கொதித்தெழுந்த தேர்தல் ஆணையம்
இந்தியவிடுதலைப் போராட்டத்தியாகியும் கம்யூனிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா தனது 102வது வயதில் காலமானார்.
தோழர் சங்கரய்யாவிற்கு மதுரை பல்கலைக்கழகத்தால் தமிழ்நாடு அரசு கௌரவ டாக்டர் பட்டம் கடந்த மாதம் வழங்க இருந்தது. அதற்கு அனுமதி வழங்காமல் கீழ்த்தரமாக அரசியல் செய்தார் தமிழ்நாடு ஆளுநர் என்பது குறிப்பிடத்தக்கது
காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 909 ஏரிகளில் 99 ஏரிகள் முழு கொள்ளளவு எட்டி உள்ளது.
'ம.பி யில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அயோத்தி ராமர் கோயிலில் இலவச தரிசனம்: அமித்ஷா .இலவசத்தை எதிர்த்த சங்கிகள் இப்போ ராமரையே இலவசமா க் காட்டப் போறாங்க.அதுவும ம.பி,க்கார்ர்களுக்கு மட்டும்தான்.
“நான் போனால் யார் சிகிச்சை கொடுப்பார்கள்?” காஸாவிலிருந்து பாலஸ்தீன மருத்துவரின் கடைசி வார்த்தைகள்.
தமக்கை அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்.
உச்ச நீதிமன்ற உத்தரவு எதிரொலி தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நிதி விவரத்தை இன்றைக்குள் தர கெடு.
பட்டாசுவெடித்தபடி பைக்கில் சாகசம். ‘ கொத்தாக தூக்கிய போலீஸ்.திருச்சி எஸ்பி பரிந்துரைத்த 12 பேரில் 7 பேரின் ஓட்டுநர் உரிமம அதிரடி நீக்கம்.
குளிர்காலத்திற்கு முன்பு டிசம்பரில்மீண்டும் கோவிட் பாதிப்பு அதிகரிக்கலாம்.. சீன நிபுணர்கள் எச்சரிக்கை.
'உங்களுக்கு சந்தேகம்னா என்கூட வாங்க.நீங்கள் கூப்பிடும் இடம்மே நேரடியாக சென்று ஆய்வு செய்வோம்.' பொய் குற்றசாட்டு கூறுவதாக இபிஎஸ்-ஐ அலறவிடும் அமைச்சர் மா.சுப்பிரமணியன்.
ஆம் ஆத்மி கட்சி, தொழிலதிபர் கெளதம் அதானி மற்றும் மோடி ஆகியோர் உள்ள காணொலியைப் பகிர்ந்தது. அதைத் தொடர்ந்து, கட்சியினர் அடுத்த நாள் ஒரு படத்தையும் வெளியிட்டனர். பிரதமர் மக்களுக்காக வேலை செய்வதை விட தொழிலதிபருக்காக வேலை செய்கிறார் என்று குற்றம் சாட்டினார்.இதனால் கொதித்தெழுந்த தேர்தல் ஆணையம் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை கூறியதற்காக ஆம் ஆத்மி கட்சிக்கு நோட்டீஸ்அனுப்பியுள்ளது.நவம்பர16க்குள் விளக்கம் கொடுக்க தேர்தல் ஆணையம் கெடு விதித்துள்ளது.