வானளாவிய அதிகாரம் ?
"உன் சாத்திரத்தை விட.. உன் அறிவு பெரிது.." என்ற பெரியாரின் வரிகளைச் சுட்டிக்காட்டி, சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 'பெரியாரும் அறிவியலும்' என்ற தலைப்பில் அறிவியல்பூர்வமாக பேசிபாராட்டைப் பெற்றார் இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை.
69 அடியை எட்டிய வைகை அணை - 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை .
ராகிங் கொடுமை .கோவை பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் 7 பேர் கைது.
"பாஜவின் மூன்று வேட்பாளர்களாகச் செயல்படும் அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை!"- மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர்.
தூத்துக்குடி அருகே விபத்தில் உயிரிழந்த மாலுமியின் உடல் உறுப்புகள் தானம்.. முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி.
கோடநாடு வழக்கு; எடப்பாடியிடம் ஆவணங்களை சேகரிக்க வழக்கறிஞர் ஆணையர் நியமனம்- உயர் நீதிமன்றம் ஆணை.
வானளாவிய அதிகாரம் ?
வானளாவிய அதிகாரம் தங்களுக்கு இருப்ப தாக கருதிக் கொண்டு வானத்துக்கும், பூமிக்கும் தாவிக்குதிக்கும் ஆணவ ஆளுநர்களின் தலை யில் உச்சநீதிமன்றம் ஓங்கிக் குட்டு வைத்துள் ளது.
மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப் பட்ட சட்டமுன்வரைவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் சண்டித்தனம் செய்யும் ஆளுநர்க ளை உச்சநீதிமன்றம் கண்டித்துள்ளது
இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலை மையிலான அமர்வு, ஆளுநர்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் அல்ல என்றும், மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மாநில அரசுகள் உச்சநீதிமன்றத்தை நாட வேண்டியி ருப்பது பொருத்தமானதல்ல; ஆளுநர்கள் தங்க ளது போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் மிகச் சரியாக சுட்டிக் காட்டியுள்ளது.
ஆளுநர்கள் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க மறுப்பது குறித்து தமிழ்நாடு அரசும், கேரள அரசும், உச்சநீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்குக ளையும் சேர்த்து விசாரிப்பதாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியுள்ளது.
ஆன்லைன் லாட்டரி மோசடிக்கு தடை விதிக்கும் மசோதா தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட நிலையில் ஆளுநர் ரவி அதற்கு ஒப்புதல் அளிக்காமல் காலதாமதம் செய்தார்.
உச்சநீதிமன்றம் தலையிட்டு கேள்வி எழுப்பிய பிறகே அந்த மசோதாவிற்கு ஆளுநர் ஒப்புதல் அளித்தார்.
அதேபோல தெலுங்கானா மாநில அரசும் உச்சநீதிமன்றத்தை நாடிய பிறகே அந்த மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராசன் சில மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.
ஒன்றிய பாஜக அரசு ஆர்எஸ்எஸ் கருத்தி யல் கொண்டவர்களையே ஆளுநர்களாக நிய மிக்கிறது. அவர்கள் அரசியல் சட்டக் கடமை களை மறந்துவிட்டு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்க ளாக மாறி குறுக்குச்சால் ஓட்டி குழப்பம் விளை விக்கின்றனர்.
பஞ்சாப் ஆளுநருக்கு உச்சநீதிமன்றம் கூறி யுள்ள அறிவுரை தமிழகம், கேரளம், தெலுங்கா னா, மேற்குவங்கம், புதுதில்லி ஆளுநர்களுக்கும் பொருந்தும். இனிமேலாவது அவர்கள் தங்க ளுக்குரிய பணியை மட்டும் செய்ய முன் வர வேண்டும்.
-----------------------------------
மொட்டையடித்தவர்கள் கைது
கோவை அவிநாசி சாலையில் இயங்கி வரும் பிஎஸ்ஜி கல்லூரியில் படிக்க கூடிய முதலாம் ஆண்டு மாணவர் ஒருவரை கடந்த 6ஆம் தேதி அதே கல்லூரியில் ஹாஸ்டலில் படிக்கும் மாணவர்கள் சிலர் மது குடிக்க பணம் கேட்டு மிரட்டியதாக தெரிகிறது. அப்போது அந்த மாணவர் பணம் தர மறுக்கவே 7 சீனியர் மாணவர்களும் சேர்ந்து முதலமாண்டு மாணவருக்கு மொட்டை அடித்து துன்புறுத்தியது தெரிய வந்துள்ளது
.இந்த சம்பவம் மாணவரின் பெற்றோருக்கு தெரியவரவே காவல்துறையில் அளித்த புகாரின்பேரில் 7 மாணவர்களையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக கல்லூரி மாணவர்களுக்கு ராகிங் பிரச்னை உள்ளதா என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.