வடை அரசு

 2047ல் இந்தியாவை வளர்ந்த நாடாக உரு வாக்க ஒன்றிய பட்ஜெட்டில் திட்டங்கள் அறிவிக் கப்படவுள்ளதாக மோடி அரசு தெரிவித்துள்ளது.

 ஏற்கெனவே பத்தாண்டு காலம் தாக்கல் செய்த பட்ஜெட்டுகளில் இதுபோன்ற விதவிதமான அறி விப்புகளை கேட்டுக் கேட்டு புளித்துப் போய் விட்டது.

 உண்மையிலேயே இந்தியாவை வளர்ந்த நாடாக அல்ல, வளர்ச்சியின் துவக்கப்புள்ளிக்கு கொண்டு வருவதற்கே கூட அரசு செய்ய வேண்டிய முதல் பெரும் நடவடிக்கை, பல லட் கக்கணக்கில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவது தான். 

ஆம், இன்றைக்கு இந்திய நாட்டின் ஆகப்  பெரிய பிரச்சனை தீ போல பரவும் வேலையின் மைக் கொடுமைதான்.

 இந்தியா ரேட்டிங்ஸ் சர்வே மேற்கொண்டுள்ள ஆய்வுகள் பணமதிப்பு நீக்கம், ஜிஎஸ்டி, பெருந்தொற்று பொது முடக்கம் ஆகிய  மூன்று மிகப் பெரிய பேரழிவுகள் இந்தியப் பொரு ளாதாரத்தை  நிலைகுலையச் செய்துள்ளன என்பதை தெளிவாக்குகின்றன. 

இந்த மூன்றும் மோடி அரசு நடத்திய பேரழிவுகள். இந்த பேரழிவு களின் காலமான 2015- 16 முதல் 2022-24 வரை 63 லட்சம் முறைசாரா தொழில் நிறுவனங்கள் மூடப் பட்டு 1.6 கோடி வேலை வாய்ப்புகள் பறிக்கப்பட்டு தொழிலாளர்கள் வீதியில் வீசப்பட்டுள்ளனர். 

இந்தியாவில் முறைசாரா தொழில்கள் தான் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 45 சத வீதம் பங்களிப்பு செய்கின்றன; இவற்றில்தான் மொத்த தொழிலாளர் சக்தியில் 75 சதவீதம் வேலை செய்து வருகிறது. 

மேற்கண்ட மூன்று பேரழிவுக ளில் மட்டும் இந்திய உழைப்பாளி மக்கள் 11.3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு வருமானங்களை யும், வசதிகளையும், தொழில்களையும், சொத்துக் களையும் இழந்திருக்கிறார்கள் என்று அந்த ஆய்வு மேலும் விவரிக்கிறது. 

இதில் வெளிப்பட்டுள்ள நுட்பமான மற்றொரு அம்சம் என்னவென்றால், லட்சக்கணக்கான தொழிற்கூடங்கள் மூடப்பட்டு கோடிக்கணக்கான மக்களின் வேலை பறிக்கப்பட்டுள்ள இந்த கால கட்டத்தில்தான்  வரி வசூல் படிப்படியாக உச்ச நிலையை எட்டியுள்ளது; 

குறிப்பாக ஜிஎஸ்டி வரி  வசூல் ஒன்றிய அரசுக்கு மிகப்பெரும் வருமான ஆதாரமாக மாறியுள்ளது. இதன் பொருள் மக்களி டமும், இன்னும் எஞ்சியுள்ள சிறு குறு நடுத்தர தொழில் நிறுவனங்களிடமும் மோடி அரசு ரத்தத்தை உறிஞ்சுவது போல ஜிஎஸ்டி மூலம் மொத்தத்தையும் உறிஞ்சிக் கொண்டிருக்கிறது என்பதுதான்.

 இதன் விளைவு தமிழகம் உட்பட நாடு முழுவதிலும் சிறு குறு நடுத்தர தொழில்க ளின் உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கிறது. 

2015- 16க்கு முன்பு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 46.9 சதவீதமாக இருந்த சிறு குறு தொழில்கள் உள்ளிட்ட முறைசாராத் தொழில்களின் பங்களிப்பு 2022-23ல் 32.3 சதவீதமாக வீழ்ச்சி அடைந்திருப்பதிலிருந்தே இதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.

எனவே வெற்று வாய்ச் சவடால் அடிப்பதை விட்டுவிட்டு வேலைவாய்ப்புகளை உருவாக் கட்டும் மோடி அரசு.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?