விக்கிரவாண்டி தீர்ப்பு உணர்த்துவது?
முத்தமிழ் அறிஞர் கலைஞர் பெயரில் 100 ரூபாய் நினைவு நாணயம்: ஒன்றிய அரசு அரசாணை வெளியிட்டது.
மகாபோதி கோயிலின் அடியில் கட்டிடக்கலை மேலும் பல பொக்கிஷங்கள் புதைந்திருப்பதாக இங்கிலாந்தின் கார்டிப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து மாநில கலை, கலாச்சாரம் மற்றும் இளைஞர் துறையை சேர்ந்த பீகார் பாரம்பரிய மேம்பாட்டு சங்கம் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. சீன துறவி சுவான்சாங்க்கின் குறிப்புகளையும், பழங்கால செயற்கைகோள் புகைப்படங்களையும் வைத்து ஆய்வு செய்ததில், மகாபோதி கோயிலின் அடியில் பல தொல்லியல் கட்டிடங்கள்புதைந்திருப்பதுகண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
'நிடி ஆயோக்' வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -
காலநிலை மாற்றத்தை எதிர் கொள்ளும் நடவடிக்கைகளில் 81 புள்ளிகளுடன் தமிழகம் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
தரமான கல்வி இலக்கில் 76 புள்ளிகளுடன் தமிழகம் 4ம் இடத்தில் உள்ளது. "
விக்கிரவாண்டி
தீர்ப்பு?
விக்கிரவாண்டி திமுக சட்டமன்ற உறுப்பினர் புகழேந்தி உடல்நலக்குறைவால் கடந்த ஏப்ரல் 6-ஆம் காலமானதை தொடர்ந்து அந்தத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, கடந்த 10-ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
276 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் 21 சுற்றுகளாக எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா என்கிற சிவசண்முகம் 1,24,053 வாக்குகளும், பாமக வேட்பாளர் சி.அன்புமணி 56,296 வாக்குகளும், நாம் தமிழர் வேட்பாளர் அபிநயா 10,602 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதனால் அன்னியூர் சிவா 67,757 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கடந்த ஏப்ரல் மாதம் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்ட விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1,82,426 வாக்குகள் பதிவாகியிருந்தன.
மூன்று மாதங்கள் இடைவெளியில் நடந்த சட்டப்பேரவை இடைத்தேர்தலில் 1,95,495 வாக்குகள் அதாவது 82.48 விழுக்காடு வாக்குகள் பதிவாகி இருந்தன. மக்களவைத் தேர்தலை விட 13,069 வாக்குகள் கூடுதலாக பதிவாகியிருந்தன.
மக்களவைத் தேர்தலை பொருத்தவரையில் திமுக கூட்டணியில் பானை சின்னத்தில் போட்டியிட்ட விசிகவின் ரவிக்குமார் 72,188 வாக்குகளும், அதிமுகவின் பாக்யராஜ் 65,365 வாக்குகளும், பாட்டாளி மக்கள் கட்சியின் முரளி சங்கர் 32,198 வாக்குகளும், நாம் தமிழர் கட்சியின் களஞ்சியம் 8,352 வாக்குகளும் பெற்றிருந்தனர்.
ஒரே தொகுதியில் மூன்று மாத இடைவெளியில் நடந்த தேர்தலில் திமுக கூட்டணி 51,865 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. அதேபோல் தேசிய ஜனநாயக கூட்டணி 24,098 வாக்குகளை கூடுதலாக பெற்றுள்ளது. நாம் தமிழர் கட்சியோ 2,250 வாக்குகளை கூடுதாக பெற்றுள்ளத
இடைத் தேர்தலை அதிமுக கூட்டணி புறக்கணித்தால் கடந்த தேர்தலில் அந்த கூட்டணி வாங்கிய 65,365 வாக்குகள் பிளவுபட்டு பதிவாகியுள்ளதையே தேர்தல் முடிவு காட்டுகிறது.