இந்திய தேர்வாணைய

 சீர்குலைவு!

மோடி பிரதமரான பின்பு நாட்டின் கல்வி மற்றும் வேலை வாய்ப்புத் துறை உருக்கு லைந்துள்ளது. 

புதிய பாடத் திட்டம் என்ற பெயரில் பள்ளிக் கல்வியில்  பல்வேறு மாற்றங்கள், நுழை வுத்தேர்வு மற்றும் போட்டித் தேர்வு களில் முறைகேடு என பல்வேறு சம்பவங்கள் அரங்கேறி வருகின் றன. இந்நிலையில், ஒன்றிய அர சுப் பணியாளர்கள் தேர்வாணை யத்தின் (யுபிஎஸ்சி) தலைவராக இருக்கும் மனோஜ் சோனி திடீரென தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 

டந்த 2017இல் ஒன்றிய அரசுப் பணியாளர்கள் தேர்வாணை யத்தின் உறுப்பினராக இணைந்த மனோஜ் சோனி, 2023 மே 16 அன்று ஆணையத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

 மனோஜ் சோனிக்கு 2029 வரை பதவிக்காலம் இருக்கும் நிலை யில், 5 ஆண்டுகளுக்கு முன்பா கவே அவர் ராஜினாமா செய்துள் ளது சர்ச்சையை மட்டுமின்றி பெரும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி யுள்ளது. 

ஒரு மாதத்திற்கு முன்னரே... மனோஜ் சோனி தற்போதுதான் தனது பதவியை ராஜினாமா செய்யவில்லை. அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன்னதாகவே தனது ராஜினாமா கடிதத்தை குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவிடன் சமர்ப்பித்துள்ளார். ஆனால் இது வரை அவரது ராஜினாமா கடிதம் ஏற்கப்படவில்லை. 

குஜராத்தில் உள்ள சுவாமிநாராயண் பிரிவின் ஒரு அங்கமாக விளங்கும் அனுபம் மிஷன் என்ற அமைப்பில் இணை ந்து ஆன்மீக சேவையாற்ற அவர் விரும்புவதால் தனது யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாக மனோஜ் சோனி அறி வித்த பின்னரே அவர் ஒரு மாதத் திற்கு முன்பு ராஜினாமா செய்தது தற்போது அம்பலமாகியுள்ளது.

குஜராத் மாநிலத்தின் கல்வித்துறை உயரதிகாரியான மனோஜ் சோனி பிரதமர் மோடிக்கு மிக நெருக்கமானவர். 

அவரை திடீரென கடந்த 2017இல் ஒன்றிய அரசு பணியிடத்திற்கு கொண்டு வந்தார் பிரதமர் மோடி. சந்தேகம் ஏற்படக் கூடாது என்பதற்காக 5 ஆண்டுகள் யுபிஎஸ்சி உறுப்பினராக பணி யாற்ற வைத்து, 5 ஆண்டுகளுக்கு பிறகு 2023இல் மனோஜ் சோ னியை யுபிஎஸ்சி  தலைவராக்கியது மோடி அரசு.

 “புகழ்பெற்ற நேர்மை யான கல்வியாளர்” என மனோஜ் சோனியை மோடி அரசு அடிக்கடி புகழ்பாடிய நிலையில், முறைகேடு சர்ச்சை தொடர்பாக தனது பதவிக்காலம் முடிவதற்கு 5 ஆண்டுகளுக்கு முன்பே தனது பதவியை ராஜினாமா செய்து ஓட்டம் பிடித்துள்ள விவகாரம் மோடி அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

க்களவை சபாநாயகராக இருக்கும் ஓம் பிர்லா மகள் அஞ்சலி பிர்லா மாடல் துறையில் நடிகையாக இருந்தவர். திடீரென 2019இல் முதல் முயற்சிலேயே அஞ்சலி பிர்லா யுபிஎஸ்சியில் தேர்ச்சி (ஐஏஎஸ்) பெற்றதாகவும், அவருக்கு ரயில்வே அமைச்சகத்தில் ஆணையர் அந்தஸ்தில் பணி ஒதுக்கப்பட்டதாகவும் இதில் பல்வேறு சந்தே கங்கள் இருப்பதாகவும் கடந்த மாதம் தலைப்புச் செய்தியாக நாடு முழுவதும் வைரலானது. 

இந்த செய்தி வெளியான பின்னர் யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி அதற்கு எவ்வித விளக்கமும் அளிக்காமல் மௌன மாகவே இருந்தார். அதன் பின்னர் கடந்த வாரம் யுபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெறுவதற்காக போலியாக மாற்றுத் திறனாளி சான்றிதழ் கொடுத்ததாக புகாருக்குள்ளான பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜா நீக்கம் செய்யப்பட்டார். 

 வலுக்கும் சந்தேகம்... அஞ்சலி பிர்லா தேர்ச்சி விவகார சர்ச்சை வெளியான சமயத்தில்  யுபிஎஸ்சி தலைவர் மனோஜ் சோனி குடியரசுத் தலைவரிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளார். 

இதுகுறித்து ஒன்றிய அரசு எவ்வித அறிவிப்பை யும் வெளியிடவில்லை. பயிற்சி ஐஏஎஸ் அதிகாரி பூஜாவின் தேர்ச்சி விவகா ரம் சர்ச்சையாக வெளியான 48 மணிநேரத்தில் ஆன்மீகத்தில் பணி யாற்றப் போவதாக ராஜினாமா அறிவிப்பை வெளிப்படையாக அறிவித்துள் ளார் மனோஜ் சோனி. 

நீட் தேர்வு போன்று முறைகேடு சம்பவங்கள் வெளி யாகும் முன்னரே யுபிஎஸ்சி தலைவர் பதவியை ராஜினாமா செய்து மனோஜ் சோனி ஓட்டம் பிடித்துள்ளாரா என்ற வலுவான சந்தேகம் கிளம்பியுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?