வேறு வழியில்லை.
இந்தியாவில் சைபா் தாக்குதல்கள் இரு மடங்கு அதிகம்.
கூட்டுறவு சங்கங்களில் 2,257 உதவியாளா் பணியிடங்களுக்கு எழுத்துத் தோ்வு அறிவிப்பு.
6-வது முறையாக ஆஸ்திரேலியா சாம்பியன்; இந்தியாவை வீழ்த்தி சாதனை!
மோடி பிரதமரான பிறகு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்துள்ளது: ராஜ்நாத் சிங் கிண்டல்.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப் பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட பல்கலைக் கழகங்கள் திருத்தச் சட்டம் தொடர்பாக 10 மசோதாக்களை ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய நிலையில் அந்த மசோதாக்கள் சட்டப்பேரவையில் மீண்டும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு அவருக்கு அனுப்பப் பட்டுள்ளது.
இப்போது இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பதைத் தவிர ஆளுநருக்கு வேறு வழியில்லை.
ஆனால் ஆளுநர் ஆர்.என்.ரவி அரசியல் சட்டப்பூர்வமாக நடந்து கொள்பவர் அல்ல.
ஏதேனும் குறுக்குவழிகளை கண்டுபிடித்து மசோதாக்களை மீண்டும் முடக்கி வைக்க முயலாமல் இந்த 10 மசோதாக்களுக்கும் உடனடி யாக ஒப்புதல் அளிப்பதன் மூலம் அவர் வகிக்கும் பதவியின் கண்ணியத்தை காப்பாற்ற முன்வருவார் என தமிழ்நாடு எதிர்பார்க்கிறது.
சட்டப்பேரவையில் இந்த மசோதாக்களை மீண்டும் தாக்கல் செய்யும் வகையில் அரசினர் தீர்மானத்தை முன்மொழிந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை வரலாற்றுச் சிறப்பு மிக்கது ஆகும்.
தேர்ந்தெடுக்கப்பட்ட வார்த்தை களைக் கொண்டு மிகவும் கவனமாக இந்த மசோதாக்களை முதல்வர் மீண்டும் முன்மொழிந் துள்ளார்.
அனைத்துக் கட்சிகளும் இந்த தீர்மானத்தை ஒரு மனதாக ஆதரித்து நிறைவேற்றியுள்ளன.
ஒன்றிய அரசுக்கு ஆளுநர் காவடி தூக்கு கிறார் என்றால், அவருக்கு காவடி தூக்கு வதையே வாடிக்கையாகக் கொண்டுள்ள பாஜக அரசினர் தீர்மானத்தை ஆதரிப்பதை தவிர்த்து அவையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளது.
இது எதிர்பார்க்கக் கூடிய ஒன்றே. ஆனால் தங்களது ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றப் பட்ட மசோதாக்களுக்குக் கூட இன்னமும் ஆளு நர் ஒப்புதல் அளிக்காத நிலையில் அதிமுகவும் இந்த மசோதாக்களை ஆதரிப்பதைத் தவிர்க்க வெளிநடப்பு செய்துள்ளது கேலிக்கூத்தானதாகும்.
ஆளுநர் நிறுத்தி வைப்பதாகத்தான் கூறி யுள்ளார். நிராகரிக்கவில்லை என்று எதிர்க் கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொருத்த மற்ற வாதத்தை முன்வைத்தார்.
இதற்கு உரிய பதிலளிக்கப்பட்ட நிலையில், மீன்வள பல்கலைக் கழகத்திற்கு வைக்கப்பட்ட ஜெயலலிதாவின் பெயரை நீக்கிவிட்டதாக கூறி அதிமுக வெளி நடப்பு செய்தது. அதுவும் கூட தவறான தகவலே ஆகும் என ஆளுங்கட்சி தரப்பில் சுட்டிக்காட்டப் பட்ட பிறகும் அதிமுக வெளிநடப்பு செய்துள்ள தன் மூலம் ஆளுநரையும், பாஜகவையும் அந்தக் கட்சி பகைத்துக் கொள்ள விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
ஆளுநர் உடனடியாக இந்த மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிப்பது அரசியல் சட்டப்பூர்வ கடமை மட்டுமல்ல, ஆளுநர் பதவியின் பெருமையை பாதுகாத்துக் கொள்ள வழங்கப்பட்டுள்ள கடைசி வாய்ப்பும் ஆகும்.
இவை எல்லாம் தெரிந்தும் அவர் இப்படி குழப்படியாக நடந்து கொள்வது தி.மு.க,அரசு மீது அவப்பெயர் வர வேண்டும் என்ற சங்கிகளின் உன்னத நோக்கம்தான்.
தற்போது அமித்ஷா விடம் ஆலோசனை செய்ய டெல்லிக்கு சென்றுள்ளார்.அவரை இப்படி தமிழ்நாடு மக்களிடம் அசிங்கப் படுத்தி ,கோமாளியாக்கி வருவதே டெல்லி உள்துறை ஷா ஆலோசனைதான்.