14 மணி நேர வேலை!

  இந்தியாவின் சிலிகான் வேலி (அதிக ஐடி நிறுவனங்களை கொண்ட அமெரிக்க நகரம்) என்ற பெருமையை பெற்றுள்ளது கர்நாடக தலைநகர் பெங்களூரு. 

அங்கு 67,000க்கும் அதிகமான ஐடி நிறுவனங்கள் உள்ள நிலையில், உள்நாட்டில் மட்டுமின்றி வெளிநாட்டில் இருந்தும் பெங்களூரில் பணியாற்றி வருகின்றனர். 

இந்நிலையில், ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக நீட்டிக்கக் கோரி மாநில அரசிடம் கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. 

 அதில், கர்நாடகா கடைகள் மற்றும் வணிக நிறு வனங்கள் சட்டம் 1961-ஐ திருத்துவது குறித்து அம்மாநில அரசு ஆலோசித்து வருவதாகவும், இந்த திருத்தத்தில் ஐடி நிறுவன ஊழியர்களின் பணி நேரத்தை 14 மணி நேரமாக (12 மணி நேரம்  + 2 மணி நேரம் கூடுதல் பணி) என திருத்தம் செய்ய வேண்டும் என்ற முன்மொழிவை ஐடி  நிறுவனங்கள் கர்நாடக மாநில அரசிடம் கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

தற்போது, ​​தொழிலாளர் சட்டங்கள் 12 மணி  நேரம் (10 மணி நேரம் + 2 மணி நேரம் கூடுதல்  நேரம்) என்ற வகையில் வேலை நேரத்தை அனுமதிக்கின்றன.

இதுவே மிகக் கடுமையான ஆனால், ஐடி துறையின் புதிய முன்மொழிவில்,  “ஐடி, ஐடிஇஸ், பிபிஒ (IT/ITeS/BPO) ஆகிய துறையில் உள்ள பணியாளர்கள் ஒரு  நாளைக்கு 12 மணி நேரத்துக்கு மேல் வேலை  செய்ய வேண்டும் அல்லது வேலை செய்ய அனு மதிக்கப்படலாம். 

அல்லது மூன்று மாதங்களுக்கு தொடர்ச்சியாக 125 மணி நேரத்துக்கு மேல் வேலை நேரம் இருக்க வேண்டும்” என தகவல் வெளியாகி யுள்ள  நிலையில், கர்நாடக அரசு இந்த கோரிக்கைகள் தொடர்பாக முதல் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளது என்றும், விரைவில் அடுத்தகட்ட முடிவுகள் எடுக்கப்படலாம்; அமைச்சரவையில் இதுகுறித்து விவாதிக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

  வேலை நேரத்தை நீட்டிக்கும் ஐடி நிறுவனங் களின் முன்மொழிவுக்கு, ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளன. கேஐடியு கண்டனம் ஐடி நிறுவனங்களின் கூடுதல் வேலை நேர முன்மொழிவுக்கு கர்நாடக மாநில ஐடி ஊழியர் சங்கமான கேஐடியு (KITU) கடும் கண்டனம் தெரி வித்துள்ளது.  

இதுதொடர்பாக கேஐடியு வெளியிட்டுள்ள  அறிக்கையில், “வேலை நேரம் தொடர்பாக தற்போது நடைமுறையில் உள்ள சட்டத்திருத்தம் 3 ஷிப்ட்களாக உள்ளது. ஆனால் புதிய முன் மொழிவு 2 ஷிப்ட் என்ற அடிப்படையில் நிறு வனங்களை செயல்பட அனுமதிக்கும்.  

இதனால், மூன்றில் ஒரு பங்கு பணியாளர்கள் வேலையில் இருந்து நீக்கப்படும் அபாயம் உண்டு. ஐடி துறையில் 45% ஊழியர்கள் மனச்சோர்வு போன்ற மனநலப் பிரச்சனைகளையும், 55% பேர் உடல் ஆரோக்கிய பாதிப்புகளையும் எதிர் கொள்கின்றனர். 

இதற்கிடையே வேலை நேரத்தை மேலும் அதிகரித்தால் இந்த நிலைமை மேலும் மோசமாகும். ஊழியர்களை மனி தர்களாகப் பார்க்காமல் அரசு வெறும்  இயந்திரங்களாகப் பார்க்கிறது. தொழிலாளர் களை மனிதர்களாகக் கருத கர்நாடக அரசு தயாராக இல்லை என்பதையே இந்தச் சட்டத் திருத்தம் காட்டுகிறது. 

மாறாக கார்ப்பரேட் நிறுவனங்களின் லாபத்தைப் பெருக்கும் இயந்திரமாக மட்டுமே ஐடி ஊழியர்களை அரசு கருதுகிறது” என்று கடுமையாக எதிர்ப்பினை பதிவு செய்துள்ளது.

ஏற்கனவே நேரம் காலம் இல்லாமல் வேலை பார்ப்பதால் மன உளைச்சலில் தவிக்கும் பணியாளர்களை மேலும் ஊதியம்தராமல் வேலைவாங்க ஐ.டி.நிறுவனங்கள் தங்கள் லாப வேண்டிய அதிகரிக்க முயற்சிப்பதை அரசு தடுக்க வேண்டும்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக