பெருகும் வீக்கம்!

 தொடர்ந்து சொதப்பல்.அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியில் இருந்து பைடன் விலகல்.


தமிழ் மாநில காங்கிரஸ் (?)கட்சியின் இளைஞரணி தலைவர் பதவியை விட்டு விலகுவதாக  யுவராஜா அறிவிப்பு.

நீட் தேர்வில் 3.5 லட்சம் பேருக்கு மறுதேர்வு கோரி புதிய மனு.


கனமழை, பலத்த காற்று எதிரொலி: நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.

பெருகும் வீக்கம்!

இந்தியா முழுவதும் சீரற்ற முறையில் கொட்டும் மழை பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதை சவால் நிறைந்ததாக மாற்றிவிட்டது.


அத்தியாவசிய உணவுப் பொருட்களின் சில்லறை விலையேற்றம் கடந்த மாதம் மிக வேகமாக பதிவாகியது. ஐந்து மாதமாக இறங்கு முகமாக இருந்து வந்தது, கடந்த மே மாதத்தில் அதிகரிக்க தொடங்கியது. 28 புள்ளிகள் அதிகரித்து 4. 08 லிருந்து 5.08ஆகஉயர்ந்தது.


எதிர்பார்த்ததபோலவே உணவுப் பொருட்களின் விலை உயர்வு தான் இதற்கு காரணம். 


நுகர்வோர் உணவு விலை குறியீடு தரவுகளின் அடிப்படையில் உணவு விலை பணவீக்கம் ஜூன் மாதத்தில் 67 புள்ளிகள் அதிகரித்துள்ளது. அதாவது 9.36 % ஆக உயர்ந்தது கவலை அளிக்கிறது.


மேலும் கடந்த 11 மாதங்களில் அது உயர்ந்து கொண்டே சென்றது.இது  மிக மோசமான விலையேற்றம் .உணவு விலை உயர்வதை துல்லியமாக கணிக்க முடியாத தன்மையைத்தான்( 3. 17 சதவீதம் அது உயர்ந்த போது)பணவியல் கொள்கை வகுப்பாளர்கள் (Monitory Policy Experts) வட்டி விகிதங்களை மாற்ற முடியாமல் போனதற்கு காரணமாக கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.


இந்திய பொருளாதாரம் உணவுப் பொருட்கள் விலையின் தாறுமாறான தன்மையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கியின் கடந்த மாதம் நிதி குழு கூட்டத்தில் துணை ஆளுநர் மைக்கேல் தேவப்பிரதா பத்ரா குறிப்பிட்டார்.


இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் தொடர்ந்து விழிப்போடு இருக்கவும் பணவீக்கத்தின் பிற கூறுகளையும் உன்னிப்பாக கவனித்து செயலாற்றினால் தான் முடியும்.

கூரையைப் பிய்த்துச் சென்ற விலை

நுகர்வோர் விலை குறியீட்டின் (சர்க்கரை, சுவையூட்டிகள்  தவிர) எட்டு  துணை பிரிவுகள் கடந்த எட்டு மாதமாக தொடர்ந்து விலை உயர்வை பதிவு செய்து வருவதை உணவு விலை தரவுகள் காட்டுகின்றன.

காய்கறிகளின் விலை உயர்வு தான் மிக அதிகம்.கடந்த 11 மாதங்களில் 11.2% லிருந்து  29.3% எகிறி உள்ளது. குறிப்பாக  பெரும்பான்மை மக்கள் மிகவும் அதிகமாக நுகரும் உருளை, வெங்காயம், தக்காளியின் விலை கூரையை பிய்த்துச்  சென்றது. அவை கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் பொழுது முறையே 56.7%,58.5 %,மற்றும் 26.4 % என்ற அளவிற்கு உயர்ந்து நுகர்வோரை வாட்டியது.


உணவுப் பொருட்களின் விலையேற்றம் குறித்த தரவுகள் ஆறுதலை தரவில்லை.நுகர்வோர் விவகாரங்கள் துறையின் (Consumer Affairs  Price Monitoring Division) விலை கண்காணிப்பு பிரிவின் இணைய தளம் உருளை, வெங்காயம் ஆகியவற்றின் விலை ஜூலை 15 வரை தாறுமாறாக உயர்ந்து வந்ததை  கண்ணில் நீர் வரவழைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளது.


இரண்டின் விலை ஏற்றமும் கடந்த ஆண்டை விட முறையே 56 % மற்றும் 67% கூடுதலாக இருந்தது. தக்காளியின் விலை 12 மாதங்களுடன் ஒப்பிடும்பொழுது 43 சதவீதம் குறைந்தாலும் கடந்த ஜூன் ‘23  அளவோடு ஒப்பிடுகையில் 76 % அதிகரித்துள்ளது.

உணவுத் தொகுப்பின் மிகப்பெரிய அங்கமான தானியங்கள் மற்றும் அரிசி, கோதுமையின் விலை கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் முறையே 10% மற்றும் 6 % அதிகரித்துள்ளது.


இது மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய வானியல் ஆய்வுத்துறை ஜூலை 14 ஆம் தேதி நிலவரப்படி  ஜூன் 1 முதல் நாடு தழுவிய அளவில் பதிவான மழைப்பொழிவில்    2 சதவீதம் பற்றாக்குறை தான் என சுட்டிக்காட்டி உள்ளது.


36 வானிலை துணைப் பிரிவுகளில் 11 இல்  பற்றாக்குறை என வகைப்படுத்தப்பட்டுள்ளது.

பஞ்சாப் போன்ற உணவு உற்பத்தி பகுதிகளில் மழை பற்றாக்குறை ஆக இருப்பது பண வீக்கத்தின் வேகத்தை குறைக்க முடியவில்லை.


இதனால்  கொள்கை வகுப்பாளர்கள் அதாவது மோடி கூட்டணி அரசு இதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகிறது.


தி இந்து தலையங்கம் 17/7/24தமிழில்

பழனிசாமி - அண்ணாமலை 

பகு­ஜன் சமாஜ் கட்­சி­யின் தமிழ்­நாடு தலை­வர் ஆம்ஸ்ட்­ராங் கொலை செய்­யப்­பட்­டார். சம்­ப­வம் நடந்த மூன்று மணி நேரத்­துக்­குள் முக்­கி­யக் குற்­ற­வா­ளி­கள் எட்­டுப் பேரை தமிழ்­நாடு காவல் துறை கைது செய்­தது. ஆனால் பழ­னி­சா­மி­யும், அண்­ணா­ம­லை­யும் என்­ன­மாய் குதித்­தார்­கள்?

‘கைது செய்­யப்­பட்­ட­வர்­கள் உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் அல்ல’ என்று ஜோசி­யம் சொன்­னார் பழ­னி­சாமி. சி.பி.ஐ. விசா­ரித்­தால்­தான் உண்மை வெளி­யில் வரும் என்­றார் அண்­ணா­மலை.

இப்­போது என்ன நடந்­தி­ருக்­கி­றது? ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில்

அ.தி.மு.க. பிர­மு­கர் கைதாகி இருக்­கி­றார். பா.ஜ.க. பிர­மு­கரை காவல்­துறை தேடிக் கொண்டு இருக்­கி­றது. இவர்­க­ளைக் கைது செய்­யா­த­தால்­தான், ‘உண்­மைக் குற்­ற­வா­ளி­கள் இன்­ன­மும் கைது செய்­யப்­ப­ட­வில்லை’ என்று சொன்­னாரா பழ­னி­சாமி?

ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் மலர்க்­கொடி சேகர் என்­ப­வர் கைதாகி இருக்­கி­றார். இவர் சென்னை திரு­வல்­லிக்­கேணி மேற்­குப் பகுதி அ.தி.மு.க. இணைச் செய­லா­ளர் என்ற பொறுப்­பில் இருக்­கி­றார். 

மலர்க்­கொடி சேகர் கைதா­ன­தும், நாட்டு மக்­க­ளி­டம் பழ­னி­சாமி பகி­ரங்க மன்­னிப்பு கேட்­டி­ருக்க வேண்­டாமா? மானஸ்­த­னாக இருந்­தால் கேட்­பார். மலர்க்­கொடி சேகரை கட்­சியை விட்டு நீக்­கி­ய­தாக ஒரு அறிக்­கையை வெளி­யிட்டு மவு­ன­மாகி விட்­டார் பழ­னி­சாமி.

ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் அஞ்­சலை என்­ப­வரை காவல்துறை தேடிக் கொண்டு இருக்­கி­றது. பா.ஜ.க.வில் வட­சென்னை மேற்கு மாவட்­டத் துணைத் தலை­வ­ராக இருக்­கி­றார். 

அஞ்­ச­லை­யைத் தேடு­கி­றார்­கள் என்­ற­தும், அவ­ரைக் கட்­சியை விட்டு நீக்கி இருக்­கி­றார் பா.ஜ.க. மாநி­லத் தலை­வர் அண்­ணா­மலை. ஜூலை 5 ஆம் தேதி ஆம்ஸ்ட்­ராங் கொலை செய்­யப்­பட்­டார். மறு­நா­ளில் இருந்தே அஞ்­ச­லை­யின் பெயர் ஊட­கங்­க­ளில் வரத் தொடங்கி விட்­டது. 

ஆனால் அஞ்­ச­லையை நீக்­க­வில்லை அண்­ணா­மலை. மலர்க்­கொடி சேகரை பழ­னி­சாமி நீக்­கி­ய­தும், ஜூலை 16 ஆம் தேதி நீக்கி இருக்­கி­றார் அண்­ணா­மலை.

அஞ்­ச­லை­யின் குற்­றப்­பின்­னணி அண்­ணா­ம­லைக்கு இப்­போ­து­தான் தெரிய வந்­ததா?

 ‘புளி­யந்­தோப்பு நர­சிம்­மன் நகர் 5ஆவது தெரு­வைச் சேர்ந்த ரவு­டி­யும், கஞ்சா வியா­பா­ரி­யு­மான அஞ்­சலை, காவல் துறை­யின்

‘பி’ வரி­சை­யில் இடம் பெற்­றுள்­ளார்’ என்று ‘தின­மணி’ எழு­து­கி­றது. இது இது­வரை ‘மாஜி’ சிரிப்பு போலீஸ் அண்­ணா­ம­லைக்­குத் தெரி­யாதா? 

அஞ்­ச­லை­களுக்கு தலை­வ­ராக இருக்­கத் தகுதி படைத்­த­வர்­தானே அவர்!

நாடா­ளு­மன்­றத் தேர்­தல் பரப்­பு­ரை­யின் போது மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள், பா.ஜ.க.வில் இருக்­கும் குற்­றப்­பின்­னணி ஆட்­க­ளைப் பற்றி முழுத் தக­வ­லை­யும் சொன்­னார். 

அதற்கு இது­வரை அண்­ணா­மலை பதில் அளித்­துள்­ளாரா?

“என் கையில் ஒரு பட்­டி­யல் இருக்­கி­றது… நான் ஆதா­ரத்­து­டன்­தான் பேசு­வேன். ஏனென்­றால் நான் தலை­வர் கலை­ஞ­ரின் மகன். இதில் இருக்­கும் பெயர்ப் பட்­டி­யல் ஏதோ தேசத் தலை­வர்­களோ… சமூக சேவ­கர்­களோ இல்லை… 

எல்­லோ­ரும் சட்­டம்–­ஒ­ழுங்­கைக் கெடுக்­கும் ரவு­டி­கள்! 

சரித்­தி­ரப் பதி­வேடு (History Sheet) குற்­ற­வா­ளி­கள்! 

ஆனால் இந்­தப் பட்­டி­ய­லில் இருப்­ப­வர்­கள் எல்­லாம், இப்­போது எங்கு இருக்­கி­றார்­கள் தெரி­யுமா? 

அத்­தனை பேரும் பா.ஜ.க.வில்­தான் இருக்­கி­றார்­கள்! 

வழக்­க­மாக இந்­தப் பட்­டி­யல் காவல் நிலை­யத்­தில்­தான் ஒட்­டப்­பட்­டி­ருக்­கும்…

32 பக்­கங்­கள் கொண்ட இந்­தப் பட்­டி­ய­லில், 1977 வழக்­கு­கள் இருக்­கும் 261 ரவு­டி­கள் இருக்­கி­றார்­கள்.

 இவர்­க­ளின் பெயர்­கள் என்ன? 

பா.ஜ.க.வில் என்ன பொறுப்­பில் இருக்­கி­றார்­கள்? 

இவர்­கள் மேல் என்ன என்ன பிரி­வு­க­ளில் வழக்­கு­கள் இருக்­கி­றது? என்று

இந்­தப் பட்­டி­ய­லில் இருக்­கி­றது.

 எல்லா ரவு­டி­க­ளை­யும் உங்­கள் கட்­சி­யில் வைத்­துக்­கொண்டு சட்­டம் ஒழுங்­கைப் பற்றி நீங்­கள் பேச­லாமா? 

உங்­க­ளி­டம் இருக்­கும் உள­வுத்­துறை மூல­மாக அந்­தப் புத்­த­கத்தை வாங்­கிச் சரி­பார்த்­து­விட்டு (“கிராஸ் வெரிஃபை” செய்­து­விட்டு) அதற்­குப் பிறகு எங்­க­ளைப் பற்­றிப் பேசுங்­கள் பிர­த­மர் அவர்­களே…” என்று மாண்­பு­மிகு முத­ல­மைச்­சர் அவர்­கள் சொன்­னார்­கள். இது­வரை பதில் இல்லை.

ஆம்ஸ்ட்­ராங்கை கொலை செய்த கொலை­யா­ளி­க­ளுக்கு பா.ஜ.க. பிர­மு­க­ரான அஞ்­சலை 10 லட்­சம் பணம் கொடுத்­த­தாக விசா­ர­ணை­யில் தக­வல் கிடைத்­துள்­ளது. 

கடந்த ஆண்டு கொலை செய்­யப்­பட்ட ஆற்­காடு சுரே­ஷின் நெருங்­கி­ய­வர்­தான் அஞ்­சலை. ஆற்­காடு சுரே­ஷின் தம்பி பொன்னை பாலு, இப்­போது கைதாகி சிறை­யில் இருக்­கி­றார்.

ஆம்ஸ்ட்­ராங் கொலை செய்­வ­தற்கு அளிக்­கப்­பட்ட பணப்­ப­ரி­வர்த்­தனை விவ­கா­ரம் தொடர்­பாக விசா­ரணை மேற்­கொண்ட போது – வழக்­க­றி­ஞ­ரும் அ.தி.மு.க. பிர­மு­க­ரு­மான மலர்க்­கொடி சேகர் பணம் கொடுத்­தி­ருப்­பது தெரிய வந்­தது. 

அ.தி.மு.க. பேச்­சா­ள­ரா­க­வும், பாட­க­ரா­க­வும் இருந்த தோட்­டம் சேக­ரின் மனைவி இவர். தோட்­டம் சேகர் 2001 ஆம் ஆண்டு கொலை செய்­யப்­பட்­டார். 

ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் ஏற்­க­னவே கைது செய்­யப்­பட்டு சிறை­யில் அடைக்­கப்­பட்­டி­ருக்­கும் வழக்­க­றி­ஞர் அருள் என்­ப­வ­ரோடு மலர்க்­கொடி தொடர்­பில் இருந்­துள்­ளார். வழக்­க­றி­ஞர் அரு­ளின் வங்கி பணப்­ப­ரி­வர்த்­த­னையை ஆய்வு செய்­த­போது மலர்க்­கொடி இவ­ருக்­குப் பணம் கொடுத்­தி­ருப்­பது தெரிய வந்­துள்­ளது.

பா.ஜ.க.வின் கூட்­ட­ணிக் கட்­சி­யாக இருக்­கும் த.மா.கா.வைச் சேர்ந்த ஹரி­ஹ­ரன் என்­ப­வ­ரும் ஆம்ஸ்ட்­ராங் கொலை வழக்­கில் கைது செய்­யப்­பட்­டுள்­ளார். 

அவர் த.மா.கா.வில் மாநில மாண­வ­ரணி துணைத் தலை­வ­ராக இருக்­கி­றார். இவ­ரைக் கட்­சியை விட்டு நீக்கி இருக்­கி­றார் ஜி.கே.வாசன்.

ஆம்ஸ்ட்­ராங் கொலை செய்­யப்­பட்­டார் என்­றால், அதில் குற்­ற­வா­ளி­கள் யாரும் கைது செய்­யப்­ப­ட­வில்லை என்­றால் அர­சாங்­கத்தை விமர்­சிக்­க­லாம். கொலை நடந்த மூன்று மணி நேரத்­தில் கைது செய்­யப்­பட்டு விட்­டார்­கள். 

இது­வரை 14 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளார்­கள். கைது செய்­யப்பட்­ட­வர்­கள்­தான் உண்­மை­யான குற்­ற­வா­ளி­கள் என்­ப­தற்­கான வீடியோ ஆதா­ரத்­தை­யும் காவல் துறை வெளி­யிட்­டது. தொடர்ந்து தேடு­தல் வேட்­டையை நடத்­தி­யது காவல் துறை. 

தங்­க­ளுக்கு ஏதா­வது துப்பு கிடைக்­கு­மா­னால் அதனை காவல்­து­றைக்­குச் சொல்­ல­லாம். குற்­ற­வா­ளி­கள் யாரும் தப்பி விடக் கூடாது என்ற நோக்­கம் காவல் துறைக்கு மட்­டு­மல்ல, அனை­வ­ருக்­கும் இருக்க வேண்­டும். 

ஆனால் பழ­னி­சா­மி­யும், அண்­ணா­ம­லை­யும், ‘கிடைச்­சது ஒரு மேட்­டர்’ என்ற அடிப்­ப­டை­யில் கோதா­வில் இறங்கி அர­சாங்­கத்­தைக் கடித்­துக் குத­றி­னார்­கள். குதறுகிறார்கள்!

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் பயன்படுத்திய 6 செல்போன்கள் அதிமுக முன்னாள் நிர்வாகியும், திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றிய குழு உறுப்பினருமான ஹரிதரனிடம் கொடுத்ததாக வாக்குமூலம் அளித்தனர்.

இதையடுத்து, செம்பியம் தனிப்படை போலீசார் ஹரிதரனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது, வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில் செல்போன்களை சேதப்படுத்தி வீசியதாக அவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதனையடுத்து, நேற்று முன்தினம் வெங்கத்தூர் கொசஸ்தலை ஆற்றில், மெரினா கடற்கரை மீட்புக் குழுவினர் தேடுதல் பணியைத் தொடங்கினர். முதல் நாள் நீரில் மூழ்கி தேடுதலில் ஈடுபட்டதில் 4 செல்போன்களின் பாகங்கள் மட்டும் தனித்தனியாகக் கிடைக்கப்பெற்றது.

இரவு நேரம் தேடுதலைத் தள்ளி வைத்து நேற்று காலை மீண்டும் பணியைத் தொடங்கினர். சுமார் 6 மணி நேரம் தேடுதலுக்குப் பிறகு மேலும் மற்றொரு செல்போனின் பாகங்கள் கிடைக்கப்பெற்றது. தொடர்ந்து மீட்கப்பட்ட செல்போன்களை, தடய அறிவியல் ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதனையடுத்து தேடுதல் பணியை மீட்புக் குழுவினர் நிறைவு செய்தனர். தொடர்ந்து மீட்கப்பட்டுள்ள செல்போனின் ஐஎம்இஐ (IMEI number) எண்ணைக் கண்டுபிடிக்கும் நோக்கில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். அப்படி கண்டுபிடித்தால் அந்த சிம்கார்டிற்கு எந்தெந்த எண்ணில் இருந்து அழைப்புகள் வந்துள்ளது. இதிலிருந்து எந்த எண்ணிற்கு அழைப்பு சென்றுள்ளது என்பதைப் போன்ற விவரங்கள் எல்லாம் பெற முடியும் என்றும் போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?