பெயர்மட்டுமே " நீட்"

 எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். உள்ளிட்ட இளநிலை மருத் துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, கடந்த மே 5-ஆம் தேதி நடைபெற்றது. 

இந்த தேர்வு நடைபெறுவ தற்கு ஒருநாள் முன்னதாக பீகார் தலைநகர் பாட்னாவில் வினாத்தாள் கசிந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதேபோல் ஜார்க்கண்ட், குஜராத், மகா ராஷ்டிரா, ராஜஸ்தான், உ.பி. உள்ளிட்ட மாநிலங்களிலும் முறை கேடுகள் நடைபெற்றது தெரிய வந்தது.

அதற்கேற்பவே தேர்வு முடிவுகளில், நாடு முழுவதும் 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்திருந்ததும், ஹரியானாவில் ஒரே மையத்தில் தேர்வு எழுதிய 6 போ் முதலிடம் பிடித்ததும், நீட் தேர்வில் முழு மதிப்பெண் பெற்ற மாணவி, பிளஸ் 2 தேர்வில் 50 சதவிகிதம் கூட மதிப்பெண் பெறா ததும், சில பாடங்களில் பெயில் ஆனதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.

இதனிடையே, தேர்வு எழுத தாமதமான 1,563 மாணவ - மாணவிகளுக்கு தேசிய தேர்வு முகமை, கருணை மதிப்பெண்கள் வழங்கியது மற்றொரு சர்ச்சையை ஏற்படுத்தியது. 

 இதிலும்  மோசடி நடந்திருப்பதாக குற்றச் சாட்டுக்கள் எழுந்தன.

இது தொடர்பாக புலன் விசார ணைக்கு உத்தரவிட வேண்டும்; நீட் தேர்வை  ஏற்காத மாநிலங்க ளுக்கு விலக்கு அளிக்க வேண்டும்  என்று மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்தன. போராட் டங்களையும் அறிவித்தன. 

இத னால் தேசிய தேர்வு முகமையின் தலைவர் கட்டாயக் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றப்பட்டார்.

இந்த வழக்கைத் தற்போது சிபிஐ விசாரித்து வருகிறது.

முன்னதாக, ‘நீட்’ தேர்வு முடிவு களுக்கு எதிராக 56 மாணவ - மாணவியர் தொடர்ந்த வழக்கில், தேசிய தேர்வு முகமை வழங்கிய கருணை மதிப்பெண்களை அதி ரடியாக ரத்து செய்த உச்ச நீதி மன்றம், மறுதேர்வுக்கு உத்தர விட்டது. 1,563 பேரில் 813 பேர் மீண்டும் தேர்வு எழுதினர். அவர்க ளுக்கான முடிவுகள் அண்மையில் வெளியிடப்பட்டன.

இந்நிலையில், ஒன்றிய பாஜக அரசின் கல்வித் துறையானது, உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. 

அதில், “நீட் நுழைவுத் தேர்வில் பெரிய அளவில் முறைகேடுகள் நடைபெறவில்லை. சில மாநிலங்க ளில் ஆள்மாறாட்டம் மற்றும் முறைகேடுகள் நடைபெற்றுள்ளன. தவறு செய்தவர்கள் மீது கடுமை யான நடவடிக்கை எடுக்கப் படும். 

நீட் தேர்வில் நேர்மை, வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப் பட்டு வருகின்றன. இஸ்ரோ முன் னாள் தலைவர் ராதாகிருஷ்ணன் தலைமையில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டு உள்ளது. 

வினாத் தாள் கசிவை தடுக்க அண்மை யில் கடுமையான சட்டம் அமல் செய்யப்பட்டு உள்ளது. நீட் தேர்வை ரத்து செய்தால் லட்சக்க ணக்கான மாணவர்கள் பாதிக்கப் படுவார்கள். எனவே மாணவர்க ளின் நலன்களை கருத்தில் கொண்டு நீட் தேர்வை ரத்து செய்யக் கூடாது” என்று கூறி யுள்ளது.

நீட் முறைகேடு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் ஜூலை 8 அன்று விசாரணைக்கு வருகிறது.

ஜூலை 6-ஆம் தேதி ‘நீட்’ யுஜி படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.

 ஆனால், 8-ஆம் தேதி விசாரணையில் உச்ச நீதிமன்றத் தின் கண்டனங்களுக்கு உள்ளாக லாம் என்ற அச்சத்தில், மோடி அரசு திடீரென கலந்தாய்வை ஒத்தி வைத்துள்ளது. 

தேசிய தகுதித் தேர்வு மற்றும் நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுகளுக்கான கலந்தாய்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?