஆக்டிவிட்டி ஆய்வகத்தை நிறுவுவதில் பெரும் பங்காற்றினார். 

1929ம் ஆண்டு அமெரிக்க அதிபர் அவருக்கு 50 ஆயிரம் டாலர் பரிசளித்தார். 

அதில் வார்சா ஆய்வகத்துக்கு ரேடியம் வாங்கினார். மேரி க்யூரி உலகின் அறிவியலாளர்கள் பலர் போற்றுகிறார்கள். பல புத்தகங்களை எழுதியுள்ளார். இயற்பியல் வேதியியல் இரண்டுக்கு நோபல் பரிசுகளை பெற்றுள்ளார்.

 நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணியும், இரண்டு நோபல் பரிசுகளை பெற்ற முதல் பெண்மணியும் இவர்தான். பிரான்சில் 1934ம் ஆண்டு ஜீலை 4ம் தேதி இறந்தார்.

-----------------------------------------------


ஊழல்வாதிகளைக் காப்பாற்றும் ஆளுநர் சுயரூபம்..

தமிழ்நாடு அரசின் செயல்பாடுகளுக்கு அரசியல் உள்நோக்கத்தோடு ஆளுநர் ஆர்.என்.ரவி தடை போட்டு வருவதற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குத் தாக்கல் செய்துள்ளது. 

அதில் மிக மிக முக்கிய மானது, அ.தி.மு.க. ஆட்சி காலத்து ஊழல் அமைச்சர்களை ஆர்.என்.ரவி காப்பாற்றி வருவது ஆகும். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க அனுமதி மறுப்பதன் மூலமாக ஊழல்வாதிகளுக்கு சட்டரீதியான பாதுகாப்பை ஆளுநர் ரவி கொடுத்து வருகிறார்.

அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்தவர்கள் செய்த ஊழல் முறைகேடுகளை விசாரணை நடத்தி அம்பலப்படுத்தி வருகிறது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை.

 முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பணம் ரூ.2,87,98,650/, தங்கநகைகள் 6.637 கிலோகிராம், சுமார் 13.85 கிலோகிராம் வெள்ளி மற்றும் ஆவணங்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அதில் கணக்கில் வராத பணம் ரூ.2,65,31,650/–-, வங்கி பெட்டக சாவி மற்றும் வழக்கிற்கு தொடர்புடைய ஆவணங்கள் ஆகியன கைப்பற்றப்பட்டன.

போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்த எம்.ஆர்.விஜய பாஸ்கர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.25 லட்சத்து 56 ஆயிரம் கைப்பற்றப்பட்டுள்ளது. உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த வேலுமணி வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் ரூ.13 லட்சமும், ரூ.2 கோடிக்கான வைப்புத் தொகை, நிலப்பதிவு ஆவணங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன.

வணிகவரித்துறை அமைச்சராக இருந்த வீரமணி வீட்டில் ரூ.34 லட்சம் பணம், 5 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டுள்ளது. ரூ.1,80,000 மதிப்பிலான அந்நியச் செலாவணி டாலர் கைப்பற்றப்பட்டுள்ளது. 

623 சவரன் தங்க நகைகள், 47 கிராம் வைர நகைகள், 7.2 கிலோ வெள்ளிப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. முன்னர் இருந்ததை விட 646 சதவிகிதம் இவரது சொத்து அதிகமானதாக போலீஸார் கணக்கிட்டுள்ளனர்.

மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த டாக்டர் விஜயபாஸ்கர், வருமானத்துக்கு அதிகமாக ரூ.27 கோடி சம்பாதித்துள்ளதாக போலீஸார் கணக்கிட்டுள்ளார்கள். 

ரூ.23 லட்சம் பணமும், 4.87 கிலோ தங்கமும், 136 கனரக வாகனங்களின் ஆவணமும் அவரது வீட்டில் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.

மின்சார அமைச்சராக இருந்த தங்கமணி ரூ.4 கோடி மதிப்பிலான தொகையை வருமானத்துக்கு அதிகமாகச் சேர்த்ததாக ரெய்டு நடத்தப்பட்டு கணக்கில் வராத பணம், சான்று பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மேற்கொண்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் மீது ஏற்கனவே குட்கா ஊழல் நிலுவையில் உள்ளது.

 குட்கா வியாபாரிகளிடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு விற்பனை செய்ய அனுமதித்ததாக சி.பி.ஐ. தொடர்ந்த வழக்கு இது. இந்த வழக்கில் நீதிமன்ற விசாரணையை தொடங்க சி.பி.ஐ.–-க்கு அனுமதி அளிப்பதற்கான கோப்பு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் இருக்கிறது.

முன்னாள் அ.தி.மு.க. அமைச்சர்களான டாக்டர் சி.விஜய பாஸ்கர் மற்றும் பி.வி.ரமணா ஆகியோர் குட்கா / மாவா விநியோகிப்பாளர்களிட மிருந்து சட்ட விரோதமாகப் பணம் பெற்ற குற்றச்சாட்டு தொடர்பாக உயர்நீதிமன்ற உத்தரவுப்படி கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) வழக்குப் பதிவு செய்து விசாரித்து, இவர்கள் மீது நீதிமன்ற விசாரணை தொடங்குவதற்கு இசைவு ஆணையை சி.பி.ஐ. கோரியது.மாநில அமைச்சரவையும் அந்த இசைவு ஆணை கோரும் சி.பி.ஐ.-–யின் கோரிக்கையை ஆளுநர் அலுவலகத்துக்கு 12.09.2022 அன்று அனுப்பியது. 

ஆனால் இதுவரையில் இந்த கடிதம் தொடர்பாக எவ்வித பதிலும் கிடைக்கப் பெறாமல் முன்னெப்போதும் இல்லாத வகையில் தாமதப்படுவதால் இந்த வழக்கில் எவ்வித மேல் நடவடிக்கையும் எடுக்க முடியவில்லை.

சி.பி.ஐ. நீதிமன்றம் தொடர்ந்து கண்டித்து வருகிறது. “அரசின் அனுமதி கிடைக்காவிட்டால் இந்த வழக்கையே எப்படி நடத்துவது?” என்று சி.பி.ஐ. நீதிமன்ற நீதிபதி கேள்வி எழுப்பி இருக்கிறார்.

இரண்டு நிகழ்வுகளில், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம், வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சராக இருந்த கே.சி.வீரமணி மற்றும் போக்குவரத்துத்துறை அமைச்சராக இருந்த எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் மீது நீதிமன்ற விசாரணையை தொடங்கிட இசைவு ஆணை கோரியது.

இந்தக் கோரிக்கைகளுக்கு மாநில அமைச்சரவை அனுமதி அளித்து அதற்கான கடிதங்களை முறையே 12.09.2022 மற்றும் 15.05.2023 ஆகிய தேதிகளில் ஆளுநர் அலுவலகத்திற்கு அனுப்பியது. இந்த கோரிக்கை கடிதங்களும் நீண்ட காலமாக நிலுவையில் உள்ளன.

•கே.சி. வீரமணி மீதான ஊழல் வழக்கு கோப்புகள் 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 12 ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதில் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது.

•எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீதான ஊழல் வழக்கு தொடர்பான கோப்புகள் கடந்த மே 15 ஆம் தேதி அன்றே ஆளுநர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அதிலும் லஞ்ச ஒழிப்புத் துறையின் இறுதி விசாரணை அறிக்கை முழுமையாக இருக்கிறது.

 இந்த கோப்பைப் பெற்றுக் கொண்டதாக ஆளுநர் மாளிகை ஒப்புதல் கடிதம் கொடுத்திருப்பதாக சட்ட அமைச்சர் எஸ்.ரகுபதி அப்போதே சொன்னார்.

ஆனால் இவை அனைத்தையும் மறைத்து வருகிறார் ஆர்.என்.ரவி. அவரது உண்மையான குணத்தையும் நோக்கத்தையும் இது காட்டுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?