இன்று..
13/11/2024.
தமிழ்நாடு அரசு விரைவு பேருந்துகளில் பயணம் செய்ய இணையதளம் அல்லது மொபைல் செயலி வழியாக முன்பதிவு செய்பவர்களுக்கு பம்பர் பரிசு காத்திருப்பதாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. முதல் பரிசாக இரு சக்கர வாகனம், இரண்டாம் பரிசாக எல்இடி டிவி, மூன்றாம் பரிசாக பிரிட்ஜ் ஆகியவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 21ம் தேதி முதல் ஜனவரி 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்பவர்களுக்கு மட்டுமே இந்த ஆஃபர் குழுக்கள் முறையில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி – சென்னை எழும்பூர் இடையே இயக்கப்படும் வந்தே பாரத் ரயில்களில் கூடுதல் பெட்டி இணைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுவரை 8 பெட்டிகளுடன் இயங்கி வந்த வந்தே பாரத் ரயிலில் கூடுதலாக 8 பெட்டிகள் சேர்க்கப்பட்டு விரைவில் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
---------------
கொடைக்கானலில் ஏற்படும் வாகன நெரிசலை தவிர்க்கும் பொருட்டு 12 அடி நீளம் உள்ள வாகனங்கள் அனைத்தும் கொடைக்கானல் உள்ளே வர தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையானது நவம்பர் 18ஆம் தேதி முதல் அமலுக்கு வரும் என திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
----------------
தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இது வட தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடலோர பகுதிகளில் நிலவி வருவதால் இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை மாநில ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் இன்று இரவும் விட்டு விட்டுமழைபெய்யும்எனதெரிவிக்கப்பட்டுள்ளது.
----------------++
ஜார்கண்ட் சட்டப்பேரவைக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் இன்று பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஜார்கண்டில் பாஜக ஆட்சி அமைந்ததும் ஊழல் செய்த தலைவர்கள் ஒருவரையும் தப்பிக்க விடமாட்டோம் என்றும், அவர்கள் தலைகீழாக தொங்க விடப்படுவார்கள் என்றும் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
------------------+
மணிப்பூரில் 3 பெண்கள் மற்றும் 3 குழந்தைகளை பயங்கரவாதிகள் கடத்திச் சென்றதாக வெளியாகி உள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நேற்று சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் இடையே நடைபெற்ற தாக்குதலில் பயங்கரவாதிகள் 11 பேர் கொல்லப்பட்ட நிலையில் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது அங்கு பதற்றத்தை அதிகரித்துள்ளது.
--------------------+
ஏர் இந்தியாவுடன் விஸ்தாரா நிறுவனம் இணைந்தது. மத்திய அரசின் கட்டுப்பாட்டில் இருந்த ஏர் இந்தியா நிறுவனத்தை டாடா வாங்கிய நிலையில் அதன் கைவசம் இருந்த விஸ்தாரா நிறுவனம் ஏர் இந்தியாவுடன் இணைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் அது நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
----------------------+
சீனாவில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது கார் மோதிய விபத்தில் 35 பேர் உடல் நசுங்கி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விவாகரத்து மற்றும் சொத்து பங்கிட்டு அதிருப்தியில் இருந்த பென் என்பவர் தனது காரை உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தவர்கள் மீது மோதி விபத்தை ஏற்படுத்தியதாக தெரியவந்துள்ளது.
--------------------------+எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 11 பேருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 15 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் 11 பேருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.