இந்தியா வெல்லும்!
ஓட்டலில் அனுமதியின்றி பார் அதிமுக கவுன்சிலரின் சகோதரர் கைது.தகவல் கொடுக்காத,நடவடிக்கை எடுக்காத எஸ்எஸ்ஐ ஆயுதப்படைக்கு மாற்றம்.
கொரோனாவுக்கு பின்னர் அதிகரித்த கண் பாதிப்பு.தமிழ்நாடு அரசின் பள்ளி சிறார் கண்ணொளி காப்போம் திட்டத்தில் ஆண்டுக்கு 42 லட்சம் மாணவர்கள் பயன்.
விக்கிரவாண்டி தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பாஜக ஆதரவுடன் போட்டி யிட்ட பாமக வேட்பாளரை தோற்கடித்து தோழ மைக் கட்சிகளின் ஆதரவுடன் போட்டியிட்ட திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா மகத்தான வெற்றிபெற்றிருக்கிறார்.
நாடாளுமன்றத் தேர்த லில் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களில் 40 இடங்க ளையும் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி கைப்பற்றிய நிலையில் விக்கிர வாண்டி தேர்தலிலும் இடைத்தேர்தலிலும் இந்த அணி வெற்றிபெற்றுள்ளது.
சாதிய மதவாத கூட்டணியை விக்கிர வாண்டி தொகுதி மக்கள் தீர்மானகரமாக நிராக ரித்திருப்பது பாராட்டுதலுக்குரியது. இதன்மூலம் சாதிய, மதவாத சக்திகளுக்கு தமிழ்நாட்டில் இட மில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபண மாகியுள்ளது.
பிற மாநிலங்களில் நடைபெற்ற இடைத் தேர்தல்களில் இந்தியா கூட்டணி கட்சிகள் 9 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் பாஜக 2 இடங்களில் மட்டுமே வெற்றிபெற்றுள்ளது.
அயோத்தி கோவில் இடம்பெற்றுள்ள பைசாபாத் நாடாளு மன்றத் தொகுதியில் பாஜக தோல்வி அடைந் தது. மதவாத அரசியலை முன்னிறுத்தும் பாஜ கவை அயோத்தி மற்றும் பத்ரிநாத் மக்கள் நிரா கரித்துள்ளனர்.
இந்தத் தொகுதியில் காங்கிரஸ் எம்எல்ஏவாக இருந்த ராஜேந்திர பண்டாரி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாஜக வில் சேர்ந்தததால் இடைத்தேர்தல் நடந்தது.
ஆனால் சந்தர்ப்பவாத, மதவாத அரசியலை பத்ரிநாத் தொகுதி மக்கள் நிராகரித்துள்ளனர்.
பீகார் மாநிலம் ரூபாலி தொகுதியில் பாஜக ஆதரவுடன் போட்டியிட்ட ஆளும் ஐக்கிய ஜனதா வேட்பாளர் கமலாதர் பிரசாத் மண்டலை சுயேட்சை வேட்பாளர் தோற்கடித்துள்ளார்.
பீகார் மக்கள் மாறுபட்டு சிந்திக்கத் துவங்கியுள்ளனர் என்பதை இந்தத் தேர்தல் முடிவு உணர்த்துகிறது.
பஞ்சாப்பில் நடைபெற்ற இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.
மேற்குவங்கத்தில் தேர்தல் நடைபெற்ற 4 தொகு திகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காத நிலையில் இப்போது நடைபெற்ற 10 சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 8 இடங்களில் பாஜக கூட்டணி தோல்வி அடைந்துள்ளது. தொடர்ந்து பாஜக கூட்டணிக்கு ஏற்பட்டுவரும் பின்னடைவு மத வாத அரசியல் மீது மக்கள் கொண்டுள்ள அதி ருப்தியையே வெளிப்படுத்துகிறது.
நாடாளுமன் றத்திலும் வெளியிலும் ஒன்றிய அரசை எதிர்த்து போராட்டங்களை தீவிரப்படுத்துவதன் மூலம் நரேந்திர மோடி அரசு மக்கள் விரோத அணுகுமுறையை பின்னுக்குத் தள்ள முடியும் என்பதையே இடைத்தேர்தல் முடிவும் உணர்த்துகிறது.