எண்ணெய்க் குளியல்.
மலேசியாவிலிருந்து சென்னைக்கு ரூ.1.25 கோடி தங்கம் கடத்திய2 பெண் பயணிகள் கைது.
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர் தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிககனமழைக்கு வானிலை மய்யம் எச்சரிக்கை.
கள்ளக்குறிச்சி அரசு பஸ் பணிமனையில் 2021-22ல் காணாமல் போன 9 லட்சம் மதிப்பு டிக்கெட்டுகள் பயணிகளுக்கு வழங்கப்பட்டு மோசடி. கண்டக்டர் சஸ்பெண்ட்.மேலாளர் உள்பட 14 பேரிடம் விசாரணை.
தமிழ்நாட்டில் 14 மாவட்ட மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்ல தடை.
கொரோனா :பாஜக அரசு செலவிட்டத் தொகை எவ்வளவு ?
கடந்த ஒன்பதரை ஆண்டுகளில்
ரூ.117 லட்சம் கோடி கடன் வாங்கி இந்தியாவை உலகின் மிகப்பெரிய கடன்கார நாடாக பிஜேபி மாற்றிவிட்டது என விமர்சித்தால்
எல்லோருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தி மக்களை காப்பாற்றி இருக்கிறதென சில முட்டாள்கள் விளக்கமளித்து வருகிறார்கள்
போலி தேசபக்தர்கள்
வாட்சப் பொய்களைத்தவிர வேறு எதுவுமே படிக்க மாட்டார்கள் போல
பரவாயில்லை..
அவர்களையும் பயிற்றுவிக்க வேண்டியது
நம்முடைய கடமை தானே
இந்திய அரசாங்கம் கொரோனா தடுப்பூசிகளை வாங்குவதற்காக
HLL life care Ltd நிறுவனத்தை
Nodal ஏஜென்சியாக நியமித்து அந்நிறுவனம் மூலமாகவே தடுப்பூசிகளை கொள்முதல் செய்து மாநில அரசுகளுக்கு விநியோகம் செய்தது..
அதன்படி..
மத்திய சுகாதார அமைச்சகத்தின்
2021-ம் ஆண்டில்
serum Institute நிறுவனத்தின் தயாரிப்பான Covishield தடுப்பூசியை
Rs.25,585.87 கோடிக்கு கொள்முதல் செய்துள்ளது..
PM care நிதியின் மூலமாக Rs.1176 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளது
2021 ம் ஆண்டில்
Bharat biotech நிறுவனத்தின் தயாரிப்பான
Covaxin தடுப்பூசி -Rs.7,536.87 கோடி ரூபாய்க்கு கொள்முதல் செய்யப்பட்டது
PM care நிதியின் மூலமாக Rs.216.82 கோடிக்கு Covaxin வாங்கப்பட்டுள்ளது
ஆக மொத்தம் -34,515.07 கோடி ரூபாயை
கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்துள்ளது..
அதில்,
PM care நிதியின் பங்கீடு
Rs.1,392.82 கோடி
அதாவது மக்கள் நன்கொடையாக கொடுத்த பணமிது..
சரி இந்த கொரோனா தடுப்பூசிக்காக செலவழிக்கப்பட்ட மீதித் தொகை அனைத்தும் மத்திய அரசால் செலவழிக்கப்பட்டதா என்றால்..அதுவும் இல்லை ..
(APVAX)
Asia Pacific vaccine access facility எனும் திட்டத்தின் கீழ்
Asian Development Bank -இடம் இருந்து
1.5 Billion Dollars மத்திய அரசால் கடனாக வாங்கப்பட்டுள்ளது
அதாவது இந்திய மதிப்பில் கிட்டதட்ட
Rs.15,000 கோடி ரூபாய்
எப்படி..
அப்படியென்றால் கொரோனா தடுப்பூசிக்காக மத்திய அரசு செலவழித்த தொகை வெறும் Rs.18213 கோடி மட்டுமே..
ஆனால்,
2020-2021 காலக்கட்டத்தில்
பெட்ரோலிப்பொருட்களின் மீதான வரியின் மூலமாக மட்டும் மத்திய அரசு ஈட்டிய வருவாய் எவ்வளவு தெரியுமா ?
Rs.3,71,908 கோடி ரூபாய்
14-12-2021 ம் தேதியன்று,
ராஜ்யசபாவில்
இந்த தகவலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்
அதாவது,
கொடும் கொரோனா காலத்தில்
பெட்ரோல் டீசல் மூலமாக மட்டும்
3 லட்சத்து 71 ஆயிரத்து 908 கோடி ரூபாய்
அவர் வசூலித்து இருக்கிறார்கள்
ஆனால்,அதே காலத்தில் கொரோனா தடுப்பூசிக்காக வெறும் Rs.18,213 கோடி மட்டுமே செலவழித்துள்ளனர்
இதுவொரு மிகப்பெரும் சாதனையா ?
நீங்களே சொல்லுங்கள்
கொரோனா தடுப்பூசியை மக்களுக்கு இலவசமாக செலுத்தியதால் தான் இந்தியாவின் கடன் அதிகமானதா?
தடுப்பூசி செலுத்தியது ஒருபுறம்.
தனது சங்கிவியல் மூலம்"கோ. ,கோ, கொரோனா என தட்டுகள்,பாத்திரஙகளை தட்டக்கூறியும்,விளக கை அரை மணி நேரம் அணைத்து கொரோனா கிருமிகளுக்கு கண்தெரியவிடாமல் செய்தது,தீவெட்டி ஊர்வலம் நடத்தி பல குடிசைகளை எரித்து,மாட்டு மூத்திரத்தைக் குடித்து,சாணியைப் பூசி கிருமிகளைக் கொன்றதன் மூலம்தான நாம் கொரோனாவை விரட்டினோம்.
எண்ணெய்க் குளியல்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தலைக்கு எண்ணெய் தேய்த்துக் குளிப்பது தமிழர்களின் மரபாக இருந்து வருகிறது.
அந்தக் காலத்தில் உச்சந்தலை முதல் உள்ளங்கால் வரை நல்லெண்ணெய் தேய்த்து, ஊறவைத்துப் பின்னர் குளித்தனர்.
கேரளாவில் அநேகர் எண்ணெய் தேய்த்து ஊறவைத்துக் குளிப்பதை வழமையாக கொண்டுள்ளனர்.
நாம் இந்தக் காலத்தில் உச்சந்தலை, முகம், கழுத்து, கை, கால்களில் ஊற வைத்து அரை மணி நேரம் அல்லது ஒரு மணி நேரம் கழித்து இளஞ்சூடான வெந்நீரில் குளிக்க வேண்டும்.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பது உடலை மிகவும் ரிலாக்ஸாக வைத்திருக்கும். நல்ல தூக்கத்திற்கு வழி வகுக்கும். மேலும், அதன் பலன்களைப் பற்றி இந்தப் பதிவில் பார்க்கலாம்.
:எண்ணெய்க் குளியல் நமது உடல் உறுப்புகளை ஆரோக்கியமாக வைப்பதுடன் சருமத்தை மென்மையாக்குகிறது. உடல் எங்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குவதால் சருமம் ஆரோக்கியமாக இருக்கிறது.
முகம், கைகளில் அங்கங்கே இருக்கும் சிறு துளைகளில் ஒட்டியிருக்கும் அழுக்குகளை நீக்கி உடலை பிரகாசிக்கச் செய்கிறது.
இயந்திரத்தனமான வாழ்க்கை முறையில் பொறுமையாக நிதானமாக உடலுக்கும் தலைக்கும் எண்ணெய் தேய்த்து குளிப்பது மனதை ரிலாக்ஸ் ஆக வைத்திருக்கும்.
மைக்ரேன் எனப்படும் ஒற்றைத் தலைவலி, முதுகுவலி, இடுப்பு வலி, வயிற்று பிரச்னைகள், மஞ்சள் காமாலை போன்ற பல நோய்களுக்கு எண்ணெய் தேய்த்து; குளிப்பது அருமருந்தாக விளங்குகிறது. உடல் வலி, உடல் சோர்வுவையும் போக்குகிறது.
நீர்க்கடுப்பைப் போக்கும். உடலினுள் இருக்கும் உஷ்ணமானது வெளியேறிவிடும்.
நல்லெண்ணையில் நிறைய வைட்டமின்கள் இருக்கின்றன. முகத்தில் சிறிதளவு நல்லெண்ணெய் தேய்த்து
குளிப்பதால் வயதான தோற்றத்தைத் தடுத்து, இளமையான தோற்றத்தை அளிக்கிறது. முகச்சுருக்கம், கை, கால் சுருக்கத்தையும் போக்கி, இளமையாக வைக்கிறது.
எண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் அது நமது சருமத்தை ஈரப்பதத்தோடும் மென்மையாகவும் வைத்திருக்கிறது. மேலும், அதில் உள்ள பேட்டி ஆசிடுகள் சருமம் உலர்ந்து போவதை தடுக்கிறது.
நாம் வெளியில் செல்லும்போது உஷ்ணம் வெளியேறும் சருமத்தில் எண்ணெய்ப் பசை இருந்தால்தான் சூரியனிலிருந்து வரும் வைட்டமின் டி சத்தை உடல் கிரகிக்கும். சூரியனின் வெப்பம் நம்மை ஒன்றும் செய்வதில்லை.
முகத்தில் சுருக்கம் தோன்றாமல் பாதுகாக்கிறது.
நல்லெண்ணெயில் வைட்டமின் ஈ இருப்பதால் அது ஆரோக்கியமான முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
மேலும், அது விரைவிலேயே நரை முடி வருவதையும் பொடுகு உருவாவதையும் தடுக்கிறது.
தமிழர்களின் பண்டைய காலத்தில் இது ஒரு மருந்தாகப் பயன்படுத்தப்பட்டது.
உலக அழகி கிளியோபாட்ரா பெற்ற தன்னுடைய அழகான சருமத்திற்காக நல்லெண்ணையைதான் பயன்படுத்தினார்.
அப்படி இல்லாமல் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
நல்லெண்ணெயை தேவையான அளவு எடுத்து அதில் மிளகு, சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய் சேர்த்துக் கொதிக்க வைத்து வெதுவெதுப்பான சூட்டில் தலை மற்றும் வைத்து முழுவதும் தேய்த்து அரை மணி நேரம் குளிக்க வேண்டும்.
அப்போது குளிப்பது வெந்நீராக இருக்க வேண்டியது அவசியம். சீயக்காய் தேய்த்துக் குளித்தால்தான் எண்ணெய்ப் பிசுக்கு அகலும்.
நல்லெண்ணெய் தேய்த்துக் குளிப்பதால் மூட்டு வலி, உடல் வலி நீங்குவதால் தூக்கம் கண்களைச் செருகும்.
நீண்டகாலமாகமுதுகுவலியால்அவதிப்படும்ஒருவர் வாரம் ஒரு முறை எண்ணெய் தேய்த்துக் குளித்து வர அவர் முதுகு வலி பிரச்னை மூன்றே மாதங்களில் சரியானது.
எண்ணெய் குளியல் தினத்தன்று கடின உணவுகளை(அசைவம்)உண்ணாமல் ரசம் போன்றவற்றை உணவாக்க் கொள்வதும் பகல் உறக்கம் கொள்ளாமல் இருப்பதும் மிக நல்லது.
----------------------------------------------