ஏழு ஆண்டு சாதனை?

 விக்கிரவாண்டி தி.மு.க சட்டமன்ற தொகுதி உறுப்பினராக இருந்த புகழேந்தி கடந்த ஏப்ரல்  மாதம் 6ம் தேதி மரண மடைந்தார். இதனால் இடைத் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் முடிவு செய்து தேதிகளை அறிவித்தது.

தி.மு.க. சார்பில் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் டாக்டர் அபிநயா ஆகியோர்போட்டியிடுகிறார்கள்.  இவர்களையும் சேர்த்து சுயேச்சையாக 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

அ.தி.மு.க தேர்தலில் போட்டியிட வில்லை.

தேர்தல் பிரச்சாரம் நேற்று முன்தினத்துடன் நிறைவடைந்தது. 

இந்த தொகுதியில் மொத்தம் 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்கள் உள்ளனர்.  வாக்குப்பதிவுக்கு தலா ஒரு வாக்குச்சாவடிக்கும் 2 மின்னணு எந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. தொகுதி முழுவதும் 552 வாகுப்பதிவு எந்திரங்கள், 276 கட்டுப்பாட்டு கருவிகள் உள்ளன. 

தேர்தல் பணியில் 1,355 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு ஜூலை 10-ம் தேதி காலை 7 மணி முதல் தொடங்கி வாக்குப்பதிவு மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. சில இடங்களில் மாலை 6 மணிக்கு முன்னதாக வாக்களிப்பதற்கு வாக்குச்சாவடிக்கு வந்திருந்த வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி அலுவலரால் டோக்கன் வழங்கப்பட்டு வாக்களிக்க அனுமதிக்கப்பட்டனர்.

 இறுதியில் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் 82.48% வாக்குகள் பதிவானது. 

பதிவான வாக்குகள் ஜூலை 13-ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

ஏழு ஆண்டுகள்....!

1,00,474 தற்கொலைகள!

       முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி, விவசாயிகள் நிறைந்த தொகுதிகளில் எல்லாம் பெரும் பின்னடைவை எதிர்கொண்டது.

  தேசிய குற்றப் பதிவு ஆணைய தகவல்களின்படி 1,00,474 விவசாயிகள் 2015 -2022 க்கு இடைப்பட்ட 7 ஆண்டுகளில் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். 


இது இந்தியா சந்தித்து வரும் விவசாய நெருக்கடியின் கோர வெளிப்பாடாகும்.  இப்போது அமைந்துள்ள ஒன்றிய அரசு கடந்த இரு நரேந்திர மோடி ஆட்சிகளின் தொடர்ச்சியே ஆகும். 

பத்தாண்டுகளாக இந்த ஆட்சிகள் கடைப்பிடித்த கார்ப்பரேட் ஆதரவு பாதையும், விவசாயிகளின் கைகளை முறுக்கிய கொள்கைகளுமே இந்தப் பின்னடைவுக்கான காரணங்கள் ஆகும். ஆகவே விவசாயிகள் எதிர்பார்ப்பது என்னவெனில் அரசு முந்தைய பட்ஜெட்டுகளில் இருந்து தீர்மானகரமான விலகலை எதிர்வரும் பட்ஜெட்டில் செய்ய வேண்டும் என்பதே.


 இது அவ்வளவு எளிதானது அல்ல. ஆனால் இதைச் செய்யாவிட்டால் விவசாயிகளின் கிளர்ச்சி களையோ, விவசாய நெருக்கடியையோ தணித்து விட முடியாது. விவசாயிகளின் தற்கொலைகளை, விவசாய நெருக்கடி களை தடுக்கவும் சமாளிக்கவும் 8 மிக முக்கியமான கோரிக்கைகளை விவசாய இயக்கம் முன் வைக்கிறது.

1) குறைந்தபட்ச ஆதார விலை வேளாண் வல்லுநர் எம்.எஸ்.சுவாமிநாதன் குழு அறிக்கை கூறியபடி C 2 + 50 % ஆக உறுதி செய்யப்பட வேண்டும். 

அதாவது  விவசாய உற்பத்தியில் ஏற்படும் அனைத்துச் செல வினங்களையும் கணக்கில் கொண்டு அதற்கு மேல் 50 சதவீதம் ஆதார விலையாக தரப்பட வேண்டும். இதற்கான போதுமான ஒதுக்கீடு பட்ஜெட்டில் செய்யப்பட வேண்டும். 

2) தொடர்ந்து அதிகரித்து வரும் விவசாய உற்பத்திச் செலவினம் கட்டுப்படுத்தப்பட வேண்டும். உரம், விதைகள், பூச்சிக் கொல்லி மருந்து, டீசல், தண்ணீர், மின்சாரம் உள்ளிட்ட இடுபொருட்களுக்கான விலை களை குறைக்க வேண்டும். 

இடுபொருட்களை உற்பத்தி  செய்யும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மீது அரசு கட்டுப்பாடு களை கொண்டு வர வேண்டும். இடுபொருள் உற்பத்தி யில் பொதுத் துறை நிறுவனங்களை ஈடுபடுத்தவேண்டும். இந்த பட்ஜெட் இதற்கெல்லாம் வழி வகுக்க வேண்டும். 

3) முழுமையான ரத்து’ (One time Loan waiver) என்ற முடிவை அரசு எடுக்க வேண்டும். 16 லட்சம் கோடி பெறுமான கடன்களை கார்ப்பரேட்  நிறுவனங்களுக்கு ரத்து செய்ய முடிந்த அரசாங்கத்திற்கு விவசாயிகள் கடன் ரத்து இயலாத ஒன்று அல்ல.  பயிர்க் காப்பீடு

4) சுற்றுச்சூழல், பருவநிலை மாற்றம் ஆகியன தொடர்ச்சியாக வறட்சி, வெள்ளம், பருவம் தவறிய மழை, ஆலங்கட்டி மழை போன்றவற்றை ஏற்படுத்துவதால் விரிவான பயிர்க் காப்பீடு திட்டத்தை அரசு கொண்டுவர வேண்டும். 

இது ஏற்கனவே உள்ள “பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா” போன்றதல்ல. பல மாநிலங்கள் அந்தத் திட்டத்தை விட்டு வெளியேறி விட்டன. சில மாநிலங்கள் தாங்களே சில திட்டங்களை நடைமுறைப்படுத்தவும் துவங்கி விட்டன. காரணம் “பிரதான் மந்திரி பசல் பீம யோஜனா” விவசாயிகளுக்கானதாக இல்லை, பெரு இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நலனுக்கானதாக உள்ளது. விரிந்த பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தை அமலாக்கு வதற்கான ஒதுக்கீட்டை பட்ஜெட் செய்ய வேண்டும்.  பொதுத்துறை முதலீடு

5) நீர்ப்பாசனம், மின்சாரம் ஆகியவற்றுக்கான பொதுத்துறை  முதலீடுகள் கடந்த 10 ஆண்டுகளில் வெட்டப்பட்டு இருப்பது கடும் பாதிப்பை உருவாக்கி யுள்ளது. 

தனியார் நிறுவனங்கள் கையில் இத்துறைகள் ஒப்படைக்கப்பட்டதால் இதன் விலைகள் தாறுமாறாக உயர்ந்துள்ளன. மின்சார ஸ்மார்ட் மீட்டர்கள் நகர, கிராம நுகர்வோரை பெரும் இன்னல்களுக்கு ஆளாக்கப் போகின்றன. பல நீர்ப்பாசனத் திட்டங்கள் பாதியிலேயே நிற்கின்றன. அவை முழுமையாக நிறைவேற்றப்பட்டால் பெருமளவு நிலம் விவசாயப் பயன்பாட்டிற்குள் வரும். 

 இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு உரிய ஒதுக்கீடு களை பட்ஜெட் செய்து பொதுத்துறைகளை ஊக்குவிக்க வேண்டும்.  ரேகா திட்டம்

6) நரேந்திர மோடி அரசு தொடர்ந்து மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை சிதைத்து வருகிறது.

 100 நாள் திட்டம் என்றாலும் நடைமுறையில் 42 நாட்கள் வேலைகளே சராசரியாக கிடைக்கின்றன. நாள் கூலி ரூ. 600 வேலை நாட்கள் 200 ஆக உயர்த்தப்படுவது அவசியம்.  நிலச் சீர்திருத்தம்  

7)  “உழுபவர்க்கே நிலம்” என்ற முழக்கம் “கார்ப்பரேட்டு களுக்கே நிலம்” என்று இந்த ஆட்சியாளர்களால் மாற்றப்பட்டிருக்கிறது. இது முக்கியமான பிரச்சனை. நிலம் கையகப்படுத்தும் சட்டம் கார்ப்பரேட்டுகளால் மீறப்பட்டு பெருமளவில் நிலங்கள் கைப்பற்றப்படுகின்றன. 

பொதுப் பயன்பாட்டிற்கு மட்டுமே நிலம் எடுக்கப்பட வேண்டும். புரட்சிகரமான நிலச் சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டும்.  வருவாய் திரட்.


8) மேற்கண்ட கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் வருவாய் திரட்டலுக்கான வழிகளை பட்ஜெட்டில் உருவாக்க வேண்டும். 

செல்வ வரி, வாரிசு ரிமை வரி போடப்படுவதும், ஏற்கனவே இவர்களால் பெருமளவு குறைக்கப்பட்ட கார்ப்பரேட் வரிகள் உயர்த்தப் படுவதும் அவசியம். பணக்காரர்கள் அதிக வருமான வரியை செலுத்த வேண்டும். 

நடுத்தர வர்க்கங்களுக்கு வருமான வரியில் நிவாரணம் தேவை. 

நேரடி வரிகள் உயர்வதும், சாமானிய மக்களை பாதிக்கும் மறைமுக வரிகள் குறைவதும் பட்ஜெட்டில் உறுதிப்படுத்தப்பட வேண்டும். 

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?