சட்டம் தேவையில்லை?
பா.ஜ.க விற்கு
தீர்ப்பு வழங்க?
மதுரை உயர்நீதிமன்றக் கிளை சட்டத்துக்கு புறம்பாக தீர்ப்பு வழங்கியிருக்கிறது. தீர்ப்பு வழங்கிய நீதியரசர் ஆனந்த் வெங்கடேஷ்.
சிலை நிறுவுவது தொடர்பாக தமிழ்நாடு அரசு நான்கைந்து அரசாணைகளை 1979லிருந்து வெளியிட்டிருக்கிறது.
1) தனியார் சிலையை பட்டா நிலத்தில்தான் அமைக்க முடியும். பட்டா நிலத்தில்தான் சிலை அமைக்கப்படுகிறது என்பதை தாசில்தார் உறுதி செய்ய வேண்டும்.
2) நிலத்தின் சொந்தக்காரரின் அனுமதி, FMB ஸ்கெட்ச், பட்டா சிட்டா உள்ளிட்ட ஆவணங்கள் இணைக்கப்பட்டே சிலைக்கான அனுமதி பெற வேண்டும்.
3) மாவட்ட உதவி ஆட்சியரோ, அல்லது மண்டல வருவாய் அதிகாரிகளோ சிலை அமைக்கப்படும் இடத்தில் எந்த வில்லங்கமும் இல்லை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். முன்பாக வருவாய்த்துறை அதிகாரிகள் சிலை அமைக்கப்படும் இடத்தை நேரில் ஆய்வு செய்து அறிக்கை தரவேண்டும்.
4) சம்மந்தப்பட்ட சிலை அமைக்கப்படுவதால் எந்தவிதமான சட்டம், ஒழுங்கு பிரச்சினையும் ஏற்படாது என்று மாவட்ட போலிஸ் சூப்பிரெண்டு, ஆய்வு செய்து உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.
5) சம்மந்தப்பட்ட இடம் எந்த உள்ளாட்சியின் ஆளுகைக்குள் இருக்கிறதோ, அவர்களுடைய ஆட்சேபணையில்லா அறிக்கையும் (NOC) அவசியம்.
6) வைக்கப்படும் சிலையால் சாலைப் போக்குவரத்துக்கோ, பாதசாரிகளுக்கோ எந்தவித இடையூறுமில்லை என்று நெடுஞ்சாலைத்துறை அனுமதியளிக்க வேண்டும்.
இன்னும் நிறைய விதிமுறைகள் இருக்கின்றன.
விருதுநகர் பாஜக அலுவலகத்தில் நிறுவப்பட்ட பாரதமாதா சிலை, எந்தவிதமான ஒப்புதலையும் மாவட்ட நிர்வாகத்திடம் பெறாமல், அண்ணாமலையின் ரோட் ஸ்டண்ட் ‘என் மண், என் மக்கள்’ பயணத்துக்காக அவசர அவசரமாக நிறுவப்பட்டது. அப்போது பிரச்சினை ஆனபோது கூட உடனடியாக ஒப்புதல் கேளுங்கள், கொடுக்கிறோம் என்றே மாவட்ட நிர்வாகம் சொன்னது.
ஆனால், மாவட்ட நிர்வாகத்திடம் ஒப்புதல் வாங்காமல் நீதிமன்றத்துக்கு சென்றார்கள்.
விதிமுறைகளுக்கு கட்டுப்பட்டு, மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி வாங்கி சிலையை வைத்துக் கொள்ளுங்கள் என்று நீதிமன்றம் பாஜகவுக்கு வழிகாட்டியிருக்க வேண்டுமே தவிர, ``தனியார் இடத்துக்குள் இருந்த பாரத மாதா சிலையை அரசு அதிகாரிகள் அத்துமீறி நுழைந்து பெயர்தெடுத்துச் சென்றிருப்பது விசாரணையின் மூலம் நிரூபணம் ஆகிறது.
அழுத்தத்தின் காரணமாக அதிகாரிகள் அத்துமீறி நடந்திருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இது கண்டனத்திற்குரியது. நாம் சமூக சமத்துவம் மற்றும் ஒருமைப்பாடு உடைய நாட்டில் வாழ்ந்து வருகிறோம். இது போன்றதொரு சம்பவம் எதிர்காலத்தில் நடக்கக் கூடாது.
ஆகவே தனியாரிடத்திலிருந்து பெயர்தெடுக்கப்பட்ட பாரத மாதா சிலையை திரும்ப ஒப்படைக்க வேண்டும். மனுதாரர், பாரத மாதா சிலையை மீண்டும் அதே இடத்தில் நிறுவிக் கொள்ளலாம்" என்று அரசியல் அறிக்கை கணக்காக தீர்ப்பு அளித்திருப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
சட்டம் உறுதியாக அமல்படுத்தப்படுவதை உறுதி செய்ய வேண்டிய நீதிமன்றமே, சட்டத்தை மீறிக் கொள்ளுங்கள் என்று சொல்லும்படியாக இந்த தீர்ப்பு அமைந்திருக்கிறது.
அது தொடர்பாக தமிழ்நாடு அரசு கொண்டு வந்த சட்டங்களைக் ஆனந்த் ஙெகடேஷ் கண்டு கொள்ளவே இல்லை.முற்றிலும் பாஜக ஆதரவு நிலையிலேயே தீர்ப்பை பொடுந்திருக்கிறார் இந்த நீதி யரசர்?