இனவெறி மட்டுமில்லை

 டிஎன்பிஎஸ்சி தலைவர் தவிர பிற பணி நியமனங்கள் தொடர்பான கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டதாக உச்ச நீதிமன்றத்தில் ஆளுநர் தரப்பு தகவல்.

நீதிகட்சி பிறந்தநாள்.அமைச்சர் உதயநிதி வாழ்த்து!

ஈராயிரம் ஆண்டுகளாக அசைக்க முடியாதிருந்த அதிகாரக் கோட்டையின் மதிற்சுவரில் முதல் கீறல் விழுந்த நாள்! நவம்பர் 20 - நீதிக் கட்சி பிறந்த நாள்.நாணயமான எதிரிகள், நாணயமற்ற நரிகள், துரோகங்கள், ஒடுக்குமுறைகள், மிரட்டல்கள், தியாகங்கள், வெற்றிகள் என 100 ஆண்டுகளுக்கும் மேலாக எல்லாவற்றையும் கடந்து, இன்றும் அடித்தட்டு மக்களின் உரிமைகளுக்காக துடிப்புடன் களத்தில் நிற்கும் திராவிட இயக்கத்தின் உறுதியான அடித்தளம் நீதிக்கட்சி!வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - பெண்ணுரிமை - கல்வி உரிமை என நீதிக்கட்சி காட்டிய லட்சிய பாதையில், கொள்கை உறுதியோடு நடைபோடுகிறது நம் தி.மு.கழகம்.நீதிக்கட்சி தொடங்கி வைத்த இந்தப் பயணம் அநீதி வீழும் வரை தொய்வின்றித் தொடரும். 

10 மசோதாவையும் ஜனாதிபதிக்கு அனுப்ப அதிகாரம் இல்லை.ஒப்புதல் தர வேண்டியது கட்டாயம் . ஆளுநருக்கு அறிவுரைத்த உச்சநீதிமன்றம்.

மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், தெலுங்கானா, மிசோரம் மாநிலங்களில் கணக்கில் வராத ரூ.1,760 கோடி பறிமுதல்

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் விஜயபாஸ்கர், பி.வி.ரமணா மீதான குட்கா முறைகேடு வழக்கில் குற்ற நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல்.

நாங்க உத்தரவு போட்டதுக்கு அப்புறம்தான் மசோதாக்களை திருப்பி அனுப்பியிருக்க.. 2 வருஷமா என்ன பண்ணிட்டு இருந்த மேதகுரவி??   - உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி.


கஞ்சா மற்றும் செல்போன்களின் புழக்கத்தை தடுக்க 9 மத்திய சிறைகளை ‘டிரோன்’ மூலம் கண்காணிக்க முடிவு: தமிழக சிறைத்துறை நடவடிக்கை.

வங்கக் கடலில் வளிமண்டல காற்று சுழற்சி நீடிப்பு 13 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு. வானிலை ஆய்வு மையம் தகவல்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த3,543 பயனாளிகளுக்கு பட்டா.முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார் .
நாட்டின் அனைத்து செல்வங்களையும் பெரிய தொழிலதிப நண்பர்களுக்கு வழங்க வேண்டும் என்பதே பாஜகவின் கொள்கை:-பிரியங்கா காந்தி  தாக்கு.

6 எம்.பி.பி.எஸ், 122 பி.டி.எஸ் மாணவர்கள் சேராமல் காலியாக உள்ளது;-.மருத்துவ மாணவர் சேர்க்கைக் குழு.

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - நாடாளுமன்றத் தேர்தல் வியூகம் எனத் தகவல்.

தஞ்சையில் நண்பனை கொலை செய்து வீட்டிற்குள்ளேயே புதைத்த நண்பர். சிசிடிவியால் வெளியானது பரபரப்பு.

இனவெறி மட்டுமே காரணமில்லை!


பாலஸ்தீனத்தின் காசாவிலிருந்து தினந்தோ றும் வெளியாகும் எண்ணற்ற காணொலிக் காட்சி கள் பிரதான ஊடகங்களில் இடம் பெறுவதில்லை. 

நகரமே சுடுகாடாக காட்சியளிக்கிறது. எங்கு  பார்த்தாலும் உயிரற்ற உடல்கள். பள்ளிகள், மருத்துவமனைகள், அகதிகள் முகாம்கள் அனைத்தும் ரத்தம் தோய்ந்த பிணவறைகளாக மாறிப் போயுள்ளன. 

 இடிபாடுகளுக்கிடையே தனது மகள்களை தேடும் தந்தைகள்; மொத்தக் குடும்பத்தினரும் கொல்லப்பட்டிருக்க தான் மட்டும் தப்பிப் பிழைத்த கைக்குழந்தைகள்; தாயையும், தம்பி யையும் இழந்து தானும் ரத்தவெள்ளத்தில் துடிக்கும் சின்னஞ்சிறு சகோதரிகள்; குண்டு வீச்சில் காயமடைந்த குழந்தைகளுக்கு சிகிச் சையளித்துக் கொண்டிருக்கும் போது அந்தக் குழந்தைகளுக்கு இடையே உயிரற்றுக் கிடக்கும் ஒரு சிறுமி தனது மகள் என்பதை அறிந்து கதறித் துடிக்கும் மருத்துவ தந்தை;  அப்பாவும், தங்கையும் இறந்து கிடக்க, கதறித் துடிக்கும் தம்பியை அழுகையை அடக்கிக்  கொண்டே அணைத்துக் கொள்ளும் சின்னஞ் சிறு அக்கா... 

எத்தனை எத்தனை பயங்கரக் காட்சிகள். 
ஒவ்வொன்றும் நமது நெஞ்சை உலுக்கு கின்றன. கண் கலங்கச் செய்கின்றன. 

கதறி அழ வைக்கின்றன. ஒவ்வொருவரும் நமது குழந்தை யாக, நமது தாயாக, தந்தையாக, சகோதரியாக எண்ண வைக்கின்றன.

உலகமே பார்த்துக் கொண்டிருக்க, நம் கண் முன்பே 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் உட்பட சுமார் 15 ஆயிரம் பேரின் உயிரை உருவி விட்டது இஸ்ரேல். 

யாருமே, ஒன்றுமே செய்ய முடிய வில்லையே? 

ஐ.நா.சபை, அரபு நாடுகள், உலகின் மிகப் பெரிய நாடுகள், அவற்றின் கோடிக்கணக் கான மக்கள் வீதியில் இறங்கிப் போராடினா லும், ஒரு துளி அளவிற்குக் கூட இஸ்ரேல் இறங்கி வரவில்லையே? 

இஸ்ரேலிய ஆட்சியாளர்களின் யூத இனவெறி மட்டுமா இதற்கு காரணம்? இல்லை.

 பாலஸ்தீனம் ஓர் எண்ணெய் பூமி. மொத்த எண்ணெய்யும் முதலாளித்துவ ஏகாதிபத்தியத் தின் லாப வேட்கைக்கு தேவை. அதனால்தான் ஏகாதிபத்தியம், இஸ்ரேலை ஏவிவிட்டு பாலஸ்தீன மக்களை வேட்டையாடுகிறது. 

லாபம், மேலும் லாபம், மேலும் மேலும் லாபம் என்பதைத் தவிர வேறு எதுவும் அறியாத மூலதனம், ஈவிரக்கமற்றது.

காட்டுமிராண்டித் தனமானது.

ரத்த வெறி பிடித்தது.

அதற்கு மனித நேயம் கிடையாது.குழந்தைகளைகொஞ்சத்தெரியாது.

லாப வேட்டைக்கு எதிராக எவர் நின்றாலும் ரத்த வெள்ளத்தில் ஆழ்த்தும்.

-------------------------------------------------

பல்கலைக் கழகத்தில் இந்துவெறி.

கடந்த 17-ம் தேதி திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது.

அப்போது ‘ஜெய் ஸ்ரீ ராம்’ என்று எழுதப்பட்ட வாசகம் பொருந்திய பேனர் வைக்கப்பட்டிருந்தது. இது தற்போது பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்களை எழுப்பி வருகிறது.

மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்துகிறது என்று பல்கலை நிர்வாகத்திற்கு எதிராக பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


மிழ்நாட்டில் ஒரேயொரு மத்திய பல்கலைக்கழகமாக, தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் திருவாரூர் அருகே நீலக்குடி பகுதியில் அமைந்துள்ளது. இதனை மறைந்த முன்னாள் முதலமைச்சரும், திமுக தலைவருமான கலைஞர் அவர்களின் பெரும் முயற்சியில் கிடைத்தது.


இந்த சூழலில் இங்கு நடைபெற்ற தீபாவளி கொண்டாட்டத்தின்போது, 'ஜெய் ஸ்ரீ ராம்' வாசகம் எழுதப்பட்ட பேனர் உள்ளிட்டவை ஆங்காங்கே காணப்பட்டுள்ளது.


மேலும் மேடைகளில், கோலங்களில் எல்லாம் இந்த வாசகம் இடம்பெற்றுள்ளது. அதோடு புரோகிதர்களை அழைத்து வந்து மந்திரங்கள் சொல்லி பூஜை செய்து தீபாவளி கொண்டாட்டம் நடைபெற்றது. பல்கலைக்கழகத்தின் இந்த செயலுக்கு தற்போது கண்டனங்கள் குவிந்து வருகிறது. அதிலும் அந்த பூஜையில் பல்கலைக்கழகத்தின் துணை வேந்தர் எம்.கிருஷ்ணா கலந்துகொண்டுள்ளார்.


இந்த நிலையில், துணை வேந்தர் கிருஷ்ணாவுக்கு எதிராகவும், மாணவர்கள் மத்தியில் மதத்தை புகுத்திய பல்கலைக்கழக நிர்வாகத்துக்கு எதிராகவும் கண்டனங்கள் குவிந்து வருகிறது.


தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தீபாவளி கொண்டாட்ட புகைப்படங்கள் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், "பல்கலைக்கழகங்களில் அரசின் செலவில் நடைபெறும் மாணவர்களுக்கான இது போன்ற கொண்டாட்ட நிகழ்வுகளில், மதத்தை புகுத்தியது முற்றிலும் தவறு. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது" என்று இந்திய மாணவர் சங்கம் கண்டனங்களை தெரிவித்துள்ளது.

----------------------------------------------


அதிகாரம் இழந்த ஆர்.யன்.ரவி

தமிழ்நாடு சட்டமன்றம் மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் தராமல் ஆளுநர் நிலுவையில் வைக்க முடியாது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு, ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்க உத்தரவிட வேண்டும். ஒப்புதல் அளிக்க ஆளுநருக்கு கால வரம்பு நிர்ணயிக்கப்பட வேண்டும்’ எனக்கோரி உச்சநீதிமன்றத்தில் மாநில அரசு சார்பில் மனு தாக்கல் ெசய்யப்பட்டது.

 இம்மனுவானது உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு கடந்த 10ம் தேதி நடத்திய விசாரணையின் போது, ஆளுநரின் செயல்பாடு தொடர்பான விவகாரம் மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக கூறியது. 

மேலும், ‘அரசியல் சாசனம் 200வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றி அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில், மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும்.


அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். ஒன்றிய அரசின் உள்துறை செயலாளர் மற்றும் ஆளுநரின் செயலாளர், இம்மனுவுக்கு பதிலளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர். 

இதேபோன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த மற்றொரு மனுவில், ‘தமிழ்நாடு ஆளுநர், தமிழ்நாடு பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் நியமனங்களில் தேவையில்லாத குழப்பங்களை ஏற்படுத்துகிறார்.

 சட்டத்திற்கு புறம்பான விஷயங்களை செய்கிறார். மாநில அரசின் கருத்துக்களை ஏற்க மறுக்கிறார்’ என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது. 

இதையடுத்து வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இந்த விவகாரம் தொடர்பாக ஒன்றிய உள்துறை அமைச்சகம் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்ததோடு, தமிழக ஆளுநரின் நிலைப்பாட்டை கேட்டு தெரிவிக்குமாறு ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவுக்கு கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது.


இந்த சூழலில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த பல்கலைக்கழகங்கள் தொடர்பான 10 மசோதாக்களுக்கு, தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பினார்.


 அதையடுத்து தமிழ்நாடு அரசு சார்பில், கடந்த 18ம் தேதி சட்டமன்ற சிறப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. அதில், ஆளுநரால் திருப்பி அனுப்பப்பட்ட பல்கலைக்கழகங்கள் ெதாடர்பான 10 மசோதாக்களும் மீண்டும் நிறைவேற்றப்பட்டு, மீண்டும் அவற்றை ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. 

இதனிடையே, நேற்று மாலை ஆளுநர் ஆர்.என்.ரவி திடீரென டெல்லி புறப்பட்டு சென்றார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்டோரை, ஆளுநர் சந்திப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


 மேலும் சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை மேற்கொள்வார் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், ஆளுநருக்கு எதிரான தமிழக அரசின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் இன்று தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் விசாரணைக்கு வந்தது.


அப்போது தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் முகுல் ரோத்தகி, வில்சனும், ஆளுநர் சார்பில் ஒன்றிய அரசின் வழக்கறிஞர்கள் வெங்கட்ரமணி, துஷார் மேத்தா ஆகியோர் ஆஜராகினர். தமிழ்நாடு அரசின் சார்பில், ‘ஒவ்வொரு முறையும் ஆளுநருக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தை நாட முடியாது.


 எந்த காரணத்தையும் கூறாமல் மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி உள்ளார். 8 கோடி மக்களுக்கு பதில் அளிக்க வேண்டிய நிலையில் அரசு உள்ளது. ஆளுநரின் செயலால் தமிழ்நாட்டு மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பது தொடர்பாக ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் காலக்கெடு வழங்கி உத்தரவிட வேண்டும்’ என்று கூறப்பட்டது. தொடர்ந்து ஆளுநர் தரப்பில், ‘சமீபத்தில் உச்ச நீதிமன்றம் பிறப்பித்த நோட்டீஸ் எங்களுக்கு இன்னும் வந்து சேரவில்லை.


இருந்தும் இவ்வழக்கு தொடர்பான சிறு குறிப்பு அறிக்கையை தயாரித்து வந்துள்ளோம்’ என்று கூறப்பட்டது.

 அப்போது தலைமை நீதிபதி அமர்வு பிறப்பித்த உத்தரவில், ‘நோட்டீஸ் ஏன் உங்களுக்கு இன்னும் கிடைக்கவில்லை என்பதை பதிவாளரிடம் அணுகி கேட்டுக் ெகாள்ளுங்கள்’ என்றார். தொடர்ந்து ஆளுநர் தரப்பு வழக்கறிஞரின் சிறு குறிப்பு அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 


மேலும் கேரள ஆளுநருக்கு எதிரான அம்மாநில அரசு தொடர்ந்த வழக்கில், வரும் வெள்ளிக்கிழமைக்குள் உள்துறை அமைச்சகம், ஆளுநர் தரப்பு பதிலளிக்க வேண்டும் என்று கூறி வழக்கை உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது. 


தமிழக அரசின் வாதத்தை தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட் கூறுகையில், ‘ஆளுநர் மூன்று ஆண்டாக மசோதாவை கிடப்பில் போட்டது ஏன்? தமிழ்நாடு ஆளுநர் என்ன ெசய்து கொண்டிருக்கிறார்? மாநில அரசு உச்ச நீதிமன்றத்தை நாடும் அளவிற்கு ஆளுநர் அலட்சியமாக செயல்படுவதா? மாநில ஆளுநருக்கு மூன்று அதிகாரங்கள் உள்ளன.


அதாவது மாநில அரசு நிறைவேற்றும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும். அல்லது நிராகரிப்பதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

 அல்லது குடியரசு தலைவருக்கு மசோதவை அனுப்பி வைக்க வேண்டும். 


ஆனால் இந்த மூன்றையும் ஆளுநர் செய்யவில்லை. 

மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்களை ஜனாதிபதிக்கு அனுப்பும் அதிகாரத்தை ஆளுநர் இழந்துவிட்டார். நிறுத்தி வைக்கிறேன் என ஒரே ஒரு வாக்கியத்தை குறிப்பிட்டு 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியிருந்தார் ஆளுநர். 

காரணம் கூறாமல் திருப்பியனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்பியதால் ஆளுநர் ஒப்புதல் தந்தே ஆக வேண்டும். காரணத்தோடு மசோதாக்களை ஆளுநர் திருப்பி அனுப்பி இருந்தால் அவற்றை ஜனாதிபதிக்கு அனுப்ப வாய்ப்பு இருந்திருக்கும்.


தற்போது ஜனாதிபதிக்கு மசோதாக்களை அனுப்பும் உரிமையை ஆளுநர் இழந்துவிட்டதாக தலைமை நீதிபதி அதிரடி கருத்து தெரிவித்துள்ளார்.


 சமீபத்தில் தமிழக அரசு மீண்டும் நிறைவேற்றிய 10 மசோதாக்கள் தொடர்பாக மாநில ஆளுநர் எடுத்த நிலைபாடு என்ன? என்பவவை குறித்து ஒன்றிய அரசும், ஆளுநர் தரப்பும் விளக்கமளிக்க வேண்டும்’ எனக்கூறி வழக்கு விசாரணையை வரும் டிசம்பர் 1ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

-----------------------------



 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?