சுரங்க விபத்து.
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் சுரங்கப்பாதை ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடிந்து விழுந்ததில் 40 தொழிலாளர்கள் சிக்கிக் கொண்டனர்.
இடிந்து விழுந்த பகுதி சுரங்கப்பாதையின் வாயிலிருந்து 200-300 மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இது ஒரு தளர்வான பாறை காரணமாக நடந்திருக்கலாம், இது கட்டுமானத்தின் போது தெரியவில்லை.
இது உடைந்த அல்லது உடையக்கூடிய பாறையாக இருந்திருக்கலாம், அதாவது, பல மூட்டுகள் கொண்ட பாறை அதை பலவீனமாக்கியிருக்கலாம்.
மற்றொரு காரணம் நீர் கசிவு ஆகும்.
நீர், காலப்போக்கில் தளர்வான பாறைத் துகள்களை அரித்து, சுரங்கப்பாதையின் மேற்புறத்தில் ஒரு வெற்றிடத்தை உருவாக்குகிறது, அதை பார்க்க முடியாது. இருப்பினும், இவை பொதுவான கருத்துகள் மட்டுமே, மேலும் இந்த வழக்கில் ஒரு விரிவான விசாரணையின் முடிவுகளுக்காக நாம் காத்திருக்க வேண்டும்.
பாறையில் சுரங்கங்கள் தோண்டப்படும் வழிகள் யாவை?
அடிப்படையில் இரண்டு வழிகள் உள்ளன: டிரில்லிங் மற்றும் வெடித்தல் முறை (DBM), மற்றும் சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்களை (TBMs) பயன்படுத்துவதன் மூலம்.
DBM என்பது பாறையில் துளையிட்டு, அதில் வெடிபொருட்களை நிரப்புவதை உள்ளடக்கியது. இதில் வெடிமருந்து வெடிக்கும்போது, பாறை உடைகிறது.
சுரங்கப்பாதை துளையிடும் இயந்திரங்கள் (TBM) உடன் ஒரு சுரங்கப்பாதையை உருவாக்குவது, முன்னர் சொன்ன முறையை விட விலை அதிகம், ஆனால் மிகவும் பாதுகாப்பானது.
இதில் TBM இயந்திரம், முன்பக்கத்திலிருந்து (சுழலும் கத்தியை பயன்படுத்தி) பாறையைத் துளைக்கும், அதேநேரம் ப்ரீகாஸ்ட் கான்கிரீட்களை நிறுவும்.
இந்தியாவில், இறக்குமதி செய்யப்பட்ட TBM இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த இயந்திரங்கள் ஒவ்வொன்றும் ரூ.200 கோடி வரை செலவாகும்.
தோண்டுதல் முறையானது நிலப்பரப்பின் வகையைச் சார்ந்ததா?
மிக உயரமான மலைகள் வழியாக துளையிடுவதற்கு TBM இயந்திரங்களை பயன்படுத்த முடியாது.
TBM இயந்திரங்களை பயன்படுத்தி 1,000-2,000-மீட்டர் உயரமுள்ள மலை வழியாக வெற்றிடத்தை உருவாக்குவது - அதிக அழுத்தத்தின் காரணமாக பாறையின் ஒரு பகுதி திடீரென விழும் போது- பாறை வெடிப்புக்கு வழிவகுக்கிறது.
பாறை 400 மீட்டர் உயரம் வரை இருக்கும் போது TBM இயந்திரங்கள் சிறந்தவை. டெல்லி மெட்ரோவிற்கான நிலத்தடி சுரங்கங்கள் TBM இயந்திரங்கள் பயன்படுத்தி தோண்டப்பட்டன. மறுபுறம், ஜம்மு & காஷ்மீர் மற்றும் உத்தரகாண்ட் உள்ளிட்ட இமயமலை போன்ற இடங்களில், டிரில்லிங் மற்றும் வெடித்தல் முறை (DBM) பொதுவாக பயன்படுத்தப்படுகிறது.
இமயமலைப் பகுதி சுரங்கப்பாதையில் செல்ல முடியாத அளவுக்கு மிகவும் உடையக்கூடியதா?
புவியியல் ரீதியாகப் பார்த்தால், இமயமலைகள் 40 மில்லியன் முதல் 50 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவாகின, ஆனால் அவை இன்னும் இளமையாக உள்ளன . மேலும் அவை இந்திய டெக்டோனிக் தட்டுக்கும் யூரேசிய டெக்டோனிக் தட்டுக்கும் இடையிலான மோதலால் இன்னும் வளர்ந்து வருகின்றன. (collision between the Indian tectonic plate and the Eurasian tectonic plate)
பாறை உண்மையில் ஒரு சுரங்கப்பாதைக்கு மிகவும் உடையக்கூடியதாக இருக்கும் சில திட்டுகள் உள்ளன. ஆனால் மற்ற இடங்களில், பாறை மிகவும் நன்றாக உள்ளது.
நான் இமயமலைப் பகுதியில் பணியாற்றியுள்ளேன். பெரிய பிரச்சினைகளை எதிர்கொள்ளாமல் சுரங்கப்பாதைகளை அமைத்துள்ளேன். மிகச் சிறிய தோல்விகளை நாங்கள் கண்டோம், அவை உடனடியாக சரிசெய்யப்பட்டன. எனவே, சில இடங்களில் பாறை உடைந்து அல்லது உடையக்கூடியதாக இருந்தாலும், அதை சரிசெய்ய தொழில்நுட்ப தீர்வுகள் உள்ளன.
மேலும், சுரங்கப்பாதைகள் மலை அல்லது மலையின் சூழலியலை அழிக்காது. சுரங்கப்பாதை அமைக்கும் தொழில்நுட்பம் சுமார் 200 ஆண்டுகள் பழமையானது, சரியாக செயல்படுத்தப்பட்டால், சுரங்கப்பாதைகள் ஆபத்தானவை அல்ல.
ஒரு சுரங்கப்பாதை அமைப்பதன் முக்கிய அம்சம் என்ன?
முதல் மற்றும் முக்கிய விஷயம் என்னவென்றால், ஒரு சுரங்கப்பாதை உருவாக்க முன்மொழியப்பட்ட பாறையை முழுமையாக ஆராய்வது.
எந்தத் திட்டுகள் உடையக்கூடியவை அல்லது திடமானவை என்பதைச் சரிபார்க்க பாறையின் வழியாக நில அதிர்வு ஒளிவிலகல் அலைகளை (seismic refraction waves) அனுப்புவதன் மூலம் இது செய்யப்படுகிறது.
இந்தியாவில், பொறியாளர்கள் பாறையில் ஒரு துளை தோண்டி, ஒரு மாதிரியைப் பிரித்தெடுத்து, பெட்ரோகிராஃபிக் பகுப்பாய்விற்கு (petrographic analysis) அனுப்புகிறார்கள்.
(microscopic examination to determine the mineral content, grain size, texture and other features that have a bearing on the mechanical behaviour of the sample).
ஒரு சுரங்கப்பாதை உருவாக்கப்படும்போது பாறை அதிக சுமையை தாங்க முடியுமா என்பதை தீர்மானிக்க இத்தகைய ஆய்வுகள் உதவுகின்றன.
பாறை அடுக்கு மற்றும் அதன் வலிமை நன்றாக இருந்தால், அழுத்தங்களின் மறுபகிர்வு மூலம் முழு சுமையையும் தாங்கிக் கொள்கிறது, மேலும் அது நிலையானதாக இருக்கும்.
ஒரு நிலையான சுரங்கப்பாதை அமைக்க என்ன செய்ய வேண்டும்?
முதலில், நாம் இடத்தை கண்காணிக்க வேண்டும். பல்வேறு இடங்களில் பாறை எவ்வாறு செயல்படுகிறது என்பதை சரிபார்க்க வேண்டியது அவசியம். ஸ்ட்ரெஸ் மீட்டர் மற்றும் டிஃபார்மேஷன் மீட்டர் போன்ற கருவிகளால் கண்காணிப்பு செய்யப்படுகிறது.
பின்னர், சுரங்கப்பாதைக்கு வழங்கப்பட்ட ஆதரவுகள் போதுமானதாக சோதிக்கப்பட வேண்டும்.
ஷாட்கிரீட் (பாறையின் பாகங்கள் விழாமல் தடுக்கும் கான்கிரீட்), ராக் போல்ட் (பாறை தோண்டுவதை உறுதிப்படுத்தும் நீண்ட அங்கர் போல்ட்), ஸ்டீல் ரிப்ஸ், பீம்ஸ், டனல் பைப் அம்பிரெல்லா உள்ளிட்ட பல்வேறு வகையான ஆதரவுகள் இருக்கலாம், அவை ஸ்டீல் பைப்ஸ் பயன்படுத்தி கட்டமைக்கப்படுகின்றன, அவை மிகவும் உடையக்கூடிய பாறைகளை நிலையாக வைத்திருக்க முடியும்.
ஒரு சுயாதீன புவியியலாளர் நிபுணர் சுரங்கப்பாதையை பரிசோதனைக்காகவும், சாத்தியமான தோல்விகளை சரிபார்க்கவும் வருகை தருவதும் முக்கியம்.
அவர் பாறை நிற்கும் நேரத்தையும் தீர்மானிக்க வேண்டும். அதாவது ஒரு பாறை எந்த ஆதரவும் இல்லாமல் நிலையாக இருக்கும் காலம்.
நிற்கும் நேரத்திற்குள் பாறைக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது.
மிக முக்கியமாக, இந்தியாவில், கட்டுமானத்தைத் தொடங்குவதற்கு முன், ஆய்வுகளுக்கு அதிக நேரம் செலவிட வேண்டும். தற்போது, ஒரு சுரங்கப்பாதை திட்டத்தின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் ஒரே நேரத்தில் செய்யப்படுகிறது.