எவ்வளவு வாங்கிளார்கள்?

 19ம் தேதி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு.

புதுக்கோட்டையில் 50 நட்சத்திர ஆமைகள் பறிமுதல்.

கட்சியை டேமேஜ் ஆக்கியது ஆருத்ரா மோசடி குழந்தைக்கு ஆருத்ரன் என்று பெயர் சூட்டிய அண்ணாமலை: நிர்வாகிகள் அதிர்ச்சி; வெடித்தது புதிய சர்ச்சை.

எவ்வளவு வாங்கிளார்கள்?

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக 2018ம் ஆண்டு மே மாதம் நடந்த போராட்டத்தில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 16 பேர் பலியாகினர்.


 இந்த சம்பவம் தொடர்பாக நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் விசாரித்து, காவல் அதிகாரிகள் உள்பட பலர் மீது நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக மனித உரிமை ஆர்வலர் ஹென்றி திபேன் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கை முடித்து வைத்த தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று அதில் வலியுறுத்தி இருந்தார்.

இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து குற்றம்சாட்டப்பட்ட அதிகாரிகள் யாரும் இதுவரை வருந்தவில்லை என்றும் அவர்களுக்கு எதிராக கொலை வழக்கு தொடரப்பட வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். 

இவ்வழக்கு நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், செந்தில் குமார் அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.


அப்போது சிபிஐ தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள்,

“தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கில் சிபிஐ விசாரணை நியாயமாக இல்லை.

மறுநாள் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து தூரத்தில் உள்ள அண்ணாநகர்,திரேஸ்புரம் போன்ற குடியிருப்பு பகுதிகளிலும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. அப்படி இருக்க எந்த அதிகாரியும் தவறு செய்யவில்லை என்று எப்படி அறிக்கை அளிக்க முடியும். பின் யாரை எதிர்த்து சிபிஐ வழக்கு நடத்தும்?


இத்தனை ஆண்டுகள் சிபிஐ விசாரணை நடத்தியும் எந்த பலன் இல்லை.இதில்பல வழக்குகளை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்று கூறுவது வேடிக்கையாக இருக்கிறது” என்று கருத்து தெரிவித்தனர்.


மேலும், 100 நாட்கள் தொடர் போராட்டம் நடந்த நிலையில், அங்கு ஏதாவது வன்முறை நிகழ்ந்ததா என்றும் கேள்வியை முன்வைத்தனர்.

சிபிஐ விசாரணையின் முடிவு கவலை அளிக்கும் வகையில் உள்ளதாகவும் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.


தொடர்ந்து, “தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடந்த காலத்தில் பணியாற்றிய காவல் துறையினர் உள்ளிட்ட அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிக்க வேண்டும்” என லஞ்ச ஒழிப்புத் துறைக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்திய நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணையில் குற்றம் சாட்டப்பட்டுள்ள காவல் துறை,வருவாய்த்துறை மற்றும் அரசு அதிகாரிகள், அவர்களின் உறவினர்கள் பெயர்களில் துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த சொத்து விவரங்களை, சம்பவத்திற்கு 2 ஆண்டுகளுக்கு பிறகு உள்ள சொத்து விவரங்களை சேகரித்து 2 வாரங்களில் நீதிமன்றத்தில் அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும் என்று தமிழக லஞ்ச ஒழிப்பு துறைக்கு உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

வழக்கினை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்துள்ளனர். இதனால் தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பான வழக்கு விசாரணை தீவிர கட்டத்தை எட்டியுள்ளது.

துப்பாக்கிசூட்டிற்குப் பின்னர் அதற்கான ஆணையில் கையெழுத்திட்டவர்களுக்கு கோடிகளில் பணம் அத்தொழிலதிபரால் வழங்கப்பட்டதாகத்தெரிகிறது.

சிறுபான்மை அரசு,

கடந்த இரு தேர்தல்களில் மக்களவையில் பெற்ற பெரும்பான்மையை, 2024 தேர்தலில் பா.ஜ.க இழந்த காரணத்தால், அதுவரை “பா.ஜ.க கூட்டணி,” “மோடி ஆட்சி” என பொதுவாக அழைக்கப்பட்டு வந்த உச்சரிப்பு, அரசியல் வட்டாரத்திலும், மக்கள் வட்டாரத்திலும் நீங்கி, “தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA)” என்று உச்சரிக்க தொடங்கியுள்ளது.

இந்நிலையில், மக்களவையிலாவது கூட்டணி உதவியால் பெரும்பான்மை உள்ளது என்ற மனநிறைவை, மாநிலங்களவையில் இழந்துள்ளது பா.ஜ.க.

கடந்த மார்ச் மாதமே, பெரும்பான்மை விளிம்பில் தொங்கி கொண்டிருந்த பா.ஜ.க, தற்போது விளிம்பிலிருந்தும் மேலும் கீழிறங்கி மாநிலங்களவையில் வெறும் 86 உறுப்பினர்களையே பெற்றுள்ளது.

இதனால், பா.ஜ.க மட்டுமல்ல, பா.ஜ.க சார்ந்திருக்கும் தே.ஜ.கூட்டணியும் (NDA) பெரும்பான்மை இழந்ததோடு மட்டுமல்லாமல், கடந்த காலங்களில் தன்னிச்சையாக மசோதா நிறைவேற்றும் முறைக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டுள்ளது.

மாநிலங்களவையில் பெரும்பான்மை இழந்த பா.ஜ.க.வும், NDA-ம்! : சர்வாதிகாரத்திலிருந்து பெறப்பட்ட விடுதலை!

அதன்படி, தற்போதைய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் நிலவரம்,

இந்தியா கூட்டணி - 87

பா.ஜ.க - 86

இதர எதிர்க்கட்சி உறுப்பினர்கள் - 29

பா.ஜ.க அல்லாத தே.ஜ.கூ (NDA) - 24

காலி இடங்கள் - 19

பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள் - 114

மொத்த நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்கள் எண்ணிக்கை - 245 -ஆக இருக்கிறது.

----------------------

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக