கையாலாகா மத்திய அரசு,,,,,,,,?


அல்லது செயல்படாத மத்திய அரசு,,,,,,

 முல்லைப் பெரியாறுஅணையினால் தமிழக-கேரள மாநிலங்களுக்கு இடையேயான உறவு மேலும் மேலும் விரிசலாகிக் கொண்டே போகிறது.
 கேரளம் முழுவதும், குறிப்பாக ஆலப்புழை, இடுக்கி, பத்தனம் திட்டை, கோட்டயம், ஆலுவாய் மாவட்டங்களில் தொடர்ந்து பேரணிகளும், கூட்டங்களும் நடத்தப்பட்டு, பீதி கிளப்பப்படுகிறது. சபரிமலைக்குச் செல்லும் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் தடுக்கப்படுகின்றன. வேண்டுமென்றே அவர்கள் முன்னிலையில் தமிழகத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்படுகின்றன. பதிலுக்குத் தமிழர்களும் இங்குள்ள கேரள மக்களின் வர்த்தக நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரச்னை தீவிரமாகிக் கொண்டே இருக்கிறது. ஆனால் மத்திய அரசு, இந்தப் பிரச்னையில் தலையிட்டு, ஒரு தீர்வு காண முற்படவில்லை.
 இந்த அணைக்குப் பாதுகாப்பு அளிக்க மத்திய பாதுகாப்புப் படையை நியமிக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். மத்திய கூட்டணி அரசில் அங்கம் வகிக்கும் திமுகவின் தலைவர் கருணாநிதியும் இதே கோரிக்கையை வலியுறுத்தியுள்ளார். ஆனாலும் இந்தப் பிரச்னையில் மத்திய அரசு மெளனம் சாதிக்கிறது. மத்திய அரசின் நிர்வாக உத்தரவைப் பெற உச்ச நீதிமன்றத்தில் தமிழகம் மனு கொடுக்க வேண்டிய நிலை!
 சில்லறை வர்த்தகத்தில் அன்னிய நேரடி முதலீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்றம் தொடர்ந்து 10 நாள்களாக நடைபெறாத நிலையில், அந்த சிக்கலைத் தீர்ப்பது குறித்து பிரதமருக்கு அதிக கவலை இருப்பது நியாயம்தான். ஆனால் இரு மாநில உறவுகள் மிக மோசமாகப் போய்க்கொண்டிருப்பது அதைவிட முக்கியமான பிரச்னை அல்லவா? தேசத்தின் ஒற்றுமைக்கே பங்கம் ஏற்படுவதை விடவா, அன்னிய நேரடி முதலீடு முக்கியமாகப் போய்விட்டது?
 இத்தனை நாள்கள் கழித்து மத்திய அரசு கேரள, தமிழக அரசுக்குக் கடிதம் அனுப்புகிறது. முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு அழைப்பு விடுத்துள்ளது. மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் இருமாநில நீர்வளத்துறை செயலர்களுக்கும் கடிதம் அனுப்புகிற அளவுக்கு மிக மெதுவாகத் தீர்க்கப்பட வேண்டிய பிரச்னையா இது?
 மேலும் இந்தக் கடிதத்திலேயே சிண்டுமுடிகிற வேலையையும் மத்திய அரசு செய்துள்ளது. டிசம்பர் 15 அல்லது 16-ம் தேதி பேச்சுவார்த்தைக்கான சந்திப்பை நடத்தலாம் என்றால் என்ன அர்த்தம்? மத்திய அரசு ஒரு தேதியை குறித்து, அந்த நாளில் இரு தரப்பும் வாருங்கள் என்று சொல்ல முடியாதா? இரண்டு மாநில முதல்வர்களையும் அழைத்துப் பேசி, முடிவெடுக்கும் அதிகாரம் பிரதமருக்கு இல்லையா? தமது பொறுப்பை ஏன் மத்திய அரசு தட்டிக் கழிக்கிறது?
 நீதிமன்றமும் இந்தப் பிரச்னையின் தீவிரத்தைப் புரிந்துகொண்டதாகவே தெரியவில்லை. அணையின் உறுதித்தன்மை குறித்து ஆராய இரு நபர் அடங்கிய வல்லுநர் குழுவை அனுப்ப உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட முன்னாள் நீதிபதி ஏ.எஸ். ஆனந்த் தலைமையிலான குழு முடிவு செய்துள்ளது. இக்குழு இந்த மாத இறுதியில் முல்லைப் பெரியாறு அணையில் ஆய்வு நடத்தும், பிப்ரவரியில் இக்குழு தனது அறிக்கையை அளிக்கும் என்றால், அதுவரை இரு மாநில மக்களும் கடையடைப்பு, பஸ் எரிப்பு, தாக்குதல் எல்லாவற்றையும் நடத்திக்கொண்டிருக்க வேண்டுமா? இந்தக் குழு பிரச்னையின் தீவிரத்தை உணர்ந்து நாளையே வருவது முடியாத செயலா? கிராமத்தில் ஒரு சொலவடை உண்டு: ""சாவுக்கு வரச்சொன்னா, பாலுக்கு வந்த கதையாக'' அல்லவா இது இருக்கிறது.
 நிலநடுக்கம் தொடர்பாக இந்திய தர நிர்ணயம் 2002 -இல் வெளியிட்ட தகவல்படி முல்லைப் பெரியாறு அணை, இடுக்கி அணை, சென்னை நகரம் உள்ளிட்டப் பகுதிகள் மண்டலம் - 3இல் உள்ளன. அதாவது 3.5 முதல் 4.2 வரை ரிக்டர் அளவுகோலில் நிலஅதிர்வு - நிலநடுக்கம் பதிவாகும் பகுதிகள் எனக் கூறுகிறது. இந்த நில அதிர்வால் அணைக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது. அப்படியே அணை உடைந்தாலும், அந்த நீர் இடுக்கி அணைக்குத்தான் செல்லும்.
 1976 ஆம் ஆண்டில் முல்லைப் பெரியாறு அணையின் கீழே 50 கி.மீ. தூரத்தில் இடுக்கி அணையை 555 அடி உயரத்தில் கேரள அரசு கட்டியுள்ளது. இது முல்லைப் பெரியாறு அணையைவிட மூன்றரை மடங்கு பெரியது. முல்லைப் பெரியாறு அணையின் கொள்ளளவைவிட 7 மடங்கு அதிகம்.
 ""அணையின் நீர்உயரத்துக்கும் அணைப் பாதுகாப்புக்கும் தொடர்பில்லை; முல்லைப் பெரியாறு அணையின் நீர் முழுவதையும் இடுக்கி அணை ஏற்கும் திறன் கொண்டது'' என்கிற கேரள அரசின் கருத்தை நீதிமன்றத்தில் தெரிவித்ததற்கு, உண்மையைச் சொன்னதற்கு, அந்த அட்டர்னி ஜெனரல் தண்டபாணியை நீக்க வேண்டும் என்கின்றது கேரள எதிர்க்கட்சியான மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி. இதிலிருந்து என்ன தெரிகிறது? அணை உடைந்தாலும் பாதிப்பு இருக்காது என்பதுதானே? பிறகு ஏன் ஆர்ப்பாட்டமும் போராட்டமும்?


 தமிழகத்திலிருந்து கேரளம் செல்லும் பொருள்கள் தடைபட்டால், அதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும். பால் உள்பட அனைத்து உணவுப் பொருள்களும் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போயாக வேண்டும். நேந்திரம் பழம்கூடத் தமிழகத்திலிருந்துதான் கேரளத்துக்குப் போகிறது என்பதுதானே உண்மை? அப்படி ஒரு மோசமான நிலைமையை ஏற்படுத்த கேரள அரசியல்வாதிகள் முற்படுவார்களேயானால், அதற்குக் காரணம் தமிழக அரசல்ல, மத்திய அரசாகத்தான் இருக்கும்.
 உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ஏற்றுக் கொள்ளாமல், கேரள சட்டப்பேரவையில் கேரள அரசின் அனுமதி இல்லாமல் கேரளத்தில் உள்ள அணைகளின் நீர்மட்டத்தை பிற மாநில அரசுகள் அதிகரிக்கக் கூடாது என்று "கேரள பாசன மற்றும் நீர் பாதுகாப்பு' (சட்டத் திருத்த) மசோதா 2006 என்ற பெயரில் தீர்மானம் நிறைவேற்றியபோதே மத்திய அரசு சட்டத்தின் மேலாண்மையை நிலைநாட்டி இருக்க வேண்டும்.
 முல்லைப் பெரியாறு அணை உடைந்தால் இடுக்கி அணை இருக்கவே இருக்கிறது சேதமில்லாமல் பாதுகாக்க. ஆனால், தேச ஒற்றுமை சிதைந்தால் அதை ஆணை போட்டுத் தடுக்க முடியாது என்பதை மத்திய அரசு உணர வேண்டும். இந்த நிலைமை தொடரக் கூடாது!
                                                                                                                                                           நன்றி:-தினமணி[தலையங்கம்]

________________________________________


தேவையற்ற கோப்புகளை கணினியில் நீக்கிட,.


கணினிகளில் கோப்புகளை உருவாக்குகிறோம், இணையத்திலிருந்து தரவிறக்கம் செய்கிறோம் அல்லது மற்றவர்களிடமிருந்து பெறுகிறோம்.
இவை அனைத்தையும் பயன்படுத்துகையில், பல்வேறு காரணங்களுக்காக அவற்றின் நகல்களை வெவ்வேறு ட்ரைவ்களில், கோப்பறைகளில் பதிந்து வைக்கிறோம்.
சில கோப்புகளை அவற்றின் பெயர்களை மட்டும் மாற்றி ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பதிந்து வைக்கிறோம். இதனால் ஒரு கோப்பு பலமுறை நகல்கள் எடுக்கப்பட்டு நம் கணினியில் தங்குகிறது. காலப்போக்கில் இந்த நகல்களால் வன்தட்டில் இடம் வீணாகிறது.
தேவையற்ற முறையில் இடம் பெற்றுள்ள கோப்புகள் எவை என்ற தகவலையும், அவை எங்குள்ளன என்ற விவரத்தினையும் நாம் மறந்துவிடுகிறோம். இதனால் ஒரு கட்டத்தில் இவற்றைக் கண்டறிந்து நீக்குவது நம்மால் இயலாத செயல் ஆகிவிடுகிறது.
இது போல ஒன்றுக்கு மேற்பட்ட நகல்களாகத் தங்கும் கோப்புகளை இனம் மற்றும் இடம் காட்ட, இணையத்தில் பல இலவச புரோகிராம்கள் கிடைக்கின்றன. இவற்றை இங்கு காணலாம்.
1. டூப்ளிகேட் கிளீனர்(Duplicate Cleaner): இந்த புரோகிராம் MD5 Hash algorithm என்ற தொழில்நுட்ப வழிமுறையினைக் கையாள்கிறது. ஒரே கோப்பு வேறு பெயர்களில் இருந்தாலும், இந்த புரோகிராம் கண்டறிகிறது. எனவே ஒரே மாதிரியான தகவல் உள்ள கோப்புகளை, அவை எந்த பெயரில் இருந்தாலும் கண்டறிந்து காட்டுகிறது.
கணினி முழுவதும் அலசி ஆராய்ந்து, போர்மட், அளவு மற்றும் உருவாக்கப்பட்ட நாள் ஆகியவற்றின் அடிப்படையில் பட்டியலிட்டுக் காட்டுகிறது. ஒரே பாடலை MP3, WMA, M4A, M4P, OGG, APE மற்றும் FLAC என வெவ்வேறு போர்மட்களில் இருந்தாலும் அவற்றை அடையாளம் காட்டுகிறது.
எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பில் உருவாக்கப்படும் கோப்புகள், ஓடியோ மற்றும் வீடியோ கோப்புகள், ஒளிப்படங்கள், டெக்ஸ்ட் கோப்புகள் என அனைத்தையும் ஸ்கேன் செய்து காட்டுகிறது.
அதே நேரத்தில் விண்டோஸ் மற்றும் சிஸ்டம் சார்ந்த அனைத்து கோப்புகளையும் இது தொடுவதில்லை. அவற்றை அப்படியே காட்டுவதுடன் விட்டுவிடுகிறது.
இந்த புரோகிராமுடன் எந்தவிதமான அட்வேர் அல்லது ஸ்பைவேர் இணைந்து வருவதில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக இது முழுமையாக இலவசமாகக் கிடைக்கிறது.
2. டூப் டிடக்டர் (DupDetector): இந்த புரோகிராம் இமேஜ் கோப்புகளை மட்டும் அவை ஒன்றுக்கு மேற்பட்ட எண்ணிக்கையில் இருந்தால் கண்டறிகிறது.
அடிக்கடி ஒளிப்படம் எடுத்து கணினியில் வெவ்வேறு பெயர்களில் பதிந்து வைப்பவர்கள், அவற்றைக் கண்டறிந்து நீக்க இதனைப் பயன்படுத்தலாம். jpg, gif, bmp, png, tif, pcx, tga, wmf, emf, psp என பத்து வகையான கோப்பு போர்மட்களை இது கையாள்கிறது. இதனுடனும் எந்த விதமான மால்வேர் புரோகிராம்கள் வருவதில்லை.
இதனையும் இலவசமாக இணையத்திலிருந்து பெறலாம்.
3. அஸ்லாஜிக்ஸ் டூப்ளிகேட் பைல் பைண்டர்(Auslogics Duplicate File Finder): டாகுமெண்ட்கள், ஒளிப்படங்கள் மற்றும் பிற அனைத்து கோப்புகளின் டூப்ளிகேட் நகல்களைக் கண்டறிகிறது.
பெயர்களில் மட்டுமின்றி, ஒரே தகவலுடனும் உள்ள கோப்புகளைக் காட்டுகிறது.

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

விகடானந்தா நிலவரம்

பொய்.பொய்யைத் தவிர வேறில்லை.

கட்டுமானம் ஆரம்பம்?