A T M அட்டையிலேயே காப்பீடு!
நாகப்பட்டினம், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, காரைக்கால் ஆகிய 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்குள் மிதமான மழை பெய்ய வாய்ப்பு- சென்னை வானிலை ஆய்வு மையம்.
ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட 10 மசோதாக்கள் மீண்டும் நிறைவேற்றம்: சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்த தனி தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது.
வடக்கு காசா கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில் ‘ஹமாசின் ஒசாமா பின்லேடன்’ யாஹ்யா சின்வார் எங்கே?.. இஸ்ரேல் ராணுவம் வெளியிடும் அறிக்கைகளின் மீது சந்தேகம்
சீனாவுடன் உறவு?. இந்திய ராணுவம் வெளியேற மாலத்தீவு அதிபர் கோரிக்கை.
எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படை நேற்று கைது செய்த பாம்பன் மீனவர்கள் 22 பேர் விடுவிப்பு.
விவரம் தெரியாமல்,புரியாமலே பாஜகவுக்காக ,அதிமுக வெளிநடப்பு ஓபிஎஸ் கிண்டல்.
ஜனநாயக விரோதம்.. நீதிமன்றம் குட்டியதும் நாடகம் ஆடுகிறார்.ஆளுநர் ஆர்.யன்.ரவியை சாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
வடக்கு காசா கைப்பற்றப்பட்டதாக கூறி இஸ்ரேல் ராணுவம் வெளியிடும் அறிக்கைகளின் மீது சந்தேகம்.
இந்திய ராணுவம் தற்போது பயன்படுத்தும் ஆளில்லா தாக்குதல் விமானங்கள்: சென்னை எம்.ஐ.டி.யில் தயாரிப்பு.
டெபிட் கார்ட் இருந்தாலே காப்பீடுதான்
நம்மில் பலரும் ஆயுள் காப்பீட்டுத் திட்டம் அல்லது விபத்து காப்பீட்டுத் திட்டம் குறித்து கண்டிப்பாகத் தெரிந்து வைத்திருப்போம்.
அதெல்லாம் நாம் தவணை முறையில் பணம் செலுத்தி நமக்கு விபத்து நேரும்போது அல்லது இறப்பு நிகழும்போது அதன் பலன்களை நாமோ அல்லது நமது குடும்பமோ பெற்றுக் கொள்ளும் வகையிலானது.
ஆனால், நீங்கள் வங்கியின் ஏடிஎம் கார்டு வைத்திருந்தாலே போதும் உங்களுக்கு இந்தக் காப்பீடுகள் கிடைக்கும் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். அதற்கென தனியே கட்டணம் செலுத்த தேவையில்லை. அதன் முழு விவரங்களை இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
டிஜிட்டல் யுகத்தில் பெரும்பாலான பணப் பரிமாற்றம் இணையம் வழியாகவே நடைபெறுகிறது. சாதாரண உள்ளூர் கடைகள் தொடங்கி உலகச் சந்தை வரை டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை முக்கியமான அங்கமாக மாறிவிட்டது. அதில் பெரிய பங்கு வகிப்பது டெபிட் கார்டுகள் (Debit Cards) என்றழைக்கப்படும் ஏடிஎம் கார்டுகள் தான்.
இந்தியாவில் மட்டும் வங்கித் துறையில் நூற்றுக்கணக்கான பொதுத் துறை, தனியார் துறை, சர்வதேச வங்கிகள் இயங்கி வருகின்றன.
அதைத் தாண்டி குறு வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களும் வங்கி சார்ந்த அலுவல்களைச் செய்து வருகின்றன.
கடந்த செப்டம்பர் மாத ஆர்பிஐ (RBI) அறிவிப்பின்படி, இந்த வங்கிகளில் 966 மில்லியன் ஏடிஎம் கார்டுகள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.
இதில், ஒரே நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட அட்டைகளை வைத்திருக்கும் கணக்கும் அடக்கம்.
இந்தியா முழுவதும் உள்ள பொதுத்துறை வங்கிகளில் தொடங்கி தனியார் வங்கிகள் வரை அந்தந்த வங்கிகளின் விதிகளுக்கு ஏற்ப பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. அதில் ஒன்றுதான் ஏடிஎம் கார்டு என்று அழைக்கப்படும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள்.
இவற்றின் வகையைப் பொறுத்து ஏடிஎம் இயந்திரங்கள் வழியாக பணத்தை எடுத்துக் கொள்ளும் வசதி மற்றும் வெவ்வேறு தேவைகளுக்காக அவற்றைப் பயன்படுத்தி பணப் பறிமாற்றம் செய்தல் ஆகிய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.ஆனால், அதையும் தாண்டி இந்த கார்டுகளின் மூலம் பயனர்களுக்கு மற்றொரு ஆதாயமும் உள்ளது.
அதுதான் “டெபிட் கார்டு காம்ப்ளிமென்ட்ரி இன்சூரன்ஸ் திட்டம்” (Complimentary Insurance Cover) என்ற பெயரில் வழங்கப்படும் விபத்து மற்றும் ஆயுள் காப்பீட்டு திட்டம்.
இதர காப்பீட்டுத் திட்டங்களைப் போல மாதாந்திர அல்லது வருடாந்திர தவணை பணமெல்லாம் இதற்கு கட்டத் தேவையில்லை.
மாறாக, நீங்கள் பயன்படுத்தும் டெபிட் கார்டுகளுக்காக வருடந்தோறும் ஒரு தொகை உங்களது வங்கியால் பிடித்தம் செய்து கொள்ளப்படும்.
இதிலிருந்து ஒரு பகுதி குறிப்பிட்ட பயனரின் சார்பில், வங்கி பிற காப்பீட்டு நிறுவனங்களில் நிர்வகித்து வரும் காப்பீடு கணக்கிற்கு சென்றுவிடும்.
இந்த இன்சூரன்ஸ் பணத்தையே நீங்கள் விபத்து மற்றும் உயிரிழப்பு சமயங்களில் பெற்றுக் கொள்ளலாம்.
ஆனால், டெபிட் கார்டு பயன்படுத்தும் பெரும்பான்மையான மக்களுக்கு இதுகுறித்த விவரம் ஏதும் தெரியாதது ஆச்சரியம் .
இந்த விபரங்களை வங்கிகள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவிக்காமல் மூடி மறைத்து வைத்திருப்பதுதான் காரணம்.
பொதுமக்கள் மட்டுமல்ல பல வங்கி ஊழியர்களுக்கே இப்படியொரு காப்பீட்டு திட்டம் இருப்பத்தே தெரியாது.
இதனால் மிக அரிதாகவே வங்கிக் கணக்காளர்கள் இந்தக் காப்பீட்டுத் தொகையைக் கோரி வங்கிகளில் விண்ணப்பிப்பதாகவும், வங்கிகளும் அதுகுறித்த பயிற்சியை ஊழியர்களுக்கு வழங்குவதில்லை .
பெரும்பான்மையான வங்கிகள் தங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இது போன்ற இன்சூரன்ஸ் இருப்பது குறித்துச் சொல்வது இல்லை.
பொதுவாக வங்கிக்குச் சென்று அதற்கான விண்ணப்பங்களைப் பெற்று அதில் கேட்கப்பட்டுள்ள விவரங்களை முறையாகப் பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களோடு சேர்த்து சமர்ப்பித்தால் போதும்.
அதை வங்கியில் இன்சூரன்ஸ் தொடர்பான பணிகளைக் கையாளும் அதிகாரிக்கு அனுப்புவர்.
அவர் அவற்றைச் சரிபார்த்து அதற்கான வழிமுறைகள் செய்வார். அதன்பிறகு அந்த விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு, பிறகு அந்த பயனாளருக்குப் பணம் வழங்கப்படும் .
என்னென்ன காரணங்களுக்காக இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்படும் என்பதற்கு ஒவ்வொரு வங்கியும் வெவ்வேறு விதமான விதிமுறைகளைக் கொண்டுள்ளன .
முதலில் வங்கிக் கணக்கு செயல்பாட்டில் இருக்க வேண்டும். விபத்து நடந்த தேதியில் இருந்து 3 மாதங்களுக்குள் சம்மந்தப்பட்ட நபர் அல்லது அவர் சார்ந்தவர்கள் அந்த வங்கியில் விண்ணப்பிக்கத் தவறிஙிட்டு, காலம் தாழ்த்தி விண்ணப்பித்தால் நிராகரிக்கப்படலாம்.
அதேபோல், இறப்பு சான்றிதழ், வங்கி கணக்கு தொடர்பான ஆவணங்கள், அரசு அடையாள அட்டைகள் மற்றும் முதல் தகவல் அறிக்கை உள்ளிட்ட சில ஆவணங்கள் வங்கியால் கேட்கப்படும். இவற்றைச் சமர்ப்பிக்கத் தவறினாலும் உங்கள் விண்ணப்பம் நிராகரிக்கப்படலாம்.
அதேபோல் அந்த வங்கியின் விதிமுறைப்படி சம்மந்தப்பட்ட வங்கிக் கணக்குதாரர் குறிப்பிட்ட கால அளவிற்குள் அந்த டெபிட் கார்டை ஒருமுறையாவது பயன்படுத்தியிருக்க வேண்டும்.
விமான விபத்துகளில் பாதிக்கப்பட்டவர் அந்த டெபிட் கார்டை பயன்படுத்தி விமான பயணச்சீட்டை வாங்கியிருக்க வேண்டும். இந்த விதிமுறைகள் அனைத்தும் வங்கிக்கு வங்கி வேறுபடும்.
"அதுவும் அரசு நிறுவனமாக இருந்தால் அரசுக்கு அதில் ஒரு பகுதி வரி உள்ளிட்ட வழிகளில் சென்று விடும்.
இதே தனியார் நிறுவனமாக இருந்தால் மொத்த பணமும் அவர்களுக்கு லாபம்தான்.
அரசு காப்பீடுக் கழக(LIC) திட்டத்தின் கீழ் இன்சூரன்ஸ் நிறுவனத்திற்குப் பணம் வந்தாலும் அது ஒட்டுமொத்த வரவாக கணக்கு வைக்கப்படும்.
இந்நிலையில் வெவ்வேறு காப்பீடு திட்டங்களின் மூலம் பணம் கோரும் மக்களுக்கு அந்தப் பணத்திலிருந்து எடுத்துக் கொடுக்கப்படும்.
ATMஅட்டையை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.இந்த விபரங்கள் தெரியாத மக்களுக்கு அதாவது நண்பர்கள்,உறவினர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.