கொஞ்சம் வெளியுலகு,


______உலக அளவிலான அமைப்புகள்,
_______________________________________________________________________________________________________
ஆசிய வளர்ச்சி வங்கி (ADB):
தலைமையிடம் மணிலா (பிலிப்பைன்ஸ்), துவக்கப்பட்ட ஆண்டு 1966. மொத்தம் 56 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. தங்கள் உறுப்பினர் நாடுகளுக்குத் தேவையான பொருளாதார உதவிகளைச் செய்வதே இவ்வங்கியின் முதன்மைப் பணி.

ஐரோப்பிய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ESRO):

தலைமையிடம் பாரீஸ் (பிரான்ஸ்). துவக்கப்பட்ட  ஆண்டு 1964. பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து, லண்டன் ஆகிய நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. ஐரோப்பிய நாடுகளின் அமைதிக்கு உதவும்  வகையில் விண்வெளி தொழில்நுட்பத்தை வளர்க்க இந்த அமைப்பு செயலாற்றி வருகிறது.

இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அசோசியேஷன் (IATA):
 ビジネス, 人々, 上に, 未来, 世界, 道, 進歩

இதன் தலைமையகம் சுவிட்சர்லாந்து மற்றும் சிங்கப்பூரில் செயல்பட்டு வருகின்றது. 1945ஆம் ஆண்டு இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. சர்வதேச நாடுகளில் உள்ள அனைத்து சர்வதேச விமான நிலையங்களும் இந்த அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கின்றன. பாதுகாப்பான பயணம், குறைந்த செலவில் அனைவரும் விமானத்தில் செல்வதற்கான நடவடிக்கைகளை  இந்த அமைப்பு மேற்கொண்டு வருகிறது.

இன்டர்நேஷனல் கிரிமினல் போலீஸ் அமைப்பு (INTERPOL):

தலைமையகம் லியான்ஸ் (பிரான்ஸ்). 1923ஆம் ஆண்டிலிருந்து இந்த அமைப்பு இயங்கி வருகின்றன. 189 நாடுகள் உறுப்பினராக இருக்கின்றன. உறுப்பினர் நாடுகளின் காவல்துறையுடன் ஒருங்கிணைந்து இந்த அமைப்பு பணியாற்றுகின்றது.

வடக்கு அட்லாண்டிக் ஒப்பந்த அமைப்பு (NATO):
3D, 小さい, 人々, -, 統計量, 改善 

தலைமையகம் பிரசல்ஸ் (பெல்ஜியம்) நகரத்தில் இயங்கி வருகிறது. 1949ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. பெல்ஜியம், பிரான்ஸ், லக்ஸம்பர்க், நெதர்லாந்து, லண்டன், கனடா, டென்மார்க், இத்தாலி, நார்வே, போர்ச்சுக்கல், அமெரிக்கா, கிரீஸ், துருக்கி போன்ற நாடுகள் 1952ஆம் இந்த அமைப்பில் ஆண்டு இணைந்தன. மேற்கு ஜெர்மனி 1955ஆம் ஆண்டில் இணைந்தது. ஸ்பெயின் 1982ஆம் ஆண்டும், போலந்து, செக் குடியரசு, ஹங்கேரி நாடுகள் 1999ஆம் ஆண்டுகளில் இணைந்தன. பல்கேரியா, ஸ்லோவேனியா, எஸ்டோனியா, ருமேனியா, ஸ்லோவேக்கியா போன்ற நாடுகள் 2002ஆம் ஆண்டுகளில் இணைந்தன. அல்பேனியா மற்றும் குரேஷியா 2009ஆம் ஆண்டுகளில் இணைந்தன.

பெட்ரோலியம் ஏற்றுமதி அமைப்பு (OPEC):

தலைமையகம் வியன்னா (ஆஸ்திரியா) நகரத்தில் இயங்கி வருகிறது. 1960ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அல்ஜீரியா, ஈக்குவேடார், இந்தோனேஷியா, ஈரான், ஈராக், குவைத், லிபியா, நைஜீரியா, கத்தார், சௌதி அரேபியா, ஐக்கிய அரபு நாடுகள், வெனிசுலா போன்ற நாடுகள் இதன் உறுப்பினர்கள். எண்ணெய் வளத்தின் உற்பத்தி மற்றும் அதன் விலை நிர்ணயம் செய்வதில் ஆரம்பித்து தங்கள் உறுப்பினர் நாடுகளின் பொருளாதார வளர்ச்சியைக் கவனித்து வருகிறது இந்த அமைப்பு.

தென்கிழக்கு ஆசிய ஒப்பந்த அமைப்பு (SEATO):

தலைமையகம் பாங்காக் (தாய்லாந்து) நகரத்தில் இயங்கி வருகிறது. 1954ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. ஆஸ்திரேலியா, பிரான்ஸ், நியூசிலாந்து, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, லண்டன், அமெரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினராக உள்ளன. பாகிஸ்தான் 1973ஆம் ஆண்டு இந்த அமைப்பிலிருந்து விலகிக்கொண்டது. தன் உறுப்பினர் நாடுகளுக்கு பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு அமைப்பு உதவி வருகிறது.
ஜி-8 உறுப்பு நாடுகள்:
 世界的である, ネットワーク, の, 人々

1975ஆம் ஆண்டு முதல் இந்த அமைப்பு செயல்பட ஆரம்பித்தது. அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, கனடா, ஜப்பான், ஜெர்மனி மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் இந்த அமைப்பின் உறுப்பினர்களாக உள்ளன. ஜி-7 என்றிருந்த இந்த அமைப்பின் பெயர் 1998ஆம் ஆண்டு ஜி-8 என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் இந்த உறுப்பினர் நாடுகள் ஒன்றுகூடி சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் குறித்து விவரித்து தீர்மானங்களை மேற்கொள்வது இந்த அமைப்பின் முக்கியப் பணி.

ஆசிய பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு அமைப்பு (APEC):

தலைமையகம் சிங்கப்பூர். 1989ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவானது. சிலி, சீனா, ஹாங்காங், மெக்ஸிகோ, பெரு, ரஷ்யா, தைவான், வியட்நாம், அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, தென் கொரியா, புருனே, இந்தோனேஷியா, மலேசியா, பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து, பாப்புவா நியூ கெனியா உள்ளிட்ட 21 நாடுகள் இந்த அமைப்பில் உறுப்பினராக இருக்கின்றன. உறுப்பினர் நாடுகளுக்கு இடையேயான பொருளாதார வளர்ச்சிக்கு இந்த அமைப்பு உதவி வருகிறது.


இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

2025ல் தங்கம் விலை

வினேஷ் போகத் வென்றார்!

முடிவுக்கு வருகிறதா?