இனி தேவை இல்லை?.

 கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகை மற்றும் காரைக்கால் மாவட்டங்களுக்கு இன்று விடுக்கப்பட்டிருந்த ரெட்  எச்சரிக்கையை திரும்பப் பெற்றுள்ளது.  இந்திய வானிலை ஆய்வு மையம். மிக கனமழை எச்சரிக்கையானது, கனமழை முதல் மிக கனமழைக்கான ஆரஞ்ச் அலர்ட்டாக மாற்றப்பட்டுள்ளது. 

கிறிஸ்தவ மதத்தை கடைபிடிப்பவர் அரசு வேலைக்காக இந்து பட்டியலினத்தவராக அடையாளப்படுத்த முடியாது: உச்ச நீதிமன்றம்.

நாகையில் மழையால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ள 5 பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த்சோரன் பதவியேற்பு விழாவில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்பு.
புயல் காரணமாக பலத்த காற்று வீசி வருவதால், சென்னை ராயபுரம் கிழக்கு மாதா கோயில் சாலை, ராயபுரம் மேம்பாலம் அருகே சாலையில் இருபுறமும் பொதுமக்கள் தங்களுடைய சொகுசு கார்களை நிறுத்தி வருகின்றனர்.

பிரதமர் மோடியின் விஸ்வகர்மா திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தாது!”-முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
புயல் உருவாவதில் மேலும் தாமதம்சென்னைக்கு தென்கிழக்கே 480 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது மணிக்கு 2 கி.மீ வேகத்தில் நகரத் தொடங்கியதால் அடுத்த 12 மணி நேரத்தில் புயல் உருவாக வாய்ப்பு உள்ளது.

தமிழ்நாட்டில் நவம்பர் 29, 30 ஆகிய 2 நாட்கள் ஆரஞ்சு எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதால் இந்திய வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது.

மோசமான காலநிலை காரணமாக சென்னை, மதுரை, தூத்துக்குடி, சேலம், திருச்சியில் இருந்து புறப்படும் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் காலநிலை சீராகும் போது சேவையும் சீராகும் .

தமிழ்நாட்டில் கனமழை நீடிக்கும் - இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் நவம்பர் 29 மற்றும் 30 ஆகிய தேதிகளில் ஒரு சில இடங்களில் கனமழை நீடிக்கும்  என  இந்திய வானிலைஆய்வுமையம்தகவல்தெரிவித்துள்ளது.




அந்தண(
அற)ப்போர் இயக்கத்துக்கு ஆறு கேள்விகள் :
1. அந்தணப்போர் சவராமன், சிறையிலிருந்து வந்த நடிகை கஸ்தூரியை போய் சந்தித்தது ஏன்? 2. அந்தணப்போர் வங்கிக் கணக்குக்கு அதிமுக முன்னாள் அமைச்சர்கள் நன்கொடை வழங்குவது ஏன்? 3. தவெக தலைவர் விஜய்க்கு நன்கொடை கேட்டு, அந்தணப்போர் சவராமன் கடிதம் எழுதியது ஏன்? 4. டிராஃபிக் ராமசாமிக்கு மணிமண்டபம் அமைப்போம் என்று சொல்லி, அந்தணப்போர் இயக்கம் திரட்டிய நிதியின் கணக்கு வழக்கு என்ன? 5. தேர்தல் வரும்போதெல்லாம் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு போன் போட்டு, உங்களைப் பற்றி தவறான தகவல்கள் எங்களிடமிருக்கின்றன. அவற்றை வெளியிடலாமா என்று டீல் பேசியது ஏன்? 6. வாட்சப் குழுமங்களில் திமுகவிடம் நாம் நிதி வாங்க முடியாது, எனவே திமுகவை குறிவைத்து தொடர்ந்து தாக்க வேண்டும் என்று தினமும் செய்வது ஏன்?


இனி டவர்கள் தேவை இல்லை?. 


தொழில்நுட்பம் நாளுக்கு நாள் வேகமாக முன்னேறிக்கொண்டே வருகிறது. இந்த தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக அசாத்தியமான செயல்களை எல்லாம் தற்போது மிகவும் சுலபமாக செய்து முடித்துவிட முடிகிறது.


அந்த வகையில் தற்போது ஒரு புதிய அம்சத்தை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவர எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த புதிய சேவை மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டால், தற்போது பயன்பாட்டில் உள்ள ஜியோ, ஏர்டெல் உள்ளிட்ட நிறுவனங்கள் காணாமல் போகும் நிலை உருவாகலாம என்று கூறப்படுகிறது.


இந்த நிலையில், எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ள அந்த புதிய அம்சம் என்ன என்பது குறித்து பார்க்கலாம்.


டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் உள்ளிட்ட உலகின் முன்னணி நிறுவனங்களின் நிறுவன தலைவராக உள்ளனர் எலான் மஸ்க். இவர் ஸ்டார்லிங்க் என்ற மற்றொரு நிறுவனத்தையும் இயக்கி வருகிறார்.


தற்போது அந்த நிறுவனம் தான் தொழில்நுட்ப உலகின் புதிய சகாப்தத்தை தொடங்க தீவிரம் காட்டி வருகிறது. அதாவது, ஸ்டார்லிங் நிறுவனம் டைரக்ட்-டு-செல் (Direct-to-cell) என்ற புதிய அம்சத்தை அறிமுகம் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அடுத்த ஆண்டு முதல் இந்த திட்டம் மெல்ல மெல்ல அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.


முன்னதாக ஸ்டார்லிங்க் சேவையை பயன்படுத்த வேண்டும் என்றால் டிஷ்  போன்ற சிறிய கருவியை உடன் எடுத்து செல்ல வேண்டும்.

அந்த கருவி வெளியே எடுத்து செல்ல கூடிய அளவுக்கு மிகவும் சிறயதாக இருந்தாலும், ஒருவேளை அந்த கருவியை எடுத்து செல்லவில்லை என்றால் ஸ்டார்லிங்க் செவையை பயன்படுத்த முடியாது.


இந்த நிலையை மாற்ற வேண்டும் என்ற நோக்கில் தான் ஸ்டாரிங்க் நிறுவனம் தற்போது இந்த சேவையை அறிமுகம் செய்ய தீவிரம் காட்டி வருகிறது.

அவ்வாறு இந்த சேவை அறிமுகம் செய்யபப்டும் பட்சத்தில் டவர்களின் உதவி இல்லாமல் நேரடியாக செயற்கைகோள் மூலம் இண்டர்நெட் வசதியை பெற முடியும். டவர்கள் இல்லாமல் போவது மட்டுமன்றி, இந்த சேவை மூலம் இணைய வசதிகளே இல்லாத இடங்களில் கூட அதிக வேகத்துடன் கூடிய நெட்வொர்க் கிடைக்கும்.


இந்த நிலையில் உலகம் முழுவதும் செயற்கைகோள் மூலம் இணைய வசதியை வழங்க வேண்டும் என்ற நோக்கில், எலான் மஸ்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அதிதீவிரமாக விண்வெளிக்கு செயற்கைக்கோள்களை அனுப்பி வருகிறது. வின்வெளியில் போதுமாக செயற்கைக்கோள்களை நிலைநிறுத்தி வைப்பதால் ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் இணைய சேவை மிகவும் சீரானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?