முடங்கிய"கிளவுட் "
தகவல் தொழில்நுட்ப செயலிழப்பு காரணமாக உலகளவில் முக்கிய வங்கிகள், ஊடக நிறுவனங்கள் மற்றும் விமான நிறுவனங்களின் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
பல விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால், விமான நிலையங்களில் மக்கள் வரிசையில் காத்திருக்கின்றனர்.சிட்னி விமான நிலையத்தில் விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. யுனைடெட் ஏர்லைன்ஸ் விமான சேவையை நிறுத்தப்பட்டுள்ளது. லண்டன் பங்குச் சந்தை குழுமத்தின் தளம் செயலிழப்பைச் சந்தித்து வருகிறது.
அமெரிக்காவில் கிளவுட் சேவைகளில் உள்ள சிக்கல்கள் குறித்தும் மற்றும் அதன் ஆப் மற்றும் பிற சேவைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அந்த நிறுவனம் கூறுகிறது.
ஆஸ்திரேலியாவின் தொலைத்தொடர்பு நிறுவனமான டெல்ஸ்ட்ரா குழுமம் சேவைகளில் இடையூறுகளை எதிர்கொண்டதாக கூறியுள்ளது.
மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேர் செயலிழந்துவிட்டதால் உலக அளவில் பல்வேறு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
மைக்ரோசாப்ட் 365, XBox, Outlook ஆகியவை செயலிழந்துள்ளது. இதனால் மீடியா, தொழில்நுட்பம், வங்கி சேவை, மருத்துவ சேவை, விமான சேவை, அமேசான் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரச்சினையை சரி செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Crowdstrike அப்டேட்டில் ஏற்பட்ட மாறுதல்களால் மைக்ரோசாப்ட் விண்டோஸ் சாப்ட்வேரில் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் மைக்ரோசாப்ட் பயனாளர்களின் பலரது கம்ப்யூட்டர்களில் Blue screen of Death Error ஏற்பட்டுள்ளது. அதாவது உங்கள் சாதனம் சிக்கலில் உள்ளதாக குறிப்பிட்டு ஆபரேட்டிங் சிஸ்டமே விண்டோஸ் எக்பியில் தற்போது 11 ஆவது பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல புதிய அப்டேட்டுகளுடன் இந்த ஆபரேட்டிங் சிஸ்டம் செயல்படுகிறது. இதற்காக தொழில்நுட்ப ரீதியில் பல வரவேற்புகள் கிடைத்துள்ளன.
இந்த நிலையில் இந்த செயலிழப்பு குறித்து பல நெட்டிசன்கள் நீல நிற ஸ்கிரீனை ஸ்கிரீன்ஷாட் எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள். அதில் ஒருவர் வார இறுதிக்கு முந்தைய நாள் மைக்ரோசாப்ட் கூடுதலாக ஒரு விடுமுறை கொடுத்துவிட்டதாக கூறியிருக்கிறார்.
இதற்கான காரணத்தை ஆராய்ந்து வருகிறோம். பிரச்சினையைச் சரி செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதில் தற்போது வரை சாதகமான முடிவுகளே கிடைத்து வருகின்றன. இந்த சிக்கல் படிப்படியாக விரைவில் சரியாகும்" என தெரிவித்துள்ளார்.