நாசகார ஆயுதங்கள்

 தமிழ்நாடு முழுவதும் நேற்று 364 அழைப்புகள் தீயணைப்புத்துறைக்கு வந்துள்ளதாக தகவல்.சென்னையில் 581 வழக்குகள் பதிவு: -காவல்துறை தகவல் .

ராணிப்பேட்டை அருகே நாட்டு பட்டாசு வெடித்து 4 வயது சிறுமி உயிரிழப்பு.

தமிழ்நாட்டில் 3 மணி நேரத்தில் தூத்துக்குடி,நெல்லை,குமரி,ராமநாதபுரம் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு: என  வானிலை ஆய்வாளர் மையம் தகவல்.

சென்னையில் நேற்றிரவு வரை 100 டன் பட்டாசு கழிவுகள் அகற்றப்பட்டதாக தகவல்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் கட்டுமானப் பணியின்போது சுரங்கம் இடிந்து விழுந்ததில், 36 தொழிலாளர்கள் சிக்கி தவிப்பு. அவர்களை மீட்கும் பணியில் மாநில பேரிடர் மீட்பு படையினர் தீவிரவமாக ஈடுபட்டுள்ளனர். 

சென்னையில் பல்வேறு இடங்களில் காற்றின் தரக்குறியீடு 200 முதல் 300 வரை பதிவு .அதிகபட்சமாக மணலியில் 316 மாசு பதிவானது.

சூடான் டார்பூர் பகுதியை கைப்பற்றிய ஆர்எஸ்எப் ராணுவம்.. ஒரே நாளில் 800 உயிரிழப்பு என ஐ.நா தகவல்.

சென்னை விமான நிலையத்தில் 8.42 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல்..! 3 பேரிடம் அதிகாரிகள் விசாரணை.

-----------------------------------------


நாசகார ஆயுதங்கள்

காஸாவில் பொதுமக்கள் நெருக்கமாக வசிக்கும் பகுதியில் இஸ்ரேல் பயன்படுத்தி வரும் நாசகார ஆயுதங்கள் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று ஐ.நா. மனித உரிமைகள் ஆணையா் வோல்கா் துருக் வலியுறுத்தியுள்ளாா்.

இது குறித்து அவா் வெள்ளிக்கிழமை கூறியதாவது:

காஸாவில் இஸ்ரேல் ராணுவம் சரமாரியாக குண்டுகளை வீசி வருகிறது. குறிப்பாக, மக்கள் நெருக்கம் அதிகம் நிறைந்த பகுதிகளில் கூட அதிக நாசத்தை விளைவிக்கக்கூடிய ஏவுகணைகள் வீசப்படுகின்றன.

இது, அந்தப் பகுதியில் பேரழிவை ஏற்படுத்தி, மனித அடிப்படை உரிமைகளுக்கு ஊறு விளைவிக்கிறது. எனவே, இஸ்ரேல் பயன்படுத்தும் நாசகார ஆயுதங்கள் விசாரணைக்கு உள்படுத்தப்படவேண்டும்.

பொதுமக்கள் மீது அத்தகைய ஆயுதங்களைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்துவது சா்வதேச சட்டங்களுக்கு எதிரானதாகும்.

பாலஸ்தீன ஆயுதக் குழுவினா் (ஹமாஸ்) பொதுமக்களை கேடயமாகப் பயன்படுத்துவது போா் நியதிகளுக்கு எதிரானதுதான். எனினும், இதனைக் காரணம் காட்டி பொதுமக்கள் படுகொலையை இஸ்ரேல் நியாயப்படுத்த முடியாது என்றாா் துருக்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?

ரூ360 கோடிகள் வீணா?