அதிகாரசபை பட்டியல்

அலப்பறைகள் முடிவதில்லை..

மகாராஷ்டிரா, ஜார்க்கண்டில் ரூ558 கோடி ரொக்கம், தேர்தல்அன்பளிப்புப் பொருட்கள் பறிமுதல்.

10 ஆண்டுகளில் 50 சதவீதம் அதிகரிப்பு; தமிழ்நாட்டின் மின்தேவை 2026-27ல் 23,013மெகாவாட்டாகஅதிகரிக்கும்.ஆய்வில் தகவல்.

நெல்லை, தென்காசியில்  முன்னாள் M.P,உட்பட 16 இடங்களில் ஐடி சோதனை. ஊழியர்களிடம் விசாரணை.

உண்ணாவிரத போராட்டத்துக்கு அனுமதி தர சட்டத்தில் இடமில்லை: சாம்சங் ஊழியர் தொழிற்சங்கவழக்கில்  உயர்நீதிமன்றம் கருத்து.

தெலுங்கு மக்கள் குறித்து அசிங்கமான அவதூறு பேச்சு; முன்னாள் நடிகை கஸ்தூரி கைதாகிறார்: 7வழக்குகள் பதிவு.சம்மன் அனுப்பும் பணியில் காவல்துறை தீவிரம்.கஸ்தூரி ஐதராபாத் ஓட்டம்.கஸ்தூரியின் பிராமணரல்லாத அரசு ஊழியர்கள் மட்டுமே லஞ்சம் வாங்குவதாக அவதூறுக்கு அரசு ஊழியர்,தலமைச்செயலக ஊழியர்,வருவாய்த்துறைஊழியர்சங்கங்கள் கண்டனம்.

ஒடிசாவில் ஓடும் ர யில் மீது துப்பாக்கிச் சூடு .

சட்டவிரோதமாக வீடுகளை இடிக்கும் உ.பி,பா.ஜ.கஅரசு.உச்சநீதிமன்றம் அபராதம் விதித்து கண்டனம்.


திருச்சி மாவட்டம் அந்தநல்லூரில் வடதீர்த்த நாதர் கோயில் அருகே காவிரி படித்துறையில் கடந்த 30ம் தேதி மாலை 60 மீ. நீளமும், 3.885 கிலோ எடையும் உள்ள ராக்கெட் லாஞ்சர் கைப்பற்றப்பட்டது. 

பள்ளம் தோண்டி வெடிக்க வைத்து ராக்கெட் லாஞ்சரை ராணுவ அதிகாரிகள் செயலிழக்க செய்தனர்.

இதுகுறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், இது 1953ம் ஆண்டு கொரியப் போரில் பயன்படுத்திய `பசுக்கா’ என்ற ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்களில் பயன்படுத்தப்பட்ட ஷெல்களின் டம்மி.

இந்த `பசுக்கா’ ராக்கெட் லாஞ்சர் ஆயுதங்கள் பீரங்கி, டாங்கிகளை தாக்கி அழிக்க பயன்படுத்தப்படுகின்றன. 2-ம் உலகப்போரில் பயன்படுத்தப்பட்ட இந்த ராக்கெட் லாஞ்சர் எப்படி இங்கு வந்தது என விசாரணை நடந்து வருகிறது என்றனர்.

அதிகாரசபை பட்டியல்

இந்தியாவன்­ அதிகாரசபை பட்டி­ய­லில் முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ள் 8வது இடம் பெற்றுள்ளார்.

‘இண்­டியா டுடே’ இந்த நவம்­பர் மாத இத­ழில் “இந்­தி­யா­வின் அதி­கார சபை” என்ற தலைப்­பில் சக்­தி­வாய்ந்த மனி­தர்­கள் பட்­டி­யலை வெளி­யிட்­டுள்­ளது.

டாப் 10 பட்­டி­ய­லில், தமிழ்­நாடு முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளுக்கு 8வது இடம் வழங்­கப்­பட்­டுள்­ளது.

பிர­த­மர் மோடி, உள்­துறை அமைச்­சர் அமித்ஷா, ஆர்.எஸ்.எஸ் தலை­வர் மோகன் பக­வத் என நீளும் இந்த பட்­டி­ய­லில் 5 மாநில முத­ல­மைச்­சர்­கள் மட்­டுமே இடம்­பெற்­றுள்­ள­னர்.

முத­ல­மைச்­சர் மு.க.ஸ்டாலின் அவர்­கள் இந்த பட்­டி­ய­லில் இடம்­பெற்­ற­தற்­கான கார­ணம்?

v அடக்­க­மான போர்­வீ­ரன்

v தென் கோட்­டை­யைப் பிடித்து வைத்­தி­ருப்­ப­வர்.

v மொழித் தடை­யால் மு.க. ஸ்டாலின் அவர்­க­ளின் பேச்சு வடக்கு மாநி­லங்­களை அடை­யா­மல் இருக்­க­லாம், ஆனால் பூர்­வீக நில­மான தமிழ்­நாட்­டில் அவ­ருக்­குள்ள செல்­வாக்கு கார­ண­மாக அவ­ரின் குரல் டெல்லி

அதி­கா­ரத்­தின் செவியை எட்­டு­கி­றது.

v லோக்­ச­பா­வில் தி.மு.­க.­வுக்கு 22 எம்.பி.க்­கள், ராஜ்­ய­ச­பை­யில் 10

எம்.பி.க்­கள் மட்­டு­மின்றி தமி­ழ­கத்­தின் 39 தொகு­தி­க­ளி­லும் இந்­தியா கூட்­டணி 70% வாக்­கு­க­ளு­டன் வெற்றி வாகை சூடி­யது.

v எல்லா மாநி­லங்­க­ளி­லும் பாஜ­க­வுக்கு சில தொகு­தி­கள் கிடைத்த சூழ­லி­லும் தமிழ்­நாட்­டில் ஒரு இடம்­கூட கிடைக்­கா­மல் செய்­தது பாஜ­க­வுக்கு அதிக வருத்­தத்தை தந்­தது. எனவே, தென்­னிந்­தி­யா­வில் இந்­தியா கூட்­ட­ணிக்கு ஒரு முக்­கிய அம்­ச­மாக மு.க.ஸ்டாலின் அவர்­கள் எஃகு போல திகழ்­கி­றார்.

v 2021ஆம் ஆண்­டில் மு.க.ஸ்டாலின் அவர்­கள் முத­ல­மைச்­சர் ஆன­தில் இருந்து, அவ­ரது தி.மு.க. அரசு 2030 ஆம் ஆண்­டுக்­குள் தமிழ்­நாட்டை ஒரு டிரில்­லி­யன் டாலர் பொரு­ளா­தா­ர­மாக மாற்­றும் இலக்கை நோக்கி செயல்­பட்டு வரு­கி­றது. முதல்­வர் மு.க.ஸ்டாலின் அவர்­க­ளின் தலை­மை­யி­லான ஆட்­சி­யில் உல­கின் முன்­னணி நிறு­வ­னங்­க­ளான பார்ச்­சூன் 500 நிறு­வ­னங்­கள் உட்­பட 130 நிறு­வ­னங்­க­ளி­டம் இருந்து ரூ.9.74 லட்­சம் கோடி முத­லீ­டு­களை ஈர்த்­துள்­ளார்.

அலப்பறைகள் முடிவதில்லை..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வளாகத்தில் உள்ள தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் கொடி மரம் சேதமான நிலையில்  அதனை மாற்றி அமைக்கும் பணியில் கடந்த 3-ந் தேதி இந்து அறநிலை துறையினர் மற்றும் கோவில் அறங்காவலர்கள் ஈடுபட்டனர்.


இதற்கு நடராஜர் கோவில் தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் இது குறித்து வழக்கு 4-ந் தேதி சிதம்பரம் சார்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது அப்போது நீதிபதி தற்போது உள்ள நிலையே தொடர வேண்டும், 15 நாட்களுக்கு எந்தவிதமான பணியும் மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில் அனைவரும் கோவிலை விட்டு வெளியே வந்தனர்.


இந்த நிலையில் கோவில் தீட்சிதர்கள் தில்லை கோவிந்தராஜ பெருமாள்  கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர். இதனால் பல நூற்றாண்டு காலம் தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் வழி தடைபட்டுள்ளது. 

இந்த கோவிலில் பூஜை செய்யும் பட்டாசிரியர்கள், கோவிலுக்கு செல்லும் பக்தர்கள்  தற்போது நடராஜர் கோவில் வழியாகச் சுற்றி செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது.


நீதிமன்றம் 15 நாட்களுக்கு கொடிமர பணிகளுக்கு மட்டுமே தடை விதித்துள்ளது. ஆனால் தீட்சிதர்கள் நீதிமன்ற தீர்ப்பிற்கு எதிராக கோவிந்தராஜ பெருமாள் கோவிலுக்கு செல்லும் பிரதான வழியை இரும்பு கதவு வைத்து அடைத்துள்ளனர். 


எனவே இதனைத் திறக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இதுகுறித்து புகார் சிதம்பரம் காவல் நிலையத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டுள்ளது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?