ஆட்­டுக்­குத் தாடி எதற்கு?

 சென்னையில் விடிய விடிய மழை! காலையும் தொடருமாம்.

மிழ்நாடு காவல்துறை நுண்ணறிவு பிரிவில் தீவிரவாத தடுப்பு பிரிவு அமைப்பு; ரூ.60 கோடி ஒதுக்கீடு.

அனைத்து பல்கலைக்கழகங்களும் சிறப்பாக வளர மாநில முதலமைச்சர்களே வேந்தராக இருக்க வேண்டும் - பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு.

வங்கக்கடலில் காற்று சுழற்சி நீடிப்பதால் தமிழ்நாட்டில் சென்னை உள்பட 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.

நீட் தேர்வு வேண்டாம் என்று எதிர்க்கட்சியாக இருக்கும் போது போராடினோம். தற்போது வரை உண்மையாக போராடி வருகின்றோம்" என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியுள்ளார்.

இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், தூத்துக்குடி, இராமநாதபுரம், தேனி, திண்டுக்கல், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் திருவந்தவார் நடுநிலைப்பள்ளி குடிநீர் தொட்டியில் மலம் கலந்ததாக கூறப்பட்டநு பொய். மாவட்ட ஆட்சியர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

நவம்பர் 26ம் தேதி திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என தி.மு.க, பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.  

23ம் தேதி காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது.  கூட்டத்தில் பங்கேற்க தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி அதிகாரிகளுக்கு அழைப்பு

கேரளாவில் 2 ஆண்டுகளுக்கு முன்பு பறிமுதல் செய்யப்பட்ட தனது தொப்பியை ஆசிரியர்கள் திருப்பித் தருமாறு  முன்னாள் மாணவர் துப்பாக்கிச்சூடு நடத்தியதால் பரபரப்பு.

"ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்க வேண்டாம். மக்கள் இறந்தால் இறக்கட்டும். அரசு அதை அனுமதிக்க வேண்டும்" என்று கொரோனா பரவிய காலத்தில் ரிஷி சுனக் பேசியதாக செய்திஇங்கிலாந்தில் பரவி வருகிறது.

இஸ்ரேல்-ஹமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நெருங்கிவிட்டதாக தகவல் .

ஆளுநர் ஏன் தேவை?

ஆளு­நர் பத­வி­களை தூக்­கிச் சுமக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை என்­பதை அர­சி­ய­ல­மைப்­புச் சட்ட மேதை­க­ளும், அர­சி­யல் ஆய்­வா­ளர்­­ களும் காலம் கால­மா­கச் சொல்லி வந்­துள்­ளார்­கள்.‘மலர்க மாநில சுயாட்சி’ என்ற அறி­வுக் கரு­வூ­லத்தை உரு­வாக்­கிக்கொடுத்த கு.ச.ஆனந்­தன் அவர்­கள், ஆளு­நர்­களை இப்­படி வரை­ய­றுக்­கி­றார்...“மாநில ஆளு­நர் என்­ப­வர், நமது அர­ச­மைப்­புச் சட்­டத்­தின் ஓர் அதி­ச­யப் படைப்பு: ஆங்­கி­லே­யர் விட்­டுச் சென்ற ஏகா­தி­பத்­தி­யத்­தின் கடை­சிச் சின்­னம், 

இந்­திய நாட்­டின் விடு­த­லைக்­குப் பின்­ன­ரும், நம்­மால் அறுத்­தெ­றிய முடி­யாத ஓர் அடி­மைப்­பந்­தம். ஆளு­நர் என்­ப­வர், ஒரு மாநி­லத்­தின் ஆட்­சித் தலை­வர் (நிர்­வா­கத் தலை­வர்); மாநி­லச் சட்டமன்­றத்­தின் மிக முக்­கி­யக் கூறாக இருப்­ப­வ­ரும் அவரே. 

ஆனால், அப்­ப­டிப்­பட்ட மாநில ஆளு­ந­ரைக் குடி­ய­ர­சுத் தலை­வ­ரின் மூல­மாக- -– மத்­திய அரசே நிய­ம­னம் செய்­கி­றது.அவ­ரு­டைய நிய­ம­னத்­தில் மாநில மக்­க­ளுக்­கும், மாநில அர­சிற்­கும் எவ்­வ­கைத்தொடர்­பும் பங்­கும் கிடை­யாது”என்று எழுதி இருக்­கி­றார்.பிரிட்­டிஷ் அரசு, இந்­திய நாட்டை ஆள்­வ­தற்­காக உரு­வாக்கி வைத்­­ திருந்­த­வை­தான் கவர்­னர்­க­ளும் கவர்­னர் ஜென­ரல்­க­ளும். 

மக்­க­ளால் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மக்­கள் பிர­தி­நி­தி­க­ளைக் கட்­டுப்­ப­டுத்த இந்­தப் பத­வி­களை உரு­வாக்கி வைத்­தி­ருந்­தார்­கள்.

மத்­திய அர­சின் ‘கையா­ளைத்­தான்’ நாக­ரி­க­மான சொற்­க­ளால் ‘மாநி­லத்­தின்ஆட்­சித் தலை­வர்’ என­வும், ‘மேதகு ஆளு­நர்’ என­வும், அர­ச­மைப்­புச்சட்­டம் ஆக்கி வைத்­தி­ருக்­கி­றது.

அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் இன்­றைய ஆளு­நர்­கள் இடம் பெற்­றதே ஒரு சுவை­யான கதை என்­ப­தை­யும் அவர் விவ­ரித்­துள்­ளார்.

அர­ச­மைப்பு ஆலோ­ச­கர் பி.என். இராவ் அவர்­கள், 30–-5–-1947-–இல் உரு­வாக்­கிய தனது அர­ச­மைப்­புக் குறிப்­பில்,“மாநி­லச் சட்டமன்ற உறுப்­­பினர்­க­ளால் ஆளு­நர்­கள் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும்”என்று குறிப்­பிட்­­ டிருந்­தார். ஐந்து மாதங்­க­ளில், நிலைமை மாறி­யது. வல்­ல­பாய் படேல் தலை­மை­யில் இயங்­கிய “மாநில அர­ச­மைப்­புக் குழு”, அந்த ஏற்­பாட்டை விரும்­ப­வில்லை. 

அதற்­கேற்ப 1947-–ஆம் ஆண்டு அக்­டோ­பர் மாதத்­தில், பி.என். இராவ் அவர்­க­ளின் குறிப்பு மாறு­த­ல­டைந்­தது.

அதன் பின்­னர், மாநில வாக்­கா­ளர்­க­ளா­லேயே மாநில ஆளு­ந­ரும் நேர­டி­யா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும் எனப் பல அர­ச­மைப்­புச் சபை உறுப்­பி­னர்­கள் வலி­யு­றுத்­தி­னார்­கள்.

 சென்னை மாகாண முன்­னாள் ஆளு­நர் ஸ்ரீ பிர­காசா, முன்­னாள் குடி­ய­ர­சுத் தலை­வர் வி.வி.கிரி, என்.வி.காட்­கில், டாக்­டர். கே.எம்.முன்சி, கைலா­ச­நா­த­ கட்சு போன்ற பெருந்­த­லை­வர்­கள் இப்­ப­டிச் சொன்­னார்­கள். அடுத்த நான்கு மாதங்­க­ளில் அந்­தக் கருத்­தும் மாறிற்று.

ஆளு­ந­ராக நிய­ம­னம் பெற, மாநி­லச் சட்­ட­மன்ற உறுப்­பி­னர்­க­ளால் நான்கு பேர் தேர்ந்­தெ­டுக்­கப்­பட வேண்­டும்; அவர்­க­ளில் ஒரு­வரை ஆளு­ந­ரா­கக் குடி­ய­ர­சுத் தலை­வர் நிய­மிப்­பார் என்ற ஒரு கருத்து உரு ­வா­யிற்று, ஆனால் இது­வும் பின்­னர் மாறி­யது.

 அர­ச­மைப்­புச் சபை இறு­தி­யாக விவா­தித்தபோது, ஆளு­நரை குடி­ய­ர­சுத் தலை­வரே நிய­ம­னம் செய்ய வேண்­டும் என்று எழு­தப்­பட்டு விட்­டது. இத்­த­கைய பதவி ஒன்­றிய ஆளும் கட்­சி­க­ளின் கைப்­பா­வை­யாக ஆக்­கப்­பட்டு விட்­டது.

நொந்து போன அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு சில நேரங்­க­ளில் கொடுக்­கப்­­படும் ஆறு­தல் பரி­சு­தான் ஆளு­நர் பத­வி­யா­கும். திற­மை­யற்ற இடைத்­த­ர­மான அர­சி­யல்­வா­தி­க­ளுக்கு அளிக்­கப்­ப­டும் நன்­கொடை மானி­யங்­க­ளைப் போன்­றதே ஆளு­நர் பத­வி­யா­கும்”என்று மத்­திய -– மாநில உற­வு­களைஆராய 1972 ஆம் ஆண்டு அமைக்­கப்­பட்ட குழு அறிக்­கையே சொன்­னது.

மாநில சுயாட்சி குறித்து ஆராய இரா­ஜ­மன்­னார் குழுவை முத­ல­மைச்­சர் கலை­ஞர் அவர்­கள் 1974 ஆம் ஆண்டு அமைத்­தார்­கள். 

அந்த அறிக்கை மீதான தனது விளக்­கத்தை அன்­றைய தி.மு.க. அரசு முன் வைத்­தது.

ஆளு­நர் நிய­ம­னம் குறித்து நமது அர­சி­ய­ல­மைப்­பில் வகை செய்­யப்­பட்­டுள்­ளது – -மக்­க­ளாட்சி முறை­யில் காலத்­திற்கு ஒவ்­வாத ஒன்­றா­கும். இவர், மத்­திய அர­சால் நிய­மிக்­கப்­பட்டு மத்­திய அர­சுக்­குப் பொறுப்­புள்ள அதி­கா­ரி­யா­வார். 

எனவே, உள்­ளூர் நிலை­மை­க­ளை­யும் அர­சி­யல் நிலை­மை­யை­யும் இவர் அறிந்­தி­ருக்க முடி­யும் என்று எதிர்­பார்க்க இய­லாது. ஆளு­நர்பத­விக்­கா­கச் செய்­யப்­ப­டும் செல­வும் சம­தர்ம சமு­தாய முறைக்கு ஏற்­ற­தாக இல்லை. இச்­செ­லவு வீணா­னது. 

இத­னைக் கைவி­ட­லாம். ஆளு­நர் பத­வியை எடுத்து விடு­வ­தற்கு உற்ற தரு­ணம் இது­வே­யா­கும்”என்று அந்த அறிக்­கை­யில் கூறப்­பட்­டது. ஆனா­லும் ஆளு­நர்­கள் குறித்து அகில இந்­தியா முழு­மைக்­கும் ஒத்த கருத்து உரு­வா­கா­த­தால் ஆளு­நர் பதவி நீட்­டித்­துக் கொண்டே வந்­துள்­ளது.

ஆனால் கடந்த பத்­தாண்டு காலத்­தில் ஆளு­நர்­க­ளின் அடக்­கு­மு­றை­கள் அதி­க­மாகி வரு­கின்­றன. இது மாநி­லக் கட்­சி­கள் -– அகில இந்­தி­யக் கட்­சி­கள் மன­தில் ஒரு தாக்­கத்தை ஏற்­ப­டுத்தி உள்­ளது.

ஆளு­நர்­களை வைத்து இன்­றைய பா.ஜ.க. அரசு என்ன மாதி­ரி­யான காரி­யங்­க­ளைச் செய்து வரு­கி­றது என்­பதை உச்­ச­நீ­தி­மன்ற வழக்­க­றி­ஞர் ராஜீவ் தவான் ஒரு முறை எழு­தி­னார்.

மோடி பிர­த­ம­ராக பதவி ஏற்­ற­துமே ஏறக்­கு­றைய அனைத்து மாநிலஆளு­நர்­க­ளை­யும் மற்­றும் துணை நிலை ஆளு­நர்­க­ளை­யும் மாற்­றம் செய்­தார்.

இந்த மாறு­தல் பட்­டி­ய­லில் உச்சநீதி­மன்ற முன்­னாள் தலைமை நீதி­பதி சதா­சி­வ­மும் இருந்­தார். அவர் என்ன கட்­டா­யத்­தின் பேரில் மாற்­றம் செய்­யப்­பட்­டார் என்­பது யாருக்­கும் தெரி­யாது. 

இவர்­கள் அனை­வ­ரும் பா.ஜ.க.வின் அர­சி­யல் சதி வேலை­க­ளுக்கு தேவைப்­பட்­ட­னர்.

புதி­தாக ஏழு யூனி­யன் பிர­தே­சங்­க­ளில் துணை நிலை ஆளு­நர்­கள் நிய­மிக்­கப்­பட்­ட­னர். தில்லி சட்­ட­மன்­றத் தேர்­த­லில் தோற்ற முத­ல­மைச்­சர் வேட்­பா­ளர் கிரண் பேடி புதுச்­சேரி துணை­நிலை ஆளு­ந­ராக்­கப்­பட்­டார். அனில் வைசால்­தான் ஒரு பா.ஜ.க. ஆத­ர­வா­ளர் என்று ஒத்­துக் கொண்­ட­வர். 

நஜீப்­ஜங் பா.ஜ.க. அர­சின் கட்­ட­ளைப்­படி செயல்­பட்­டார். ஜம்மு – - காஷ்­மீர் ஆளு­நர் எம்.என்.வோரா, ஒடிசா ஆளு­நர் எஸ்.சி.ஜெமின், நர­சிம்மா (ஆந்­திரா), கேச­ரி­நாத் திரி­பாதி (மே.வ.) மற்­றும் கல்­யாண் சிங் இவர்­க­ளெல்­லாம் பா.ஜ.க.வின் தீவிர ஆத­ர­வா­ளர்­கள்”என்று எழு­தி­னார் ராஜீவ் தவான்.­ஆளு­நர்­கள் நிய­ம­னத்­தில் புதிய நடை­மு­றையை கண்­டு­பி­டித்­தாக வேண்­டும். ஆளு­ந­ராக நிய­மிக்­கப்­பட உள்­ள­வர்­களை நாடா­ளு­மன்ற மாநி­லங்­க­ள­வைக்கு வர­வ­ழைத்து அனைத்­துக் கட்சி நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் முன்­னி­லை­யில் முழு­மை­யாக விசா­ரிக்க வேண்­டும். அவர்­க­ளது பொருத்­தப்­பா­டும், தகு­தி­யின்­மை­யும் அம்­ப­லப்­ப­டுத்­தப்­பட வேண்­டும். அர­ச­மைப்­புச் சட்­டத்­தில் இதற்­கான திருத்­தங்­களை மேற்­கொள்ள வேண்­டும்” என்­றும் குறிப்­பிட்­டார்.

பா.ஜ.க.வால் நிய­மிக்­கப்­பட்ட ஆளு­நர்­கள் எப்­படி நடந்து கொண்­டார்­கள்என்­ப­தை­யும் அவர் வரி­சைப்­ப­டுத்­தி­னார்.

*மேகா­லயா ஆளு­ந­ராக இருந்த வி.சண்­மு­க­நா­தன் மீது பாலி­யல் குற்­றச்­சாட்டை பத்­தி­ரி­கை­கள் விரி­வாக எழு­தின.

*அரு­ணாச்­ச­லப் பிர­தேச ஆளு­நர் ஜோதி பிர­காஷ் சட்­ட­மன்­றத்­திற்கு ஒரு தலைப்­பட்­ச­மான தக­வலை அளித்து ஜன­வரி 23, 2016 இல் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்­சியை அமல்­ப­டுத்­தி­னார். பின்­னர் பா.ஜ.க. ஒன்­றிய அர­சின் அர­சி­யல் நோக்­கம் நிறைவேறி­ய­தும் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி வச­தி­யாக திரும்­பப் பெறப்­பட்­டது. அரு­ணாச்­ச­லப் பிர­தேச முதல்­வர் கலிக்கோ புல் பதவி நீக்­கம் செய்­யப்­பட்­டார். அவர் தற்­கொலை செய்து கொண்டு இறந்து போனார்.

*உத்­த­ர­கண்ட் ஆளு­நர் கே.கே.பால் உத­வி­யால் முதல்­வர் ராவத் மீது சி.பி.ஐ. விசா­ரணை ஏவப்­பட்டு அவ­ரது ஆட்சி கலைக்­கப்­பட்­டது. இதை விசா­ரித்த நீதி­பதி கே.எம்.ஜோசப் ஆட்சி தலை­மை­யி­லான அமர்வு உத்­த­ர­கண்­டில் குடி­ய­ர­சுத் தலை­வர் ஆட்சி திணிக்­கப்­பட்­டது பா.ஜ.க.வுக்கு சாத­க­மா­னது, அர­ச­மைப்­புச் சட்­டத்­திற்­குப் புறம்­பா­னது எனத் தீர்­மா­னித்­தார். கடும் உழைப்­பு­டன் கூடிய கவ­ன­மிக்க தீர்ப்பை வழங்­கக் கூடிய அறி­வார்ந்த நீதி­ப­தி­யான கே.எம்.ஜோசப் இதற்­காக பழி­வாங்­கப்­பட்­டார். உச்­ச­நீ­தி­மன்ற நீதி­பதி ஆவ­தற்கு தகு­தி­யான அவ­ரது பெயர் பரிந்­துரை செய்­யப்­ப­டா­மல் கைவி­டப்­பட்­டது.

*2017-இல் கோவா, மணிப்­பூர் சட்­ட­மன்­றத் தேர்­தல்­க­ளில் காங்­கி­ரஸ் தனிப்­பெ­ரும் கட்­சி­யாக வெற்­றி­பெற்­றா­லும் பா.ஜ.க. ஆட்­சியை கைப்­பற்­று­வ­தற்கு ஆளு­நர்­கள் உதவி செய்­த­னர்.

*2020-இல் மத்­தி­யப் பிர­தே­சம், 2022 இல் மகா­ராஷ்­டி­ரம் என ஆளு­நர்­கள் உத­வி­யு­டன், அதி­கார பலத்­து­டன் பா.ஜ.க. ஆட்­சியை கைப்­பற்­றி­யது. தேர்­தல்­கள்­தான் இந்­தி­யா­வின் பல­மா­கும். வாக்­கா­ளர்­க­ளின் மன­நிலை, உணர்வு தேர்­த­லில் வெளிப்­ப­டு­கி­றது. ஆனால் ஆளு­நர்­க­ளின் செயல்­பாட்­டால் தேர்­த­லின் நோக்­கமே அடி­பட்­டுப் போகி­றது.

*சில ஆளு­நர்­கள் அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டக் கொள்­கை­களை மீறி குற்­றம் புரி­கின்­ற­னர். தொங்கு சட்­ட­மன்­றத்­தில் முதல்­வரை நிய­ம­னம் செய்­வது முக்­கி­ய­மா­னப் பிரச்­சி­னை­யா­கும். அவர்­க­ளுக்கு ஜன­நா­யக அடிப்­ப­டை­கள், மக்­க­ளின் தீர்ப்பு பற்றி எல்­லாம் அக்­க­றை­யில்லை. ஏறத்­தாழ, அனைத்து ஆளு­நர்­க­ளுமே பதற்­ற­மும், மிகை உணர்ச்சி கொண்­ட­வர்­களா­க­வும், அர­சி­யல் சார்­பு­டன் செயல்­படுபவர்­க­ளா­க­வும் இருக்­கின்­ற­னர்.

*கேரள ஆளு­நர் ஆரிப் முக­மது கான், மேற்­கு­வங்க ஆளு­ந­ராக இருந்த ஜெக­தீப் தன்­கர் போன்­ற­வர்­கள் தங்­க­ளது சொந்த அர­சு­க­ளுக்கே சவால் விடும் வகை­யில் செயல்­பட்­ட­னர். ஜெக­தீப் தன்­கர், தலை­மைச் செய­லா­ள­ரை­யும், காவல்­துறை தலை­வ­ரை­யும் ஆளு­நர் மாளி­கைக்கு கட்­ட­ளை­யிட்டு வர­வ­ழைத்­தார்.

*பல்­க­லைக் கழக வேந்­தர் நிய­ம­னம் குறித்த சட்­டத்தை திருத்­தம் செய்ய கேரள மாநில அரசு விரும்­பும் போது ஆளு­நர் ஆரீப், பல்­வேறு பல்­க­லைக் கழக வேந்­தர்­களை பதவி நீக்­கம் செய்­கி­றார். இப்­படி ஒவ்­வொரு மாநி­லத்­தி­லும் ஒவ்­வொரு வித­மான பிரச்­சி­னை­களை ஆளு­நர்­கள் உரு­வாக்­கி­னார்­கள். உரு­வாக்­கிக் கொண்­டும் வரு­கி­றார்­கள்.

ஆளு­நர்­க­ளின் நடத்­தை­கள் குறித்து உச்­ச­நீ­தி­மன்­றம் பல­முறை கொட்­டி­யும்இருக்­கி­றது. குட்­டி­யும் இருக்­கி­றது. திட்­டி­யும் இருக்­கி­றது. ஆனால் இவர்­கள் திருந்­து­வ­தாக இல்லை.

பேர­றி­வா­ளன் உள்­ளிட்ட ஏழு ­பேர் விடு­த­லை­யில் மாநில அமைச்­­சரவை எடுத்த முடிவை ஏற்­கா­மல் ஆளு­நர் கால­தா­ம­தம் செய்­ததை உச்­ச ­நீ­தி­மன்­றம் கண்­டித்து அவர்­களை நீதி­மன்­றமே விடு­தலை செய்­த­தைப் பார்த்­தோம். உச்­ச­நீ­தி­மன்ற நீதி­ப­தி­கள் எல்.நாகேஸ்­வ­ர­ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போண்ணா ஆகி­யோர் அடங்­கிய அமர்வு ஒரே தீர்ப்பை வழங்­கி­யது.

The reference of the recommendation of the Tamil Nadu Cabinet by the Governor to the President of India two and a half years after such recommendation had been made is without any constitutional backing and is inimical to the scheme of our Constitution, whereby “the Governor is but a shorthand expression for the State Government’ as observed by this Court’.

-‘‘கவர்­னர் என்­பது மாநில அர­சின் சுருக்­கெ­ழுத்து மட்­டுமே’’என்று முன்­பொரு தீர்ப்­பில் உச்­ச­நீ­தி­மன்­றம் சொன்­ன­தையே பேர­றி­வா­ளன் வழக்­கி­லும் நீதி­ப­தி­கள் கூறி­னார்­கள்.

பஞ்­சாப் சட்­ட­மன்ற நிதி­நிலை அறிக்­கைக்­கான கூட்­டத் தொடரை கூட்­டு­வ­தற்கு அனு­மதி தர­வில்லை அந்த மாநில ஆளு­ந­ரான பன்­வா­ரி­லால். கடந்த பிப்­ர­வரி மாதம் உச்­ச­நீதிமன்­றத்­துக்கே போனது பஞ்­சாப் மாநில அரசு.‘

‘ஆளு­நர் என்­ப­வர் மாநில அமைச்­ச­ர­வைக்கு கட்­டுப்­பட்­ட­வர். இது உச்­ச­நீ­தி­மன்­றத்­தின் பல்­வேறு வழக்­கு­க­ளில் தீர்ப்­பா­கத் தரப்­பட்­டுள்­ளது. எனவே அமைச்­ச­ர­வைக் குழு ஒரு முடி­வெ­டுத்­தால் ஆளு­நர் அதனை ஏற்க வேண்­டும்”என்று நீதி­ப­தி­கள் அறி­வு­றுத்­தி­னார்­கள்.

தமிழ்­நாடு -– கேரளா –- மேற்கு வங்­கம் - பஞ்­சாப் –- டெல்லி - தெலுங்­கானா என எதிர்க்­கட்­சி­கள் ஆளும் மாநி­லத்­துக்கு குடைச்­சல் கொடுக்­கும் வேலையை மட்­டுமே ஆளு­நர்­கள் பார்த்து வரு­கி­றார்­கள்

. தமிழ்­நாடு -– கேரளா - – பஞ்­சாப் ஆகிய மாநி­லங்­கள் உச்­ச­நீ­தி­மன்­றத்­திலே முழு­மை­யான வழக்கை பதிவு செய்­துள்­ளது.

‘‘நீங்­கள் நெருப்­பு­டன் விளை­யா­டு­கி­றீர்­கள்’’என்று பஞ்­சாப் மாநில ஆளு­ந­ரைப் பார்த்து உச்­ச­நீ­தி­மன்­றம் எழுப்­பிய கேள்வி என்­பது சாதா­ர­ண­மா­னது அல்ல.

 நெருப்­பு­டன் என்­றால் மக்­க­ளோடு சிறு­பிள்­ளைத்­த­ன­மாக விளை­யா­டிக் கொண்­டி­ருக்­கி­றார்­கள் ஆளு­நர்­கள். ஒவ்­வொரு முறை­யும் உச்­ச­நீ­தி­மன்­றத்­துக்­குப் போய் இவர்­க­ளைக் கட்­டுப்­ப­டுத்­துங்­கள் என்று நிற்க முடி­யுமா? முடி­யாது. 

இதற்கு மொத்­த­மாக முற்­றுப்­புள்ளி வைத்­தாக வேண்­டும்.

‘ஆளு­நர் பத­வியே அகற்­றப்­பட வேண்­டும்’என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் வைக்­கும் கோரிக்­கை­யா­னது இந்­தி­யா­வின் கோரிக்­கை­யாக மாற்­றப்­பட வேண்­டும். மாநி­லங்­க­ளைக் காக்க – - மக்­க­ளாட்­சித் தத்­து­வத்­தைக் காக்க ஆளு­நர் பதவி அகற்­றப்­பட வேண்­டும்.

‘‘ஆட்­டுக்­குத் தாடி எதற்கு? 

நாட்­டுக்கு ஆளு­நர்­கள் எதற்கு?”-பேர­றி­ஞர் அண்ணா!


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?