உலகில் ஒரு தலை சிறந்த

 உலகில் ஒரு தலை சிறந்த மாநிலத்தை பற்றிய தகவல்:

1. இங்கு 9 ஏர்போர்ட் உள்ளது. அதில் 4 இன்டர்நேஷனல் ஏர்போர்ட்

2. சுமார் 36,000+ பெரிய கம்பெனிகள் உள்ளது

3. உலகில் முதல் தோன்றிய மாநகரம் இங்கு தான் உள்ளது

4. உலகில் தங்கம் அதிகமாக விற்பனையாகும் மாநிலம் இதுவே

5. உலகில் உள்ள  மிக பெரிய கம்பெனிகள் பலவற்றின் CEO இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

6. இந்த மாநிலம் எந்த மாநிலத்தையும் சார்ந்து இல்லை. ஆனால் இந்த தேசமே இந்த மாநிலத்தை சார்ந்து உள்ளது.

7. முதல் முறையாக கடல்வழி வணிகம் துவங்கியது இந்த மாநிலம்

8. இமெயில் கண்டுபிடித்தது இந்த மாநிலம் தான். இதனால் இந்த உலகம் விரைவாக செயல்பட காரணம்

9. விவசாயம் முதல் வான்வெளி வரை பல அறிஞர்கள் தோன்றியது இந்த மாநிலத்தில் தான்

10. உலக வரைபடம் வரைந்து காட்டியது இந்த மாநிலத்தை சேர்ந்தவர்கள் தான்

11. உலகில் முதல் hydrogen அனு ஆயுதம் இந்த மாநிலத்தில் தான் கண்டுபுடிக்கபட்டது

12. உலகில் அதிகமாக இயற்கை வழியில் மின் உற்பத்தி செய்யும் மாநிலம் இதுவே ( hydro, wind, solar, Tidel ..ect )

உலகில் முதல் முறையாக "தாய் மொழியை" உருவாக்கியது இந்த மாநிலமே.

உலகில்  மொழியை தனது பெயராக கொண்ட ஒரே மாநிலம்

 *தமிழ்நாடு*

-------------------------------------------

சிலவரிகளில் செய்திகள்.

22ஆண்டுகளுக்கு முன் தானு தயாரிப்பில் வெளிவந்த கமல்ஹாசன் நடித்த படம் ஆளவந்தான்.'

"தற்போது 1000 திரையரங்குகளில் இப்படத்தை டிஜிட்டலில் வெளியிட ஆரம்ப வேலைகள்நடைபெறுகிறது.தயாரிப்பின் போது முறையாகத் திடமிடாத்தால் எனக்கு இழப்பு ஏற்பட்டது.பின் மீண்டு வந்தேன் .ப்போதைய காலத்தில் டிஜிட்டலில் ஆளவந்தானில் கமல்ஹாசன் மிரட்டுவது ரசிகர்களுக்கு முதிய,நல்ல அனுபவம் '"என்கிறார் தானு.

மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கரில் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பிய சட்ட மசோதாக்கள் ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்கக் கோரி தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் ஆளுநருக்கு உச்சநீதிமன்ற கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், நீண்ட ஆண்டுகளாக நிலுவையில் இருந்த 10க்கும் மேற்பட்ட சட்ட மசோதாக்கள் மீண்டும் அரசுக்கு திருப்பி அனுப்பியுள்ளார் ஆர்.யன். ரவி.

சென்னை கொடுங்கையூரில் ஆட்டோ கார் உட்பட 20 வாகனங்களை அடித்து உடைத்த 2 பேர் கைது.போலீசாரை கண்டதும் மேம்பாலத்திலிருந்து கீழே குதித்துத் தப்ப முயன்றபோது, குற்றவாளிகள்( ஜாக்கி மற்றும் லாரன்ஸ்)இருவர்கை, கால் முறிந்த்து.

அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு தொடர் சிகிச்சை; இதயவியல் பிரிவு மருத்துவர்கள் குழு தீவிர கண்காணிப்பு.

உத்தரகாண்ட் சுரங்க விபத்து..5 நாட்களாகியும் தொழிலாளர்களை மீட்கும் பணியில் தாமதம்.நார்வே, தாய்லாந்து நிறுவனங்களிடம் ஆலோசனை கேட்பு.

தனது மூக்கை அழகுபடுத்தும் சிகிச்சைக்காக பிறந்து 5 நாளான குழந்தையை விற்பனை செய்த தாய்.

10 மசோதாக்களை  திருப்பி அனுப்பிய நிலையில் நாளை சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம். மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழ்நாடு அரசு திட்டம், ஒப்புதல் தர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்படும் ஆர்.யன்.ரவி.

காசாவில் உடனடி மனிதாபிமான உதவி. ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானம் நிறைவேற்றம்.

போதியகல்வி தகுதி இல்லாமல் பணியில் சேர்ந்ததாக அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் 56 உதவி பேராசிரியர்கள் பணிநீக்கம்.

விடுதலைப் போராட்ட வீரரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான சங்கரய்யா உடல் அரசு மரியாதையுடன் தகனம். தலைவர்கள் இறுதி அஞ்சலி .

முட்டுச்சந்தில் ஆர்யன்.ரவி.

சட்டப்பேரவையில் நிறைவேற்றி அனுப்பி வைக்கப்பட்ட 12 மசோதாக்கள், 4 நடவடிக்கை உத்தரவுகள், 54 கைதிகளின் முன்கூட்டி விடுதலை தொடர்பான கோப்புகள் உள்ளிட்டவை ஆர்.யன்.ரவியால் முடக்கப்பட்டிருப்பதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு இத்தகைய வழக்கை தொடர்ந்தது. பொறுத்துப்பொறுத்துப் பார்த்து, இறுதியாக உச்சநீதிமன்றத்தின் கதவைத் தட்டி இருக்கிறது தமிழ்நாடு அரசு.

இன்று அவசர கதியில் 10 மசோதாக்களை திருப்பி அனுப்பியது ஆளுநர் மாளிகை.

உடனடியாக சட்ட மன்ற சபாநாயகர் வரும் சனிக்கிழமை இந்த 10 மசோதாக்களை திருப்பி அனுப்ப அவசர கூட்டம் கூட்டப்படுகிறது.

சமூகநீதி, சுயமரியாதை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, சமத்துவம், பெண்ணுரிமை, மதநல்லிணக்கம், பல்லுயிர் ஓம்புதல் ஆகிய கொள்கைகள் இவ்வரசின் அடித்தளமாக அமைந்துள்ளன. 

தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராசர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற மாபெரும்தலைவர்களின் கொள்கைகளையும் கோட்பாடுகளையும் பின்பற்றி, பார்போற்றும் திராவிட மாடல் ஆட்சியை இந்த அரசு வழங்கி வருகின்றது. இதனை மக்களின் பார்வைக்கு தவறாக சித்தரித்த பாசிச அயோக்கியர்கள் தொடர்ந்து முட்டு கட்டை போட்டு வருகிறது.

வரும் 20 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் சனாதன ரெவி மீது கடுமைகாட்டினால் நீதி நிலைநாட்ட வேண்டும்.

ஆனால் அதான் திருப்பி அனுப்பியது என்று சால்ஜாப்பு செய்தால் உச்ச நீதிமன்றம் அதன் மாண்பை சீரழிக்கப்பட்டது என்றே அர்த்தம்.







இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?