வலதுசாரி. லேபர் ?
காலை உணவு திட்டம், நான் முதல்வன் உள்ளிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்திய திட்டங்களை பிரிட்டன் தேர்தலில் தொழிலாளர் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் வெளியிட்டு மாபெரும் வெற்றிகண்டுள்ளது: தமிழ்நாடு அரசு.
சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆர்ம்ஸ்ட்ராங் படுகொலை தொடர்பாக 8 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தற்கொலை செய்த ரோபோ ?:
குறிப்பாக மக்கள் அதிக நேரம் வேலை பார்க்கமாட்டார்கள் என்ற கணக்கிலும் ரோபோக்கள் பயன்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், தென் கொரியாவில் கிட்டத்தட்ட 11 வருடங்களாக மக்கள் பணியில் இருந்து வந்த ரோபோ பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக சந்தேகப்படும் செய்தி உலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
தென் கொரியாவில் உள்ள குமி சிட்டி கவுன்சிலில் கடந்த 2013 ஆம் ஆண்டு இந்த ரோபோவை அரசு பணியில் அமர்த்தியுள்ளனர்.
இந்த சூழலில் கடந்த வியாழன் அன்று வழக்கமான பணியில் இருந்த ரோபோ மாலை 4 மணி அளவில் படிக்கட்டில் இருந்து கீழே விழுந்து நொறுங்கியபடி காணப்பட்டுள்ளது.
இதுகுறித்து 'டெய்லி மெயில்' வெளியிட்ட செய்தியில், நாட்டில் முதல் முறையாக அதிக பணிச்சுமை காரணமாக கடுமையாக உழைத்து வந்த ரோபோ தற்கொலை செய்துகொண்டதாகவும் அதற்கு குமி சிட்டி மக்கள் இரங்கல் தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், சம்பவம் நடப்பதற்கு முன்னதாக அந்த ரோபோ குழப்பமாக ஒரே இடத்தில் சுற்றிக்கொண்டிருந்ததாக, சிட்டி கவுன்சில் ஊழியர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூர் மக்களின் கூற்றுப்படி, அந்த ரோபோ அதிக பணிச்சுமை காரணமாக தற்கொலை செய்திருக்கலாம் என தெரிவிக்கின்றனர். ஆனால், சிட்டி கவுன்சில் தரப்பில், ரோபோ விழுந்து நொறுங்கியதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை, ரோபோவின் பாகங்கள் சேகரிக்கப்பட்டுள்ளன,
நிறுவனத்தால் பின்னர் பகுப்பாய்வு செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ரோபோ மட்டும்தான் குமி சிட்டி கவுன்சிலில் அரசு பணியில் இருந்து வந்துள்ளது.
கலிஃபோர்னியாவின் 'ரோபோ-வெயிட்டர் ஸ்டார்ட்அப்' நிறுவனமான பியர் ரோபோட்டிக்ஸ் நிறுவனத்தால் இந்த ரோபோ வடிவமைக்கப்பட்டுள்ளது. சிட்டி கவுன்சிலில் இந்த ரோபோ காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை பார்த்து வந்துள்ளது.
மேலும், இதற்கென தனி அரசு அதிகாரி என்ற ஐடி கார்டும் கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த ரோபோ மற்ற ரோபோக்களை போல இல்லாமல், சிட்டி கவுன்சிலின் எல்லா தளங்களுக்கும் எலிவேட்டரை இயக்கி தானாக நகரும் திறன் கொண்டது.
கிட்டத்தட்ட ஒரு மனிதனை போல இயங்கி, சிட்டி மக்களின் நண்பனாக பணியாற்றி வந்த ரோபோவின் இழப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
லேபர் பார்ட்டியின் வலதுசாரி?
பிரிட்டனில் 14 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டுள்ளது. கடந்த நாடாளு மன்றத்தில் 200 உறுப்பினர்களைக் கொண்டிருந்த தொழிலாளர் கட்சி எனப்படும் லேபர் கட்சி தற்போது 435 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் தலை மையிலான பழமைவாத கன்சர்வேட்டிவ் கட்சி யானது நாடாளுமன்றத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கு இடங்களை இழந்து விட்டது. 650 இடங்கள் கொண்ட நாடாளு மன்றத்தில் 121 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்கு கிடைத்துள்ளன.
பிரிட்டன் அரசியல் வர லாற்றில் கடந்த 200 ஆண்டுகளில் முதல்முறை யாக மிக மோசமான தோல்வியை அக்கட்சி சந்தித்துள்ளது.
ஆனால் தேர்தல் முடிவு அவரது அதிதீவிர தனியார்மய மற்றும் சிக்கன நடவடிக்கை கொள் கைகளுக்கு எதிரான, பிரிட்டன் மக்களின் சரியான பதிலடியாக அமைந்துள்ளது.
இந்தத் தேர்தலில் தொழிலாளர் கட்சியின் தலைவரான கெய்ர் ஸ்டார்மர், சுகாதாரம், வீட்டு வசதியை மேம்படுத்துவேன் என்று உறுதியளித்து பிரச்சாரம் செய்தார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டனை மீண்டும் சேர்க்க விரும்பவில்லை.
சர்வதேச விவகாரங்களில் அமெரிக்க நிலை பாட்டோடு ஒத்துப் போகிறவர். ரஷ்யாவுக்கு எதிரான நிலைபாட்டை கொண்டவர். இதனால் அந்நாட்டின் வெளியுறவுக் கொள்கையில் எத்தகைய மாற்றமும் ஏற்படப்போவதில்லை.
தற்போது வெற்றி பெற்று பிரதமராக பதவி யேற்கப் போகும் கெய்ர் ஸ்டார்மர், முந்தைய பிரத மர் ரிஷி சுனக் போலவே ஒரு தீவிர இடதுசாரி எதிர்ப்பாளர்.
தீவிர முதலாளித்துவ, வலதுசாரி கொள்கைகளை அமலாக்கும் வேட்கைக் கொண்டவர். அதனால்தான் இவர், லேபர் கட்சிக்குள் செயல்பட்டு வந்த ஜெர்மி கோர்பின் உள்ளிட்ட இடதுசாரி சிந்தனையாளர்களை கட்சி யிலிருந்து ஒழித்துக் கட்டினார்.
கன்சர்வேட்டிவ் கட்சியின் மோசமான கொள்கைகளால் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில்தான் பிரிட்டன் மக்கள், தங்கள் முன்பு உள்ள ஒரே மாற்றுவாய்ப்பான லேபர் கட்சிக்கு வாக்குகளை வாரி வழங்கி யிருக்கிறார்கள்.
இத்தேர்தலில் முற்போக்காளர் ஜெர்மி கோர்பின் பிரிட்டனின் வடக்கு இலிங்டன் தொகுதியிலிருந்து மீண்டும் வெற்றிபெற்றுள்ளது மட்டுமே ஆறுதல் அளிக்கக்கூடியது.
தொழிலா ளர் கட்சியில் இருக்கும் இடதுசாரிக் கொள்கை கொண்ட அவர் 1983ஆம் ஆண்டிலிருந்து தொடர்ச்சியாக வெற்றிபெற்று வருகிறார். அவரது முற்போக்கு கருத்துகளுக்காக பெயரில் மட்டுமே 'லேபர்' வைத்திருக்கும் தொழிலாளர் கட்சியின் வலதுசாரி தலைமை அவருக்கு போட்டியிட அனுமதி மறுத்தது.
இருப்பினும் அவர் சுயேச்சையாக போட்டியிட்டு அதிகாரப்பூர்வ தொழிலாளர் கட்சி வேட்பாளரான மிகப்பெரிய செல்வந்தரை தோற்க டித்து மகத்தான வெற்றியை ஈட்டியுள்ளார்.