கையூட்டு பட்ஜெட்?

சங்கிகள் ஆட்சியை காப்பாற்ற பட்ஜெட்டில் பீகாருக்கு ரூ.60,000 கோடி ஆந்திராவுக்கு ரூ.15,000 கோடி.கொடுத்துள்ளனர் பாஜக மோடி.

ராணிப்பேட்டையில் கார் உற்பத்தி ஆலையை அமைக்கிறது டாடா மோட்டார்ஸ்.

ஒன்றிய பட்ஜெட்டில் அநீதி நிதி ஆயோக் கூட்டத்தை தமிழ்நாடு புறக்கணிக்கிறது. தமிழ்நாடு எம்பிக்கள் டெல்லியில் இன்றுபோராட்டம்,முதல்வர்மு.க.ஸ்டாலின்.
தமிழகத்தின் மீது ஒன்றிய அரசுக்கு உள்ள காழ்ப்புணர்ச்சியை காட்டுகிறது: பட்ஜெட் குறித்து எடப்பாடி பழனிசாமி .

கையூட்டு பட்ஜெட்?

ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. 

மேலும் பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆட்சியில் இருக்கும் பீகார் மற்றும் ஆந்திராவிற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பல லட்சம் கோடிகள்நிதி ஒதுக்குவதாக குற்றம்சாட்டப்பட்டது.

அவர்கள் தயவில்தான் மோடி பிரதமராக உள்ளார்என்பதுகுறிப்பிடத்தக்கது.அவர்களுக்கு கையூட்டு கொடுப்பதாகத்தான் இந்திய பட்ஜெட்டே உள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை தொடர்ந்து தங்கள் மாநிலமும் புறக்கணிக்கப்பட்டதாக கூறி 3 மாநில முதலமைச்சர்கள் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மின்தெலங்கானா மாநில முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, கர்நாடக மாநில முதலமைச்சர் சித்தராமையா, இமாச்சலப் பிரதேச மாநில முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு ஆகியோர் இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளனர்.

 இவர்கள் மூவரும் காங்கிரஸ் கட்சி சார்பில் முதலமைச்சர்களாக பதவி வகித்து வருவது குறிப்பிடத்தக்கது.

பாதை மாறட்­டும், 

பழக்­கம் மாறட்­டும்!

பாதையை மாற்­றா­தீர்­கள் என்­ப­து­தான் வழக்­க­மா­கச் சொல்­வது. ஆனால் அது தவ­றான பாதை­யாக இருக்­கு­மா­னால், ‘பாதையை மாற்­றுங்­கள்’ என்று சொல்­வதே சரி­யா­ன­தாக இருக்­கும். ஒன்­றிய பா.ஜ.க. அர­சைப் பொறுத்­த­வ­ரை­யில் ‘பாதை மாறட்­டும்’ என்­று­தான் சொல்­ல­வேண்­டும். ஏனென்­றால், தொடர்ந்து தவ­றான பாதை­யில் பய­ணிப்­பவர்­கள் அவர்­கள்!

பெரும்­பான்மை பலத்தை பா.ஜ.க.வுக்கு இந்­திய நாட்டு மக்­கள் வழங்­க­ வில்லை. அவர்­கள் எதிர்­பார்த்த வெற்­றியை அடைய முடி­ய­வில்லை.

மாநி­லக் கட்­சி­கள் சில­வற்­றைச் சேர்த்­துக் கொண்டு ஆட்­சியை அமைத்­துள்­ளது பா.ஜ.க. தன்னை கட­வு­ளின் அவ­தா­ர­மா­கக் காட்­டிக் கொண்ட மோடி, கூட்­டணி அமைச்­ச­ர­வைக்­குத்­தான் தலைமை தாங்க முடிந்­தது. கடந்த காலத் தவ­று­க­ளில் இருந்து பாடம் கற்­றி­ருக்க வேண்­டும். இனி­யா­வது தங்­கள் பழக்­கத்­தை­யும் மாற்றி, பாதை­யை­யும் மாற்­றிக் கொள்ள வேண்­டும் ஒன்­றிய பா.ஜ.க. அரசு என்­பதே நமது வேண்­டு­கோள் ஆகும்.

ஒன்­றிய அர­சின் நிதி­நிலை அறிக்கை இன்று தாக்­கல் ஆக இருக்­­கிறது. அதில் தமிழ்­நாட்­டுக்­கான திட்­டங்­க­ளாக எவை எவை இடம்­பெற வேண்­டும் என்று தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரிக்கை வைத்­துள்­ளார்­கள்.

மூன்று ஆண்­டு­க­ளாக விடு­விக்­கப்­ப­டா­மல் இருக்­கும் மெட்ரோ ரயில் திட்­டத்­துக்­கான நிதியை விடு­விக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரிக்கை வைத்­துள்­ளார்­கள்.

மெட்ரோ ரயில் திட்­டத்­துக்­கான நிதியை ஒன்­றிய அரசு தர­வில்லை. அதற்­கான கார­ணத்தை அவர்­க­ளால் சொல்ல முடி­ய­வில்லை. மெட்ரோ ரயில் இரண்­டாம் திட்­டங்­க­ளில் ஒன்­றிய அரசு முட்­டுக்­கட்டை போட்டு வரு­கி­றது. அந்த திட்­டத்­தின் நிதி ஒதுக்­கீடு என்­பது ஒன்­றிய

அர­சும், மாநில அர­சும் 50 : 50 விழுக்­காடு பங்­கிட்­டுத் தர வேண்­டும். மெட்ரோ இரண்­டாம் கட்­டப் பணி என்­பது ரூ.63 ஆயி­ரம் கோடி செல­வா­கும். பா.ஜ.க. அரசு இதற்கு பணம் ஒதுக்க வேண்­டும் என்று முத­ல­மைச்­சர் அவர்­கள் பல­முறை கோரிக்கை வைத்து கடி­தம் மேல் கடி­தம் அனுப்பி விட்­டார். பிர­த­மர் மோடிக்கு முன்­னால் மேடை­யில் பல­முறை பேசி­யும் விட்­டார் முத­ல­மைச்­சர் அவர்­கள். மாநில அரசு செலவு செய்­வ­தற்­கான நிதி­யைத் திரட்ட பன்­னாட்டு கட­னு­தவி பெறு­வ­தற்­கும் அனு­மதி தர­வில்லை. மாநில அரசு இந்த ஆண்டு 9 ஆயி­ரம் கோடியை ஒதுக்கி இருக்­கி­றது. ஒன்­றிய நிதி வர­வில்லை என்­றால் இந்த

திட்­டத்தை முழு­மை­யாக மாநில அர­சின் நிதி­யில் இருந்­து­தான் செயல்­ப­டுத்த வேண்­டும். ஆண்­டுக்கு 12 ஆயி­ரம் கோடியை இதற்­காக

ஒதுக்­கி­னால்­தான் மெட்ரோ இரண்­டாம் கட்ட திட்­டத்தை செயல்­­படுத்தி முடிக்க முடி­யும்.

கோவை மற்­றும் மது­ரை­யில் மெட்ரோ ரயில் திட்­டங்­க­ளுக்­கான

ஒப்­பு­தலை விரைந்து வழங்க வேண்­டும் என்று கோரிக்கை வைத்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள். தமிழ்­நாட்­டில் ஏற்­க­னவே அறி­விக்­கப்­பட்­டுள்ள ரயில்வே திட்­டங்­களை விரைந்து செயல்­ப­டுத்­திட

முழு­மை­யான நிதியை ஒதுக்­கீடு செய்­யுங்­கள் என்­றும் கோரிக்கை வைத்­துள்­ளார் முத­ல­மைச்­சர் அவர்­கள்.

‘சில மாநில அர­சு­கள் இல­வச பய­ணம் என அறி­விக்­கி­றார்­கள்,

இத­னால் மெட்ரோ ரயில்­க­ளில் கூட்­ட­மில்லை. எனவே மெட்ரோ திட்­டங்­க­ளால் பய­னில்லை’ என்று தேர்­தல் நேரத்­தில் பேசி­ய­வர்­தான் நமது பிர­த­மர் மோடி. இல­வ­சப் பய­ணங்­க­ளுக்­கும் மெட்ரோ ரயில்­­களுக்­கும் என்ன தொடர்பு? மக்­கள் தொகைப் பெருக்­க­முள்ள நாட்­டில் எத்­தனை வகை­யான வச­தி­கள் செய்­யப்­பட்­டா­லும் அவை அனைத்­­திலும் கூட்­டம் இருக்­கத்­தான் செய்­யும். பேருந்து வசதி என்­பது ஊருக்கு ஊர், கிரா­மத்­துக்கு கிரா­மம் இருக்­கும் திட்­டம் ஆகும். மெட்ரோ ரயில்­கள் ஒரு சில பெரு­ந­க­ரங்­க­ளில் மட்­டுமே சாத்­தி­ய­மான திட்­டம் ஆகும். இல­வச பஸ் பய­ணத்­தை­யும், மெட்ரோ ரயில் பய­ணத்­தை­யும் பிர­த­ம­ரால் எப்­படி ஒப்­பிட முடிந்­தது என்றே தெரி­ய­வில்லை. அத­னால்­தான் தமிழ்­நாடு மெட்ரோ ரயில் திட்­டங்­க­ளுக்கு பணம் ஒதுக்க மறுக்­கி­றாரா பிர­த­மர்?

மக­ளி­ருக்கு கட்­ட­ண­மில்லா பேருந்து வசதி வழங்­கப்­பட்­டது பிர­த­ம­ருக்கு பிடிக்­க­வில்­லையா? அத­னால்­தான் மெட்ரோ திட்­டங்­களை முடக்கி வைக்க நினைக்­கி­றாரா பிர­த­மர்?

தாம்­ப­ரம் -–- செங்­கல்­பட்டு இடையே மேம்­பால விரைவு சாலைத்

திட்­டத்­துக்­கான ஒப்­பு­தலை உட­ன­டி­யாக வழங்க வேண்­டும் என்­றும்

முத­ல­மைச்­சர் அவர்­கள் கோரிக்கை வைத்­துள்­ளார்­கள். கிரா­மப்­புற –- நகர்ப்­புற வீட்டு வச­தித் திட்­டங்­க­ளின் கீழ் கட்­டப்­ப­டும் வீடு­க­ளுக்­கான செலவு வரம்பை உயர்த்த வேண்­டும் என்­ப­தும் முத­ல­மைச்­ச­ரின் கோரிக்கை ஆகும்.

“மாநி­லங்­க­ளின் நிதி உரி­மையை –- வலி­மை­யைப் பறிப்­பது என்­பது அதன் ஆக்­ஸி­ஜனை நிறுத்­து­வது ஆகும். அத­னைத் தான் பா.ஜ.க. அரசு செய்து வரு­கி­றது” என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் ஒரு­முறை சொன்­னார். அத­னைத்­தான் பா.ஜ.க. அரசு இது­வரை செய்­தது. இனி­யும் அதைச் செய்­யக் கூடாது. ‘அர­சி­யல் சட்­டத்தை காப்­பேன்’ என்று உறு­தி­மொழி அளித்­துள்ள பிர­த­மர் அவர்­கள், கூட்­டாட்­சித் தன்­மை­யைக் காக்­கும் செயல்­க­ளைச் செய்ய வேண்­டுமே தவிர,

அர­சி­ய­ல­மைப்­புச் சட்­டத்தை சிதைக்­கும் செயல்­க­ளைச் செய்­யக் கூடாது.

தமிழ்­நாட்டு மக்­கள் பா.ஜ.க.வுக்கு ஏன் வாக்­க­ளிப்­பது இல்லை

என்­பதை இனி­யா­வது உணர்ந்து செயல்­பட வேண்­டும்.

                                   -'முரசொலி 'தலையங்கம்.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?

கார்பரேட்டுகளால் கார்பரேட்டுகளுக்காக